கர்த்தருடைய வார்த்தை
எனக்கு உண்டாகி, அவர்: (எசேக்கியேல் 27:1)
karththarudaiya vaarththai enakku
u'ndaagi, avar: (eseakkiyeal 27:1)
மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின்பேரிலே புலம்பி,
(எசேக்கியேல் 27:2)
manupuththiranaagiya nee ippoathu
theeruvinpearilea pulambi, (eseakkiyeal 27:2)
சமுத்திரக் கரைதுறையிலே
குடியிருந்து, அநேகம் தீவுகளின்
ஜனங்களோடே வியாபாரம்பண்ணுகிற தீருவை
நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர்
உரைக்கிறது என்னவென்றால், தீருவே,
நீ உன்னைப் பூரணசௌந்தரியவதி என்கிறாய்.
(எசேக்கியேல் 27:3)
samuththirak karaithu’raiyilea kudiyirunthu, aneagam theevuga'lin janangga'loadea viyaabaarampa'n'nugi’ra theeruvai noakki:
karththaraagiya aa'ndavar
uraikki’rathu ennaven’raal, theeruvea,
nee unnaip poora'nasaunthariyavathi engi’raay. (eseakkiyeal
27:3)
கடல்களின் நடுமையத்திலே
உன் தாபரம் இருக்கிறது;
உன்னைக் கட்டினவர்கள் உன்னைப்
பூரணவடிவாய்க் கட்டினார்கள். (எசேக்கியேல்
27:4)
kadalga'lin nadumaiyaththilea un thaabaram irukki’rathu; unnaik kattinavarga'l unnaip poora'navadivaayk kattinaarga'l. (eseakkiyeal 27:4)
சேனீரிலிருந்து வந்த தேவதாருமரத்தால் உன் கப்பற் பலகைகளைச்
செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். (எசேக்கியேல்
27:5)
seaneerilirunthu vantha theavathaarumaraththaal un kappa’r palagaiga'laich seythaarga'l; paaymarangga'laich seyyumpadikku leebanoanilirunthu keathurumarangga'laik ko'nduvanthaarga'l. (eseakkiyeal
27:5)
பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள்;
கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால்
உன் வாரிபலகைகளைச் செய்து,
அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள். (எசேக்கியேல்
27:6)
baasaanin karvaalimarangga'linaalea un thuduppuga'laich seythaarga'l; kiththeem
theevuga'lilirunthu vantha
aashoor maraththaal un vaaripalagaiga'laich seythu, athilea
yaanaiththantham azhuththiyirunthaarga'l. (eseakkiyeal 27:6)
எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல்
புடவை நீ விரித்த
பாயாயிருந்தது; எலீசா தீவுகளின்
இளநீலமும் இரத்தாம்பரமும் உன் விதானமாயிருந்தது. (எசேக்கியேல்
27:7)
egipthilirunthu vantha
siththiraththaiyalu'l'la
sa'nalnool pudavai
nee viriththa paayaayirunthathu; eleesaa theevuga'lin i'laneelamum
iraththaambaramum un vithaanamaayirunthathu. (eseakkiyeal
27:7)
சீதோன் அர்வாத்
என்னும் பட்டணங்களின் குடிகள்
உனக்குத் தண்டுவலிக்கிறவர்களாயிருந்தார்கள். தீருவே,
உன்னிடத்திலிருந்த உன் சாஸ்திரிகள்
உன் மாலுமிகளாயிருந்தார்கள். (எசேக்கியேல்
27:8)
seethoan arvaath ennum patta'nangga'lin kudiga'l unakkuth
tha'nduvalikki’ravarga'laayirunthaarga'l. theeruvea,
unnidaththiliruntha un saasthiriga'l un maalumiga'laayirunthaarga'l. (eseakkiyeal 27:8)
கேபாரின் முதியோரும்
அதின் சாஸ்திரிகளும் உன்னில்
கம்பத்துப்பார்க்கிறவர்களாயிருந்தார்கள்;
சமுத்திரத்தின் சகல கப்பல்களும்
அவைகளிலுள்ள கப்பற்காரரும் உன்னோடே
