Sunday, October 02, 2016

Easaayaa 5 | ஏசாயா 5 | Isaiah 5

இப்பொழுது  நான்  என்  நேசரிடத்தில்  அவருடைய  திராட்சத்தோட்டத்தைக்  குறித்து  என்  நேசருக்கேற்ற  ஒரு  பாட்டைப்  பாடுவேன்;  என்  நேசருக்கு  மகா  செழிப்பான  மேட்டிலே  ஒரு  திராட்சத்தோட்டம்  உண்டு.  (ஏசாயா  5:1)

ippozhuthu  naan  en  neasaridaththil  avarudaiya  thiraadchaththoattaththaik  ku’riththu  en  neasarukkeat’ra  oru  paattaip  paaduvean;  en  neasarukku  mahaa  sezhippaana  meattilea  oru  thiraadchaththoattam  u'ndu.  (easaayaa  5:1)

அவர்  அதை  வேலியடைத்து,  அதிலுள்ள  கற்களைப்  பொறுக்கி,  அதிலே  நற்குல  திராட்சச்செடிகளை  நட்டு,  அதின்  நடுவில்  ஒரு  கோபுரத்தைக்கட்டி,  அதில்  ஆலையையும்  உண்டுபண்ணி,  அது  நல்ல  திராட்சப்பழங்களைத்  தருமென்று  காத்திருந்தார்;  அதுவோ  கசப்பான  பழங்களைத்  தந்தது.  (ஏசாயா  5:2)

avar  athai  vealiyadaiththu,  athilu'l'la  ka’rka'laip  po’rukki,  athilea  na’rkula  thiraadchachsediga'lai  nattu,  athin  naduvil  oru  koapuraththaikkatti,  athil  aalaiyaiyum  u'ndupa'n'ni,  athu  nalla  thiraadchappazhangga'laith  tharumen’ru  kaaththirunthaar;  athuvoa  kasappaana  pazhangga'laith  thanthathu.  (easaayaa  5:2)

எருசலேமின்  குடிகளே,  யூதாவின்  மனுஷரே,  எனக்கும்  என்  திராட்சத்தோட்டத்துக்கும்  நியாயந்தீருங்கள்.  (ஏசாயா  5:3)

erusaleamin  kudiga'lea,  yoothaavin  manusharea,  enakkum  en  thiraadchaththoattaththukkum  niyaayantheerungga'l.  (easaayaa  5:3)

நான்  என்  திராட்சத்தோட்டத்திற்காகச்  செய்யாத  எந்த  வேலையை  அதற்கு  இனிச்  செய்யலாம்?  அது  நல்ல  திராட்சப்பழங்களைத்  தருமென்று  நான்  காத்திருக்க,  அது  கசப்பான  பழங்களைத்  தந்ததென்ன?  (ஏசாயா  5:4)

naan  en  thiraadchaththoattaththi’rkaagach  seyyaatha  entha  vealaiyai  atha’rku  inich  seyyalaam?  athu  nalla  thiraadchappazhangga'laith  tharumen’ru  naan  kaaththirukka,  athu  kasappaana  pazhangga'laith  thanthathenna?  (easaayaa  5:4)

இப்போதும்  நான்  என்  திராட்சத்தோட்டத்துக்குச்  செய்வதை  உங்களுக்கு  அறிவிப்பேன்;  அதின்  வேலியை  எடுத்துப்போடுவேன்,  அது  மேய்ந்துபோடப்படும்;  அதின்  அடைப்பைத்  தகர்ப்பேன்,  அது  மிதியுண்டுபோம்.  (ஏசாயா  5:5)

ippoathum  naan  en  thiraadchaththoattaththukkuch  seyvathai  ungga'lukku  a’rivippean;  athin  vealiyai  eduththuppoaduvean,  athu  meaynthupoadappadum;  athin  adaippaith  thagarppean,  athu  mithiyu'ndupoam.  (easaayaa  5:5)

அதைப்  பாழாக்கிவிடுவேன்;  அதின்  கிளை  நறுக்கப்படாமலும்,  களைகொத்தி  எடுக்கப்படாமலும்  போவதினால்,  முட்செடியும்  நெரிஞ்சிலும்  முளைக்கும்;  அதின்மேல்  மழை  பெய்யாதபடிக்கு  மேகங்களுக்கும்  கட்டளையிடுவேன்  என்கிறார்.  (ஏசாயா  5:6)

athaip  paazhaakkividuvean;  athin  ki'lai  na’rukkappadaamalum,  ka'laikoththi  edukkappadaamalum  poavathinaal,  mudchediyum  nerignchilum  mu'laikkum;  athinmeal  mazhai  peyyaathapadikku  meagangga'lukkum  katta'laiyiduvean  engi’raar.  (easaayaa  5:6)

