Saturday, March 18, 2017

வேதமே அகராதி: ஆதி, அநாதி, நித்திய



ஆதியிலே  தேவன்  வானத்தையும்  பூமியையும்  சிருஷ்டித்தார்.  (ஆதியாகமம்  1:1)
In  the  beginning  God  created  the  heaven  and  the  earth.  (Genesis  1:1)

ஆதியிலே  வார்த்தை  இருந்தது,  அந்த  வார்த்தை  தேவனிடத்திலிருந்தது,  அந்த  வார்த்தை  தேவனாயிருந்தது.  (யோவான்  1:1)
In  the  beginning  was  the  Word,  and  the  Word  was  with  God,  and  the  Word  was  God.  (John  1:1)

தேவனுடைய  குமாரனாகிய  இயேசு  கிறிஸ்துவினுடைய  சுவிசேஷத்தின்  ஆரம்பம்.  (மாற்கு  1:1)
The  beginning  of  the  gospel  of  Jesus  Christ,  the  Son  of  God;  (Mark  1:1)

அவர்  மனுஷனைப்  பூமியில்  வைத்த  ஆதிகாலமுதல்  இப்படியிருக்கிறது  என்பதையும்  நீர்  அறியீரோ?  (யோபு  20:5)
Knowest  thou  not  this  of  old,  since  man  was  placed  upon  earth,  (Job  20:4)

ஆகிலும்,  ஆதியிலே  மனுஷரைச்  சிருஷ்டித்த  தேவன்  அவர்களை  ஆணும்  பெண்ணுமாக  உண்டாக்கினார்.  (மாற்கு  10:6)
But  from  the  beginning  of  the  creation  God  made  them  male  and  female.  (Mark  10:6)

அநாதி  தேவனே  உனக்கு  அடைக்கலம்;  அவருடைய  நித்திய  புயங்கள்  உனக்கு  ஆதாரம்;  அவர்  உனக்கு  முன்னின்று  சத்துருக்களைத்  துரத்தி,  அவர்களை  அழித்துப்போடு  என்று  கட்டளையிடுவார்.  (உபாகமம்  33:27)
The  eternal  God  is  thy  refuge,  and  underneath  are  the  everlasting  arms:  and  he  shall  thrust  out  the  enemy  from  before  thee;  and  shall  say,  Destroy  them.  (Deuteronomy  33:27)

பர்வதங்கள்  தோன்றுமுன்னும்,  நீர்  பூமியையும்  உலகத்தையும்  உருவாக்குமுன்னும்,  நீரே  அநாதியாய்  என்றென்றைக்கும்  தேவனாயிருக்கிறீர்.  (சங்கீதம்  90:2)
Before  the  mountains  were  brought  forth,  or  ever  thou  hadst  formed  the  earth  and  the  world,  even  from  everlasting  to  everlasting,  thou  art  God.  (Psalms  90:2)

இவன்  தகப்பனும்  தாயும்  வம்சவரலாறும்  இல்லாதவன்;  இவன்  நாட்களின்  துவக்கமும்  ஜீவனின்  முடிவுமுடையவனாயிராமல்,  தேவனுடைய  குமாரனுக்கு  ஒப்பானவனாய்  என்றென்றைக்கும்  ஆசாரியனாக  நிலைத்திருக்கிறான்.  (எபிரெயர்  7:3)
Without  father,  without  mother,  without  descent,  having  neither  beginning  of  days,  nor  end  of  life;  but  made  like  unto  the  Son  of  God;  abideth  a  priest  continually.  (Hebrews  7:3)

