நான் மனுஷர்
பாஷைகளையும் தூதர் பாஷைகளையும்
பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற
வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன்.
(1கொரிந்தியர் 13:1)
naan
manushar baashaiga'laiyum
thoothar baashaiga'laiyum
peasinaalum,
anbu enakkiraavittaal, saththamidugi’ra ve'ngalampoalavum, oasaiyidugi’ra kaiththaa'lampoalavum iruppean.
(1korinthiyar 13:1)
நான் தீர்க்கதரிசன
வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும்,
மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. (1கொரிந்தியர்
13:2)
naan
theerkkatharisana
varaththai udaiyavanaayirunthu, sagala iragasiyangga'laiyum, sagala a’rivaiyum a’rinthaalum, malaiga'laip pearkkaththakkathaagach sagala visuvaasamu'l'lavanaayirunthaalum, anbu enakkiraavittaal naan on’rumillai. (1korinthiyar
13:2)
எனக்கு உண்டான
யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும்,
அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப்
பிரயோஜனம் ஒன்றுமில்லை. (1கொரிந்தியர்
13:3)
enakku
u'ndaana yaavat’raiyum naan annathaanampa'n'ninaalum, en sareeraththaich sutterikkappaduvatha’rkuk
koduththaalum, anbu enakkiraavittaal enakkup pirayoajanam
on’rumillai.
(1korinthiyar 13:3)
அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது;
அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது,
இறுமாப்பாயிராது, (1கொரிந்தியர் 13:4)
anbu neediya
saanthamum
thayavumu'l'lathu; anbukkup po’raamaiyillai; anbu thannaip pugazhaathu, i’rumaappaayiraathu, (1korinthiyar
13:4)
அயோக்கியமானதைச் செய்யாது,
தற்பொழிவை நாடாது, சினமடையாது,
தீங்கு நினையாது, (1கொரிந்தியர்
13:5)
ayoakkiyamaanathaich seyyaathu, tha’rpozhivai naadaathu,
sinamadaiyaathu, theenggu ninaiyaathu,
(1korinthiyar 13:5)
அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில்
சந்தோஷப்படும். (1கொரிந்தியர் 13:6)
aniyaayaththil santhoashappadaamal, saththiyaththil santhoashappadum. (1korinthiyar
13:6)
சகலத்தையும் தாங்கும்,
சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும்
நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
(1கொரிந்தியர் 13:7)
sagalaththaiyum thaanggum, sagalaththaiyum visuvaasikkum, sagalaththaiyum nambum, sagalaththaiyum sagikkum. (1korinthiyar
13:7)
அன்பு ஒருக்காலும்
ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம்,
அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்,
அறிவானாலும் ஒழிந்துபோம். (1கொரிந்தியர்
13:8)
anbu orukkaalum
ozhiyaathu. theerkkatharisanangga'laanaalum
ozhinthupoam, anniya baashaiga'laanaalum oaynthupoam, a’rivaanaalum ozhinthupoam.
(1korinthiyar 13:8)
நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும்
குறைவுள்ளது. (1கொரிந்தியர் 13:9)
nammudaiya a’rivu ku’raivu'l'lathu, naam theerkkatharisanagn solluthalum ku’raivu'l'lathu. (1korinthiyar 13:9)
நிறைவானது வரும்போது
குறைவானது ஒழிந்துபோம். (1கொரிந்தியர்
13:10)
ni’raivaanathu varumpoathu
ku’raivaanathu
ozhinthupoam. (1korinthiyar 13:10)
நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்,
குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்;
நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். (1கொரிந்தியர்
13:11)
naan
kuzhanthaiyaayirunthapoathu kuzhanthaiyaippoalap peasinean, kuzhanthaiyaippoalach sinthiththean, kuzhanthaiyaippoala yoasiththean; naan purushanaanapoathoa kuzhanthaikkeat’ravaiga'lai ozhiththuvittean. (1korinthiyar 13:11)
இப்பொழுது கண்ணாடியிலே
நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது
முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது
நான் குறைந்த அறிவுள்ளவன்,
அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். (1கொரிந்தியர்
13:12)
ippozhuthu ka'n'naadiyilea nizhalaattamaayp paarkki’roam, appozhuthu
mugamugamaayp paarppoam;
ippozhuthu naan ku’raintha a’rivu'l'lavan, appozhuthu
naan a’riyappattirukki’rapadiyea a’rinthuko'l'luvean. (1korinthiyar
13:12)
இப்பொழுது விசுவாசம்,
நம்பிக்கை, அன்பு இம்மூன்றும்
நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. (1கொரிந்தியர்
13:13)
ippozhuthu visuvaasam, nambikkai, anbu immoon’rum nilaiththirukki’rathu; ivaiga'lil anbea periyathu. (1korinthiyar
13:13)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!