அப்பொழுது,
அவர் தம்முடைய பன்னிரண்டு
சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து,
அசுத்த ஆவிகளைத் துரத்தவும்,
சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும்
அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (மத்தேயு
10:1)
appozhuthu, avar
thammudaiya pannira'ndu seesharga'laiyum
thammidaththil
varavazhaiththu, asuththa aaviga'laith
thuraththavum, sagala viyaathiga'laiyum sagala noayga'laiyum
neekkavum avarga'lukku athigaarangkoduththaar.
(maththeayu 10:1)
அந்தப்
பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன:
முந்தினவன் பேதுரு என்னப்பட்ட
சீமோன், அவன் சகோதரன்
அந்திரேயா, செபெதேயுவின் குமாரன்
யாக்கோபு, அவன் சகோதரன்
யோவான், (மத்தேயு 10:2)
anthap pannira'ndu
appoasthalarudaiya naamangga'laavana: munthinavan peathuru
ennappatta seemoan, avan sagoatharan
anthireayaa, sebetheayuvin
kumaaran yaakkoabu, avan sagoatharan yoavaan,
(maththeayu 10:2)
பிலிப்பு,
பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய
மத்தேயு, அல்பேயுவின் குமாரன்
யாக்கோபு, ததேயு என்னும்
மறுநாமமுள்ள லெபேயு, (மத்தேயு
10:3)
pilippu, ba’rtholomeayu, thoamaa,
aayakkaaranaagiya maththeayu,
alpeayuvin kumaaran yaakkoabu, thatheayu
ennum ma'runaamamu'l'la lebeayu, (maththeayu
10:3)
கானானியனாகிய
சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
(மத்தேயு 10:4)
kaanaaniyanaagiya seemoan,
avaraik kaattikkoduththa
yoothaaskaariyoaththu enbavaiga'lea. (maththeayu
10:4)
இந்தப்
பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக்
கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்:
நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப்
போகாமலும், சமாரியர் பட்டணங்களில்
பிரவேசியாமலும், (மத்தேயு 10:5)
inthap panniruvaraiyum iyeasu anuppugaiyil, avarga'lukkuk katta'laiyittuch sonnathu
ennaven'raal: neengga'l pu'rajaathiyaar naaduga'lukkup poagaamalum, samaariyar patta'nangga'lil piraveasiyaamalum, (maththeayu 10:5)
காணாமற்போன
ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.
(மத்தேயு 10:6)
kaa'naama’rpoana aaduga'laagiya israveal
veettaaridaththi’rkup poangga'l. (maththeayu
10:6)
போகையில்,
பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். (மத்தேயு
10:7)
poagaiyil, paraloagaraajyam sameebiththirukki'rathu en'ru pirasanggiyungga'l. (maththeayu
10:7)
வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை
எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்;
இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க்
கொடுங்கள். (மத்தேயு 10:8)
viyaathiyu'l'lavarga'laich sosthamaakkungga'l, kushdaroagiga'laich suththampa'n'nungga'l, mariththoarai
ezhuppungga'l, pisaasuga'laith thuraththungga'l; ilavasamaayp pet’reerga'l, ilavasamaayk kodungga'l. (maththeayu 10:8)
உங்கள்
கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது
செம்பையாவது, (மத்தேயு 10:9)
ungga'l kachchaiga'lil ponnaiyaavathu ve'l'liyaiyaavathu sembaiyaavathu, (maththeayu 10:9)
வழிக்காகப்
பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது
தேடி வைக்கவேண்டாம்; வேலையாள்
தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான். (மத்தேயு
10:10)
vazhikkaagap
paiyaiyaavathu, ira'ndu anggiga'laiyaavathu, paatharadchaiga'laiyaavathu, thadiyaiyaavathu theadi
vaikkavea'ndaam; vealaiyaa'l than
aagaaraththukkup paaththiranaayirukki'raan. (maththeayu
10:10)
எந்தப்
பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள்
பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன்
