அக்காலத்திலே பலாதானின்
குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும்
பாபிலோனின் ராஜா, எசேக்கியா
வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு
நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.
(ஏசாயா 39:1)
akkaalaththilea balaathaanin kumaaranaagiya meroathaakbalaathaan ennum baabiloanin raajaa,
eseakkiyaa viyaathippattirunthu aaroakkiyamaanathaik kea'lvippattu, avanidaththi’rku nirubangga'laiyum vegumaanaththaiyum
anuppinaan. (easaayaa 39:1)
எசேக்கியா அவர்களைக்
கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும்,
பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும்,
தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக்
காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும்
அவர்களுக்குக் காண்பியாத பொருள்
ஒன்றும் இல்லை. (ஏசாயா
39:2)
eseakkiyaa avarga'laik ka'ndu santhoashappattu, than pokkishasaalaiyaiyum, ve'l'liyaiyum, ponnaiyum,
kanthavarkkangga'laiyum, nalla parima'lathailaththaiyum, than aayuthasaalai anaiththaiyum, than pokkishasaalaiga'lil u'l'lathellaavat’raiyum avarga'lukkuk kaa'nbiththaan; eseakkiyaa than aramanaiyilum, than raajyaththil enggum avarga'lukkuk kaa'nbiyaatha poru'l
on’rum
illai. (easaayaa 39:2)
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா
ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து
உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு
எசேக்கியா: பாபிலோன் என்னும்
தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள்
என்றான். (ஏசாயா 39:3)
appozhuthu easaayaa theerkkatharisi eseakkiyaa raajaavinidaththil vanthu:
antha manushar enna sonnaarga'l, enggeayirunthu ummidaththil
vanthaarga'l en’ru keattaan. atha’rku eseakkiyaa: baabiloan ennum thooratheasaththilirunthu
ennidaththi’rku vanthaarga'l en’raan. (easaayaa
39:3)
அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில்
என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு
எசேக்கியா: என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத
பொருள் ஒன்றும் இல்லை என்றான். (ஏசாயா
39:4)
appozhuthu avan: ummudaiya
veettil
ennaththaip paarththaarga'l en’ru keattaan. atha’rku eseakkiyaa: en veettilu'l'lathellaavat’raiyum paarththaarga'l; en pokkishangga'lil naan avarga'lukkuk kaa'nbiyaatha poru'l on’rum illai en’raan. (easaayaa 39:4)
அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி:
சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தையைக்
கேளும். (ஏசாயா 39:5)
appozhuthu easaayaa eseakkiyaavai noakki:
seanaiga'ludaiya karththarin vaarththaiyaik kea'lum.
(easaayaa 39:5)
இதோ,
நாட்கள் வரும்; அப்பொழுது
உன் வீட்டில் உள்ளதிலும்,
உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும்
ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல்
எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். (ஏசாயா
39:6)
ithoa, naadka'l varum;
appozhuthu un veettil u'l'lathilum,
un pithaakka'l innaa'lvaraikkum searththathilum on’rum meethiyaay
vaikkappadaamal ellaam baabiloanukkuk ko'ndupoagappadum. (easaayaa
39:6)
நீ
பெறப்போகிற உன் சந்ததியாகிய
உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் ராஜாவின்
அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
என்றான். (ஏசாயா 39:7)
nee pe’rappoagi’ra un santhathiyaagiya un kumaararilum silar
baabiloan
raajaavin aramanaiyilea aramanai
vealaikkaararaayiruppaarga'l en’ru karththar sollugi’raar en’raan. (easaayaa
39:7)
அப்பொழுது எசேக்கியா
ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய
வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும்
உண்மையும் இருக்குமே என்றான்.
(ஏசாயா 39:8)
appozhuthu eseakkiyaa easaayaavai noakki: neer sonna
karththarudaiya vaarththai nallathuthaan
en’ru solli,
en naadka'lilaavathu samaathaanamum u'nmaiyum
irukkumea en’raan. (easaayaa 39:8)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!