சேனைகளின்  கர்த்தருடைய  திராட்சத்தோட்டம்  இஸ்ரவேலின்  வம்சமே;  அவருடைய  மனமகிழ்ச்சியின்  நாற்று  யூதாவின்  மனுஷரே;  அவர்  நியாயத்துக்குக்  காத்திருந்தார்,  இதோ,  கொடுமை;  நீதிக்குக்  காத்திருந்தார்,  இதோ,  முறைப்பாடு.  (ஏசாயா  5:7)

seanaiga'lin  karththarudaiya  thiraadchaththoattam  isravealin  vamsamea;  avarudaiya  manamagizhchchiyin  naat’ru  yoothaavin  manusharea;  avar  niyaayaththukkuk  kaaththirunthaar,  ithoa,  kodumai;  neethikkuk  kaaththirunthaar,  ithoa,  mu’raippaadu.  (easaayaa  5:7)

தாங்கள்மாத்திரம்  தேசத்தின்  நடுவில்  வாசமாயிருக்கும்படி  மற்றவர்களுக்கு  இடமில்லாமற்போகுமட்டும்,  வீட்டோடே  வீட்டைச்  சேர்த்து,  வயலோடே  வயலைக்  கூட்டுகிறவர்களுக்கு  ஐயோ!  (ஏசாயா  5:8)

thaangga'lmaaththiram  theasaththin  naduvil  vaasamaayirukkumpadi  mat’ravarga'lukku  idamillaama’rpoagumattum,  veettoadea  veettaich  searththu,  vayaloadea  vayalaik  koottugi’ravarga'lukku  aiyoa!  (easaayaa  5:8)

சேனைகளின்  கர்த்தர்  என்  செவிகேட்கச்  சொன்னது:  மெய்யாகவே  அந்தத்  திரளான  வீடுகள்  பாழாகும்;  பெரியவைகளும்  நேர்த்தியானவைகளுமாகிய  வீடுகள்  குடியில்லாதிருக்கும்.  (ஏசாயா  5:9)

seanaiga'lin  karththar  en  sevikeadkach  sonnathu:  meyyaagavea  anthath  thira'laana  veeduga'l  paazhaagum;  periyavaiga'lum  nearththiyaanavaiga'lumaagiya  veeduga'l  kudiyillaathirukkum.  (easaayaa  5:9)

பத்தேர்  நிலமாகிய  திராட்சத்தோட்டம்  ஒரேபடி  ரசம்  தரும்;  ஒரு  கல  விதை  ஒரு  குறுணி  விளையும்.  (ஏசாயா  5:10)

paththear  nilamaagiya  thiraadchaththoattam  oreapadi  rasam  tharum;  oru  kala  vithai  oru  ku’ru'ni  vi'laiyum.  (easaayaa  5:10)

சாராயத்தை  நாடி  அதிகாலமே  எழுந்து,  மதுபானம்  தங்களைச்  சூடாக்கும்படி  தரித்திருந்து,  இருட்டிப்போகுமளவும்  குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு  ஐயோ!  (ஏசாயா  5:11)

saaraayaththai  naadi  athikaalamea  ezhunthu,  mathubaanam  thangga'laich  soodaakkumpadi  thariththirunthu,  iruttippoaguma'lavum  kudiththukko'ndeayirukki’ravarga'lukku  aiyoa!  (easaayaa  5:11)

அவர்கள்  சுரமண்டலத்தையும்,  தம்புருவையும்,  மேளத்தையும்,  நாகசுரத்தையும்,  மதுபானத்தையும்  வைத்து  விருந்துகொண்டாடுகிறார்கள்;  ஆனாலும்  கர்த்தரின்  கிரியையை  நோக்குகிறதுமில்லை;  அவர்  கரத்தின்  செய்கையைச்  சிந்திக்கிறதுமில்லை.  (ஏசாயா  5:12)

avarga'l  surama'ndalaththaiyum,  thamburuvaiyum,  mea'laththaiyum,  naagasuraththaiyum,  mathubaanaththaiyum  vaiththu  virunthuko'ndaadugi’raarga'l;  aanaalum  karththarin  kiriyaiyai  noakkugi’rathumillai;  avar  karaththin  seygaiyaich  sinthikki’rathumillai.  (easaayaa  5:12)

