Monday, October 24, 2016

Ereamiyaa 50 | எரேமியா 50 | Jeremiah 50

கர்த்தர்  தீர்க்கதரிசியாகிய  எரேமியாவைக்கொண்டு  பாபிலோனுக்கும்  கல்தேயர்  தேசத்துக்கும்  விரோதமாக  உரைத்த  வசனம்:  (எரேமியா  50:1)

karththar  theerkkatharisiyaagiya  ereamiyaavaikko'ndu  baabiloanukkum  kaltheayar  theasaththukkum  viroathamaaga  uraiththa  vasanam:  (ereamiyaa  50:1)

பாபிலோன்  பிடிபட்டது;  பேல்  வெட்கப்பட்டது;  மெரொதாக்  நொறுங்குண்டது;  அதினுடைய  சிலைகள்  இலச்சையடைந்தது;  அதினுடைய  விக்கிரகங்கள்  நொறுங்கிப்போயின  என்று  ஜாதிகளுக்குள்ளே  அறிவித்துப்  பிரசித்தம்பண்ணுங்கள்;  இதை  மறைக்காமல்  கொடியேற்றி  விளம்பரம்பண்ணுங்கள்.  (எரேமியா  50:2)

baabiloan  pidipattathu;  beal  vedkappattathu;  merothaak  no’runggu'ndathu;  athinudaiya  silaiga'l  ilachchaiyadainthathu;  athinudaiya  vikkiragangga'l  no’runggippoayina  en’ru  jaathiga'lukku'l'lea  a’riviththup  pirasiththampa'n'nungga'l;  ithai  ma’raikkaamal  kodiyeat’ri  vi'lambarampa'n'nungga'l.  (ereamiyaa  50:2)

அதற்கு  விரோதமாய்  வடக்கேயிருந்து  ஒரு  ஜாதி  வந்து,  அதின்  தேசத்தைப்  பாழாக்கிப்போடும்;  அதிலே  குடியிருப்பாரில்லை;  மனுஷரோடே  மிருகங்களும்  ஓடிப்போய்விடும்.  (எரேமியா  50:3)

atha’rku  viroathamaay  vadakkeayirunthu  oru  jaathi  vanthu,  athin  theasaththaip  paazhaakkippoadum;  athilea  kudiyiruppaarillai;  manusharoadea  mirugangga'lum  oadippoayvidum.  (ereamiyaa  50:3)

அந்நாட்களிலும்  அக்காலத்திலும்  இஸ்ரவேல்  புத்திரர்  வருவார்கள்;  அவர்களும்  யூதா  புத்திரரும்  ஏகமாய்  அழுது,  நடந்துவந்து,  தங்கள்  தேவனாகிய  கர்த்தரைத்  தேடுவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  50:4)

annaadka'lilum  akkaalaththilum  israveal  puththirar  varuvaarga'l;  avarga'lum  yoothaa  puththirarum  eagamaay  azhuthu,  nadanthuvanthu,  thangga'l  theavanaagiya  karththaraith  theaduvaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  50:4)

மறக்கப்படாத  நித்திய  உடன்படிக்கையினால்  நாம்  கர்த்தரைச்  சேர்ந்துகொள்வோம்  வாருங்கள்  என்று  சீயோனுக்கு  நேராய்  முகங்களைத்  திருப்பி,  சீயோனுக்குப்  போகிற  வழி  எதுவென்று  கேட்டு  விசாரிப்பார்கள்.  (எரேமியா  50:5)

ma’rakkappadaatha  niththiya  udanpadikkaiyinaal  naam  karththaraich  searnthuko'lvoam  vaarungga'l  en’ru  seeyoanukku  nearaay  mugangga'laith  thiruppi,  seeyoanukkup  poagi’ra  vazhi  ethuven’ru  keattu  visaarippaarga'l.  (ereamiyaa  50:5)

என்  ஜனங்கள்  காணாமற்போன  ஆடுகள்,  அவர்களுடைய  மேய்ப்பர்கள்  அவர்களைச்  சிதறப்பண்ணி,  பர்வதங்களில்  அலையவிட்டார்கள்;  ஒரு  மலையிலிருந்து  மறுமலைக்குப்  போனார்கள்;  தங்கள்  தொழுவத்தை  மறந்துவிட்டார்கள்.  (எரேமியா  50:6)

en  janangga'l  kaa'naama’rpoana  aaduga'l,  avarga'ludaiya  meaypparga'l  avarga'laich  sitha’rappa'n'ni,  parvathangga'lil  alaiyavittaarga'l;  oru  malaiyilirunthu  ma’rumalaikkup  poanaarga'l;  thangga'l  thozhuvaththai  ma’ranthuvittaarga'l.  (ereamiyaa  50:6)