யாரென்று விசாரித்து, நீங்கள்
புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள். (மத்தேயு
10:11)
enthap patta'naththilaavathu kiraamaththilaavathu neengga'l piraveasikkumpoathu, athilea
paaththiramaanavan yaaren'ru visaariththu,
neengga'l
pu'rappaduma'lavum avanidaththil
thanggiyirungga'l. (maththeayu
10:11)
ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். (மத்தேயு
10:12)
oru veettukku'l piraveasikkumpoathu athai
vaazhththungga'l. (maththeayu
10:12)
அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள்
கூறின சமாதானம் அவர்கள்மேல்
வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள்
கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது. (மத்தேயு
10:13)
antha veedu
paaththiramaayirunthaal, neengga'l koo'rina samaathaanam
avarga'lmeal varakkadavathu; abaaththiramaayirunthaal, neengga'l koo'rina samaathaanam ungga'lidaththi’rkuth thirumbakkadavathu. (maththeayu 10:13)
எவனாகிலும்
உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள்
வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப்
புறப்படும்போது, உங்கள் கால்களில்
படிந்த தூசியை உதறிப்போடுங்கள். (மத்தேயு
10:14)
evanaagilum ungga'lai eat’rukko'l'laamalum,
ungga'l
vaarththaiga'laik kea'laamalumpoanaal, antha
veettaiyaavathu patta'naththaiyaavathu vittup pu'rappadumpoathu, ungga'l kaalga'lil padintha
thoosiyai
utha'rippoadungga'l. (maththeayu
10:14)
நியாயத்தீர்ப்பு நாளிலே
அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம்
கொமோரா நாட்டிற்கு நேரிடுவது
இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே
உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு
10:15)
niyaayaththeerppu naa'lilea
anthap patta'naththi’rku
neariduvathaippaarkkilum soathoam
komoaraa naatti’rku
neariduvathu ilaguvaayirukkum
en'ru,
meyyaagavea ungga'lukkuch sollugi'rean. (maththeayu
10:15)
ஆடுகளை
ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை
அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.
(மத்தேயு 10:16)
aaduga'lai oanaayga'lukku'l'lea
anuppugi'rathupoala, ithoa,
naan ungga'lai anuppugi'rean; aagaiyaal, sarppangga'laippoala
vinaavu'l'lavarga'lum pu'raakka'laippoalak kabadat’ravarga'lumaay irungga'l. (maththeayu
10:16)
மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள்
உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு
ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை
வாரினால் அடிப்பார்கள். (மத்தேயு
10:17)
manusharaikku'riththu echcharikkaiyaayirungga'l; avarga'l ungga'lai aaloasanaich sanggangga'lukku
oppukkoduththu, thangga'l jeba aalayangga'lil ungga'lai
vaarinaal adippaarga'l. (maththeayu 10:17)
அவர்களுக்கும்
புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம்
அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு
முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். (மத்தேயு
10:18)
avarga'lukkum pu'rajaathiyaarukkum
saadchiyaaga ennimiththam
athibathiga'lukku munbaagavum, raajaakka'lukku munbaagavum
ko'ndupoagappaduveerga'l. (maththeayu 10:18)
அவர்கள்
உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப்
பேசுவோம் என்றும், என்னத்தைப்
பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள்
பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு
அருளப்படும். (மத்தேயு 10:19)
avarga'l ungga'lai
oppukkodukkumpoathu: eppadip peasuvoam en'rum, ennaththaip
peasuvoam
en'rum
kavalaippadaathirungga'l; neengga'l peasavea'nduvathu annearaththil
ungga'lukku aru'lappadum.
