பெந்தெகொஸ்தே என்னும்
நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு
ஓரிடத்திலே வந்திருந்தார்கள். (அப்போஸ்தலர்
2:1)
penthekosthea ennum naa'l vanthapoathu,
avarga'lellaarum orumanappattu oaridaththilea vanthirunthaarga'l. (appoasthalar
2:1)
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற
முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய்
ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள்
உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும்
நிரப்பிற்று. (அப்போஸ்தலர் 2:2)
appozhuthu balaththa kaat’ru adikki’ra muzhakkampoala, vaanaththilirunthu sadithiyaay oru muzhakkamu'ndaagi, avarga'l udkaarnthiruntha veedu muzhuvathaiyum nirappit’ru. (appoasthalar
2:2)
அல்லாமலும் அக்கினிமயமான
நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள்
அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள்
ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
(அப்போஸ்தலர் 2:3)
allaamalum akkinimayamaana naavuga'lpoalap pirinthirukkum naavuga'l avarga'lukkuk kaa'nappattu, avarga'l ovvoruvarmealum vanthu
amarnthathu. (appoasthalar 2:3)
அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர்
தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே
வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். (அப்போஸ்தலர்
2:4)
avarga'lellaarum parisuththaaaviyinaalea
nirappappattu, aaviyaanavar
thangga'lukkuth thantharu'lina varaththinpadiyea vevvea’ru baashaiga'lilea peasaththodangginaarga'l. (appoasthalar 2:4)
வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள
யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே
வாசம்பண்ணினார்கள். (அப்போஸ்தலர் 2:5)
vaanaththinkeezhirukki’ra sagala theasaththaarilumirunthuvantha theavabakthiyu'l'la yootharga'l appozhuthu
erusaleamilea vaasampa'n'ninaarga'l. (appoasthalar 2:5)
அந்தச் சத்தம்
உண்டானபோது, திரளான ஜனங்கள்
கூடிவந்து, தங்கள் தங்கள்
பாஷையிலே அவர்கள் பேசுகிறதை
அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். (அப்போஸ்தலர்
2:6)
anthach saththam u'ndaanapoathu, thira'laana
janangga'l koodivanthu,
thangga'l
thangga'l
baashaiyilea avarga'l peasugi’rathai avaravarga'l keattapadiyinaalea kalakkamadainthaarga'l. (appoasthalar
2:6)
எல்லாரும் பிரமித்து
ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து:
இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா?
(அப்போஸ்தலர் 2:7)
ellaarum piramiththu
aachchariyappattu, oruvaraiyoruvar paarththu:
ithoa, peasugi’ra ivarga'lellaarum kalileayarallavaa? (appoasthalar
2:7)
அப்படியிருக்க, நம்மில்
அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள்
பேசக் கேட்கிறோமே, இதெப்படி?
(அப்போஸ்தலர் 2:8)
appadiyirukka, nammil
avaravarga'ludaiya jenmabaashaiga'lilea ivarga'l peasak keadki’roamea, itheppadi? (appoasthalar
2:8)
பார்த்தரும், மேதரும்,
எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா,
கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா,
பிரிகியா, (அப்போஸ்தலர் 2:9)
paarththarum, meatharum,
elaameeththarum, mesoppoththaamiyaa,
yootheayaa, kappaththoakkiyaa, ponthu,
aasiyaa,
pirigiyaa, (appoasthalar
2:9)
பம்பிலியா, எகிப்து
என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின்
திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும்,
யூதமார்க்கத்தமைந்தவர்களும், (அப்போஸ்தலர் 2:10)
pampiliyaa, egipthu ennum theasaththaarga'lum, sireaneapatta'naththaich sut’riyirukki’ra leebiyaavin thisaiga'lilea kudiyirukki’ravarga'lum, inggea sagncharikki’ra roamaapuriyaarum, yootharum,
yoothamaarkkaththamainthavarga'lum, (appoasthalar
2:10)
கிரேத்தரும், அரபியருமாகிய
நாம் நம்முடைய பாஷைகளிலே
இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள்.