பின்பு  லேவியரான  யெசுவா,  கத்மியேல்,  பானி,  ஆசாப்நெயா,  செரெபியா,  ஒதியா,  செபனியா,  பெத்தகியா  என்பவர்கள்  ஜனங்களைப்  பார்த்து:  நீங்கள்  எழுந்திருந்து,  அநாதியாய்  என்றென்றைக்குமிருக்கிற  உங்கள்  தேவனாகிய  கர்த்தரை  ஸ்தோத்திரியுங்கள்  என்று  சொல்லி,  கர்த்தரை  நோக்கி:  எந்த  ஸ்துதி  ஸ்தோத்திரத்துக்கும்  மேலான  உம்முடைய  மகிமையுள்ள  நாமத்துக்கு  ஸ்தோத்திரமுண்டாவதாக.  (நெகேமியா  9:5)
Then  the  Levites,  Jeshua,  and  Kadmiel,  Bani,  Hashabniah,  Sherebiah,  Hodijah,  Shebaniah,  and  Pethahiah,  said,  Stand  up  and  bless  the  LORD  your  God  for  ever  and  ever:  and  blessed  be  thy  glorious  name,  which  is  exalted  above  all  blessing  and  praise.  (Nehemiah  9:5)

கர்த்தர்  சதாகாலங்களாகிய  என்றென்றைக்கும்  ராஜரிகம்  பண்ணுவார்.  (யாத்திராகமம்  15:18)
The  LORD  shall  reign  for  ever  and  ever.  (Exodus  15:18)

உமது  நாமத்தை  எல்லாத்  தலைமுறைகளிலும்  பிரஸ்தாபப்படுத்துவேன்,  இதினிமித்தம்  ஜனங்கள்  உம்மை  என்றென்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  துதிப்பார்கள்.  (சங்கீதம்  45:17)
I  will  make  thy  name  to  be  remembered  in  all  generations:  therefore  shall  the  people  praise  thee  for  ever  and  ever.  (Psalms  45:17)

நான்  எப்பொழுதும்  என்றைக்கும்  உமது  வேதத்தைக்  காத்துக்கொள்ளுவேன்.  (சங்கீதம்  119:44)
So  shall  I  keep  thy  law  continually  for  ever  and  ever.  (Psalms  119:44)

அவர்  அவைகளை  என்றைக்குமுள்ள  சதாகாலங்களிலும்  நிலைக்கும்படி  செய்தார்;  மாறாத  பிரமாணத்தை  அவைகளுக்கு  நியமித்தார்.  (சங்கீதம்  148:6)
He  hath  also  stablished  them  for  ever  and  ever:  he  hath  made  a  decree  which  shall  not  pass.  (Psalms  148:6)

இப்பொழுது  நீ  போய்,  இது  பிற்காலத்துக்கு  என்றென்றைக்கும்  இருக்கும்படி,  இதை  அவர்களுக்கு  முன்பாக  ஒரு  பலகையில்  எழுதி,  ஒரு  புஸ்தகத்தில்  வரை.  (ஏசாயா  30:8)
Now  go,  write  it  before  them  in  a  table,  and  note  it  in  a  book,  that  it  may  be  for  the  time  to  come  for  ever  and  ever:  (Isaiah  30:8)

இரவும்  பகலும்  அது  அவியாது;  அதின்  புகை  என்றென்றைக்கும்  எழும்பும்;  தலைமுறை  தலைமுறையாக  அது  பாழாயிருக்கும்;  சதாகாலம்  சதாகாலமாக  அதை  ஒருவரும்  கடந்துபோவதில்லை.  (ஏசாயா  34:10)
It  shall  not  be  quenched  night  nor  day;  the  smoke  thereof  shall  go  up  for  ever:  from  generation  to  generation  it  shall  lie  waste;  none  shall  pass  through  it  for  ever  and  ever.  (Isaiah  34:10)

மேலும்,  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருந்து,  சதாகாலங்களிலும்  உயிரோடிருக்கிறவருக்கு  அந்த  ஜீவன்கள்,  மகிமையையும்  கனத்தையும்  ஸ்தோத்திரத்தையும்  செலுத்தும்போது,  (வெளிப்படுத்தின  விசேஷம்  4:9)
And  when  those  beasts  give  glory  and  honour  and  thanks  to  him  that  sat  on  the  throne,  who  liveth  for  ever  and  ever,  (Revelation  4:9)

பூமி  உண்டாகுமுன்னும்,  ஆதிமுதற்கொண்டும்  அநாதியாய்  நான்  அபிஷேகம்பண்ணப்பட்டேன்.  (நீதிமொழிகள்  8:23)
I  was  set  up  from  everlasting,  from  the  beginning,  or  ever  the  earth  was.  (Proverbs  8:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!