அவர்களைக்  கண்டுபிடித்தவர்கள்  எல்லாரும்  அவர்களைப்  பட்சித்தார்கள்;  அவர்களுடைய  சத்துருக்கள்:  எங்கள்மேல்  குற்றமில்லை;  அவர்கள்  நீதியின்  வாசஸ்தலத்திலே  கர்த்தருக்கு  விரோதமாக,  தங்கள்  பிதாக்கள்  நம்பின  கர்த்தருக்கு  விரோதமாகவே,  பாவஞ்செய்தார்கள்  என்றார்கள்.  (எரேமியா  50:7)

avarga'laik  ka'ndupidiththavarga'l  ellaarum  avarga'laip  padchiththaarga'l;  avarga'ludaiya  saththurukka'l:  engga'lmeal  kut’ramillai;  avarga'l  neethiyin  vaasasthalaththilea  karththarukku  viroathamaaga,  thangga'l  pithaakka'l  nambina  karththarukku  viroathamaagavea,  paavagnseythaarga'l  en’raarga'l.  (ereamiyaa  50:7)

பாபிலோனின்  நடுவிலிருந்தோடி,  கல்தேயரின்  தேசத்தைவிட்டுப்  புறப்பட்டு,  மந்தையின்  முன்நடக்கும்  கடாக்களைப்போல்  இருங்கள்.  (எரேமியா  50:8)

baabiloanin  naduvilirunthoadi,  kaltheayarin  theasaththaivittup  pu’rappattu,  manthaiyin  munnadakkum  kadaakka'laippoal  irungga'l.  (ereamiyaa  50:8)

இதோ,  நான்  பாபிலோனுக்கு  விரோதமாக  வடதேசத்தில்  இருக்கும்  பெரிய  ஜாதிகளின்  கூட்டத்தை  எழுப்பி,  அதை  வரப்பண்ணுவேன்;  அவர்கள்  அதற்கு  விரோதமாக  ஆயத்தம்பண்ணுவார்கள்;  அங்கேயிருந்து  வருகிறவர்களால்  அது  பிடிக்கப்படும்;  அவர்களுடைய  அம்புகள்  சாமர்த்தியமுள்ள  பராக்கிரமசாலியின்  அம்புகளைப்போல்  இருக்கும்;  அவைகள்  விருதாவாய்த்  திரும்புவதில்லை.  (எரேமியா  50:9)

ithoa,  naan  baabiloanukku  viroathamaaga  vadatheasaththil  irukkum  periya  jaathiga'lin  koottaththai  ezhuppi,  athai  varappa'n'nuvean;  avarga'l  atha’rku  viroathamaaga  aayaththampa'n'nuvaarga'l;  anggeayirunthu  varugi’ravarga'laal  athu  pidikkappadum;  avarga'ludaiya  ambuga'l  saamarththiyamu'l'la  baraakkiramasaaliyin  ambuga'laippoal  irukkum;  avaiga'l  viruthaavaayth  thirumbuvathillai.  (ereamiyaa  50:9)

கல்தேயா  கொள்ளையாகும்:  அதைக்  கொள்ளையிடுகிறவர்கள்  எல்லாரும்  பரிபூரணமடைவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  50:10)

kaltheayaa  ko'l'laiyaagum:  athaik  ko'l'laiyidugi’ravarga'l  ellaarum  paripoora'namadaivaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  50:10)

என்  சுதந்தரத்தைக்  கொள்ளையிட்ட  நீங்கள்  சந்தோஷித்தீர்களே,  களிகூர்ந்தீர்களே,  புல்மேய்ந்து  கொழுத்த  கடாரியைப்போல்  பூரித்து,  வலியரிஷபம்போல்  முக்காரம்  போடுகிறீர்களே.  (எரேமியா  50:11)

en  suthantharaththaik  ko'l'laiyitta  neengga'l  santhoashiththeerga'lea,  ka'likoorntheerga'lea,  pulmeaynthu  kozhuththa  kadaariyaippoal  pooriththu,  valiyarishabampoal  mukkaaram  poadugi’reerga'lea.  (ereamiyaa  50:11)

