Saturday, October 22, 2016

Ereamiyaa 39 | எரேமியா 39 | Jeremiah 39

யூதாவின்  ராஜாவாகிய  சிதேக்கியா  அரசாண்ட  ஒன்பதாம்  வருஷம்  பத்தாம்  மாதத்திலே  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரும்  அவனுடைய  எல்லா  இராணுவமும்  எருசலேமுக்கு  விரோதமாய்  வந்து,  அதை  முற்றிக்கைபோட்டார்கள்.  (எரேமியா  39:1)

yoothaavin  raajaavaagiya  sitheakkiyaa  arasaa'nda  onbathaam  varusham  paththaam  maathaththilea  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaarum  avanudaiya  ellaa  iraa'nuvamum  erusaleamukku  viroathamaay  vanthu,  athai  mut’rikkaipoattaarga'l.  (ereamiyaa  39:1)

சிதேக்கியா  அரசாண்ட  பதினோராம்  வருஷம்  நாலாம்  மாதம்,  ஒன்பதாம்  தேதியிலே  நகரத்து  மதிலில்  திறப்புக்கண்டது.  (எரேமியா  39:2)

sitheakkiyaa  arasaa'nda  pathinoaraam  varusham  naalaam  maatham,  onbathaam  theathiyilea  nagaraththu  mathilil  thi’rappukka'ndathu.  (ereamiyaa  39:2)

அப்பொழுது  பாபிலோன்  ராஜாவின்  பிரபுக்களாகிய  நெர்கல்சரேத்சேர்,  சம்கார்நேபோ,  சர்சேகிம்,  ரப்சாரீஸ்,  நெர்கல்சரேத்சேர்,  ரப்மாக்  என்பவர்களும்,  பாபிலோன்  ராஜாவின்  மற்ற  எல்லாப்  பிரபுக்களும்  உட்பிரவேசித்து,  நடுவாசலில்  இருந்தார்கள்.  (எரேமியா  39:3)

appozhuthu  baabiloan  raajaavin  pirabukka'laagiya  nerkalsareathsear,  samkaarneaboa,  sarseakim,  rabsaarees,  nerkalsareathsear,  rabmaak  enbavarga'lum,  baabiloan  raajaavin  mat’ra  ellaap  pirabukka'lum  udpiraveasiththu,  naduvaasalil  irunthaarga'l.  (ereamiyaa  39:3)

அப்பொழுது  யூதாவின்  ராஜாவாகிய  சிதேக்கியாவும்  சகல  யுத்த  மனுஷரும்  அவர்களைக்  கண்டபோது,  ஓடி,  இராத்திரிகாலத்தில்  ராஜாவுடைய  தோட்டத்துவழியே,  இரண்டு  மதில்களுக்கு  நடுவான  வாசலால்  நகரத்திலிருந்து  புறப்பட்டுப்போனார்கள்;  அவன்  வயல்வெளியின்  வழியே  போய்விட்டான்.  (எரேமியா  39:4)

appozhuthu  yoothaavin  raajaavaagiya  sitheakkiyaavum  sagala  yuththa  manusharum  avarga'laik  ka'ndapoathu,  oadi,  iraaththirikaalaththil  raajaavudaiya  thoattaththuvazhiyea,  ira'ndu  mathilga'lukku  naduvaana  vaasalaal  nagaraththilirunthu  pu’rappattuppoanaarga'l;  avan  vayalve'liyin  vazhiyea  poayvittaan.  (ereamiyaa  39:4)

ஆனாலும்,  கல்தேயருடைய  இராணுவம்  அவர்களைப்  பின்தொடர்ந்து,  எரிகோவின்  சமபூமியில்  சிதேக்கியாவைக்  கிட்டி,  அவனைப்  பிடித்து,  அவனை  ஆமாத்தேசத்தின்  ஊராகிய  ரிப்லாவுக்கு,  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரிடத்தில்  கொண்டுபோனார்கள்;  அங்கே  இவன்  அவனைக்  குறித்துத்  தீர்ப்புச்செய்தான்.  (எரேமியா  39:5)

aanaalum,  kaltheayarudaiya  iraa'nuvam  avarga'laip  pinthodarnthu,  erigoavin  samaboomiyil  sitheakkiyaavaik  kitti,  avanaip  pidiththu,  avanai  aamaaththeasaththin  ooraagiya  riblaavukku,  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaaridaththil  ko'ndupoanaarga'l;  anggea  ivan  avanaik  ku’riththuth  theerppuchseythaan.  (ereamiyaa  39:5)

