Thursday, November 03, 2016

Leaviyaraagamam 5 | லேவியராகமம் 5 | Leviticus 5


சாட்சியாகிய  ஒருவன்,  இடப்பட்ட  ஆணையைக்  கேட்டிருந்தும்,  தான்  கண்டதையும்  அறிந்ததையும்  தெரிவியாதிருந்து  பாவஞ்செய்தால்,  அவன்  தன்  அக்கிரமத்தைச்  சுமப்பான்.  (லேவியராகமம்  5:1)

saadchiyaagiya  oruvan,  idappatta  aa'naiyaik  keattirunthum,  thaan  ka'ndathaiyum  a’rinthathaiyum  theriviyaathirunthu  paavagnseythaal,  avan  than  akkiramaththaich  sumappaan.  (leaviyaraagamam  5:1)

அசுத்தமான  காட்டு  மிருகத்தின்  உடலையாவது,  அசுத்தமான  நாட்டு  மிருகத்தின்  உடலையாவது,  அசுத்தமான  ஊரும்  பிராணிகளின்  உடலையாவது,  இவ்வித  அசுத்தமான  யாதொரு  வஸ்துவையாவது,  ஒருவன்  அறியாமல்  தொட்டால்,  அவன்  தீட்டும்  குற்றமும்  உள்ளவனாவான்.  (லேவியராகமம்  5:2)

asuththamaana  kaattu  mirugaththin  udalaiyaavathu,  asuththamaana  naattu  mirugaththin  udalaiyaavathu,  asuththamaana  oorum  piraa'niga'lin  udalaiyaavathu,  ivvitha  asuththamaana  yaathoru  vasthuvaiyaavathu,  oruvan  a’riyaamal  thottaal,  avan  theettum  kut’ramum  u'l'lavanaavaan.  (leaviyaraagamam  5:2)

அல்லது,  எந்த  அசுத்தத்தினாலாகிலும்  தீட்டுப்பட்ட  ஒரு  மனிதனை  ஒருவன்  அறியாமல்  தொட்டு,  பின்பு  அதை  அறிந்துகொண்டால்,  அவன்  குற்றமுள்ளவனாவான்.  (லேவியராகமம்  5:3)

allathu,  entha  asuththaththinaalaagilum  theettuppatta  oru  manithanai  oruvan  a’riyaamal  thottu,  pinbu  athai  a’rinthuko'ndaal,  avan  kut’ramu'l'lavanaavaan.  (leaviyaraagamam  5:3)

மனிதர்  பதறி  ஆணையிடும்  எந்தக்  காரியத்திலானாலும்,  ஒருவன்  தீமை  செய்கிறதற்காவது  நன்மை  செய்கிறதற்காவது,  தன்  மனம்  அறியாமல்,  தன்  உதடுகளினால்  பதறி  ஆணையிட்டு,  பின்பு  அவன்  அதை  அறிந்துகொண்டால்,  அதைக்குறித்துக்  குற்றமுள்ளவனாவான்.  (லேவியராகமம்  5:4)

manithar  patha’ri  aa'naiyidum  enthak  kaariyaththilaanaalum,  oruvan  theemai  seygi’ratha’rkaavathu  nanmai  seygi’ratha’rkaavathu,  than  manam  a’riyaamal,  than  uthaduga'linaal  patha’ri  aa'naiyittu,  pinbu  avan  athai  a’rinthuko'ndaal,  athaikku’riththuk  kut’ramu'l'lavanaavaan.  (leaviyaraagamam  5:4)

இப்படிப்பட்டவைகள்  ஒன்றில்,  ஒருவன்  குற்றமுள்ளவனாகும்போது,  அவன்  தான்  செய்தது  பாவம்  என்று  அறிக்கையிட்டு,  (லேவியராகமம்  5:5)

ippadippattavaiga'l  on’ril,  oruvan  kut’ramu'l'lavanaagumpoathu,  avan  thaan  seythathu  paavam  en’ru  a’rikkaiyittu,  (leaviyaraagamam  5:5)

