Tuesday, October 11, 2016

Easaayaa 50 | ஏசாயா 50 | Isaiah 50

கர்த்தர்  சொல்லுகிறார்:  நான்  உங்கள்  தாயை  அனுப்பிவிட்டபோது,  அவளுக்குக்  கொடுத்த  தள்ளுதற்சீட்டு  எங்கே?  அல்லது  எனக்குக்  கடன்கொடுத்த  எவனுக்கு  உங்களை  நான்  விற்றுப்போட்டேன்?  இதோ,  உங்கள்  அக்கிரமங்களினிமித்தம்  நீங்கள்  விற்கப்பட்டீர்கள்;  உங்கள்  பாதகங்களினிமித்தம்  உங்கள்  தாய்  அனுப்பிவிடப்பட்டாள்.  (ஏசாயா  50:1)

karththar  sollugi’raar:  naan  ungga'l  thaayai  anuppivittapoathu,  ava'lukkuk  koduththa  tha'l'lutha’rseettu  enggea?  allathu  enakkuk  kadankoduththa  evanukku  ungga'lai  naan  vit’ruppoattean?  ithoa,  ungga'l  akkiramangga'linimiththam  neengga'l  vi’rkappatteerga'l;  ungga'l  paathagangga'linimiththam  ungga'l  thaay  anuppividappattaa'l.  (easaayaa  50:1)

நான்  வந்தபோது  ஒருவனும்  இல்லாமற்போனதென்ன?  நான்  கூப்பிட்டபோது  மறுஉத்தரவு  கொடுக்க  ஒருவனும்  இல்லாமற்போனதென்ன?  மீட்கக்கூடாதபடிக்கு  என்  கரம்  குறுகிற்றோ?  விடுவிக்கிறதற்கு  என்னிடத்தில்  பெலனில்லாமற்போயிற்றோ?  இதோ,  என்  கண்டிதத்தினாலே  கடலை  வற்றப்பண்ணி,  நதிகளை  வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்;  அவைகளிலுள்ள  மீன்  தண்ணீரில்லாமல்  தாகத்தால்  செத்து  நாறுகின்றது.  (ஏசாயா  50:2)

naan  vanthapoathu  oruvanum  illaama’rpoanathenna?  naan  kooppittapoathu  ma’ruuththaravu  kodukka  oruvanum  illaama’rpoanathenna?  meedkakkoodaathapadikku  en  karam  ku’rugit’roa?  viduvikki’ratha’rku  ennidaththil  belanillaama’rpoayit’roa?  ithoa,  en  ka'ndithaththinaalea  kadalai  vat’rappa'n'ni,  nathiga'lai  vettaantharaiyaakkippoadugi’rean;  avaiga'lilu'l'la  meen  tha'n'neerillaamal  thaagaththaal  seththu  naa’rugin’rathu.  (easaayaa  50:2)

நான்  வானங்களுக்குக்  காரிருளை  உடுத்தி,  இரட்டை  அவைகளின்  மூடுசீலையாக்குகிறேன்.  (ஏசாயா  50:3)

naan  vaanangga'lukkuk  kaariru'lai  uduththi,  irattai  avaiga'lin  mooduseelaiyaakkugi’rean.  (easaayaa  50:3)

இளைப்படைந்தவனுக்கு  சமயத்திற்கேற்ற  வார்த்தை  சொல்ல  நான்  அறியும்படிக்கு,  கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குக்  கல்விமானின்  நாவைத்  தந்தருளினார்;  காலைதோறும்  என்னை  எழுப்புகிறார்;  கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல,  நான்  கேட்கும்படி  என்  செவியைக்  கவனிக்கச்செய்கிறார்.  (ஏசாயா  50:4)

i'laippadainthavanukku  samayaththi’rkeat’ra  vaarththai  solla  naan  a’riyumpadikku,  karththaraagiya  aa'ndavar  enakkuk  kalvimaanin  naavaith  thantharu'linaar;  kaalaithoa’rum  ennai  ezhuppugi’raar;  kat’rukko'l'lugi’ravarga'laippoala,  naan  keadkumpadi  en  seviyaik  kavanikkachseygi’raar.  (easaayaa  50:4)

கர்த்தராகிய  ஆண்டவர்  என்செவியைத்  திறந்தார்;  நான்  எதிர்க்கவுமில்லை,  நான்  பின்வாங்கவுமில்லை.  (ஏசாயா  50:5)

karththaraagiya  aa'ndavar  enseviyaith  thi’ranthaar;  naan  ethirkkavumillai,  naan  pinvaanggavumillai.  (easaayaa  50:5)

