கர்த்தராலே எரேமியாவுக்கு
உண்டான வார்த்தை: (எரேமியா
30:1)
karththaraalea ereamiyaavukku u'ndaana
vaarththai: (ereamiyaa 30:1)
இஸ்ரவேலின் தேவனாகிய
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்.
(எரேமியா 30:2)
isravealin theavanaagiya karththar sollugi’rathu ennaven’raal, naan unnoadea
sonna ellaa vaarththaiga'laiyum oru pusthagaththil ezhuthikko'l.
(ereamiyaa 30:2)
இதோ, நாட்கள்
வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்,
அப்பொழுது நான் இஸ்ரவேலும்
யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய
சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த
தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(எரேமியா 30:3)
ithoa, naadka'l
varumen’ru karththar sollugi’raar, appozhuthu
naan isravealum yoothaavumaagiya en janaththinudaiya
si’raiyiruppaith thiruppi,
naan avarga'l pithaakka'lukkuk koduththa
theasaththukku avarga'laith thirumbivarappa'n'nuvean; athai avarga'l suthanthariththukko'l'luvaarga'l en’ru karththar sollugi’raar. (ereamiyaa 30:3)
இவைகள் கர்த்தர்
இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச் சொன்ன வார்த்தைகளே. (எரேமியா
30:4)
ivaiga'l karththar isravealaiyum
yoothaavaiyungku’riththuch sonna
vaarththaiga'lea. (ereamiyaa
30:4)
கர்த்தர் சொல்லுகிறது
என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக்
கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை.
(எரேமியா 30:5)
karththar sollugi’rathu ennaven’raal: thaththa'lippin
saththaththaik keadki’roam; thigilu'ndu, samaathaanamillai. (ereamiyaa
30:5)
ஆணாய்ப் பிறந்தவன்
பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற
ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும்
தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள்
கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன? (எரேமியா
30:6)
aa'naayp pi’ranthavan pirasavikki’rathu'ndoa en’ru keattuppaarungga'l; pirasavikki’ra sthireeyaippoal purushar
yaavarum thangga'l iduppuga'linmeal thangga'l kaiga'lai vaiththirukki’rathaiyum, mugangga'lellaam maa’ri ve'luththirukki’rathaiyum naan kaa'ngi’rathenna? (ereamiyaa 30:6)
ஐயோ! அந்த நாள் பெரியது;
அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும்
அவன் அதற்கு நீங்கலாகி
இரட்சிக்கப்படுவான். (எரேமியா 30:7)
aiyoa! antha naa'l periyathu;
athaippoaloththa naa'lillai; athu yaakkoabukku ikkattukkaalam; aanaalum avan atha’rku neenggalaagi iradchikkappaduvaan. (ereamiyaa
30:7)
அந்நாளில் நான் அவன் நுகத்தை
உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு
உடைத்து, உன் கட்டுகளை
அறுப்பேன் என்று சேனைகளின்
கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர்
இனி அவனை அடிமைகொள்வதில்லை. (எரேமியா
30:8)
annaa'lil naan avan nugaththai un kazhuththinmeal iraathapadikku udaiththu,
un kattuga'lai a’ruppean en’ru seanaiga'lin karththar
sollugi’raar; anniyar ini avanai adimaiko'lvathillai. (ereamiyaa
30:8)
தங்கள் தேவனாகிய
கர்த்தரையும், நான் தங்களுக்கு
எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய
தாவீதையுமே சேவிப்பார்கள். (எரேமியா
30:9)
thangga'l theavanaagiya karththaraiyum, naan thangga'lukku ezhuppappoagi’ra thangga'l raajaavaagiya thaaveethaiyumea
seavippaarga'l. (ereamiyaa 30:9)
ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே,
நீ பயப்படாதே; இஸ்ரவேலே,
கலங்காதே என்று கர்த்தர்
சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும்,
உன் சந்ததியைத் தங்கள்
சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு
இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பிவந்து
அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத்
தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை. (எரேமியா 30:10)
aagaiyaal en thaasanaagiya yaakkoabea, nee bayappadaathea; isravealea,
kalanggaathea en’ru karththar sollugi’raar; ithoa,
naan unnaith thooraththilum, un santhathiyaith thangga'l si’raiyiruppin theasaththilum iraathapadikku iradchippean; yaakkoabu thirumbivanthu amarnthu sugiththiruppaan; avanaith
thaththa'likkappa'n'nugi’ravanillai. (ereamiyaa
30:10)
உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன்
என்று கர்த்தர் சொல்லுகிறார்;
உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ
நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும்
தண்டியாமல் விடாமலும், மட்டாய்த்
தண்டிப்பேன். (எரேமியா 30:11)
unnai iradchippatha’rkaaga naan unnoadea irukki’rean en’ru karththar sollugi’raar; unnaich sitha’radiththa ellaa jaathiga'laiyum naan nirmoolamaakkuvean; unnaiyoa
naan nirmoolamaakkaamalum, mut’rilum tha'ndiyaamal
vidaamalum, mattaayth tha'ndippean. (ereamiyaa
30:11)
கர்த்தர் சொல்லுகிறது
என்னவென்றால்: உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடிதாயும்
இருக்கிறது. (எரேமியா 30:12)
karththar sollugi’rathu ennaven’raal: un pu'n aa’raathathaayum un kaayam
kodithaayum irukki’rathu. (ereamiyaa 30:12)
உன் காயங்களைக்
கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச்
சொஸ்தப்படுத்தும் ஔஷதங்களுமில்லை. (எரேமியா
30:13)
un kaayangga'laik kattumpadi unakkaaga ea’rpaduvaarillai; unnaich sosthappaduththum aushathangga'lumillai. (ereamiyaa
30:13)
உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள்
உன்னைத் தேடார்கள்; திரளான
உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு
வெட்டும் வண்ணமாகவும், கொடியவன்
தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.
