Monday, October 17, 2016

Ereamiyaa 12 | எரேமியா 12 | Jeremiah 12

கர்த்தாவே,  உம்மோடே  நான்  வழக்காடப்போனால்,  தேவரீர்  நீதியுள்ளவராமே;  ஆகிலும்  உம்முடைய  நியாயங்களைக்  குறித்து  உம்மோடே  நான்  பேசும்படி  வேண்டுகிறேன்;  ஆகாதவர்களின்  வழி  வாய்க்கிறதென்ன?  துரோகஞ்செய்துவருகிற  அனைவரும்  சுகித்திருக்கிறதென்ன?  (எரேமியா  12:1)

karththaavea,  ummoadea  naan  vazhakkaadappoanaal,  theavareer  neethiyu'l'lavaraamea;  aagilum  ummudaiya  niyaayangga'laik  ku’riththu  ummoadea  naan  peasumpadi  vea'ndugi’rean;  aagaathavarga'lin  vazhi  vaaykki’rathenna?  thuroagagnseythuvarugi’ra  anaivarum  sugiththirukki’rathenna?  (ereamiyaa  12:1)

நீர்  அவர்களை  நாட்டினீர்,  வேர்பற்றித்  தேறிப்போனார்கள்,  கனியும்  கொடுக்கிறார்கள்;  நீர்  அவர்கள்  வாய்க்குச்  சமீபமும்,  அவர்கள்  உள்ளிந்திரியங்களுக்கோ  தூரமுமாயிருக்கிறீர்.  (எரேமியா  12:2)

neer  avarga'lai  naattineer,  vearpat’rith  thea’rippoanaarga'l,  kaniyum  kodukki’raarga'l;  neer  avarga'l  vaaykkuch  sameebamum,  avarga'l  u'l'linthiriyangga'lukkoa  thooramumaayirukki’reer.  (ereamiyaa  12:2)

கர்த்தாவே,  நீர்  என்னை  அறிந்திருக்கிறீர்,  என்னைக்  காண்கிறீர்;  என்  இருதயம்  உமக்கு  முன்பாக  எப்படிப்பட்டதென்று  சோதித்து  அறிகிறீர்;  அடிக்கப்படும்  ஆடுகளைப்போல  அவர்களைப்  பிடுங்கிப்போட்டு,  கொலைநாளுக்கு  அவர்களை  நியமியும்.  (எரேமியா  12:3)

karththaavea,  neer  ennai  a’rinthirukki’reer,  ennaik  kaa'ngi’reer;  en  iruthayam  umakku  munbaaga  eppadippattathen’ru  soathiththu  a’rigi’reer;  adikkappadum  aaduga'laippoala  avarga'laip  pidunggippoattu,  kolainaa'lukku  avarga'lai  niyamiyum.  (ereamiyaa  12:3)

எந்தமட்டும்  தேசம்  புலம்பி,  எல்லா  வெளியின்  புல்லும்  வாடி,  அதின்  குடிகளுடைய  பொல்லாப்பினிமித்தம்  மிருகங்களும்  பறவைகளும்  அழியவேண்டும்!  எங்கள்  முடிவை  அவன்  காண்பதில்லையென்கிறார்கள்.  (எரேமியா  12:4)

enthamattum  theasam  pulambi,  ellaa  ve'liyin  pullum  vaadi,  athin  kudiga'ludaiya  pollaappinimiththam  mirugangga'lum  pa’ravaiga'lum  azhiyavea'ndum!  engga'l  mudivai  avan  kaa'nbathillaiyengi’raarga'l.  (ereamiyaa  12:4)

நீ  காலாட்களோடே  ஓடும்போதே  உன்னை  இளைக்கப்பண்ணினார்களானால்,  குதிரைகளோடே  எப்படிச்  சேர்ந்து  ஓடுவாய்?  சமாதானமுள்ள  தேசத்திலேயே  நீ  அடைக்கலம்  தேடினால்,  யோர்தான்  பிரவாகித்து  வரும்போது  நீ  என்னசெய்வாய்?  (எரேமியா  12:5)

nee  kaalaadka'loadea  oadumpoathea  unnai  i'laikkappa'n'ninaarga'laanaal,  kuthiraiga'loadea  eppadich  searnthu  oaduvaay?  samaathaanamu'l'la  theasaththileayea  nee  adaikkalam  theadinaal,  yoarthaan  piravaagiththu  varumpoathu  nee  ennaseyvaay?  (ereamiyaa  12:5)