என்  ஜனங்கள்  அறிவில்லாமையினால்  சிறைப்பட்டுப்போகிறார்கள்;  அவர்களில்  கனமுள்ளவர்கள்  பட்டினியினால்  தொய்ந்துபோகிறார்கள்;  அவர்களுடைய  திரளான  கூட்டத்தார்  தாகத்தால்  நாவறண்டுபோகிறார்கள்.  (ஏசாயா  5:13)

en  janangga'l  a’rivillaamaiyinaal  si’raippattuppoagi’raarga'l;  avarga'lil  kanamu'l'lavarga'l  pattiniyinaal  thoynthupoagi’raarga'l;  avarga'ludaiya  thira'laana  koottaththaar  thaagaththaal  naava’ra'ndupoagi’raarga'l.  (easaayaa  5:13)

அதினிமித்தம்  பாதாளம்  தன்னை  விரிவாக்கி,  தன்  வாயை  ஆவென்று  மட்டில்லாமல்  திறந்தது;  அவர்கள்  மகிமையும்,  அவர்கள்  திரள்கூட்டமும்,  அவர்கள்  ஆடம்பரமும்,  அவர்களில்  களிகூருகிறவர்களும்  அதற்குள்  இறங்கிப்போவார்கள்.  (ஏசாயா  5:14)

athinimiththam  paathaa'lam  thannai  virivaakki,  than  vaayai  aaven’ru  mattillaamal  thi’ranthathu;  avarga'l  magimaiyum,  avarga'l  thira'lkoottamum,  avarga'l  aadambaramum,  avarga'lil  ka'likoorugi’ravarga'lum  atha’rku'l  i’ranggippoavaarga'l.  (easaayaa  5:14)

சிறியவன்  தாழ்த்தப்படுவான்,  பெரியவனும்  தாழ்ச்சியடைவான்;  மேட்டிமையானவர்களின்  கண்கள்  தாழ்ந்துபோம்.  (ஏசாயா  5:15)

si’riyavan  thaazhththappaduvaan,  periyavanum  thaazhchchiyadaivaan;  meattimaiyaanavarga'lin  ka'nga'l  thaazhnthupoam.  (easaayaa  5:15)

சேனைகளின்  கர்த்தர்  நியாயத்தீர்ப்பினால்  உயர்ந்து,  பரிசுத்தமுள்ள  தேவன்  நீதியினால்  பரிசுத்தராய்  விளங்குவார்.  (ஏசாயா  5:16)

seanaiga'lin  karththar  niyaayaththeerppinaal  uyarnthu,  parisuththamu'l'la  theavan  neethiyinaal  parisuththaraay  vi'langguvaar.  (easaayaa  5:16)

அப்பொழுது  ஆட்டுக்குட்டிகள்  கண்டவிடமெல்லாம்  மேயும்;  கொழுத்தவர்களுடையதாயிருந்து  பாழாய்ப்போன  நிலங்களைப்  பரதேசிகள்  அநுபவிப்பார்கள்.  (ஏசாயா  5:17)

appozhuthu  aattukkuttiga'l  ka'ndavidamellaam  meayum;  kozhuththavarga'ludaiyathaayirunthu  paazhaayppoana  nilangga'laip  paratheasiga'l  anubavippaarga'l.  (easaayaa  5:17)

மாயையின்  கயிறுகளால்  அக்கிரமத்தையும்,  வண்டியின்  வடங்களால்  பாவத்தையும்  இழுத்துக்கொண்டு  வந்து,  (ஏசாயா  5:18)

maayaiyin  kayi’ruga'laal  akkiramaththaiyum,  va'ndiyin  vadangga'laal  paavaththaiyum  izhuththukko'ndu  vanthu,  (easaayaa  5:18)

நாம்  பார்க்கும்படி  அவர்  தீவிரித்துத்  தமது  கிரியையைச்  சீக்கிரமாய்  நடப்பிக்கட்டுமென்றும்,  இஸ்ரவேலின்  பரிசுத்தருடைய  ஆலோசனையை  நாம்  அறியும்படி  அது  சமீபித்து  வரட்டுமென்றும்  சொல்லுகிறவர்களுக்கு  ஐயோ!  (ஏசாயா  5:19)

naam  paarkkumpadi  avar  theeviriththuth  thamathu  kiriyaiyaich  seekkiramaay  nadappikkattumen’rum,  isravealin  parisuththarudaiya  aaloasanaiyai  naam  a’riyumpadi  athu  sameebiththu  varattumen’rum  sollugi’ravarga'lukku  aiyoa!  (easaayaa  5:19)