(maththeayu 10:19)
பேசுகிறவர்கள்
நீங்கள் அல்ல, உங்கள்
பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
(மத்தேயு 10:20)
peasugi'ravarga'l neengga'l alla,
ungga'l
pithaavin aaviyaanavarea ungga'lilirunthu peasugi'ravar. (maththeayu
10:20)
சகோதரன்
தன் சகோதரனையும், தகப்பன்
தன் பிள்ளையையும், மரணத்துக்கு
ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப்
பிள்ளைகள் எழும்பி அவர்களைக்
கொலைசெய்வார்கள். (மத்தேயு 10:21)
sagoatharan
than sagoatharanaiyum, thagappan than
pi'l'laiyaiyum,
mara'naththukku oppukkoduppaarga'l; pet’raarukku
viroathamaagap pi'l'laiga'l ezhumbi avarga'laik kolaiseyvaarga'l. (maththeayu 10:21)
என் நாமத்தினிமித்தம் நீங்கள்
எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்தேயு
10:22)
en naamaththinimiththam neengga'l ellaaraalum
pagaikkappaduveerga'l; mudivupariyantham nilaiththiruppavanea iradchikkappaduvaan. (maththeayu
10:22)
ஒரு பட்டணத்தில் உங்களைத்
துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு
ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள்
இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே
உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு
10:23)
oru patta'naththil ungga'laith thunbappaduththinaal ma'ru patta'naththi’rku oadippoangga'l;
manushakumaaran varuvatha’rku'l'laaga neengga'l isravealarudaiya patta'nangga'laiyellaam sut’rimudiyaathen'ru, meyyaagavea ungga'lukkuch sollugi'rean. (maththeayu
10:23)
சீஷன் தன் போதகனிலும்,
வேலைக்காரன் தன் எஜமானிலும்
மேற்பட்டவனல்ல. (மத்தேயு 10:24)
seeshan than poathaganilum, vealaikkaaran
than ejamaanilum mea’rpattavanalla. (maththeayu 10:24)
சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன்
தன் எஜமானைப்போலவும் இருப்பது
போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல்
என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச்
சொல்வது அதிக நிச்சயமல்லவா?
(மத்தேயு 10:25)
seeshan than poathaganaippoalavum, vealaikkaaran
than ejamaanaippoalavum iruppathu
poathum. veettejamaanaiyea beyalsebool en'ru sonnaarga'laanaal,
avan veettaarai appadich solvathu athiga nichchayamallavaa? (maththeayu
10:25)
அவர்களுக்குப்
பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும்
இல்லை; அறியப்படாத இரகசியமும்
இல்லை. (மத்தேயு 10:26)
avarga'lukkup bayappadaathirungga'l; ve'liyaakkappadaatha ma'raiporu'lum illai;
a'riyappadaatha iragasiyamum illai.
(maththeayu 10:26)
நான் உங்களுக்கு இருளிலே
சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே
சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை
நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள். (மத்தேயு
10:27)
naan ungga'lukku iru'lilea
sollugi'rathai neengga'l ve'lichchaththilea sollungga'l;
kaathilea keadki'rathai neengga'l veeduga'linmeal pirasiththampa'n'nungga'l. (maththeayu 10:27)
ஆத்துமாவைக்
கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை
மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள்
பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும்
நரகத்திலே அழிக்க வல்லவருக்கே
பயப்படுங்கள். (மத்தேயு 10:28)
aaththumaavaik kolla
vallavarga'laayiraamal, sareeraththai maaththiram
kollugi'ravarga'lukku neengga'l bayappadavea'ndaam; aaththumaavaiyum sareeraththaiyum naragaththilea azhikka
vallavarukkea bayappadungga'l. (maththeayu
10:28)
ஒரு காசுக்கு இரண்டு
அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள்
அல்லவா? ஆயினும் உங்கள்
பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில்
ஒன்றாகிலும் தரையிலே விழாது.