தான்  செய்த  பாவத்துக்குப்  பாவநிவாரணபலியாக,  ஆடுகளிலாவது  வெள்ளாடுகளிலாவது,  ஒரு  பெண்குட்டியைக்  குற்றநிவாரண  பலியாகக்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவரவேண்டும்;  அதினாலே  ஆசாரியன்  அவன்  செய்த  பாவத்தைக்குறித்து  அவனுக்காகப்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்.  (லேவியராகமம்  5:6)

thaan  seytha  paavaththukkup  paavanivaara'nabaliyaaga,  aaduga'lilaavathu  ve'l'laaduga'lilaavathu,  oru  pe'nkuttiyaik  kut’ranivaara'na  baliyaagak  karththarudaiya  sannithiyil  ko'nduvaravea'ndum;  athinaalea  aasaariyan  avan  seytha  paavaththaikku’riththu  avanukkaagap  paavanivirththi  seyyakkadavan.  (leaviyaraagamam  5:6)

ஆட்டுக்குட்டியைக்  கொண்டுவர  அவனுக்குச்  சக்தியில்லாதிருந்தால்,  அவன்  செய்த  குற்றத்தினிமித்தம்  இரண்டு  காட்டுப்புறாக்களையாவது,  இரண்டு  புறாக்குஞ்சுகளையாவது,  ஒன்றைப்  பாவநிவாரணபலியாகவும்  மற்றொன்றைச்  சர்வாங்க  தகனபலியாகவும்,  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவரக்கடவன்.  (லேவியராகமம்  5:7)

aattukkuttiyaik  ko'nduvara  avanukkuch  sakthiyillaathirunthaal,  avan  seytha  kut’raththinimiththam  ira'ndu  kaattuppu’raakka'laiyaavathu,  ira'ndu  pu’raakkugnchuga'laiyaavathu,  on’raip  paavanivaara'nabaliyaagavum  mat’ron’raich  sarvaangga  thaganabaliyaagavum,  karththarudaiya  sannithiyil  ko'nduvarakkadavan.  (leaviyaraagamam  5:7)

அவைகளை  ஆசாரியனிடத்தில்  கொண்டுவருவானாக;  அவன்  பாவநிவாரண  பலிக்கானதை  முன்னே  செலுத்தி,  அதின்  தலையை  அதின்  கழுத்தினிடத்தில்  கிள்ளி,  அதை  இரண்டாக்காமல்  வைத்து,  (லேவியராகமம்  5:8)

avaiga'lai  aasaariyanidaththil  ko'nduvaruvaanaaga;  avan  paavanivaara'na  balikkaanathai  munnea  seluththi,  athin  thalaiyai  athin  kazhuththinidaththil  ki'l'li,  athai  ira'ndaakkaamal  vaiththu,  (leaviyaraagamam  5:8)

அதின்  இரத்தத்தில்  கொஞ்சம்  எடுத்து,  பலிபீடத்தின்  பக்கத்தில்  தெளித்து,  மீதியான  இரத்தத்தைப்  பலிபீடத்தின்  அடியிலே  வடியவிடுவானாக;  இது  பாவநிவாரணபலி.  (லேவியராகமம்  5:9)

athin  iraththaththil  kogncham  eduththu,  balipeedaththin  pakkaththil  the'liththu,  meethiyaana  iraththaththaip  balipeedaththin  adiyilea  vadiyaviduvaanaaga;  ithu  paavanivaara'nabali.  (leaviyaraagamam  5:9)

மற்றதை  நியமத்தின்படியே  அவன்  தகனபலியாய்ச்  செலுத்தக்கடவன்;  இவ்விதமாக  அவன்  செய்த  பாவத்தை  ஆசாரியன்  நிவிர்த்திசெய்யக்கடவன்;  அப்பொழுது  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்.  (லேவியராகமம்  5:10)

mat’rathai  niyamaththinpadiyea  avan  thaganabaliyaaych  seluththakkadavan;  ivvithamaaga  avan  seytha  paavaththai  aasaariyan  nivirththiseyyakkadavan;  appozhuthu  athu  avanukku  mannikkappadum.  (leaviyaraagamam  5:10)