தொழில்துறை வியாபாரம் பண்ணுகிறதற்காக உன்னிடத்தில்
இருந்தார்கள். (எசேக்கியேல் 27:9)
keabaarin muthiyoarum athin saasthiriga'lum unnil kambaththuppaarkki’ravarga'laayirunthaarga'l; samuththiraththin
sagala kappalga'lum avaiga'lilu'l'la kappa’rkaararum unnoadea
thozhilthu’rai viyaabaaram pa'n'nugi’ratha’rkaaga unnidaththil
irunthaarga'l. (eseakkiyeal
27:9)
பெர்சியரும், லூதியரும்,
பூத்தியரும் உன் இராணுவத்தில்
யுத்தவீரராயிருந்து உனக்குள் கேடகமும்
தலைச்சீராவும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள். (எசேக்கியேல்
27:10)
persiyarum, loothiyarum, pooththiyarum
un iraa'nuvaththil yuththaveeraraayirunthu unakku'l
keadagamum thalaichseeraavum thookkivaiththu, unnai alanggariththaarga'l. (eseakkiyeal
27:10)
அர்வாத் புத்திரரும்
உன் இராணுவ மனுஷரும்
உன் மதில்கள்மேல் சுற்றிலும்,
கம்மாத்தியர் உன் கொத்தளங்களிலும் இருந்தார்கள்;
இவர்கள் உன் மதில்கள்மேல்
சுற்றிலும் தங்கள் பரிசைகளைத்
தூக்கிவைத்து, உன் வடிவத்தைப்
பூரணப்படுத்தினார்கள். (எசேக்கியேல் 27:11)
arvaath puththirarum
un iraa'nuva manusharum
un mathilga'lmeal
sut’rilum, kammaaththiyar un koththa'langga'lilum irunthaarga'l; ivarga'l un mathilga'lmeal
sut’rilum thangga'l parisaiga'laith thookkivaiththu, un vadivaththaip poora'nappaduththinaarga'l. (eseakkiyeal 27:11)
சகலவித பொருள்களின்
திரளினாலும் தர்ஷீஸ் ஊரார் உன்னோடே வியாபாரம்
பண்ணினார்கள்; வெள்ளியையும் இரும்பையும்
தகரத்தையும் ஈயத்தையும் உன் சந்தைகளில் விற்கவந்தார்கள். (எசேக்கியேல்
27:12)
sagalavitha poru'lga'lin thira'linaalum tharshees
ooraar unnoadea viyaabaaram pa'n'ninaarga'l; ve'l'liyaiyum
irumbaiyum thagaraththaiyum eeyaththaiyum
un santhaiga'lil vi’rkavanthaarga'l. (eseakkiyeal
27:12)
யாவான், தூபால்,
மேசேக் என்னும் ஜாதியார்
உன் வியாபாரிகளாயிருந்து, மனுஷர்களையும்
வெண்கலப்பாத்திரங்களையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள். (எசேக்கியேல்
27:13)
yaavaan, thoobaal, measeak ennum jaathiyaar un viyaabaariga'laayirunthu, manusharga'laiyum ve'ngalappaaththirangga'laiyum un thozhilthu’raikkuk ko'nduvanthaarga'l. (eseakkiyeal
27:13)
தொகர்மா வம்சத்தார்
குதிரைகளையும் குதிரைவீரரையும் கோவேறு
கழுதைகளையும் உன் சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள். (எசேக்கியேல்
27:14)
thokarmaa vamsaththaar kuthiraiga'laiyum kuthiraiveeraraiyum koavea’ru kazhuthaiga'laiyum un santhaiga'lukkuk ko'nduvanthaarga'l. (eseakkiyeal
27:14)
தேதான் புத்திரர்
உன் வியாபாரிகளாயிருந்தார்கள்; அநேகம்
தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது;
யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும்
அவைகளுக்குப் பதிலாகக் கொண்டுவந்தார்கள். (எசேக்கியேல்
27:15)
theathaan puththirar
un viyaabaariga'laayirunthaarga'l; aneagam theevuga'lin varththagam un vasamaagach searnthathu; yaanaiththanthangga'laiyum karungkaali marangga'laiyum avaiga'lukkup bathilaagak ko'nduvanthaarga'l. (eseakkiyeal 27:15)
