Friday, October 21, 2016

Ereamiyaa 33 | எரேமியா 33 | Jeremiah 33

எரேமியா  இன்னும்  காவற்சாலையின்  முற்றத்திலே  அடைக்கப்பட்டிருக்கையில்,  கர்த்தருடைய  வார்த்தை  இரண்டாந்தரம்  அவனுக்கு  உண்டாகி,  அவர்:  (எரேமியா  33:1)

ereamiyaa  innum  kaava’rsaalaiyin  mut’raththilea  adaikkappattirukkaiyil,  karththarudaiya  vaarththai  ira'ndaantharam  avanukku  u'ndaagi,  avar:  (ereamiyaa  33:1)

இதைச்  செய்கிற  கர்த்தருமாய்,  இதைத்  திடப்படுத்தும்படிக்கு  இதை  உருவேற்படுத்துகிற  கர்த்தருமாயிருக்கிற  யேகோவா  என்னும்  நாமமுள்ளவர்  சொல்லுகிறது  என்னவென்றால்:  (எரேமியா  33:2)

ithaich  seygi’ra  karththarumaay,  ithaith  thidappaduththumpadikku  ithai  uruvea’rpaduththugi’ra  karththarumaayirukki’ra  yeagoavaa  ennum  naamamu'l'lavar  sollugi’rathu  ennaven’raal:  (ereamiyaa  33:2)

என்னை  நோக்கிக்  கூப்பிடு,  அப்பொழுது  நான்  உனக்கு  உத்தரவுகொடுத்து,  நீ  அறியாததும்  உனக்கு  எட்டாததுமான  பெரிய  காரியங்களை  உனக்கு  அறிவிப்பேன்.  (எரேமியா  33:3)

ennai  noakkik  kooppidu,  appozhuthu  naan  unakku  uththaravukoduththu,  nee  a’riyaathathum  unakku  ettaathathumaana  periya  kaariyangga'lai  unakku  a’rivippean.  (ereamiyaa  33:3)

எதிர்க்கொத்தளங்களினாலும்  பட்டயத்தாலும்  இடிக்கப்பட்டவைகளாகிய  இந்த  நகரத்தின்  வீடுகளையும்,  யூதா  ராஜாக்களின்  வீடுகளையுங்குறித்து:  (எரேமியா  33:4)

ethirkkoththa'langga'linaalum  pattayaththaalum  idikkappattavaiga'laagiya  intha  nagaraththin  veeduga'laiyum,  yoothaa  raajaakka'lin  veeduga'laiyungku’riththu:  (ereamiyaa  33:4)

இந்த  நகரத்தின்  எல்லாப்  பொல்லாப்பினிமித்தமும்  நான்  என்  முகத்தை  மறைத்தபடியினாலே  என்  கோபத்திலும்  உக்கிரத்திலும்  வெட்டுண்ட  மனுஷப்  பிரேதங்களினாலே  அவைகளை  நான்  நிரப்பும்படியாகவே,  அவர்கள்  கல்தேயரோடே  யுத்தம்பண்ணப்போகிறார்கள்.  (எரேமியா  33:5)

intha  nagaraththin  ellaap  pollaappinimiththamum  naan  en  mugaththai  ma’raiththapadiyinaalea  en  koabaththilum  ukkiraththilum  vettu'nda  manushap  pireathangga'linaalea  avaiga'lai  naan  nirappumpadiyaagavea,  avarga'l  kaltheayaroadea  yuththampa'n'nappoagi’raarga'l.  (ereamiyaa  33:5)

இதோ,  நான்  அவர்களுக்குச்  சவுக்கியமும்  ஆரோக்கியமும்  வரப்பண்ணி,  அவர்களைக்  குணமாக்கி,  அவர்களுக்குப்  பரிபூரண  சமாதானத்தையும்  சத்தியத்தையும்  வெளிப்படுத்துவேன்.  (எரேமியா  33:6)

ithoa,  naan  avarga'lukkuch  savukkiyamum  aaroakkiyamum  varappa'n'ni,  avarga'laik  ku'namaakki,  avarga'lukkup  paripoora'na  samaathaanaththaiyum  saththiyaththaiyum  ve'lippaduththuvean.  (ereamiyaa  33:6)