(எரேமியா 30:14)
un neasar yaavarum
unnai ma’ranthaarga'l; avarga'l unnaith theadaarga'l; thira'laana
un akkiramaththinimiththamum, un paavangga'l balaththuppoanathinimiththamum, saththuru vettum va'n'namaagavum, kodiyavan
tha'ndikki’ra va'n'namaagavum naan unnaith tha'ndiththean. (ereamiyaa
30:14)
உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான
உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன
உன் பாவங்களினிமித்தமும் இப்படி
உனக்குச் செய்தேன். (எரேமியா
30:15)
un no’rungguthalinaalum un veathanaiyin
miguthiyinaalum nee kookkuraliduvaanean? thira'laana
un akkiramaththinimiththamum balaththuppoana un paavangga'linimiththamum
ippadi unakkuch seythean. (ereamiyaa
30:15)
ஆதலால் உன்னைப்
பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச்
சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக்
கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு
ஒப்புக்கொடுப்பேன். (எரேமியா 30:16)
aathalaal unnaip
padchikki’ravarga'l yaavarum padchikkappaduvaarga'l; un saththurukka'lellaarum
si’raippattuppoavaarga'l; unnaich soo’raiyaadugi’ravarga'l soo’raiyaadappaduvaarga'l; unnaik ko'l'laiyidugi’ra anaivaraiyum
ko'l'laikku oppukkoduppean. (ereamiyaa
30:16)
அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன்
என்று சொல்லி, உனக்குத்
தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம்
வரப்பண்ணி, உன் காயங்களை
ஆற்றுவேன் என்று கர்த்தர்
சொல்லுகிறார். (எரேமியா 30:17)
avarga'l: unnai visaarippaarat’ra seeyoan
en’ru solli,
unakkuth tha'l'lu'ndava'l en’ru pearittapadiyaal, naan unakku aaroakkiyam
varappa'n'ni, un kaayangga'lai aat’ruvean en’ru karththar sollugi’raar. (ereamiyaa
30:17)
கர்த்தர் சொல்லுகிறது
என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின்
சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு,
அரமனை முன்போல நிலைப்படும்.
(எரேமியா 30:18)
karththar sollugi’rathu ennaven’raal: ithoa, naan yaakkoabudaiya koodaarangga'lin si’raiyiruppaith thiruppi,
avan vaasasthalangga'lukku irakkagnseyvean; nagaram than ma'nmeattinmeal kattappattu, aramanai munpoala
nilaippadum. (ereamiyaa 30:18)
அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும்
ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்;
அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள்
குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள்
சிறுமைப்படுவதில்லை. (எரேமியா 30:19)
avaiga'lilirunthu sthoaththiramum aadalpaadalin saththamum pu’rappadum; avarga'lai varththikkappa'n'nuvean, avarga'l ku’rugippoavathillai; avarga'lai magimaippaduththuvean, avarga'l si’rumaippaduvathillai. (ereamiyaa
30:19)
அவர்கள் பிள்ளைகள்
முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத்
திடப்படும்; அவர்களை ஒடுக்கின
யாவரையும் தண்டிப்பேன். (எரேமியா
30:20)
avarga'l pi'l'laiga'l munpoaliruppaarga'l; avarga'l sabai
enakku munbaagath thidappadum; avarga'lai odukkina
yaavaraiyum tha'ndippean. (ereamiyaa
30:20)
அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய
அதிபதி அவர்கள் நடுவிலிருந்து
தோன்றுவார்; அவரைச் சமீபித்து
வரப்பண்ணுவேன், அவர் சமீபித்து
வருவார், என்னிடத்தில் சேரும்படி
தன் இருதயத்தைப் பிணைப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(எரேமியா 30:21)
avarga'ludaiya pirabu avarga'lil oruvanaayirukka, avarga'ludaiya athibathi avarga'l naduvilirunthu thoan’ruvaar; avaraich sameebiththu varappa'n'nuvean, avar sameebiththu varuvaar,
ennidaththil searumpadi than iruthayaththaip pi'naippaduththugi’ra ivar yaar? en’ru karththar sollugi’raar. (ereamiyaa
30:21)
நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன். (எரேமியா
30:22)
neengga'l en janamaayiruppeerga'l, naan ungga'l theavanaayiruppean. (ereamiyaa
30:22)
இதோ, கோராவாரிக்
காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று
உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல்
மோதும். (எரேமியா 30:23)
ithoa, koaraavaarik
kaat’raagiya karththarudaiya perungkaat’ru ukkiramaayezhumbi, adiththu,
thunmaarkkarudaiya thalaiyinmeal moathum.
(ereamiyaa 30:23)
கர்த்தர் தம்முடைய
இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து
நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம்
தணியாது; கடைசிநாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள். (எரேமியா
30:24)
karththar thammudaiya
iruthayaththin ninaivuga'lai nadappiththu ni’raiveat’ruma'lavum, avarudaiya ukkirakoabam tha'niyaathu;
kadaisinaadka'lil athai u'narnthuko'lveerga'l. (ereamiyaa 30:24)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!