அடிக்கிறவர்களுக்கு  என்  முதுகையும்,  தாடைமயிரைப்  பிடுங்குகிறவர்களுக்கு  என்  தாடைகளையும்  ஒப்புக்கொடுத்தேன்;  அவமானத்துக்கும்  உமிழ்நீருக்கும்  என்  முகத்தை  மறைக்கவில்லை.  (ஏசாயா  50:6)

adikki’ravarga'lukku  en  muthugaiyum,  thaadaimayiraip  pidunggugi’ravarga'lukku  en  thaadaiga'laiyum  oppukkoduththean;  avamaanaththukkum  umizhneerukkum  en  mugaththai  ma’raikkavillai.  (easaayaa  50:6)

கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குத்  துணைசெய்கிறார்;  ஆகையால்  நான்  வெட்கப்படேன்;  நான்  வெட்கப்பட்டுப்போவதில்லையென்று  அறிந்திருக்கிறேன்;  ஆதலால்  என்  முகத்தைக்  கற்பாறையைப்போலாக்கினேன்.  (ஏசாயா  50:7)

karththaraagiya  aa'ndavar  enakkuth  thu'naiseygi’raar;  aagaiyaal  naan  vedkappadean;  naan  vedkappattuppoavathillaiyen’ru  a’rinthirukki’rean;  aathalaal  en  mugaththaik  ka’rpaa’raiyaippoalaakkinean.  (easaayaa  50:7)

என்னை  நீதிமானாக்குகிறவர்  சமீபமாயிருக்கிறார்;  என்னோடே  வழக்காடுகிறவன்  யார்?  ஏகமாய்  நிற்போமாக,  யார்  எனக்கு  எதிராளி?  அவன்  என்னிடத்தில்  வரட்டும்.  (ஏசாயா  50:8)

ennai  neethimaanaakkugi’ravar  sameebamaayirukki’raar;  ennoadea  vazhakkaadugi’ravan  yaar?  eagamaay  ni’rpoamaaga,  yaar  enakku  ethiraa'li?  avan  ennidaththil  varattum.  (easaayaa  50:8)

இதோ,  கர்த்தராகிய  ஆண்டவர்  எனக்குத்  துணைசெய்கிறார்;  என்னை  ஆக்கினைக்குள்ளாகத்  தீர்க்கிறவன்  யார்?  இதோ,  அவர்கள்  எல்லாரும்  ஒரு  வஸ்திரத்தைப்போலப்  பழசாவார்கள்;  பொட்டுப்பூச்சி  அவர்களை  அரிக்கும்.  (ஏசாயா  50:9)

ithoa,  karththaraagiya  aa'ndavar  enakkuth  thu'naiseygi’raar;  ennai  aakkinaikku'l'laagath  theerkki’ravan  yaar?  ithoa,  avarga'l  ellaarum  oru  vasthiraththaippoalap  pazhasaavaarga'l;  pottuppoochchi  avarga'lai  arikkum.  (easaayaa  50:9)

உங்களில்  எவன்  கர்த்தருக்குப்  பயந்து,  அவருடைய  தாசனின்  சொல்லைக்  கேட்டு,  தனக்கு  வெளிச்சமில்லாததினால்  இருட்டிலே  நடக்கிறானோ,  அவன்  கர்த்தருடைய  நாமத்தை  நம்பி,  தன்  தேவனைச்  சார்ந்துகொள்ளக்கடவன்.  (ஏசாயா  50:10)

ungga'lil  evan  karththarukkup  bayanthu,  avarudaiya  thaasanin  sollaik  keattu,  thanakku  ve'lichchamillaathathinaal  iruttilea  nadakki’raanoa,  avan  karththarudaiya  naamaththai  nambi,  than  theavanaich  saarnthuko'l'lakkadavan.  (easaayaa  50:10)

இதோ,  நெருப்பைக்  கொளுத்தி,  அக்கினிப்பொறிகளால்  சூழப்பட்டிருக்கிற  நீங்கள்  அனைவரும்,  உங்கள்  அக்கினி  தீபத்திலும்,  நீங்கள்  மூட்டின  அக்கினிஜுவாலையிலும்  நடவுங்கள்;  வேதனையில்  கிடப்பீர்கள்;  என்  கரத்தினால்  இது  உங்களுக்கு  உண்டாகும்.  (ஏசாயா  50:11)

ithoa,  neruppaik  ko'luththi,  akkinippo’riga'laal  soozhappattirukki’ra  neengga'l  anaivarum,  ungga'l  akkini  theebaththilum,  neengga'l  moottina  akkinijuvaalaiyilum  nadavungga'l;  veathanaiyil  kidappeerga'l;  en  karaththinaal  ithu  ungga'lukku  u'ndaagum.  (easaayaa  50:11)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!