நான்  யூதாவின்  சிறையிருப்பையும்,  இஸ்ரவேலின்  சிறையிருப்பையும்  திருப்பி,  முன்னிருந்ததுபோல  அவர்களைக்  கட்டுவித்து,  (எரேமியா  33:7)

naan  yoothaavin  si’raiyiruppaiyum,  isravealin  si’raiyiruppaiyum  thiruppi,  munnirunthathupoala  avarga'laik  kattuviththu,  (ereamiyaa  33:7)

அவர்கள்  எனக்கு  விரோதமாய்க்  குற்றஞ்செய்த  அவர்களுடைய  எல்லா  அக்கிரமங்களுக்கும்  அவர்களை  நீங்கலாக்கிச்  சுத்திகரித்து,  அவர்கள்  எனக்கு  விரோதமாய்க்  குற்றஞ்செய்து,  எனக்கு  விரோதமாய்த்  துரோகம்பண்ணின  அவர்களுடைய  எல்லா  அக்கிரமங்களையும்  மன்னிப்பேன்.  (எரேமியா  33:8)

avarga'l  enakku  viroathamaayk  kut’ragnseytha  avarga'ludaiya  ellaa  akkiramangga'lukkum  avarga'lai  neenggalaakkich  suththigariththu,  avarga'l  enakku  viroathamaayk  kut’ragnseythu,  enakku  viroathamaayth  thuroagampa'n'nina  avarga'ludaiya  ellaa  akkiramangga'laiyum  mannippean.  (ereamiyaa  33:8)

நான்  அவர்களுக்குச்  செய்யும்  நன்மையையெல்லாம்  கேட்கப்போகிற  பூமியின்  எல்லா  ஜாதிகளுக்குமுன்பாக  அது  எனக்கு  மகிழ்ச்சியுள்ள  கீர்த்தியாயும்  புகழ்ச்சியாயும்  மகிமையாயும்  இருக்கும்;  நான்  அவர்களுக்கு  அருளிச்செய்யும்  எல்லா  நன்மையினிமித்தமும்,  எல்லாச்  சமாதானத்தினிமித்தமும்  இவர்கள்  பயந்து  நடுங்குவார்கள்  என்று  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  33:9)

naan  avarga'lukkuch  seyyum  nanmaiyaiyellaam  keadkappoagi’ra  boomiyin  ellaa  jaathiga'lukkumunbaaga  athu  enakku  magizhchchiyu'l'la  keerththiyaayum  pugazhchchiyaayum  magimaiyaayum  irukkum;  naan  avarga'lukku  aru'lichseyyum  ellaa  nanmaiyinimiththamum,  ellaach  samaathaanaththinimiththamum  ivarga'l  bayanthu  nadungguvaarga'l  en’ru  isravealin  theavanaagiya  karththar  sollugi’raar.  (ereamiyaa  33:9)

மனுஷனில்லாமலும்  மிருகமில்லாமலும்  அவாந்தரவெளியாய்க்  கிடக்கிறதென்று,  நீங்கள்  சொல்லுகிற  இவ்விடத்திலும்,  யூதாவின்  பட்டணங்களிலும்  மனுஷனாவது  மிருகமாவது  இல்லாத  பாழான  எருசலேமின்  வீதிகளிலும்,  (எரேமியா  33:10)

manushanillaamalum  mirugamillaamalum  avaantharave'liyaayk  kidakki’rathen’ru,  neengga'l  sollugi’ra  ivvidaththilum,  yoothaavin  patta'nangga'lilum  manushanaavathu  mirugamaavathu  illaatha  paazhaana  erusaleamin  veethiga'lilum,  (ereamiyaa  33:10)