பின்பு  பாபிலோன்  ராஜா  ரிப்லாவிலே,  சிதேக்கியாவின்  குமாரரை  அவன்  கண்களுக்கு  முன்பாக  வெட்டுவித்தான்;  யூதா  பிரபுக்கள்  அனைவரையும்  பாபிலோன்  ராஜா  வெட்டி,  (எரேமியா  39:6)

pinbu  baabiloan  raajaa  riblaavilea,  sitheakkiyaavin  kumaararai  avan  ka'nga'lukku  munbaaga  vettuviththaan;  yoothaa  pirabukka'l  anaivaraiyum  baabiloan  raajaa  vetti,  (ereamiyaa  39:6)

சிதேக்கியாவின்  கண்களைக்  கெடுத்து,  அவனைப்  பாபிலோனுக்குக்  கொண்டுபோக  அவனுக்கு  இரண்டு  வெண்கல  விலங்குகளைப்  போட்டான்.  (எரேமியா  39:7)

sitheakkiyaavin  ka'nga'laik  keduththu,  avanaip  baabiloanukkuk  ko'ndupoaga  avanukku  ira'ndu  ve'ngala  vilangguga'laip  poattaan.  (ereamiyaa  39:7)

கல்தேயர்  ராஜாவின்  அரமனையையும்  ஜனத்தின்  வீடுகளையும்  அக்கினியால்  சுட்டெரித்து,  எருசலேமின்  மதில்களை  இடித்துப்போட்டார்கள்.  (எரேமியா  39:8)

kaltheayar  raajaavin  aramanaiyaiyum  janaththin  veeduga'laiyum  akkiniyaal  sutteriththu,  erusaleamin  mathilga'lai  idiththuppoattaarga'l.  (ereamiyaa  39:8)

நகரத்தில்  தங்கியிருந்த  ஜனங்களையும்,  தன்  பட்சத்தில்  ஓடிவந்துவிட்டவர்களையும்,  மீதியான  மற்ற  ஜனங்களையும்,  காவற்  சேனாதிபதியாகிய  நேபுசராதான்  பாபிலோனுக்குச்  சிறைகளாகக்  கொண்டுபோனான்.  (எரேமியா  39:9)

nagaraththil  thanggiyiruntha  janangga'laiyum,  than  padchaththil  oadivanthuvittavarga'laiyum,  meethiyaana  mat’ra  janangga'laiyum,  kaava’r  seanaathibathiyaagiya  neabusaraathaan  baabiloanukkuch  si’raiga'laagak  ko'ndupoanaan.  (ereamiyaa  39:9)

காவற்சேனாதிபதியாகிய  நேபுசராதான்  ஒன்றுமில்லாத  ஏழைகளில்  சிலரை  யூதா  தேசத்திலே  வைத்து,  அவர்களுக்கு  அந்நாளிலே  திராட்சத்தோட்டங்களையும்  வயல்நிலங்களையும்  கொடுத்தான்.  (எரேமியா  39:10)

kaava’rseanaathibathiyaagiya  neabusaraathaan  on’rumillaatha  eazhaiga'lil  silarai  yoothaa  theasaththilea  vaiththu,  avarga'lukku  annaa'lilea  thiraadchaththoattangga'laiyum  vayalnilangga'laiyum  koduththaan.  (ereamiyaa  39:10)

ஆனாலும்  எரேமியாவைக்  குறித்து,  பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  காவற்சேனாதிபதியாகிய  நேபுசராதானை  நோக்கி:  (எரேமியா  39:11)

aanaalum  ereamiyaavaik  ku’riththu,  baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  kaava’rseanaathibathiyaagiya  neabusaraathaanai  noakki:  (ereamiyaa  39:11)

நீ  அவனை  அழைப்பித்து,  அவனுக்கு  ஒரு  பொல்லாப்பும்  செய்யாமல்,  அவனைப்  பத்திரமாய்ப்  பார்த்து,  அவன்  உன்னோடே  சொல்லுகிறபடியெல்லாம்  அவனை  நடத்தென்று  கட்டளைகொடுத்தான்.  (எரேமியா  39:12)

nee  avanai  azhaippiththu,  avanukku  oru  pollaappum  seyyaamal,  avanaip  paththiramaayp  paarththu,  avan  unnoadea  sollugi’rapadiyellaam  avanai  nadaththen’ru  katta'laikoduththaan.  (ereamiyaa  39:12)

