சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய
பஸ்கூரையும், ஆசாரியனான மாசெயாவின்
குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி:
(எரேமியா 21:1)
sitheakkiyaa raajaa malkiyaavin
kumaaranaagiya paskooraiyum,
aasaariyanaana maaseyaavin kumaaranaagiya
seppaniyaavaiyum ereamiyaavinidaththil anuppi:
(ereamiyaa 21:1)
நீர் எங்களுக்காகக்
கர்த்தரிடத்தில் விசாரியும்; பாபிலோன்
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு
விரோதமாய் யுத்தஞ்செய்கிறான்; ஒருவேளை
கர்த்தர் தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு
அநுக்கிரகஞ்செய்து, அவனை எங்களைவிட்டுப் போகப்பண்ணுவார் என்று சொல்லியனுப்பினபோது, (எரேமியா
21:2)
neer engga'lukkaagak karththaridaththil visaariyum; baabiloan raajaavaagiya neabukaathneachchaar engga'lukku viroathamaay yuththagnseygi’raan; oruvea'lai karththar
thammudaiya ellaa a’rputhach seyalinpadiyeayum engga'lukku anukkiragagnseythu, avanai engga'laivittup poagappa'n'nuvaar en’ru solliyanuppinapoathu, (ereamiyaa
21:2)
எரேமியா அவர்களைப்பார்த்து, நீங்கள்
சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது: (எரேமியா
21:3)
ereamiyaa avarga'laippaarththu, neengga'l sitheakkiyaavukkuch sollavea'ndiyathu: (ereamiyaa
21:3)
இஸ்ரவேலின் தேவனாகிய
கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்,
இதோ, உங்களை அலங்கத்துக்கு
வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன்
ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள்
யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில்
பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை
நான் திருப்பிவிட்டு, அவர்களை
இந்த நகரத்தின் நடுவிலே
சேர்த்து, (எரேமியா 21:4)
isravealin theavanaagiya karththar
uraikki’rathu ennaven’raal, ithoa,
ungga'lai
alanggaththukku ve'liyea
mut’rikkaipoatta baabiloan raajaavoadum
kaltheayaroadum, neengga'l yuththampa'n'numpadi ungga'l kaiga'lil pidiththirukki’ra yuththa
aayuthangga'lai naan thiruppivittu, avarga'lai intha nagaraththin naduvilea searththu, (ereamiyaa
21:4)
நான் நீட்டின
கையினாலும் பலத்த புயத்தினாலும்
கோபமும் உக்கிரமும் மகா கடுமையுமாக உங்களோடே
யுத்தம்பண்ணி, (எரேமியா 21:5)
naan neettina kaiyinaalum
balaththa
puyaththinaalum koabamum ukkiramum mahaa kadumaiyumaaga ungga'loadea yuththampa'n'ni, (ereamiyaa
21:5)
இந்த நகரத்தின்
குடிகளையும், மனுஷரையும், மிருகங்களையும் சங்கரிப்பேன்;
மகா கொள்ளைநோயால் சாவார்கள்.
(எரேமியா 21:6)
intha nagaraththin kudiga'laiyum, manusharaiyum, mirugangga'laiyum sanggarippean; mahaa ko'l'lainoayaal saavaarga'l. (ereamiyaa
21:6)
அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய
சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும்,
இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன்
ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும்,
அவர்கள் சத்துருக்களின் கையிலும்,
அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும்
ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப்
பட்டயக்கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர்
உரைக்கிறார் என்றான். (எரேமியா
21:7)
atha’rkuppinbu naan yoothaavin raajaavaagiya sitheakkiyaavaiyum, avan oozhiyakkaararaiyum, janaththaiyum, intha nagaraththilea ko'l'lainoaykkum pattayaththukkum pagnchaththukkum thappi
meethiyaanavarga'laiyum baabiloan raajaavaagiya neabukaathneachchaarudaiya kaiyilum, avarga'l saththurukka'lin kaiyilum,
avarga'l
piraa'nanai vaanggaththeadugi’ravarga'lin kaiyilum oppukkoduppean; avan avarga'laip pattayakkarukkinaal
vettuvaan; avan avarga'laith thappaviduvathumillai, avan mannippathumillai, irangguvathumillaiyen’ru karththar uraikki’raar en’raan. (ereamiyaa
21:7)
பின்னையும் அவர், இந்த ஜனங்களை
நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே
ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன்
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(எரேமியா 21:8)
pinnaiyum avar, intha janangga'lai noakki:
ithoa, naan ungga'l munnea
jeevavazhiyaiyum mara'navazhiyaiyum vaikki’rean en’ru karththar sollugi’raar. (ereamiyaa
21:8)
இந்த நகரத்திலே
தரிக்கிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும்,
கொள்ளைநோயாலும் சாவான்; உங்களை
முற்றிக்கைபோடும் கல்தேயர் வசமாய்ப்
புறப்பட்டுப் போய்விடுகிறவனோ பிழைப்பான்;
அவன் பிராணன் அவனுக்குக்
கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருக்கும்.