இன்னும்  களிப்பின்  சத்தமும்,  மகிழ்ச்சியின்  சத்தமும்,  மணவாளனின்  சத்தமும்,  மணவாட்டியின்  சத்தமும்:  சேனைகளின்  கர்த்தரைத்  துதியுங்கள்,  கர்த்தர்  நல்லவர்,  அவர்  கிருபை  என்றுமுள்ளதென்று  சொல்லுகிறவர்களின்  சத்தமும்,  கர்த்தருடைய  ஆலயத்துக்கு  ஸ்தோத்திரபலிகளைக்  கொண்டுவருகிறவர்களின்  சத்தமும்  கேட்கப்படும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  அவர்கள்  முன்னிருந்ததுபோலிருக்கும்படி  தேசத்தின்  சிறையிருப்பைத்  திருப்புவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  33:11)

innum  ka'lippin  saththamum,  magizhchchiyin  saththamum,  ma'navaa'lanin  saththamum,  ma'navaattiyin  saththamum:  seanaiga'lin  karththaraith  thuthiyungga'l,  karththar  nallavar,  avar  kirubai  en’rumu'l'lathen’ru  sollugi’ravarga'lin  saththamum,  karththarudaiya  aalayaththukku  sthoaththirabaliga'laik  ko'nduvarugi’ravarga'lin  saththamum  keadkappadum  en’ru  karththar  sollugi’raar;  avarga'l  munnirunthathupoalirukkumpadi  theasaththin  si’raiyiruppaith  thiruppuvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  33:11)

மனுஷனும்  மிருகமும்  இல்லாமல்  அவாந்தரவெளியாய்க்  கிடக்கிற  இவ்விடத்திலும்,  இதற்கடுத்த  பட்டணங்களிலும்,  ஆட்டுமந்தையை  மேய்த்து  மடக்குகிற  மேய்ப்பர்களின்  தாபரங்கள்  உண்டாயிருக்கும்  என்று  சேனைகளின்  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  33:12)

manushanum  mirugamum  illaamal  avaantharave'liyaayk  kidakki’ra  ivvidaththilum,  itha’rkaduththa  patta'nangga'lilum,  aattumanthaiyai  meayththu  madakkugi’ra  meaypparga'lin  thaabarangga'l  u'ndaayirukkum  en’ru  seanaiga'lin  karththar  sollugi’raar.  (ereamiyaa  33:12)

மலைத்தேசமான  பட்டணங்களிலும்,  பள்ளத்தாக்குகளான  பட்டணங்களிலும்,  தென்திசைப்  பட்டணங்களிலும்  பென்யமீன்  நாட்டிலும்,  எருசலேமின்  சுற்றுப்புறங்களிலும்,  யூதாவின்  பட்டணங்களிலும்,  ஆட்டுமந்தைகள்  தங்களைத்  தொகையிடுகிறவனுடைய  கைக்குள்ளாகக்  கடந்துவரும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  33:13)

malaiththeasamaana  patta'nangga'lilum,  pa'l'laththaakkuga'laana  patta'nangga'lilum,  thenthisaip  patta'nangga'lilum  benyameen  naattilum,  erusaleamin  sut’ruppu’rangga'lilum,  yoothaavin  patta'nangga'lilum,  aattumanthaiga'l  thangga'laith  thogaiyidugi’ravanudaiya  kaikku'l'laagak  kadanthuvarum  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  33:13)

இதோ,  நாட்கள்  வருமென்று  கர்த்தர்  சொல்லுகிறார்,  அப்பொழுது  நான்  இஸ்ரவேலின்  குடும்பத்துக்கும்,  யூதாவின்  குடும்பத்துக்கும்  சொன்ன  நல்வார்த்தையை  நிறைவேற்றுவேன்.  (எரேமியா  33:14)

ithoa,  naadka'l  varumen’ru  karththar  sollugi’raar,  appozhuthu  naan  isravealin  kudumbaththukkum,  yoothaavin  kudumbaththukkum  sonna  nalvaarththaiyai  ni’raiveat’ruvean.  (ereamiyaa  33:14)