இரண்டு  காட்டுப்புறாக்களையாவது  இரண்டு  புறாக்குஞ்சுகளையாவது  கொண்டுவர  அவனுக்குச்  சக்தியில்லாதிருந்தால்,  பாவம்  செய்தவன்  பாவநிவாரணத்துக்காக  ஒரு  எப்பா  அளவான  மெல்லிய  மாவிலே  பத்தில்  ஒரு  பங்கைத்  தன்  காணிக்கையாகக்  கொண்டுவருவானாக;  அது  பாவநிவாரண  பலியாயிருப்பதினால்,  அதின்மேல்  எண்ணெய்  வார்க்காமலும்  தூபவர்க்கம்  போடாமலும்  இருந்து,  (லேவியராகமம்  5:11)

ira'ndu  kaattuppu’raakka'laiyaavathu  ira'ndu  pu’raakkugnchuga'laiyaavathu  ko'nduvara  avanukkuch  sakthiyillaathirunthaal,  paavam  seythavan  paavanivaara'naththukkaaga  oru  eppaa  a'lavaana  melliya  maavilea  paththil  oru  panggaith  than  kaa'nikkaiyaagak  ko'nduvaruvaanaaga;  athu  paavanivaara'na  baliyaayiruppathinaal,  athinmeal  e'n'ney  vaarkkaamalum  thoobavarkkam  poadaamalum  irunthu,  (leaviyaraagamam  5:11)

அதை  ஆசாரியனிடத்தில்  கொண்டுவரவேண்டும்;  அதிலே  ஆசாரியன்  ஞாபகக்குறியான  பங்காகத்  தன்  கைப்பிடி  நிறைய  எடுத்து,  கர்த்தருக்கு  இடும்  தகனபலிகளைப்போல,  பலிபீடத்தின்மேல்  தகனிக்கக்கடவன்;  இது  பாவநிவாரணபலி.  (லேவியராகமம்  5:12)

athai  aasaariyanidaththil  ko'nduvaravea'ndum;  athilea  aasaariyan  gnaabagakku’riyaana  panggaagath  than  kaippidi  ni’raiya  eduththu,  karththarukku  idum  thaganabaliga'laippoala,  balipeedaththinmeal  thaganikkakkadavan;  ithu  paavanivaara'nabali.  (leaviyaraagamam  5:12)

இவ்விதமாக  மேற்சொல்லிய  காரியங்கள்  ஒன்றில்  அவன்  செய்த  பாவத்துக்காக  ஆசாரியன்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்;  அப்பொழுது  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்,  மீதியானது  போஜனபலியைப்போல  ஆசாரியனைச்  சேரும்  என்றார்.  (லேவியராகமம்  5:13)

ivvithamaaga  mea’rsolliya  kaariyangga'l  on’ril  avan  seytha  paavaththukkaaga  aasaariyan  paavanivirththi  seyyakkadavan;  appozhuthu  athu  avanukku  mannikkappadum,  meethiyaanathu  poajanabaliyaippoala  aasaariyanaich  searum  en’raar.  (leaviyaraagamam  5:13)

பின்னும்  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (லேவியராகமம்  5:14)

pinnum  karththar  moaseayai  noakki:  (leaviyaraagamam  5:14)

ஒருவன்  கர்த்தருக்குரிய  பரிசுத்தமானவைகளில்  குற்றஞ்செய்து,  அறியாமையினால்  பாவத்துக்குட்பட்டால்,  அவன்  தன்  குற்றத்தினிமித்தம்  பரிசுத்த  ஸ்தலத்துச்  சேக்கல்  கணக்கின்படியே,  நீ  அவன்மேல்  சுமத்தும்  அபராதம்  எவ்வளவோ,  அவ்வளவு  வெள்ளிச்  சேக்கல்  பெறும்  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்கடாவைக்  குற்ற  நிவாரண  பலியாகக்  கர்த்தருடைய  சந்நிதியில்  கொண்டுவந்து,  (லேவியராகமம்  5:15)

oruvan  karththarukkuriya  parisuththamaanavaiga'lil  kut’ragnseythu,  a’riyaamaiyinaal  paavaththukkudpattaal,  avan  than  kut’raththinimiththam  parisuththa  sthalaththuch  seakkal  ka'nakkinpadiyea,  nee  avanmeal  sumaththum  abaraatham  evva'lavoa,  avva'lavu  ve'l'lich  seakkal  pe’rum  pazhuthat’ra  oru  aattukkadaavaik  kut’ra  nivaara'na  baliyaagak  karththarudaiya  sannithiyil  ko'nduvanthu,  (leaviyaraagamam  5:15)