சீரியர் உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தம் உன்னோடே
வியாபாரம்பண்ணி, மரகதங்களையும், இரத்தாம்பரங்களையும், சித்திரத்தையலாடைகளையும், உயர்ந்த
வஸ்திரங்களையும், பவளங்களையும், பளிங்கையும்
உன் சந்தைகளில் விற்கவந்தார்கள். (எசேக்கியேல்
27:16)
seeriyar un vealaippaadaana pa’rpala poru'lga'linimiththam unnoadea
viyaabaarampa'n'ni, maragathangga'laiyum, iraththaambarangga'laiyum, siththiraththaiyalaadaiga'laiyum, uyarntha vasthirangga'laiyum, pava'langga'laiyum, pa'linggaiyum un santhaiga'lil vi’rkavanthaarga'l. (eseakkiyeal 27:16)
யூதரும் இஸ்ரவேல்
தேசத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணி, மின்னீத்,
பன்னாக் என்கிற ஊர்களின்
கோதுமையையும், தேனையும், எண்ணெயையும்,
பிசின்தைலத்தையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள். (எசேக்கியேல்
27:17)
yootharum israveal
theasaththaarum unnoadea
viyaabaarampa'n'ni, minneeth,
pannaak engi’ra oorga'lin koathumaiyaiyum, theanaiyum,
e'n'neyaiyum, pisinthailaththaiyum
un thozhilthu’raikkuk ko'nduvanthaarga'l. (eseakkiyeal 27:17)
தமஸ்கு உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தமும், சகலவிதப்
பொருள்களின் திரட்சியினிமித்தமும் உன்னோடே
வர்த்தகம்பண்ணி, கெல்போனின் திராட்சரசத்தையும் வெண்மையான
ஆட்டுமயிரையும் உனக்கு விற்றார்கள்.
(எசேக்கியேல் 27:18)
thamasku un vealaippaadaana pa’rpala poru'lga'linimiththamum,
sagalavithap poru'lga'lin thiradchiyinimiththamum unnoadea
varththagampa'n'ni, kelboanin thiraadcharasaththaiyum ve'nmaiyaana aattumayiraiyum unakku
vit’raarga'l. (eseakkiyeal
27:18)
தாண் நாட்டாரும்,
போக்கும் வரத்துமான யாவானரும்
துலக்கப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும் வசம்பையும்
உன் சந்தைகளில் கொண்டுவந்து
உன் தொழில்துறையில் விற்றார்கள்.
(எசேக்கியேல் 27:19)
thaa'n naattaarum, poakkum
varaththumaana yaavaanarum thulakkappatta irumbaiyum ilavanggaththaiyum vasambaiyum un santhaiga'lil ko'nduvanthu un thozhilthu’raiyil vit’raarga'l. (eseakkiyeal
27:19)
இரதங்களுக்குப் போடுகிற
மேன்மையான இரத்தினக்கம்பளங்களைத் தேதானின்
மனுஷர் கொண்டுவந்து, உன்னோடே
வியாபாரம்பண்ணினார்கள். (எசேக்கியேல் 27:20)
irathangga'lukkup poadugi’ra meanmaiyaana iraththinakkamba'langga'laith theathaanin manushar
ko'nduvanthu, unnoadea viyaabaarampa'n'ninaarga'l. (eseakkiyeal 27:20)
அரபியரும், கேதாரின்
சகல பிரபுக்களும் உனக்கு
வாடிக்கையான வர்த்தகராகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து,
உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள். (எசேக்கியேல்
27:21)
arabiyarum, keathaarin
sagala pirabukka'lum unakku
vaadikkaiyaana varththagaraagi, aattukkuttiga'laiyum aattukkadaakka'laiyum
ve'l'laattukkadaakka'laiyum ko'nduvanthu,
unnoadea viyaabaarampa'n'ninaarga'l. (eseakkiyeal
27:21)
சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள்
உன்னோடே வர்த்தகம்பண்ணி, மேல்தரமான
சகலவித சம்பாரங்களையும், சகலவித
இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன் சந்தைகளில் கொண்டுவந்தார்கள். (எசேக்கியேல்
27:22)
seabaa, raamaa patta'nangga'lin viyaabaariga'l unnoadea
varththagampa'n'ni, mealtharamaana sagalavitha sambaarangga'laiyum, sagalavitha iraththinakka’rka'laiyum, ponnaiyum
un santhaiga'lil ko'nduvanthaarga'l. (eseakkiyeal 27:22)
ஆரான், கன்னே,
ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின்
வியாபாரிகளும், அசீரியரும், கில்மாத்
பட்டணத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள். (எசேக்கியேல்
27:23)
aaraan, kannea,
eathean ennum patta'naththaarum,
seabaavin viyaabaariga'lum, aseeriyarum, kilmaath patta'naththaarum unnoadea
viyaabaarampa'n'ninaarga'l. (eseakkiyeal 27:23)
இவர்கள் சகலவித
உயர்ந்த சரக்குகளையும், இளநீலப்
பட்டுகளும் விசித்திரத்தையலாடைகளும் அடங்கிய
புடவைக்கட்டுகளையும், விலை உயர்ந்த
வஸ்திரங்கள் வைக்கப்பட்டு, கயிறுகளால்
கட்டியிருக்கும் கேதுருமரப்பெட்டிகளையும் கொண்டுவந்து,
உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள். (எசேக்கியேல்
27:24)
ivarga'l sagalavitha uyarntha sarakkuga'laiyum, i'laneelap
pattuga'lum visiththiraththaiyalaadaiga'lum adanggiya pudavaikkattuga'laiyum, vilai uyarntha
vasthirangga'l vaikkappattu, kayi’ruga'laal kattiyirukkum keathurumarappettiga'laiyum ko'nduvanthu,
unnoadea viyaabaarampa'n'ninaarga'l. (eseakkiyeal
27:24)
உன் தொழில்துறையில் தர்ஷீசின்
கப்பலாட்கள் உன்னைப் போற்றிப்
பாடினார்கள்; நீ சமுத்திரத்தின் நடுவிலே
உன்னைப் பூரணப்படுத்தி, உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய். (எசேக்கியேல்
27:25)
un thozhilthu’raiyil tharsheesin kappalaadka'l
unnaip poat’rip paadinaarga'l; nee samuththiraththin naduvilea
unnaip poora'nappaduththi, unnai migavum magimaippaduththinaay.
(eseakkiyeal 27:25)
தண்டுவலிக்கிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக்கொண்டுபோனார்கள்; நடுச்சமுத்திரத்திலே கொண்டற்காற்று
உன்னை உடைத்துப்போட்டது. (எசேக்கியேல்
27:26)
tha'nduvalikki’ravarga'l aazhamaana
tha'n'neerga'lil unnai valiththukko'ndupoanaarga'l; naduchsamuththiraththilea
ko'nda’rkaat’ru unnai udaiththuppoattathu. (eseakkiyeal 27:26)
நீ நாசமடையும்
நாளிலே உன் ஆஸ்தியோடும்,
உன் சந்தைகளோடும், உன் தொழில்துறையோடுங்கூட உன் கப்பலாட்களும், உன் மாலுமிகளும், உன்னில்
கம்பத்துப்பார்க்கிறவர்களும், உன் வியாபாரிகளும், உன்னிலுள்ள
எல்லா யுத்தவீரரும், உன் நடுவில் இருக்கிற
எல்லாக் கூட்டத்தாரும் நடுச்சமுத்திரத்திலே விழுவார்கள்.
(எசேக்கியேல் 27:27)
nee naasamadaiyum naa'lilea
un aasthiyoadum, un santhaiga'loadum, un thozhilthu’raiyoadungkooda
un kappalaadka'lum, un maalumiga'lum, unnil kambaththuppaarkki’ravarga'lum, un viyaabaariga'lum, unnilu'l'la
ellaa yuththaveerarum, un naduvil irukki’ra ellaak
koottaththaarum naduchsamuththiraththilea vizhuvaarga'l. (eseakkiyeal
27:27)
உன் மாலுமிகள்
ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும்.