(மத்தேயு 10:29)
oru kaasukku ira'ndu
adaikkalaan kuruviga'lai vi’rki'raarga'l
allavaa? aayinum ungga'l pithaavin
siththamillaamal, avaiga'lil on'raagilum tharaiyilea
vizhaathu. (maththeayu 10:29)
உங்கள்
தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. (மத்தேயு
10:30)
ungga'l
thalaiyilu'l'la mayirellaam e'n'nappattirukki'rathu. (maththeayu 10:30)
ஆதலால்,
பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான்
குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். (மத்தேயு
10:31)
aathalaal, bayappadaathirungga'l; aneagam
adaikkalaan kuruviga'laippaarkkilum
neengga'l
viseashiththavarga'laayirukki'reerga'l. (maththeayu
10:31)
மனுஷர்
முன்பாக என்னை அறிக்கை
பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக
அறிக்கைபண்ணுவேன். (மத்தேயு 10:32)
manushar munbaaga ennai
a'rikkai
pa'n'nugi'ravan evanoa,
avanai naanum paraloagaththilirukki'ra en pithaavin
munbaaga
a'rikkaipa'n'nuvean. (maththeayu
10:32)
மனுஷர்
முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும்
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின்
முன்பாக மறுதலிப்பேன். (மத்தேயு
10:33)
manushar munbaaga ennai
ma'ruthalikki'ravan evanoa,
avanai naanum paraloagaththilirukki'ra en pithaavin
munbaaga
ma'ruthalippean. (maththeayu
10:33)
பூமியின்மேல்
சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே
அனுப்பவந்தேன். (மத்தேயு 10:34)
boomiyinmeal samaathaanaththai
anuppavanthean en'ru
e'n'naathirungga'l; samaathaanaththaiyalla, pattayaththaiyea anuppavanthean. (maththeayu
10:34)
எப்படியெனில்,
மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும்
தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும்
பிரிவினையுண்டாக்க வந்தேன். (மத்தேயு
10:35)
eppadiyenil, maganukkum thagappanukkum, maga'lukkum thaaykkum,
marumaga'lukkum maamikkum
pirivinaiyu'ndaakka
vanthean. (maththeayu 10:35)
ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள்
அவன் வீட்டாரே. (மத்தேயு
10:36)
oru manushanukkuch saththurukka'l avan
veettaarea. (maththeayu
10:36)
தகப்பனையாவது
தாயையாவது என்னிலும் அதிகமாய்
நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன்
அல்ல; மகனையாவது மகளையாவது
என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன்
எனக்குப் பாத்திரன் அல்ல. (மத்தேயு 10:37)
thagappanaiyaavathu
thaayaiyaavathu ennilum athigamaay neasikki'ravan
enakkup paaththiran alla;
maganaiyaavathu maga'laiyaavathu ennilum
athigamaay neasikki'ravan
enakkup paaththiran alla. (maththeayu 10:37)
தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப்
பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன்
அல்ல. (மத்தேயு 10:38)
than siluvaiyai eduththukko'ndu ennaip
pinpat'raathavan enakkup
paaththiran alla. (maththeayu
10:38)
தன் ஜீவனைக் காக்கிறவன்
அதை இழந்துபோவான்; என்னிமித்தம்
தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். (மத்தேயு
10:39)
than jeevanaik
kaakki'ravan athai
izhanthupoavaan;
ennimiththam than jeevanai
izhanthupoagi'ravan athaik
kaappaan. (maththeayu 10:39)
உங்களை
ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். (மத்தேயு
10:40)
ungga'lai eat'rukko'l'lugi'ravan ennai
eat'rukko'l'lugi'raan; ennai
eat'rukko'l'lugi'ravan ennai
anuppinavarai eat'rukko'l'lugi'raan. (maththeayu
10:40)
தீர்க்கதரிசி
என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான்
என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை
ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். (மத்தேயு
10:41)
theerkkatharisi ennum naamaththinimiththam theerkkatharisiyai eat'rukko'l'lugi'ravan theerkkatharisikkeat'ra palanai
adaivaan; neethimaan ennum
naamaththinimiththam
neethimaanai eat'rukko'l'lugi'ravan neethimaanukkeat'ra palanai
adaivaan. (maththeayu 10:41)
சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச்
சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர்
மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று,
மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
என்றார். (மத்தேயு 10:42)
seeshan ennum naamaththinimiththam inthach si'riyaril oruvanukku
oru kalasam tha'n'neer
maaththiram kudikkak kodukki'ravanum than
palanai adaiyaama’rpoagaan en'ru, meyyaagavea ungga'lukkuch sollugi'rean en'raar. (maththeayu
10:42)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!