(அப்போஸ்தலர் 2:11)
kireaththarum, arabiyarumaagiya naam nammudaiya
baashaiga'lilea ivarga'l theavanudaiya
magaththuvangga'laip peasakkeadki’roamea en’raarga'l. (appoasthalar
2:11)
எல்லாரும் பிரமித்துச்
சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ
என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். (அப்போஸ்தலர்
2:12)
ellaarum piramiththuch santheagappattu, ithennamaay
mudiyumoa en’ru oruvaroadoruvar sollikko'ndaarga'l. (appoasthalar 2:12)
மற்றவர்களோ: இவர்கள்
மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள். (அப்போஸ்தலர்
2:13)
mat’ravarga'loa: ivarga'l mathubaanaththinaal ni’rainthirukki’raarga'len’ru pariyaasampa'n'ninaarga'l. (appoasthalar
2:13)
அப்பொழுது பேதுரு
பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை
நோக்கி, உரத்த சத்தமாய்:
யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற
ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். (அப்போஸ்தலர்
2:14)
appozhuthu peathuru
pathinoruvaroadungkooda nin’ru, avarga'lai noakki, uraththa
saththamaay: yootharga'lea, erusaleamil vaasampa'n'nugi’ra janangga'lea, neengga'lellaarum a’rinthuko'lveerga'laaga, en vaarththaiga'lukkuch sevikodungga'l. (appoasthalar
2:14)
நீங்கள் நினைக்கிறபடி
இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது
விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. (அப்போஸ்தலர்
2:15)
neengga'l ninaikki’rapadi ivarga'l ve’riko'ndavarga'lalla, pozhuthu
vidinthu moon’raam ma'ni vea'laiyaayirukki’rathea. (appoasthalar
2:15)
தீர்க்கதரிசியாகிய யோவேலினால்
உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. (அப்போஸ்தலர்
2:16)
theerkkatharisiyaagiya yoavealinaal
uraikkappattapadiyea ithu nadanthea’rugi’rathu. (appoasthalar 2:16)
கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும்
என் ஆவியை ஊற்றுவேன்,
அப்பொழுது உங்கள் குமாரரும்
உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள்
வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்;
உங்கள் மூப்பர் சொப்பனங்களைக்
காண்பார்கள்; (அப்போஸ்தலர் 2:17)
kadaisinaadka'lil naan maamsamaana yaavarmealum
en aaviyai oot’ruvean, appozhuthu
ungga'l
kumaararum ungga'l kumaaraththiga'lum theerkkatharisanagnsolluvaarga'l; ungga'l vaalibar tharisanangga'lai adaivaarga'l; ungga'l mooppar
soppanangga'laik kaa'nbaarga'l; (appoasthalar 2:17)
என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய
ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன்,
அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். (அப்போஸ்தலர்
2:18)
ennudaiya oozhiyakkaararmealum, ennudaiya
oozhiyakkaariga'lmealum annaadka'lil
en aaviyai oot’ruvean, appozhuthu
avarga'l
theerkkatharisanagnsolluvaarga'l. (appoasthalar
2:18)
அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப் பூமியிலே இரத்தம்,
அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன்.
(அப்போஸ்தலர் 2:19)
allaamalum uyara vaanaththilea a’rputhangga'laiyum, thaazhap boomiyilea iraththam,
akkini, pugaikkaadaagiya athisayangga'laiyum kaattuvean. (appoasthalar 2:19)
கர்த்தருடைய பெரிதும்
பிரகாசமுமான நாள் வருமுன்னே
சூரியன் இருளாகவும், சந்திரன்
இரத்தமாகவும் மாறும். (அப்போஸ்தலர்
2:20)
karththarudaiya perithum
piragaasamumaana naa'l varumunnea sooriyan iru'laagavum, santhiran iraththamaagavum maa’rum. (appoasthalar
2:20)
அப்பொழுது கர்த்தருடைய
நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். (அப்போஸ்தலர்
2:21)
appozhuthu karththarudaiya naamaththaith
thozhuthuko'l'lugi’ravanevanoa avan iradchikkappaduvaan en’ru theavan
uraiththirukki’raar. (appoasthalar
2:21)
இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக்
கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய
இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து,
அவைகளினாலே அவரை உங்களுக்கு
வெளிப்படுத்தினார். (அப்போஸ்தலர் 2:22)
isravealarea, naan sollum vaarththaiga'laik kea'lungga'l; neengga'l a’rinthirukki’rapadi nasareayanaagiya iyeasuvaikko'ndu theavan ungga'lukku'l'lea balaththa seygaiga'laiyum, a’rputhangga'laiyum, adaiyaa'langga'laiyum nadappiththu,
avaiga'linaalea avarai
ungga'lukku ve'lippaduththinaar. (appoasthalar
2:22)
அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய
முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள்
பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே
சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். (அப்போஸ்தலர்
2:23)
appadiyirunthum, theavan
nir'nayiththiruntha aaloasanaiyinpadiyeayum,
avarudaiya munna’rivinpadiyeayum
oppukkodukkappatta antha iyeasuvai neengga'l pidiththu, akkiramakkaararudaiya kaiga'linaalea siluvaiyil aa'niyadiththuk kolaiseytheerga'l. (appoasthalar 2:23)
தேவன் அவருடைய
மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. (அப்போஸ்தலர்