தீமையை  நன்மையென்றும்,  நன்மையைத்  தீமையென்றும்  சொல்லி,  இருளை  வெளிச்சமும்,  வெளிச்சத்தை  இருளுமாகப்  பாவித்து,  கசப்பைத்  தித்திப்பும்,  தித்திப்பைக்  கசப்புமென்று  சாதிக்கிறவர்களுக்கு  ஐயோ!  (ஏசாயா  5:20)

theemaiyai  nanmaiyen’rum,  nanmaiyaith  theemaiyen’rum  solli,  iru'lai  ve'lichchamum,  ve'lichchaththai  iru'lumaagap  paaviththu,  kasappaith  thiththippum,  thiththippaik  kasappumen’ru  saathikki’ravarga'lukku  aiyoa!  (easaayaa  5:20)

தங்கள்  பார்வைக்கு  ஞானிகளும்,  தங்கள்  எண்ணத்துக்குப்  புத்திமான்களுமாய்  இருக்கிறவர்களுக்கு  ஐயோ!  (ஏசாயா  5:21)

thangga'l  paarvaikku  gnaaniga'lum,  thangga'l  e'n'naththukkup  buththimaanga'lumaay  irukki’ravarga'lukku  aiyoa!  (easaayaa  5:21)

சாராயத்தைக்  குடிக்க  வீரரும்,  மதுவைக்  கலந்துவைக்கப்  பராக்கிரமசாலிகளுமாயிருந்து,  (ஏசாயா  5:22)

saaraayaththaik  kudikka  veerarum,  mathuvaik  kalanthuvaikkap  baraakkiramasaaliga'lumaayirunthu,  (easaayaa  5:22)

பரிதானத்திற்காகக்  குற்றவாளியை  நீதிமானாகத்  தீர்த்து,  நீதிமானின்  நியாயத்தை  அவனுக்கு  விரோதமாய்ப்  புரட்டுகிறவர்களுக்கு  ஐயோ!  (ஏசாயா  5:23)

parithaanaththi’rkaagak  kut’ravaa'liyai  neethimaanaagath  theerththu,  neethimaanin  niyaayaththai  avanukku  viroathamaayp  purattugi’ravarga'lukku  aiyoa!  (easaayaa  5:23)

இதினிமித்தம்  அக்கினிஜுவாலை  வைக்கோலைப்  பட்சிப்பதுபோலவும்,  செத்தையானது  நெருப்புக்கு  இரையாகி  எரிந்துபோவதுபோலவும்,  அவர்கள்  வேர்  வாடி,  அவர்கள்  துளிர்  தூசியைப்போல்  பறந்துபோகும்;  அவர்கள்  சேனைகளின்  கர்த்தருடைய  வேதத்தை  வெறுத்து,  இஸ்ரவேலிலுள்ள  பரிசுத்தருடைய  வசனத்தை  அசட்டைபண்ணினார்களே.  (ஏசாயா  5:24)

ithinimiththam  akkinijuvaalai  vaikkoalaip  padchippathupoalavum,  seththaiyaanathu  neruppukku  iraiyaagi  erinthupoavathupoalavum,  avarga'l  vear  vaadi,  avarga'l  thu'lir  thoosiyaippoal  pa’ranthupoagum;  avarga'l  seanaiga'lin  karththarudaiya  veathaththai  ve’ruththu,  isravealilu'l'la  parisuththarudaiya  vasanaththai  asattaipa'n'ninaarga'lea.  (easaayaa  5:24)

ஆகையால்  கர்த்தருடைய  கோபம்  தமது  ஜனங்களுக்கு  விரோதமாய்  மூண்டது;  அவர்  தமது  கையை  அவர்களுக்கு  விரோதமாய்  நீட்டி,  பர்வதங்கள்  அதிரத்தக்கதாயும்,  அவர்கள்  பிணங்கள்  நடுவீதிகளில்  குப்பைபோலாகத்தக்கதாயும்,  அவர்களை  அடித்தார்;  இவை  எல்லாவற்றிலும்  அவருடைய  கோபம்  ஆறாமல்,  இன்னும்  அவருடைய  கை  நீட்டினபடியே  இருக்கிறது.  (ஏசாயா  5:25)

aagaiyaal  karththarudaiya  koabam  thamathu  janangga'lukku  viroathamaay  moo'ndathu;  avar  thamathu  kaiyai  avarga'lukku  viroathamaay  neetti,  parvathangga'l  athiraththakkathaayum,  avarga'l  pi'nangga'l  naduveethiga'lil  kuppaipoalaagaththakkathaayum,  avarga'lai  adiththaar;  ivai  ellaavat’rilum  avarudaiya  koabam  aa’raamal,  innum  avarudaiya  kai  neettinapadiyea  irukki’rathu.  (easaayaa  5:25)