பரிசுத்தமானதைக்குறித்துத்  தான்  செய்த  தப்பிதத்தினால்  உண்டான  நஷ்டத்தைச்  செலுத்தி,  அதினோடு  ஐந்தில்  ஒரு  பங்கை  அதிகமாகக்  கூட்டி,  ஆசாரியனுக்குக்  கொடுப்பானாக;  குற்றநிவாரணபலியாகிய  ஆட்டுக்கடாவினாலே  அவனுக்காக  ஆசாரியன்  பாவநிவிர்த்தி  செய்யக்கடவன்;  அப்பொழுது  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்.  (லேவியராகமம்  5:16)

parisuththamaanathaikku’riththuth  thaan  seytha  thappithaththinaal  u'ndaana  nashdaththaich  seluththi,  athinoadu  ainthil  oru  panggai  athigamaagak  kootti,  aasaariyanukkuk  koduppaanaaga;  kut’ranivaara'nabaliyaagiya  aattukkadaavinaalea  avanukkaaga  aasaariyan  paavanivirththi  seyyakkadavan;  appozhuthu  athu  avanukku  mannikkappadum.  (leaviyaraagamam  5:16)

ஒருவன்  செய்யத்தகாதென்று  கர்த்தருடைய  கட்டளைகளினால்  விலக்கப்பட்ட  யாதொன்றைச்  செய்து  பாவத்துக்குட்பட்டால்,  அதை  அவன்  அறியாமையினால்  செய்தாலும்,  அவன்  குற்றமுள்ளவனாயிருந்து,  தன்  அக்கிரமத்தைச்  சுமப்பான்.  (லேவியராகமம்  5:17)

oruvan  seyyaththagaathen’ru  karththarudaiya  katta'laiga'linaal  vilakkappatta  yaathon’raich  seythu  paavaththukkudpattaal,  athai  avan  a’riyaamaiyinaal  seythaalum,  avan  kut’ramu'l'lavanaayirunthu,  than  akkiramaththaich  sumappaan.  (leaviyaraagamam  5:17)

அதினிமித்தம்  அவன்  குற்றநிவாரணபலியாக,  உன்  மதிப்புக்குச்  சரியான  பழுதற்ற  ஒரு  ஆட்டுக்கடாவை  ஆசாரியனிடத்தில்  கொண்டுவருவானாக;  அவன்  அறியாமல்  செய்த  தப்பிதத்தை  ஆசாரியன்  அவனுக்காக  நிவிர்த்திசெய்யக்கடவன்;  அப்பொழுது  அது  அவனுக்கு  மன்னிக்கப்படும்.  (லேவியராகமம்  5:18)

athinimiththam  avan  kut’ranivaara'nabaliyaaga,  un  mathippukkuch  sariyaana  pazhuthat’ra  oru  aattukkadaavai  aasaariyanidaththil  ko'nduvaruvaanaaga;  avan  a’riyaamal  seytha  thappithaththai  aasaariyan  avanukkaaga  nivirththiseyyakkadavan;  appozhuthu  athu  avanukku  mannikkappadum.  (leaviyaraagamam  5:18)

இது  குற்றநிவாரணபலி;  அவன்  கர்த்தருக்கு  விரோதமாய்க்  குற்றஞ்செய்தான்  என்பது  நிச்சயம்  என்றார்.  (லேவியராகமம்  5:19)

ithu  kut’ranivaara'nabali;  avan  karththarukku  viroathamaayk  kut’ragnseythaan  enbathu  nichchayam  en’raar.  (leaviyaraagamam  5:19)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!