உங்கள்  தாய்  மிகவும்  வெட்கி,  உங்களைப்  பெற்றவள்  நாணமடைவாள்;  இதோ,  அவள்  ஜாதிகளுக்குள்ளே  கடைசியாவதுமன்றி,  வனாந்தரமும்  வறட்சியும்  அந்தரவெளியுமாவாள்.  (எரேமியா  50:12)

ungga'l  thaay  migavum  vedki,  ungga'laip  pet’rava'l  naa'namadaivaa'l;  ithoa,  ava'l  jaathiga'lukku'l'lea  kadaisiyaavathuman’ri,  vanaantharamum  va’radchiyum  antharave'liyumaavaa'l.  (ereamiyaa  50:12)

கர்த்தரின்  கோபத்தினாலே  அது  குடியற்றதும்  பெரும்பாழுமாயிருக்கும்;  பாபிலோனைக்  கடந்துபோகிற  எவனும்  அதின்  எல்லா  வாதைகளினிமித்தமும்  பிரமித்து,  ஈசல்போடுவான்.  (எரேமியா  50:13)

karththarin  koabaththinaalea  athu  kudiyat’rathum  perumpaazhumaayirukkum;  baabiloanaik  kadanthupoagi’ra  evanum  athin  ellaa  vaathaiga'linimiththamum  piramiththu,  eesalpoaduvaan.  (ereamiyaa  50:13)

நீங்கள்  எல்லாரும்  பாபிலோனுக்கு  விரோதமாய்ச்  சுற்றிலும்  அணிவகுத்து  நின்று,  வில்லை  நாணேற்றி,  அதின்மேல்  அம்புகளை  எய்யுங்கள்;  அம்புச்செலவைப்  பாராதேயுங்கள்;  அது,  கர்த்தருக்கு  விரோதமாய்ப்  பாவஞ்செய்தது.  (எரேமியா  50:14)

neengga'l  ellaarum  baabiloanukku  viroathamaaych  sut’rilum  a'nivaguththu  nin’ru,  villai  naa'neat’ri,  athinmeal  ambuga'lai  eyyungga'l;  ambuchselavaip  paaraatheayungga'l;  athu,  karththarukku  viroathamaayp  paavagnseythathu.  (ereamiyaa  50:14)

அதற்கு  விரோதமாய்ச்  சுற்றிலும்  ஆர்ப்பரியுங்கள்;  அது  தன்னைக்  கையளித்தது;  அதின்  அஸ்திபாரங்கள்  விழுந்தது,  அதின்  மதில்கள்  இடிக்கப்பட்டது;  இது  கர்த்தர்  வாங்கும்  பழி;  அதினிடத்தில்  பழிவாங்குங்கள்;  அது  செய்ததுபோலவே  நீங்களும்  அதற்குச்  செய்யுங்கள்.  (எரேமியா  50:15)

atha’rku  viroathamaaych  sut’rilum  aarppariyungga'l;  athu  thannaik  kaiya'liththathu;  athin  asthibaarangga'l  vizhunthathu,  athin  mathilga'l  idikkappattathu;  ithu  karththar  vaanggum  pazhi;  athinidaththil  pazhivaanggungga'l;  athu  seythathupoalavea  neengga'lum  atha’rkuch  seyyungga'l.  (ereamiyaa  50:15)

விதைவிதைக்கிறவனையும்  அறுப்புக்காலத்தில்  அரிவாளைப்  பிடிக்கிறவனையும்  பாபிலோனில்  இராதபடிச்  சங்காரம்பண்ணுங்கள்;  கொல்லுகிற  பட்டயத்துக்குத்  தப்ப  அவரவர்  தங்கள்  ஜனத்தண்டைக்குத்  திரும்பிக்கொண்டு,  அவரவர்  தங்கள்  தேசத்துக்கு  ஓடிப்போவார்கள்.  (எரேமியா  50:16)

vithaivithaikki’ravanaiyum  a’ruppukkaalaththil  arivaa'laip  pidikki’ravanaiyum  baabiloanil  iraathapadich  sanggaarampa'n'nungga'l;  kollugi’ra  pattayaththukkuth  thappa  avaravar  thangga'l  janaththa'ndaikkuth  thirumbikko'ndu,  avaravar  thangga'l  theasaththukku  oadippoavaarga'l.  (ereamiyaa  50:16)