அவர்  தூரத்திலுள்ள  ஜாதியாருக்கு  ஒரு  கொடியை  ஏற்றி,  அவர்களைப்  பூமியின்  கடையாந்தரங்களிலிருந்து  பயில்காட்டி  அழைப்பார்;  அப்பொழுது  அவர்கள்  தீவிரமும்  வேகமுமாய்  வருவார்கள்.  (ஏசாயா  5:26)

avar  thooraththilu'l'la  jaathiyaarukku  oru  kodiyai  eat’ri,  avarga'laip  boomiyin  kadaiyaantharangga'lilirunthu  payilkaatti  azhaippaar;  appozhuthu  avarga'l  theeviramum  veagamumaay  varuvaarga'l.  (easaayaa  5:26)

அவர்களில்  விடாய்த்தவனும்  இடறுகிறவனும்  இல்லை;  தூங்குகிறவனும்  உறங்குகிறவனும்  இல்லை;  அவர்களில்  ஒருவனுடைய  இடுப்பின்  கச்சை  அவிழ்வதும்,  பாதரட்சைகளின்  வார்  அறுந்துபோவதும்  இல்லை.  (ஏசாயா  5:27)

avarga'lil  vidaayththavanum  ida’rugi’ravanum  illai;  thoonggugi’ravanum  u’ranggugi’ravanum  illai;  avarga'lil  oruvanudaiya  iduppin  kachchai  avizhvathum,  paatharadchaiga'lin  vaar  a’runthupoavathum  illai.  (easaayaa  5:27)

அவர்கள்  அம்புகள்  கூர்மையும்,  அவர்கள்  வில்லுகளெல்லாம்  நாணேற்றினவைகளும்,  அவர்கள்  குதிரைகளின்  குளம்புகள்  கற்பாறையாக  எண்ணப்பட்டவைகளும்,  அவர்கள்  உருளைகள்  சுழல்காற்றுக்கு  ஒத்தவைகளுமாயிருக்கும்.  (ஏசாயா  5:28)

avarga'l  ambuga'l  koormaiyum,  avarga'l  villuga'lellaam  naa'neat’rinavaiga'lum,  avarga'l  kuthiraiga'lin  ku'lambuga'l  ka’rpaa’raiyaaga  e'n'nappattavaiga'lum,  avarga'l  uru'laiga'l  suzhalkaat’rukku  oththavaiga'lumaayirukkum.  (easaayaa  5:28)

அவர்கள்  கெர்ச்சிப்பு  சிங்கத்தின்  கெர்ச்சிப்புபோலிருக்கிறது;  பாலசிங்கங்களைப்போலக்  கெர்ச்சித்து,  உறுமி,  இரையைப்  பிடித்து,  தப்புவிக்கிறவன்  இல்லாமல்,  அதை  எடுத்துக்கொண்டு  போய்விடுவார்கள்.  (ஏசாயா  5:29)

avarga'l  kerchchippu  singgaththin  kerchchippupoalirukki’rathu;  baalasinggangga'laippoalak  kerchchiththu,  u’rumi,  iraiyaip  pidiththu,  thappuvikki’ravan  illaamal,  athai  eduththukko'ndu  poayviduvaarga'l.  (easaayaa  5:29)

அந்நாளில்,  சமுத்திரம்  இரைவதுபோல்  அவர்களுக்கு  விரோதமாய்  இரைவார்கள்;  அப்பொழுது  தேசத்தைப்பார்த்தால்,  இதோ,  அந்தகாரமும்  வியாகுலமும்  உண்டு;  அதின்  மேகங்களினால்  வெளிச்சம்  இருண்டுபோம்.  (ஏசாயா  5:30)

annaa'lil,  samuththiram  iraivathupoal  avarga'lukku  viroathamaay  iraivaarga'l;  appozhuthu  theasaththaippaarththaal,  ithoa,  anthagaaramum  viyaagulamum  u'ndu;  athin  meagangga'linaal  ve'lichcham  iru'ndupoam.  (easaayaa  5:30)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!