அந்நாட்களிலும்,  அக்காலத்திலும்  தாவீதுக்கு  நீதியின்  கிளையை  முளைக்கப்பண்ணுவேன்;  அவர்  பூமியிலே  நியாயத்தையும்  நீதியையும்  நடப்பிப்பார்.  (எரேமியா  33:15)

annaadka'lilum,  akkaalaththilum  thaaveethukku  neethiyin  ki'laiyai  mu'laikkappa'n'nuvean;  avar  boomiyilea  niyaayaththaiyum  neethiyaiyum  nadappippaar.  (ereamiyaa  33:15)

அந்நாட்களில்  யூதா  இரட்சிக்கப்பட்டு,  எருசலேம்  சுகமாய்த்  தங்கும்;  அவர்  எங்கள்  நீதியாயிருக்கிற  கர்த்தர்  என்பது  அவருடைய  நாமம்.  (எரேமியா  33:16)

annaadka'lil  yoothaa  iradchikkappattu,  erusaleam  sugamaayth  thanggum;  avar  engga'l  neethiyaayirukki’ra  karththar  enbathu  avarudaiya  naamam.  (ereamiyaa  33:16)

இஸ்ரவேல்  வம்சத்தின்  சிங்காசனத்தின்மேல்  உட்காரத்தக்க  புருஷன்  தாவீதுக்கு  இல்லாமற்போவதில்லை.  (எரேமியா  33:17)

israveal  vamsaththin  singgaasanaththinmeal  udkaaraththakka  purushan  thaaveethukku  illaama’rpoavathillai.  (ereamiyaa  33:17)

தகனபலியிட்டு,  போஜனபலிசெலுத்தி,  நாள்தோறும்  பலியிடும்  புருஷன்  எனக்கு  முன்பாக  ஆசாரியருக்கும்  லேவியருக்கும்  இல்லாமற்போவதுமில்லை  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  (எரேமியா  33:18)

thaganabaliyittu,  poajanabaliseluththi,  naa'lthoa’rum  baliyidum  purushan  enakku  munbaaga  aasaariyarukkum  leaviyarukkum  illaama’rpoavathumillai  en’ru  karththar  sollugi’raar  en’raar.  (ereamiyaa  33:18)

பின்னும்  எரேமியாவுக்குக்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாகி,  அவர்:  (எரேமியா  33:19)

pinnum  ereamiyaavukkuk  karththarudaiya  vaarththai  u'ndaagi,  avar:  (ereamiyaa  33:19)

குறித்த  நேரங்களில்  பகற்காலமும்  இராக்காலமும்  உண்டாகாதபடிக்கு,  நீங்கள்  பகற்காலத்தைக்குறித்து  நான்  பண்ணின  உடன்படிக்கையையும்,  இராக்காலத்தைக்குறித்து  நான்  பண்ணின  உடன்படிக்கையையும்  அவமாக்கினால்,  (எரேமியா  33:20)

ku’riththa  nearangga'lil  paga’rkaalamum  iraakkaalamum  u'ndaagaathapadikku,  neengga'l  paga’rkaalaththaikku’riththu  naan  pa'n'nina  udanpadikkaiyaiyum,  iraakkaalaththaikku’riththu  naan  pa'n'nina  udanpadikkaiyaiyum  avamaakkinaal,  (ereamiyaa  33:20)

அப்பொழுது  என்  தாசனாகிய  தாவீதோடே  நான்  பண்ணின  உடன்படிக்கையும்,  அவன்  சிங்காசனத்தில்  அரசாளும்  குமாரன்  அவனுக்கு  இல்லாமற்போகும்படியாக  அவமாகும்;  என்  ஊழியக்காரராகிய  லேவியரோடும்  ஆசாரியரோடும்  நான்  பண்ணின  உடன்படிக்கையும்  அப்பொழுது  அவமாகும்.  (எரேமியா  33:21)

appozhuthu  en  thaasanaagiya  thaaveethoadea  naan  pa'n'nina  udanpadikkaiyum,  avan  singgaasanaththil  arasaa'lum  kumaaran  avanukku  illaama’rpoagumpadiyaaga  avamaagum;  en  oozhiyakkaararaagiya  leaviyaroadum  aasaariyaroadum  naan  pa'n'nina  udanpadikkaiyum  appozhuthu  avamaagum.  (ereamiyaa  33:21)