இஸ்ரவேல்  தெறிப்பட்டுப்போன  ஆடு,  சிங்கங்கள்  அதைத்  துரத்தின;  முதலில்  அசீரியா  ராஜா  அதைப்  பட்சித்தான்;  கடைசியில்  பாபிலோன்  ராஜாவாகிய  இந்த  நேபுகாத்நேச்சார்  அதின்  எலும்புகளை  முறித்தான்.  (எரேமியா  50:17)

israveal  the’rippattuppoana  aadu,  singgangga'l  athaith  thuraththina;  muthalil  aseeriyaa  raajaa  athaip  padchiththaan;  kadaisiyil  baabiloan  raajaavaagiya  intha  neabukaathneachchaar  athin  elumbuga'lai  mu’riththaan.  (ereamiyaa  50:17)

ஆகையால்,  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இதோ,  நான்  அசீரியா  ராஜாவைத்  தண்டித்ததுபோல்  பாபிலோன்  ராஜாவையும்  அவன்  தேசத்தையும்  தண்டித்து,  (எரேமியா  50:18)

aagaiyaal,  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  sollugi’rathu  ennaven’raal:  ithoa,  naan  aseeriyaa  raajaavaith  tha'ndiththathupoal  baabiloan  raajaavaiyum  avan  theasaththaiyum  tha'ndiththu,  (ereamiyaa  50:18)

இஸ்ரவேலை  அதின்  வாசஸ்தலத்துக்குத்  திரும்பிவரப்பண்ணுவேன்;  அப்பொழுது  அது  கர்மேலிலும்  பாசானிலும்  மேயும்;  எப்பிராயீமின்  மலைகளிலும்  கீலேயாத்திலும்  அதின்  ஆத்துமா  திருப்தியாகும்.  (எரேமியா  50:19)

isravealai  athin  vaasasthalaththukkuth  thirumbivarappa'n'nuvean;  appozhuthu  athu  karmealilum  baasaanilum  meayum;  eppiraayeemin  malaiga'lilum  keeleayaaththilum  athin  aaththumaa  thirupthiyaagum.  (ereamiyaa  50:19)

அந்நாட்களிலும்  அக்காலத்திலும்  இஸ்ரவேலின்  அக்கிரமம்  தேடப்பட்டாலும்  அது  காணாதிருக்கும்;  யூதாவின்  பாவங்கள்  தேடப்பட்டாலும்  அவைகள்  கிடையாதிருக்கும்;  நான்  மீதியாக  வைக்கிறவர்களுக்கு  மன்னிப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  50:20)

annaadka'lilum  akkaalaththilum  isravealin  akkiramam  theadappattaalum  athu  kaa'naathirukkum;  yoothaavin  paavangga'l  theadappattaalum  avaiga'l  kidaiyaathirukkum;  naan  meethiyaaga  vaikki’ravarga'lukku  mannippean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  50:20)

மெரதாயீம்  தேசத்துக்கு  விரோதமாகவும்  பேகோடு  குடிகளுக்கு  விரோதமாகவும்  நீ  போய்,  அவர்களைத்  துரத்தி,  யாவையும்  பாழாக்கிச்  சங்காரம்பண்ணி,  நான்  உனக்குக்  கட்டளையிட்டபடியெல்லாம்  செய்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  50:21)

merathaayeem  theasaththukku  viroathamaagavum  peakoadu  kudiga'lukku  viroathamaagavum  nee  poay,  avarga'laith  thuraththi,  yaavaiyum  paazhaakkich  sanggaarampa'n'ni,  naan  unakkuk  katta'laiyittapadiyellaam  sey  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  50:21)

தேசத்திலே  யுத்தத்தின்  சத்தமும்  மகா  சங்காரமும்  உண்டு.  (எரேமியா  50:22)

theasaththilea  yuththaththin  saththamum  mahaa  sanggaaramum  u'ndu.  (ereamiyaa  50:22)

சர்வ  பூமியின்  சம்மட்டி  எப்படி  முறித்து  உடைக்கப்பட்டது!  ஜாதிகளுக்குள்ளே  பாபிலோன்  எப்படிப்  பாழாய்ப்போயிற்று!  (எரேமியா  50:23)

sarva  boomiyin  sammatti  eppadi  mu’riththu  udaikkappattathu!  jaathiga'lukku'l'lea  baabiloan  eppadip  paazhaayppoayit’ru!  (ereamiyaa  50:23)

