பார்வோன் காத்சாவை
அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாய்த்
தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான
கர்த்தருடைய வசனம்: (எரேமியா
47:1)
paarvoan kaathsaavai azhikkumunnea, pelistharukku
viroathamaayth theerkkatharisiyaagiya ereamiyaavukku u'ndaana
karththarudaiya vasanam: (ereamiyaa 47:1)
கர்த்தர் சொல்லுகிறது
என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து ஜலம் பொங்கிப் பிரவாகமாகித்
தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின்மேலும் புரண்டு
ஓடும்; அப்பொழுது மனுஷர்
கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லாரும் அலறுவார்கள்.
(எரேமியா 47:2)
karththar sollugi’rathu ennaven’raal: ithoa,
vadakkeayirunthu jalam ponggip piravaagamaagith theasaththinmealum,
athilu'l'la ellaavat’rinmealum, nagaraththinmealum,
athil kudiyirukki’ravarga'linmealum pura'ndu
oadum; appozhuthu manushar
kookkuralittu, theasaththin kudiga'lellaarum ala’ruvaarga'l. (ereamiyaa 47:2)
அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின்
சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின்
கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின்
இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார்
தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள்
பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள். (எரேமியா
47:3)
avarga'ludaiya balaththa kuthiraiga'ludaiya ku'lambuga'lin
saththaththaiyum, avarga'ludaiya irathangga'lin kadakadappaiyum, avarga'ludaiya uru'laiga'lin iraichchalaiyum keattu, thagappanmaar thangga'l kai ayarnthupoanathinaal thangga'l pi'l'laiga'laiyum noakkip
paaraathiruppaarga'l. (ereamiyaa
47:3)
பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும்,
தீருவுக்கும் சீதோனுக்கும் மீதியான
சகாயரையெல்லாம் சங்காரம்பண்ணவும் வருகிற
நாளிலே இப்படியாகும்; கப்தோர்
என்னும் கடற்கரையான தேசத்தாரில்
மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர்
பாழாக்குவார். (எரேமியா 47:4)
pelistharaiyellaam paazhaakkavum, theeruvukkum seethoanukkum meethiyaana sagaayaraiyellaam sanggaarampa'n'navum
varugi’ra
naa'lilea ippadiyaagum; kapthoar ennum kada’rkaraiyaana theasaththaaril meethiyaagiya pelistharaiyum karththar
paazhaakkuvaar. (ereamiyaa 47:4)
காத்சா
மொட்டையடிக்கப்படும்; அவர்களுடைய பள்ளத்தாக்கிலே மீதியாகிய
அஸ்கலோன் சங்காரமாகும்; நீ எந்தமட்டுந்தான் உன்னைக்
கீறிக்கொள்ளுவாய். (எரேமியா 47:5)
kaathsaa
mottaiyadikkappadum; avarga'ludaiya pa'l'laththaakkilea meethiyaagiya askaloan sanggaaramaagum; nee enthamattunthaan unnaik
kee’rikko'l'luvaay. (ereamiyaa
47:5)
ஆ
கர்த்தரின் பட்டயமே, எந்தமட்டும்
அமராதிருப்பாய்? உன் உறைக்குள்
திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு.
(எரேமியா 47:6)
aa karththarin pattayamea, enthamattum amaraathiruppaay? un u’raikku'l thirumbivanthu, oaynthu amarnthiru.
(ereamiyaa 47:6)
அது
எப்படி அமர்ந்திருக்கும்? அஸ்கலோனுக்கு
விரோதமாகவும் கடல்துறை தேசத்துக்கு
விரோதமாகவும் கர்த்தர் அதற்குக்
கட்டளைகொடுத்து, அவ்விடங்களுக்கென்று அதைக் குறித்தாரே. (எரேமியா
47:7)
athu eppadi amarnthirukkum? askaloanukku
viroathamaagavum kadalthu’rai theasaththukku viroathamaagavum karththar
atha’rkuk
katta'laikoduththu, avvidangga'lukken’ru athaik ku’riththaarea. (ereamiyaa
47:7)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!