அப்படியே  காவற்சேனாதிபதியாகிய  நேபுசராதானும்,  நேபுசஸ்பான்,  ரப்சாரீஸ்,  நெர்கல்சரேத்சேர்,  ரப்மாக்  என்பவர்களும்,  பாபிலோன்  ராஜாவின்  எல்லாப்  பிரபுக்களும்,  (எரேமியா  39:13)

appadiyea  kaava’rseanaathibathiyaagiya  neabusaraathaanum,  neabusasbaan,  rabsaarees,  nerkalsareathsear,  rabmaak  enbavarga'lum,  baabiloan  raajaavin  ellaap  pirabukka'lum,  (ereamiyaa  39:13)

எரேமியாவைக்  காவற்சாலையின்  முற்றத்திலிருந்து  வரவழைத்து,  அவனை  வெளியே  வீட்டுக்கு  அழைத்துக்கொண்டுபோகும்படிக்கு  அவனைச்  சாப்பானுடைய  குமாரனாகிய  அகிக்காமின்  மகனான  கெதலியாவினிடத்தில்  ஒப்புவித்தார்கள்;  அப்படியே  அவன்  ஜனத்துக்குள்ளே  தங்கியிருந்தான்.  (எரேமியா  39:14)

ereamiyaavaik  kaava’rsaalaiyin  mut’raththilirunthu  varavazhaiththu,  avanai  ve'liyea  veettukku  azhaiththukko'ndupoagumpadikku  avanaich  saappaanudaiya  kumaaranaagiya  agikkaamin  maganaana  kethaliyaavinidaththil  oppuviththaarga'l;  appadiyea  avan  janaththukku'l'lea  thanggiyirunthaan.  (ereamiyaa  39:14)

இதுவுமல்லாமல்,  எரேமியா  இன்னும்  காவற்சாலையின்  முற்றத்திலே  அடைக்கப்பட்டிருக்கையில்,  அவனுக்குக்  கர்த்தரால்  உண்டான  வசனம்:  (எரேமியா  39:15)

ithuvumallaamal,  ereamiyaa  innum  kaava’rsaalaiyin  mut’raththilea  adaikkappattirukkaiyil,  avanukkuk  karththaraal  u'ndaana  vasanam:  (ereamiyaa  39:15)

நீ  போய்,  எத்தியோப்பியனாகிய  எபெத்மெலேக்குக்குச்  சொல்லவேண்டியது  என்னவென்றால்,  இதோ,  என்னுடைய  வார்த்தைகளை  இந்த  நகரத்தின்மேல்  நன்மையாக  அல்ல,  தீமையாகவே  வரப்பண்ணுவேன்;  அவைகள்  அந்நாளிலே  உன்  கண்களுக்கு  முன்பாக  நிறைவேறும்  என்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  39:16)

nee  poay,  eththiyoappiyanaagiya  ebethmeleakkukkuch  sollavea'ndiyathu  ennaven’raal,  ithoa,  ennudaiya  vaarththaiga'lai  intha  nagaraththinmeal  nanmaiyaaga  alla,  theemaiyaagavea  varappa'n'nuvean;  avaiga'l  annaa'lilea  un  ka'nga'lukku  munbaaga  ni’raivea’rum  en’ru  isravealin  theavanaagiya  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  39:16)

ஆனால்  அந்நாளிலே  உன்னைத்  தப்புவிப்பேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  நீ  பயப்படுகிற  மனுஷரின்  கையிலே  ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை.  (எரேமியா  39:17)

aanaal  annaa'lilea  unnaith  thappuvippean  en’ru  karththar  sollugi’raar;  nee  bayappadugi’ra  manusharin  kaiyilea  oppukkodukkappaduvathillai.  (ereamiyaa  39:17)

உன்னை  நிச்சயமாக  விடுவிப்பேன்,  நீ  பட்டயத்துக்கு  இரையாவதில்லை;  நீ  என்னை  நம்பினபடியினால்  உன்  பிராணன்  உனக்குக்  கிடைத்த  கொள்ளைப்பொருளைப்போல  இருக்குமென்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  (எரேமியா  39:18)

unnai  nichchayamaaga  viduvippean,  nee  pattayaththukku  iraiyaavathillai;  nee  ennai  nambinapadiyinaal  un  piraa'nan  unakkuk  kidaiththa  ko'l'laipporu'laippoala  irukkumen’ru  karththar  sollugi’raar  en’raar.  (ereamiyaa  39:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!