ஆறாம் வருஷத்து
ஆறாம் மாதம் ஐந்தாந்தேதியிலே, நான் என் வீட்டில்
உட்கார்ந்திருக்கிறபோதும், யூதாவின் மூப்பர்கள்
எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறபோதும், கர்த்தராகிய
ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது.
(எசேக்கியேல் 8:1)
aa’raam varushaththu aa’raam maatham
ainthaantheathiyilea, naan en veettil udkaarnthirukki’rapoathum, yoothaavin moopparga'l enakku
munbaaga
udkaarnthirukki’rapoathum, karththaraagiya aa'ndavarudaiya karam anggea enmeal amarnthathu.
(eseakkiyeal 8:1)
அப்பொழுது இதோ, அக்கினிச்சாயலாய்த் தோன்றுகிற
ஒருவரைக் கண்டேன்; அவருடைய
இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியும்
அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம்
சொகுசாவைப்போல் பிரகாசிக்கிற சாயலுமாயிருந்தது. (எசேக்கியேல்
8:2)
appozhuthu ithoa,
akkinichsaayalaayth thoan’rugi’ra oruvaraik
ka'ndean; avarudaiya iduppukkuk
keezhellaam akkiniyum avarudaiya
iduppukku mealellaam sogusaavaippoal piragaasikki’ra saayalumaayirunthathu. (eseakkiyeal
8:2)
கைபோல் தோன்றினதை
அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து
என்னைத் தூக்கினார்; ஆவியானவர்
என்னைப் பூமிக்கும் வானத்துக்கும்
நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு
எதிரான உள்வாசலின் நடையிலே
விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம்
இருந்தது. (எசேக்கியேல் 8:3)
kaipoal thoan’rinathai avar neetti, en thalaimayiraip pidiththu
ennaith thookkinaar; aaviyaanavar
ennaip boomikkum vaanaththukkum naduvea
ko'ndupoay, theavatharisanaththilea ennai erusaleamil vadathisaikku ethiraana
u'lvaasalin nadaiyilea
vittaar;
anggea
erichchalu'ndaakkugi’ra vikkiragaththin sthaanam irunthathu.
(eseakkiyeal 8:3)
இதோ, நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த
தரிசனத்துக்குச் சரியாக இஸ்ரவேலின்
தேவனுடைய மகிமை அங்கே விளங்கினது. (எசேக்கியேல்
8:4)
ithoa, naan pa'l'laththaakkilea ka'ndiruntha
tharisanaththukkuch
sariyaaga isravealin theavanudaiya
magimai
anggea
vi'langginathu. (eseakkiyeal
8:4)
அவர் என்னைப்பார்த்து: மனுபுத்திரனே,
உன் கண்களை ஏறெடுத்து,
வடக்கே பார் என்றார்;
அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து,
வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு
வடக்கே பார்த்தேன்; நடையிலே
எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம்
இருந்தது. (எசேக்கியேல் 8:5)
avar ennaippaarththu: manupuththiranea, un ka'nga'lai ea’reduththu, vadakkea paar en’raar; appozhuthu naan en ka'nga'lai ea’reduththu, vadakkea
paarththean; ithoa, balipeedaththin vaasalukku vadakkea
paarththean; nadaiyilea erichchalu'ndaakkugi’ra antha vikkiragam irunthathu.
(eseakkiyeal 8:5)
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே,
அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா?
என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத்
தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல்
வம்சத்தார் இங்கே செய்கிற
மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய்
அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும்
காண்பாய் என்று சொல்லி,
(எசேக்கியேல் 8:6)
avar ennai noakki: manupuththiranea, avarga'l seygi’rathaik kaa'ngi’raayaa? en parisuththa sthalaththaivittu ennaith
thooramaayp poagappa'n'numpadiyaana
israveal vamsaththaar inggea seygi’ra miguntha aruvaruppuga'laik kaa'ngi’raay allavaa?
ithilum athiga aruvaruppuga'lai innamum kaa'nbaay en’ru solli, (eseakkiyeal
8:6)
என்னைப் பிராகாரத்தின்
வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது
இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன்.
(எசேக்கியேல் 8:7)
ennaip piraagaaraththin vaasalukkuk ko'ndupoanaar; appozhuthu
ithoa, suvaril oru thuvaaraththaik ka'ndean.
(eseakkiyeal 8:7)
அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே,
நீ சுவரிலே துவாரமிடு
என்றார்; நான் சுவரிலே
துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது.
(எசேக்கியேல் 8:8)
avar ennai noakki: manupuththiranea, nee suvarilea thuvaaramidu
en’raar;
naan suvarilea thuvaaramittapoathu, ithoa,
oru vaasal irunthathu.