(எசேக்கியேல் 27:28)
un maalumiga'l oalamidum saththaththinaal sut’ruppu’rangga'l athirum.
(eseakkiyeal 27:28)
தண்டுவலிக்கிற யாவரும்,
கப்பலாட்களும், கடல் மாலுமிகள்
அனைவரும், தங்கள் கப்பல்களை
விட்டுஇறங்கி, கரையிலே நின்று,
(எசேக்கியேல் 27:29)
tha'nduvalikki’ra yaavarum, kappalaadka'lum, kadal maalumiga'l anaivarum, thangga'l kappalga'lai vittui’ranggi, karaiyilea
nin’ru,
(eseakkiyeal 27:29)
உன்னிமித்தம் சத்தமிட்டுப்புலம்பி, மனங்கசந்து
அழுது, தங்கள் தலைகளின்மேல்
புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில்
புரண்டு, (எசேக்கியேல் 27:30)
unnimiththam saththamittuppulambi, manangkasanthu azhuthu,
thangga'l
thalaiga'linmeal puzhuthiyaip
poattukko'ndu, saambalil pura'ndu,
(eseakkiyeal 27:30)
உனக்காக மொட்டையிட்டு
இரட்டுடுத்திக்கொண்டு, உனக்காக மனங்கசந்து
அழுது, துக்கங்கொண்டாடுவார்கள். (எசேக்கியேல்
27:31)
unakkaaga mottaiyittu irattuduththikko'ndu, unakkaaga manangkasanthu azhuthu,
thukkangko'ndaaduvaarga'l. (eseakkiyeal
27:31)
அவர்கள் உனக்காகத்
தங்கள் துக்கத்திலே ஓலமிட்டு,
உன்னிமித்தம் புலம்பி, உன்னைக்குறித்து: சமுத்திரத்தின் நடுவிலே
அழிந்துபோன தீருவுக்குச் சமான நகரம் உண்டோ?
(எசேக்கியேல் 27:32)
avarga'l unakkaagath thangga'l thukkaththilea oalamittu, unnimiththam
pulambi,
unnaikku’riththu: samuththiraththin naduvilea
azhinthupoana theeruvukkuch samaana
nagaram
u'ndoa? (eseakkiyeal 27:32)
உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள்
வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும்
உன் வியாபாரத்தினாலும் பூமியின்
ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய். (எசேக்கியேல்
27:33)
un santhaichsarakkuga'l samuththirangga'l vazhiyaayk ko'nduvarappadugaiyil, aneaga janangga'laith thirupthiyaakkinaay; un aasthiyin thira'linaalum un viyaabaaraththinaalum
boomiyin
raajaakka'lai aisuvariyavaanga'laakkinaay. (eseakkiyeal
27:33)
நீ சமுத்திரத்
திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன் தொழில் துறையும்
உன் நடுவிலுள்ள கூட்டம்
அனைத்தும் அழிந்துபோயின என்பார்கள்.
(எசேக்கியேல் 27:34)
nee samuththirath thiraiga'linaalea aazhangga'lil udaikkappattapoathu, un thozhil thu’raiyum un naduvilu'l'la koottam anaiththum
azhinthupoayina enbaarga'l. (eseakkiyeal
27:34)
தீவுகளின் குடிகள்
எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய
ராஜாக்கள் மிகவும் பிரமித்து,
கலங்கின முகமாயிருப்பார்கள். (எசேக்கியேல்
27:35)
theevuga'lin kudiga'l ellaam unnimiththam
thigaippaarga'l; avarga'ludaiya raajaakka'l
migavum
piramiththu, kalanggina mugamaayiruppaarga'l. (eseakkiyeal
27:35)
சகல ஜனங்களிலுமுள்ள வர்த்தகர்
உன்பேரில் ஈசல்போடுவார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார்
என்று சொல் என்றார்.
(எசேக்கியேல் 27:36)
sagala janangga'lilumu'l'la varththagar unpearil eesalpoaduvaarga'l; nee bayanggaramaavaay; ini orupoathum
irukkamaattaay engi’raar en’ru sol en’raar. (eseakkiyeal
27:36)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!