பாபிலோனே,  உனக்குக்  கண்ணியை  வைத்தேன்,  நீ  அதை  அறியாமல்  அதிலே  சிக்குண்டுபோனாய்;  நீ  அகப்பட்டும்  பிடிபட்டும்  போனாய்,  நீ  கர்த்தரோடே  யுத்தங்கலந்தாயே.  (எரேமியா  50:24)

baabiloanea,  unakkuk  ka'n'niyai  vaiththean,  nee  athai  a’riyaamal  athilea  sikku'ndupoanaay;  nee  agappattum  pidipattum  poanaay,  nee  karththaroadea  yuththangkalanthaayea.  (ereamiyaa  50:24)

கர்த்தர்  தம்முடைய  ஆயுதசாலையைத்  திறந்து,  தம்முடைய  சினத்தின்  அஸ்திராயுதங்களை  எடுத்துக்கொண்டு  வந்தார்;  இது  கல்தேயர்  தேசத்திலே  சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  செய்கிற  கிரியை.  (எரேமியா  50:25)

karththar  thammudaiya  aayuthasaalaiyaith  thi’ranthu,  thammudaiya  sinaththin  asthiraayuthangga'lai  eduththukko'ndu  vanthaar;  ithu  kaltheayar  theasaththilea  seanaiga'lin  karththaraagiya  aa'ndavar  seygi’ra  kiriyai.  (ereamiyaa  50:25)

கடையாந்தரத்திலிருந்து  அதற்கு  விரோதமாக  வந்து,  அதின்  களஞ்சியங்களைத்  திறந்து,  குவியல்  குவியலாகக்  குவித்து,  அதில்  ஒன்றும்  மீதியாகாதபடிக்கு  அதை  முற்றிலும்  அழித்துப்போடுங்கள்.  (எரேமியா  50:26)

kadaiyaantharaththilirunthu  atha’rku  viroathamaaga  vanthu,  athin  ka'lagnchiyangga'laith  thi’ranthu,  kuviyal  kuviyalaagak  kuviththu,  athil  on’rum  meethiyaagaathapadikku  athai  mut’rilum  azhiththuppoadungga'l.  (ereamiyaa  50:26)

அதின்  காளைகளையெல்லாம்  வெட்டுங்கள்;  அவைகள்  கொலைக்களம்  சேரக்கடவது;  ஐயோ!  அவர்கள்  விசாரிக்கப்படும்  நாள்  வந்ததே.  (எரேமியா  50:27)

athin  kaa'laiga'laiyellaam  vettungga'l;  avaiga'l  kolaikka'lam  searakkadavathu;  aiyoa!  avarga'l  visaarikkappadum  naa'l  vanthathea.  (ereamiyaa  50:27)

நம்முடைய  தேவன்  பழிவாங்கினதை,  அவர்  தமது  ஆலயத்துக்காகப்  பழிவாங்கினதையே,  சீயோனிலே  அறிவிக்கும்படிக்கு,  பாபிலோன்  தேசத்திலிருந்து  தப்பியோடிவந்தவர்களின்  சத்தம்  கேட்கப்படும்.  (எரேமியா  50:28)

nammudaiya  theavan  pazhivaangginathai,  avar  thamathu  aalayaththukkaagap  pazhivaangginathaiyea,  seeyoanilea  a’rivikkumpadikku,  baabiloan  theasaththilirunthu  thappiyoadivanthavarga'lin  saththam  keadkappadum.  (ereamiyaa  50:28)

பாபிலோனுக்கு  விரோதமாய்  வரும்படி  வில்வீரரை  அழையுங்கள்;  வில்  வளைக்கிறவர்களே,  நீங்கள்  எல்லாரும்  அதற்கு  விரோதமாய்ச்  சுற்றிலும்  பாளயமிறங்குங்கள்,  ஒருவரையும்  தப்பவிடாதிருங்கள்;  அதின்  கிரியைக்குத்தக்க  பலனை  அதற்குச்  சரிக்கட்டுங்கள்;  அது  செய்ததின்படியெல்லாம்  அதற்குச்  செய்யுங்கள்;  அது  இஸ்ரவேலின்  பரிசுத்தராகிய  கர்த்தருக்கு  விரோதமாக  இடும்புசெய்தது.  (எரேமியா  50:29)

baabiloanukku  viroathamaay  varumpadi  vilveerarai  azhaiyungga'l;  vil  va'laikki’ravarga'lea,  neengga'l  ellaarum  atha’rku  viroathamaaych  sut’rilum  paa'layami’ranggungga'l,  oruvaraiyum  thappavidaathirungga'l;  athin  kiriyaikkuththakka  palanai  atha’rkuch  sarikkattungga'l;  athu  seythathinpadiyellaam  atha’rkuch  seyyungga'l;  athu  isravealin  parisuththaraagiya  karththarukku  viroathamaaga  idumbuseythathu.  (ereamiyaa  50:29)