உன்  சகோதரரும்,  உன்  தகப்பன்  வம்சத்தாரும்  உனக்கு  துரோகம்பண்ணி,  அவர்களும்  உன்னைப்  பின்தொடர்ந்து  மிகவும்  ஆரவாரம்பண்ணினார்கள்;  அவர்கள்  உன்னோடே  இனிய  வார்த்தைகளைப்  பேசினாலும்  அவர்களை  நம்பவேண்டாம்.  (எரேமியா  12:6)

un  sagoathararum,  un  thagappan  vamsaththaarum  unakku  thuroagampa'n'ni,  avarga'lum  unnaip  pinthodarnthu  migavum  aaravaarampa'n'ninaarga'l;  avarga'l  unnoadea  iniya  vaarththaiga'laip  peasinaalum  avarga'lai  nambavea'ndaam.  (ereamiyaa  12:6)

நான்  என்  வீட்டை  விட்டுவிட்டேன்,  என்  சுதந்தரத்தை  நெகிழவிட்டேன்;  என்  ஆத்துமா  நேசித்தவனை  அவனுடைய  சத்துருவின்  கையிலே  ஒப்புக்கொடுத்தேன்.  (எரேமியா  12:7)

naan  en  veettai  vittuvittean,  en  suthantharaththai  negizhavittean;  en  aaththumaa  neasiththavanai  avanudaiya  saththuruvin  kaiyilea  oppukkoduththean.  (ereamiyaa  12:7)

என்  சுதந்தரம்  காட்டிலுள்ள  சிங்கத்தைப்போல்  எனக்காயிற்று;  அது  எனக்கு  விரோதமாய்  கெர்ச்சிக்கிறது;  ஆதலால்  அதை  வெறுக்கிறேன்.  (எரேமியா  12:8)

en  suthantharam  kaattilu'l'la  singgaththaippoal  enakkaayit’ru;  athu  enakku  viroathamaay  kerchchikki’rathu;  aathalaal  athai  ve’rukki’rean.  (ereamiyaa  12:8)

என்  சுதந்தரம்  பலவருணமான  பட்சியைப்போல  எனக்காயிற்று;  ஆகையால்,  பட்சிகள்  அதைச்  சுற்றிலும்  வருவதாக;  வெளியில்  சகல  ஜீவன்களே  அதைப்  பட்சிக்கும்படி  கூடிவாருங்கள்.  (எரேமியா  12:9)

en  suthantharam  palavaru'namaana  padchiyaippoala  enakkaayit’ru;  aagaiyaal,  padchiga'l  athaich  sut’rilum  varuvathaaga;  ve'liyil  sagala  jeevanga'lea  athaip  padchikkumpadi  koodivaarungga'l.  (ereamiyaa  12:9)

அநேக  மேய்ப்பர்கள்  என்  திராட்சத்தோட்டத்தை  அழித்து,  என்  பங்கைக்  காலால்  மிதித்து,  என்  பிரியமான  பங்கைப்  பாழான  வனாந்தரமாக்கினார்கள்.  (எரேமியா  12:10)

aneaga  meaypparga'l  en  thiraadchaththoattaththai  azhiththu,  en  panggaik  kaalaal  mithiththu,  en  piriyamaana  panggaip  paazhaana  vanaantharamaakkinaarga'l.  (ereamiyaa  12:10)

அதைப்  பாழாக்கிவிட்டார்கள்;  பாழாய்க்  கிடக்கிற  அது  என்னை  நோக்கிப்  புலம்புகிறது;  தேசமெல்லாம்  பாழாயிற்று;  ஒருவனும்  அதை  மனதிலே  வைக்கிறதில்லை.  (எரேமியா  12:11)

athaip  paazhaakkivittaarga'l;  paazhaayk  kidakki’ra  athu  ennai  noakkip  pulambugi’rathu;  theasamellaam  paazhaayit’ru;  oruvanum  athai  manathilea  vaikki’rathillai.  (ereamiyaa  12:11)

கொள்ளைக்காரர்  வனாந்தரத்திலுள்ள  எல்லா  உயர்நிலங்களின்மேலும்  வருகிறார்கள்;  கர்த்தருடைய  பட்டயம்  தேசத்தின்  ஒருமுனைதொடங்கித்  தேசத்தின்  மறுமுனைமட்டும்  பட்சித்துக்கொண்டிருக்கும்;  மாம்சமாகிய  ஒன்றுக்கும்  சமாதானமில்லை.  (எரேமியா  12:12)

ko'l'laikkaarar  vanaantharaththilu'l'la  ellaa  uyarnilangga'linmealum  varugi’raarga'l;  karththarudaiya  pattayam  theasaththin  orumunaithodanggith  theasaththin  ma’rumunaimattum  padchiththukko'ndirukkum;  maamsamaagiya  on’rukkum  samaathaanamillai.  (ereamiyaa  12:12)