வானத்து  நட்சத்திரங்கள்  எண்ணப்படாததும்  கடற்கரை  மணல்  அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல,  நான்  என்  தாசனாகிய  தாவீதின்  சந்ததியையும்  எனக்கு  ஊழியஞ்செய்கிற  லேவியரையும்  வர்த்திக்கப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  (எரேமியா  33:22)

vaanaththu  nadchaththirangga'l  e'n'nappadaathathum  kada’rkarai  ma'nal  a'lakkappadaathathumaayirukki’rathupoala,  naan  en  thaasanaagiya  thaaveethin  santhathiyaiyum  enakku  oozhiyagnseygi’ra  leaviyaraiyum  varththikkappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar  en’raar.  (ereamiyaa  33:22)

பின்னும்  எரேமியாவுக்குக்  கர்த்தருடைய  வார்த்தை  உண்டாகி,  அவர்:  (எரேமியா  33:23)

pinnum  ereamiyaavukkuk  karththarudaiya  vaarththai  u'ndaagi,  avar:  (ereamiyaa  33:23)

கர்த்தர்  தெரிந்துகொண்ட  இரண்டு  வம்சங்களையும்  வெறுத்துப்போட்டாரென்று  இந்த  ஜனம்  சொல்லி,  தங்களுக்கு  முன்பாக  என்  ஜனம்  இனி  ஒரு  ஜாதியல்லவென்று  அதைத்  தூஷிக்கிறார்களென்பதை  நீ  காண்கிறதில்லையோ?  (எரேமியா  33:24)

karththar  therinthuko'nda  ira'ndu  vamsangga'laiyum  ve’ruththuppoattaaren’ru  intha  janam  solli,  thangga'lukku  munbaaga  en  janam  ini  oru  jaathiyallaven’ru  athaith  thooshikki’raarga'lenbathai  nee  kaa'ngi’rathillaiyoa?  (ereamiyaa  33:24)

வானத்துக்கும்  பூமிக்கும்  குறித்திருக்கிற  நியமங்களை  நான்  காவாமல்,  பகற்காலத்தையும்  இராக்காலத்தையுங்குறித்து  நான்  பண்ணின  உடன்படிக்கை  அற்றுப்போகிறது  உண்டானால்,  (எரேமியா  33:25)

vaanaththukkum  boomikkum  ku’riththirukki’ra  niyamangga'lai  naan  kaavaamal,  paga’rkaalaththaiyum  iraakkaalaththaiyungku’riththu  naan  pa'n'nina  udanpadikkai  at’ruppoagi’rathu  u'ndaanaal,  (ereamiyaa  33:25)

அப்பொழுது  நான்  யாக்கோபின்  சந்ததியையும்,  என்  தாசனாகிய  தாவீதின்  சந்ததியையும்  தள்ளி,  நான்  ஆபிரகாம்  ஈசாக்கு  யாக்கோபு  என்பவர்களின்  சந்ததியை  ஆளத்தக்கவர்களை  அதிலிருந்து  எடுக்காதபடிக்கு  வெறுத்துப்போடுவேன்;  அவர்களுடைய  சிறையிருப்பை  நான்  திருப்பி,  அவர்களுக்கு  இரங்குவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்றார்.  (எரேமியா  33:26)

appozhuthu  naan  yaakkoabin  santhathiyaiyum,  en  thaasanaagiya  thaaveethin  santhathiyaiyum  tha'l'li,  naan  aabirahaam  eesaakku  yaakkoabu  enbavarga'lin  santhathiyai  aa'laththakkavarga'lai  athilirunthu  edukkaathapadikku  ve’ruththuppoaduvean;  avarga'ludaiya  si’raiyiruppai  naan  thiruppi,  avarga'lukku  irangguvean  en’ru  karththar  sollugi’raar  en’raar.  (ereamiyaa  33:26)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!