ஆகையால்  அதின்  வாலிபர்  அதின்  வீதிகளில்  விழுவார்கள்;  அதின்  யுத்தவீரர்  எல்லாரும்  அந்நாளிலே  சங்காரமாவார்கள்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  50:30)

aagaiyaal  athin  vaalibar  athin  veethiga'lil  vizhuvaarga'l;  athin  yuththaveerar  ellaarum  annaa'lilea  sanggaaramaavaarga'l  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  50:30)

இதோ,  இடும்புள்ளவனே,  நான்  உனக்கு  விரோதமாக  வருகிறேன்  என்று  சேனைகளின்  கர்த்தராகிய  ஆண்டவர்  சொல்லுகிறார்;  நான்  உன்னை  விசாரிக்குங்காலமாகிய  உன்னுடைய  நாள்  வந்தது.  (எரேமியா  50:31)

ithoa,  idumbu'l'lavanea,  naan  unakku  viroathamaaga  varugi’rean  en’ru  seanaiga'lin  karththaraagiya  aa'ndavar  sollugi’raar;  naan  unnai  visaarikkungkaalamaagiya  unnudaiya  naa'l  vanthathu.  (ereamiyaa  50:31)

இடும்புள்ளவன்  இடறிவிழுவான்;  அவனை  எடுத்து  நிறுத்துவாரில்லை;  நான்  அவனுடைய  பட்டணங்களில்  அக்கினியைக்  கொளுத்துவேன்,  அது  அவன்  சுற்றுப்புறத்தார்  எல்லாரையும்  பட்சிக்கும்.  (எரேமியா  50:32)

idumbu'l'lavan  ida’rivizhuvaan;  avanai  eduththu  ni’ruththuvaarillai;  naan  avanudaiya  patta'nangga'lil  akkiniyaik  ko'luththuvean,  athu  avan  sut’ruppu’raththaar  ellaaraiyum  padchikkum.  (ereamiyaa  50:32)

சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  இஸ்ரவேல்  புத்திரரும்  யூதா  புத்திரரும்  ஏகமாய்  ஒடுங்குண்டார்கள்;  அவர்களைச்  சிறையாக்கின  யாவரும்  அவர்களை  விடமாட்டோம்  என்று  கெட்டியாய்ப்  பிடித்துக்கொண்டார்கள்.  (எரேமியா  50:33)

seanaiga'lin  karththar  sollugi’rathu  ennaven’raal:  israveal  puththirarum  yoothaa  puththirarum  eagamaay  odunggu'ndaarga'l;  avarga'laich  si’raiyaakkina  yaavarum  avarga'lai  vidamaattoam  en’ru  kettiyaayp  pidiththukko'ndaarga'l.  (ereamiyaa  50:33)

அவர்களுடைய  மீட்பரோவெனில்  வல்லமையுள்ளவர்,  சேனைகளின்  கர்த்தர்  என்பது  அவருடைய  நாமம்;  தேசத்தை  இளைப்பாறப்பண்ணுவதற்கும்,  பாபிலோன்  குடிகளைத்  தத்தளிக்கப்பண்ணுவதற்கும்  அவர்களுடைய  வழக்கை  அவர்  நடத்துவார்.  (எரேமியா  50:34)

avarga'ludaiya  meedparoavenil  vallamaiyu'l'lavar,  seanaiga'lin  karththar  enbathu  avarudaiya  naamam;  theasaththai  i'laippaa’rappa'n'nuvatha’rkum,  baabiloan  kudiga'laith  thaththa'likkappa'n'nuvatha’rkum  avarga'ludaiya  vazhakkai  avar  nadaththuvaar.  (ereamiyaa  50:34)

பட்டயம்  கல்தேயர்மேலும்,  பாபிலோன்  குடிகள்மேலும்,  அதினுடைய  பிரபுக்கள்மேலும்,  அதினுடைய  ஞானிகள்மேலும்  வருமென்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  50:35)

pattayam  kaltheayarmealum,  baabiloan  kudiga'lmealum,  athinudaiya  pirabukka'lmealum,  athinudaiya  gnaaniga'lmealum  varumen’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  50:35)