(எரேமியா 21:9)
intha nagaraththilea tharikki’ravan pattayaththaalum, pagnchaththaalum, ko'l'lainoayaalum saavaan; ungga'lai mut’rikkaipoadum kaltheayar
vasamaayp
pu’rappattup poayvidugi’ravanoa pizhaippaan;
avan piraa'nan avanukkuk
kidaiththa ko'l'laipporu'laippoal irukkum.
(ereamiyaa 21:9)
என் முகத்தை
இந்த நகரத்துக்கு விரோதமாய்
நன்மைக்கு அல்ல, தீமைக்கே
வைத்தேன் என்று கர்த்தர்
சொல்லுகிறார்; அது பாபிலோன்
ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பானென்று சொல் என்றார். (எரேமியா
21:10)
en mugaththai intha nagaraththukku viroathamaay nanmaikku
alla, theemaikkea vaiththean
en’ru
karththar sollugi’raar; athu baabiloan raajaavin kaiyil
oppukkodukkappadum; avan akkiniyaal
athaich sutterippaanen’ru
sol en’raar. (ereamiyaa
21:10)
யூதாராஜாவின் குடும்பத்தாரையும் நோக்கி:
கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
(எரேமியா 21:11)
yoothaaraajaavin kudumbaththaaraiyum noakki:
karththarudaiya vaarththaiyaik kea'lungga'l. (ereamiyaa
21:11)
தாவீதின் குடும்பத்தாரே, உங்கள்
செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் புறப்பட்டு,
அவிக்கிறவன் இல்லாமல் எரியாதபடிக்கு, நீங்கள்
ஏற்கனவே நியாயங்கேட்டு, பறிகொடுத்தவனை
ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(எரேமியா 21:12)
thaaveethin kudumbaththaarea, ungga'l seygaiga'ludaiya pollaappinimiththam en ukkiram akkiniyaippoal pu’rappattu, avikki’ravan illaamal eriyaathapadikku, neengga'l ea’rkanavea niyaayangkeattu, pa’rikoduththavanai odukkugi’ravanudaiya kaikkuth
thappuviyungga'l en’ru karththar sollugi’raar. (ereamiyaa
21:12)
இதோ, பள்ளத்தாக்கில் வாசம்பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய்
இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய்
வருகிறவன் யார் என்றும்,
எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன்
யார் என்றும் சொல்லுகிற
உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
(எரேமியா 21:13)
ithoa, pa'l'laththaakkil vaasampa'n'nugi’rava'lea, samanaana idaththil
kanmalaiyaay irukki’rava'lea, engga'lukku viroathamaay varugi’ravan yaar en’rum, engga'l vaasasthalangga'lukku'l varugi’ravan yaar en’rum sollugi’ra unakku
naan ethiraa'liyaayirukki’rean en’ru karththar sollugi’raar. (ereamiyaa 21:13)
நான் உங்கள்
கிரியைகளின் பலனுக்குத்தக்கதாய் உங்களை
விசாரிப்பேன்; நான் அதின் காட்டிலே தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள
யாவையும் பட்சிக்கும் என்று கர்த்தர் உரைக்கிறார்
என்று சொல் என்றார்.
(எரேமியா 21:14)
naan ungga'l kiriyaiga'lin palanukkuththakkathaay ungga'lai visaarippean; naan athin kaattilea theekko'luththuvean; athu athaich sut’rilumu'l'la yaavaiyum
padchikkum en’ru karththar
uraikki’raar en’ru sol en’raar. (ereamiyaa
21:14)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!