2:24)
theavan avarudaiya
mara'na ubaathiga'lin kattai avizhththu, avarai
ezhuppinaar; avar mara'naththinaal kattappattirukkakkoodaathirunthathu. (appoasthalar
2:24)
அவரைக்குறித்துத் தாவீது:
கர்த்தரை எப்பொழுதும் எனக்கு
முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்;
(அப்போஸ்தலர் 2:25)
avaraikku’riththuth thaaveethu: karththarai
eppozhuthum enakku munbaaga ni’ruththi noakkikko'ndirukki’rean; naan asaikkappadaathapadi
avar en valathupaarisaththilea irukki’raar; (appoasthalar
2:25)
அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது,
என் நாவு களிகூர்ந்தது,
என் மாம்சமும் நம்பிக்கையோடே
தங்கியிருக்கும்; (அப்போஸ்தலர் 2:26)
athinaalea en iruthayam magizhnthathu, en naavu ka'likoornthathu, en maamsamum nambikkaiyoadea thanggiyirukkum; (appoasthalar 2:26)
என் ஆத்துமாவைப்
பாதாளத்தில் விடீர், உம்முடைய
பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; (அப்போஸ்தலர்
2:27)
en aaththumaavaip paathaa'laththil videer,
ummudaiya parisuththar azhivaikkaa'navotteer; (appoasthalar 2:27)
ஜீவமார்க்கங்களை எனக்குத்
தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச்
சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான். (அப்போஸ்தலர்
2:28)
jeevamaarkkangga'lai enakkuth theriyappaduththineer; ummudaiya
sannithaanaththilea ennaich santhoashaththinaal nirappuveer
en’ru
sollugi’raan. (appoasthalar
2:28)
சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப்
பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய
கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. (அப்போஸ்தலர்
2:29)
sagoathararea, koaththiraththalaivanaagiya thaaveethaikku’riththu naan ungga'ludanea thairiyamaayp
peasugi’ratha’rku idangkodungga'l; avan mara'namadainthu adakkampa'n'nappattaan; avanudaiya
kalla’rai
innaa'lvaraikkum nammidaththilirukki’rathu. (appoasthalar 2:29)
அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க
மாம்சத்தின்படி உன் சந்ததியிலே
கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச்
சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால், (அப்போஸ்தலர்
2:30)
avan theerkkatharisiyaayirunthu: un singgaasanaththil veet’rirukka maamsaththinpadi un santhathiyilea ki’risthuvai ezhumbappa'n'nuvean en’ru theavan thanakkuch saththiyampa'n'ninathai a’rinthapadiyaal, (appoasthalar
2:30)
அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா
பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய
மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து,
அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச்
சொன்னான். (அப்போஸ்தலர் 2:31)
avan ki’risthuvinudaiya aaththumaa
paathaa'laththilea vidappaduvathillaiyen’rum, avarudaiya maamsam azhivaik
kaa'nbathillaiyen’rum munna’rinthu, avar uyirththezhuthalaikku’riththu ippadich sonnaan. (appoasthalar 2:31)
இந்த இயேசுவைத்
தேவன் எழுப்பினார்; இதற்கு
நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். (அப்போஸ்தலர்
2:32)
intha iyeasuvaith theavan
ezhuppinaar; itha’rku naangga'lellaarum saadchiga'laayirukki’roam. (appoasthalar
2:32)
அவர் தேவனுடைய
வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப் பெற்று,
நீங்கள் இப்பொழுது காண்கிறதும்
கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். (அப்போஸ்தலர்
2:33)
avar theavanudaiya
valathukaraththinaalea uyarththappattu, pithaa aru'liya
vaakkuththaththaththinpadi parisuththaaaviyaip
pet’ru,
neengga'l
ippozhuthu kaa'ngi’rathum keadki’rathumaagiya ithaip
pozhintharu'linaar. (appoasthalar 2:33)
தாவீது பரலோகத்திற்கு
எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை
உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், (அப்போஸ்தலர்
2:34)
thaaveethu paraloagaththi’rku ezhunthu poagavillaiyea. naan ummudaiya saththurukka'lai umakkup
paathapadiyaakkip poadumvaraikkum, (appoasthalar
2:34)
நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று
கர்த்தர் என் ஆண்டவருடனே
சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். (அப்போஸ்தலர்
2:35)
neer en valathupaarisaththil udkaarumen’ru karththar en aa'ndavarudanea sonnaar en’ru avanea
solliyirukki’raan. (appoasthalar
2:35)
ஆகையினால், நீங்கள்
சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல்
குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய்
அறியக்கடவர்கள் என்றான். (அப்போஸ்தலர்
2:36)
aagaiyinaal, neengga'l siluvaiyil a’raintha intha iyeasuvaiyea theavan
aa'ndavarum ki’risthuvumaakkinaaren’ru israveal
kudumbaththaar yaavarum
nichchayamaay a’riyakkadavarga'l en’raan. (appoasthalar 2:36)
இதை அவர்கள்
கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும்
மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து:
சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்.