பட்டயம்  பொய்களைப்  பிணைக்கிறவர்கள்மேலும்  வரும்;  அவர்கள்  பைத்தியக்காரராவார்கள்;  பட்டயம்  அதின்  பராக்கிரமசாலிகள்மேலும்  வரும்,  அவர்கள்  கலங்குவார்கள்.  (எரேமியா  50:36)

pattayam  poyga'laip  pi'naikki’ravarga'lmealum  varum;  avarga'l  paiththiyakkaararaavaarga'l;  pattayam  athin  baraakkiramasaaliga'lmealum  varum,  avarga'l  kalangguvaarga'l.  (ereamiyaa  50:36)

பட்டயம்  அதின்  குதிரைகள்மேலும்,  அதின்  இரதங்கள்மேலும்,  அதின்  நடுவில்  இருக்கிற  பலஜாதியான  ஜனங்கள்  யாவர்மேலும்  வரும்,  அவர்கள்  பேடிகளாவார்கள்;  பட்டயம்  அதின்  பொக்கிஷங்களின்மேல்  வரும்,  அவைகள்  கொள்ளையாகும்.  (எரேமியா  50:37)

pattayam  athin  kuthiraiga'lmealum,  athin  irathangga'lmealum,  athin  naduvil  irukki’ra  palajaathiyaana  janangga'l  yaavarmealum  varum,  avarga'l  peadiga'laavaarga'l;  pattayam  athin  pokkishangga'linmeal  varum,  avaiga'l  ko'l'laiyaagum.  (ereamiyaa  50:37)

வறட்சி  அதின்  தண்ணீர்கள்மேல்  வரும்,  அவைகள்  வறண்டுபோம்;  அது  விக்கிரக  தேசம்;  அருக்களிப்பான  சிலைகளின்மேல்  மனமயங்கியிருக்கிறார்கள்.  (எரேமியா  50:38)

va’radchi  athin  tha'n'neerga'lmeal  varum,  avaiga'l  va’ra'ndupoam;  athu  vikkiraga  theasam;  arukka'lippaana  silaiga'linmeal  manamayanggiyirukki’raarga'l.  (ereamiyaa  50:38)

ஆகையால்  காட்டுமிருகங்களும்  ஓரிகளும்  அதிலே  குடியிருக்கும்;  கோட்டான்கள்  அதிலே  தங்கும்;  இனி  என்றென்றைக்கும்  அது  குடியேற்றப்படுவதில்லை;  தலைமுறை  தலைமுறையாக  ஒருவரும்  அதில்  சஞ்சரிப்பதுமில்லை.  (எரேமியா  50:39)

aagaiyaal  kaattumirugangga'lum  oariga'lum  athilea  kudiyirukkum;  koattaanga'l  athilea  thanggum;  ini  en’ren’raikkum  athu  kudiyeat’rappaduvathillai;  thalaimu’rai  thalaimu’raiyaaga  oruvarum  athil  sagncharippathumillai.  (ereamiyaa  50:39)

தேவன்  சோதோமையும்  கொமோராவையும்  அதின்  சுற்றுப்புறங்களையும்  கவிழ்த்துப்போட்டதுபோல  இதையும்  கவிழ்த்துப்போடுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  ஒருவரும்  அதில்  குடியிருப்பதில்லை,  ஒரு  மனுபுத்திரனும்  அதில்  தங்குவதுமில்லை.  (எரேமியா  50:40)

theavan  soathoamaiyum  komoaraavaiyum  athin  sut’ruppu’rangga'laiyum  kavizhththuppoattathupoala  ithaiyum  kavizhththuppoaduvean  en’ru  karththar  sollugi’raar;  oruvarum  athil  kudiyiruppathillai,  oru  manupuththiranum  athil  thangguvathumillai.  (ereamiyaa  50:40)

இதோ,  வடக்கேயிருந்து  ஒரு  ஜனமும்  பெரிய  ஜாதியும்  வரும்;  பூமியின்  எல்லைகளிலிருந்து  பலத்த  ராஜாக்கள்  எழும்புவார்கள்.  (எரேமியா  50:41)

ithoa,  vadakkeayirunthu  oru  janamum  periya  jaathiyum  varum;  boomiyin  ellaiga'lilirunthu  balaththa  raajaakka'l  ezhumbuvaarga'l.  (ereamiyaa  50:41)