கோதுமையை  விதைத்தார்கள்,  முள்ளுகளை  அறுப்பார்கள்;  பிரயாசப்படுவார்கள்,  பிரயோஜனமடையார்கள்;  கர்த்தருடைய  உக்கிரகோபத்தினால்  உங்களுக்கு  வரும்  பலனைக்குறித்து  வெட்கப்படுங்கள்.  (எரேமியா  12:13)

koathumaiyai  vithaiththaarga'l,  mu'l'luga'lai  a’ruppaarga'l;  pirayaasappaduvaarga'l,  pirayoajanamadaiyaarga'l;  karththarudaiya  ukkirakoabaththinaal  ungga'lukku  varum  palanaikku’riththu  vedkappadungga'l.  (ereamiyaa  12:13)

இதோ,  நான்  என்  ஜனமாகிய  இஸ்ரவேலுக்குக்  காணியாட்சியாகக்  கொடுத்த  என்  சுதந்தரத்தைத்  தொடுகிற  துஷ்டரான  அயலார்  அனைவரையும்  தங்கள்  தேசத்தில்  இராதபடிக்குப்  பிடுங்கிப்போடுவேன்  என்று,  கர்த்தர்  அவர்களைக்குறித்துச்  சொல்லுகிறார்;  யூதா  வம்சத்தாரையும்  அவர்கள்  நடுவில்  இராதபடிக்குப்  பிடுங்கிப்போடுவேன்.  (எரேமியா  12:14)

ithoa,  naan  en  janamaagiya  isravealukkuk  kaa'niyaadchiyaagak  koduththa  en  suthantharaththaith  thodugi’ra  thushdaraana  ayalaar  anaivaraiyum  thangga'l  theasaththil  iraathapadikkup  pidunggippoaduvean  en’ru,  karththar  avarga'laikku’riththuch  sollugi’raar;  yoothaa  vamsaththaaraiyum  avarga'l  naduvil  iraathapadikkup  pidunggippoaduvean.  (ereamiyaa  12:14)

அவர்களை  நான்  பிடுங்கிப்போட்ட  பிற்பாடு,  நான்  திரும்பவும்  அவர்கள்மேல்  இரங்கி,  அவர்களைத்  தங்கள்  தங்கள்  சுதந்தரத்துக்கும்  தங்கள்  தங்கள்  பூமிக்கும்  திரும்பப்பண்ணுவேன்.  (எரேமியா  12:15)

avarga'lai  naan  pidunggippoatta  pi’rpaadu,  naan  thirumbavum  avarga'lmeal  iranggi,  avarga'laith  thangga'l  thangga'l  suthantharaththukkum  thangga'l  thangga'l  boomikkum  thirumbappa'n'nuvean.  (ereamiyaa  12:15)

அப்புறம்  அவர்கள்  என்  ஜனத்துக்குப்  பாகாலின்மேல்  ஆணையிடக்  கற்றுக்கொடுத்ததுபோல,  கர்த்தருடைய  ஜீவனைக்கொண்டு  என்று  சொல்லி,  என்  நாமத்தின்மேல்  ஆணையிடும்படி  என்  ஜனத்தின்  வழிகளை  நன்றாய்க்  கற்றுக்கொண்டால்,  அவர்கள்  என்  ஜனத்தின்  நடுவிலே  ஊன்றக்கட்டப்படுவார்கள்.  (எரேமியா  12:16)

appu’ram  avarga'l  en  janaththukkup  baagaalinmeal  aa'naiyidak  kat’rukkoduththathupoala,  karththarudaiya  jeevanaikko'ndu  en’ru  solli,  en  naamaththinmeal  aa'naiyidumpadi  en  janaththin  vazhiga'lai  nan’raayk  kat’rukko'ndaal,  avarga'l  en  janaththin  naduvilea  oon’rakkattappaduvaarga'l.  (ereamiyaa  12:16)

கேளார்களேயாகில்,  நான்  அப்படிப்பட்ட  ஜாதியை  வேரோடே  பிடுங்கிப்போட்டு  அழித்துவிடுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (எரேமியா  12:17)

kea'laarga'leayaagil,  naan  appadippatta  jaathiyai  vearoadea  pidunggippoattu  azhiththuviduvean  en’ru  karththar  sollugi’raar.  (ereamiyaa  12:17)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!