(அப்போஸ்தலர் 2:37)
ithai avarga'l keattapozhuthu, iruthayaththilea kuththappattavarga'laagi, peathuruvaiyum mat’ra appoasthalaraiyum paarththu:
sagoathararea, naangga'l ennaseyyavea'ndum en’raarga'l. (appoasthalar 2:37)
பேதுரு அவர்களை
நோக்கி: நீங்கள் மனந்திரும்பி,
ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது
பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.
(அப்போஸ்தலர் 2:38)
peathuru avarga'lai noakki:
neengga'l
mananthirumbi, ovvoruvarum
paavamannippukken’ru iyeasuki’risthuvin naamaththinaalea gnaanasnaanam
pet’rukko'l'lungga'l, appozhuthu
parisuththaaaviyin varaththaip
pe’ruveerga'l. (appoasthalar
2:38)
வாக்குத்தத்தமானது உங்களுக்கும்,
உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய
தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும்
தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; (அப்போஸ்தலர்
2:39)
vaakkuththaththamaanathu ungga'lukkum, ungga'l pi'l'laiga'lukkum, nammudaiya
theavanaagiya karththar
varavazhaikkum thooraththilu'l'la yaavarukkum
u'ndaayirukki’rathu en’ru solli; (appoasthalar
2:39)
இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி,
மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை
விட்டு விலகி உங்களை
இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். (அப்போஸ்தலர்
2:40)
innum aneaga vaarththaiga'laalum saadchikoo’ri, maa’rupaadu'l'la inthach santhathiyai vittu vilagi ungga'lai iradchiththukko'l'lungga'l en’rum buththisonnaan. (appoasthalar
2:40)
அவனுடைய வார்த்தையைச்
சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம்
பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய
மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். (அப்போஸ்தலர்
2:41)
avanudaiya vaarththaiyaich santhoashamaay eat’rukko'ndavarga'l gnaanasnaanam pet’raarga'l. an’raiyaththinam ea’rakku’raiya moovaayirampear searththukko'l'lappattaarga'l. (appoasthalar
2:41)
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம்
பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த்
தரித்திருந்தார்கள். (அப்போஸ்தலர் 2:42)
avarga'l appoasthalarudaiya ubatheasaththilum, anniyoanniyaththilum, appam pidkuthalilum, jebampa'n'nuthalilum u’ruthiyaayth thariththirunthaarga'l. (appoasthalar
2:42)
எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும்
செய்யப்பட்டது. (அப்போஸ்தலர் 2:43)
ellaarukkum bayamu'ndaayit’ru. appoasthalarga'laalea aneaga a’rputhangga'lum adaiyaa'langga'lum seyyappattathu. (appoasthalar 2:43)
விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும்
பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். (அப்போஸ்தலர்
2:44)
visuvaasiga'lellaarum orumiththirunthu, sagalaththaiyum pothuvaay
vaiththu anubaviththaarga'l. (appoasthalar
2:44)
காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும்
விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில்
எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். (அப்போஸ்தலர்
2:45)
kaa'niyaadchiga'laiyum aasthiga'laiyum vit’ru, ovvoruvanukkum theavaiyaanatha’rkuththakkathaaga avaiga'lil ellaarukkum pagirnthukoduththaarga'l. (appoasthalar 2:45)
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே
அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும்
அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத
இருதயத்தோடும் போஜனம்பண்ணி, (அப்போஸ்தலர்
2:46)
avarga'l orumanappattavarga'laayth theavaalayaththilea anuthinamum
thariththirunthu, veeduga'lthoa’rum appampittu magizhchchiyoadum kabadamillaatha iruthayaththoadum poajanampa'n'ni, (appoasthalar
2:46)
தேவனைத் துதித்து,
ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர்
அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.
(அப்போஸ்தலர் 2:47)
theavanaith thuthiththu,
janangga'lellaaridaththilum thayavupet’rirunthaarga'l. iradchikkappadugi’ravarga'laik karththar
anuthinamum sabaiyilea searththukko'ndu
vanthaar. (appoasthalar 2:47)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!