அவர்கள்  வில்லும்  வேலும்  பிடித்துவருவார்கள்;  அவர்கள்  இரக்கமில்லாத  கொடியர்;  அவர்கள்  இரைச்சல்  சமுத்திர  இரைச்சல்போல்  இருக்கும்;  பாபிலோன்  குமாரத்தியே,  அவர்கள்  உனக்கு  விரோதமாக  யுத்தத்துக்கு  ஆயத்தப்பட்ட  ஆட்களாய்க்  குதிரைகளின்மேல்  ஏறி  வருவார்கள்.  (எரேமியா  50:42)

avarga'l  villum  vealum  pidiththuvaruvaarga'l;  avarga'l  irakkamillaatha  kodiyar;  avarga'l  iraichchal  samuththira  iraichchalpoal  irukkum;  baabiloan  kumaaraththiyea,  avarga'l  unakku  viroathamaaga  yuththaththukku  aayaththappatta  aadka'laayk  kuthiraiga'linmeal  ea’ri  varuvaarga'l.  (ereamiyaa  50:42)

அவர்கள்  வருகிற  செய்தியை  பாபிலோன்  ராஜா  கேட்கையில்  அவன்  கைகள்  தளரும்;  இடுக்கமும்  பிரசவ  வேதனைப்படுகிறவளுக்குண்டாகும்  வேதனையைப்போன்ற  வேதனையும்  அவனைப்  பிடிக்கும்.  (எரேமியா  50:43)

avarga'l  varugi’ra  seythiyai  baabiloan  raajaa  keadkaiyil  avan  kaiga'l  tha'larum;  idukkamum  pirasava  veathanaippadugi’rava'lukku'ndaagum  veathanaiyaippoan’ra  veathanaiyum  avanaip  pidikkum.  (ereamiyaa  50:43)

இதோ,  புரண்டு  ஓடுகிற  யோர்தானிலிருந்து  சிங்கத்தைப்போல்  பலவானுடைய  தாபரத்துக்கு  விரோதமாக  வருகிறான்;  அவனை  அங்கேயிருந்து  சடிதியிலே  ஓடிவரப்பண்ணுவேன்;  நான்  அதற்கு  விரோதமாகக்  கட்டளையிட்டு,  அனுப்பத்  தெரிந்துகொள்ளப்பட்டவன்  யார்?  எனக்குச்  சமானமானவன்  யார்?  எனக்குத்  திட்டஞ்சொல்பவன்  யார்?  எனக்கு  முன்பாக  நிற்கப்போகிற  மேய்ப்பன்  யார்?  (எரேமியா  50:44)

ithoa,  pura'ndu  oadugi’ra  yoarthaanilirunthu  singgaththaippoal  balavaanudaiya  thaabaraththukku  viroathamaaga  varugi’raan;  avanai  anggeayirunthu  sadithiyilea  oadivarappa'n'nuvean;  naan  atha’rku  viroathamaagak  katta'laiyittu,  anuppath  therinthuko'l'lappattavan  yaar?  enakkuch  samaanamaanavan  yaar?  enakkuth  thittagnsolbavan  yaar?  enakku  munbaaga  ni’rkappoagi’ra  meayppan  yaar?  (ereamiyaa  50:44)

ஆகையால்  கர்த்தர்  பாபிலோனுக்கு  விரோதமாக  யோசித்த  ஆலோசனையையும்,  அவர்  கல்தேயர்  தேசத்துக்கு  விரோதமாக  நினைத்திருக்கிற  நினைவுகளையும்  கேளுங்கள்;  மெய்யாகவே  மந்தையில்  சிறியவர்கள்  அவர்களைப்  பிடித்திழுப்பார்கள்;  மெய்யாகவே  அவர்கள்  இருக்கிற  தாபரங்களை  அவர்  பாழாக்குவார்.  (எரேமியா  50:45)

aagaiyaal  karththar  baabiloanukku  viroathamaaga  yoasiththa  aaloasanaiyaiyum,  avar  kaltheayar  theasaththukku  viroathamaaga  ninaiththirukki’ra  ninaivuga'laiyum  kea'lungga'l;  meyyaagavea  manthaiyil  si’riyavarga'l  avarga'laip  pidiththizhuppaarga'l;  meyyaagavea  avarga'l  irukki’ra  thaabarangga'lai  avar  paazhaakkuvaar.  (ereamiyaa  50:45)

பாபிலோன்  பிடிபட்டதின்  சத்தத்தினால்  பூமி  அதிரும்,  அதின்  கூப்பிடுதல்  ஜாதிகளுக்குள்ளே  கேட்கப்படும்.  (எரேமியா  50:46)

baabiloan  pidipattathin  saththaththinaal  boomi  athirum,  athin  kooppiduthal  jaathiga'lukku'l'lea  keadkappadum.  (ereamiyaa  50:46)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!