(eseakkiyeal 8:8)
அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார். (எசேக்கியேல்
8:9)
avar ennaippaarththu: nee u'l'lea poay, avarga'l inggea seygi’ra kodiya
aruvaruppuga'laip paar en’raar. (eseakkiyeal 8:9)
நான் உள்ளே போய்ப் பார்த்தபோது,
இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான
மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும்,
இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான
சகல விக்கிரகங்களும் சுவரில்
சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன. (எசேக்கியேல்
8:10)
naan u'l'lea
poayp paarththapoathu, ithoa, sagalavitha oorumpiraa'niga'lum aruvaruppaana
mirugangga'lumaagiya ivaiga'lin suroobangga'lum, israveal vamsaththaarudaiya naragalaana sagala vikkiragangga'lum suvaril sut’rilum siththirantheerappattirunthana. (eseakkiyeal 8:10)
இஸ்ரவேல் வம்சத்தாரின்
மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின்
நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய
யசனியாவும், அவனவன் தன்தன்
கையிலே தன்தன் தூபகலசத்தைப்
பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக
நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த
புகை எழும்பிற்று. (எசேக்கியேல்
8:11)
israveal vamsaththaarin moopparil
ezhubathupearum, avarga'lin naduvilea saappaanudaiya kumaaranaagiya yasaniyaavum, avanavan
thanthan kaiyilea thanthan
thoobakalasaththaip pidiththukko'ndu, avaiga'lukku munbaaga nin’raarga'l; thoobavarkkaththinaal
miguntha
pugai
ezhumbit’ru. (eseakkiyeal
8:11)
அப்பொழுது அவர் என்னை நோக்கி:
மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின்
மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர்
தங்கள் விக்கிரகங்களின் சித்திர
விநோத அறைகளில் செய்கிறதை
நீ கண்டாயா? கர்த்தர்
எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர்
தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார்.
(எசேக்கியேல் 8:12)
appozhuthu avar ennai noakki:
manupuththiranea, israveal vamsaththaarin moopparga'l anthagaaraththilea avaravar
thangga'l
vikkiragangga'lin
siththira vinoatha
a’raiga'lil seygi’rathai nee ka'ndaayaa? karththar
engga'laip paarkki’rathillai; karththar
theasaththaik kaivittaar en’ru sollugi’raarga'lea en’raar. (eseakkiyeal
8:12)
பின்னும் அவர்கள்
செய்கிற அதிக அருவருப்புகளை
இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே
சொல்லி, (எசேக்கியேல் 8:13)
pinnum avarga'l seygi’ra athiga aruvaruppuga'lai innamum kaa'nbaay en’ru avar ennudanea
solli, (eseakkiyeal
8:13)
என்னைக் கர்த்தருடைய
ஆலயத்து வடக்கு வாசலின்
நடையிலே கொண்டு போனார்;
இதோ, அங்கே தம்மூசுக்காக
அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள். (எசேக்கியேல்
8:14)
ennaik karththarudaiya aalayaththu
vadakku vaasalin nadaiyilea ko'ndu
poanaar; ithoa, anggea thammoosukkaaga azhuthuko'ndirukki’ra sthireega'l udkaarnthirunthaarga'l. (eseakkiyeal 8:14)
அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும்
அதிக அருவருப்புகளை இன்னமும்
காண்பாய் என்று என்னுடனே
சொல்லி, (எசேக்கியேல் 8:15)
appozhuthu avar: manupuththiranea, ithaik
ka'ndaayaa? ithilum athiga aruvaruppuga'lai innamum
kaa'nbaay
en’ru
ennudanea solli,
(eseakkiyeal 8:15)
என்னைக் கர்த்தருடைய
ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்;
இதோ, கர்த்தருடைய ஆலயத்தின்
வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே,
ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர்,
தங்கள் முதுகைக் கர்த்தருடைய
ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக்
கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே
இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள். (எசேக்கியேல்
8:16)
ennaik karththarudaiya aalayaththin
udpiraagaaraththilea ko'ndupoanaar; ithoa,
karththarudaiya aalayaththin vaasal nadaiyilea
ma'ndabaththukkum balipeedaththukkum naduvea,
ea’rakku’raiya irubaththainthu purushar,
thangga'l
muthugaik
karththarudaiya aalayaththukkum thangga'l mugaththaik keezhththisaikkum nearaagath thiruppinavarga'laayk kizhakkea
irukkum sooriyanai namaskariththaarga'l. (eseakkiyeal
8:16)
அப்பொழுது அவர் என்னை நோக்கி:
மனுபுத்திரனே, இதைக் கண்டாயா?
இங்கே யூதா வம்சத்தார்
செய்கிற அருவருப்புகள் அற்பமான
காரியமா? அவர்கள் தேசத்தைக்
கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள்
நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். (எசேக்கியேல்
8:17)
appozhuthu avar ennai noakki:
manupuththiranea, ithaik ka'ndaayaa?
inggea
yoothaa vamsaththaar seygi’ra aruvaruppuga'l a’rpamaana kaariyamaa?
avarga'l
theasaththaik kodumaiyinaal
nirappi ennai adikkadi
koabamoottugi’raarga'l; ithoa, avarga'l thiraadchakki'laiyaith thangga'l naasikku nearaagap pidikki’raarga'l. (eseakkiyeal 8:17)
ஆகையால் நானும்
உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன்;
என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள்
மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக்
கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்.
(எசேக்கியேல் 8:18)
aagaiyaal naanum ukkiraththoadea kaariyaththai
nadaththuvean; en ka'n thappaviduvathillai, naan irangguvathillai; avarga'l mahaa saththamaay en seviga'l keadkak
kooppittaalum avarga'lukku naan sevikoduppathillai en’raar. (eseakkiyeal
8:18)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!