வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து,
கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும்.
(ஏசாயா 35:1)
vanaantharamum va’ra'nda nilamum magizhnthu, kaduve'li
ka'liththu, pushpaththaippoalach sezhikkum. (easaayaa
35:1)
அது
மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து
ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின்
மகிமையும், கர்மேல் சாரோன்
என்பவைகளின் அலங்காரமும் அதற்கு
அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய
மகிமையையும், நமது தேவனுடைய
மகத்துவத்தையும் காண்பார்கள். (ஏசாயா
35:2)
athu miguthiyaaych sezhiththup pooriththu
aananthakka'lippudan paadum; leebanoanin magimaiyum, karmeal saaroan
enbavaiga'lin alanggaaramum atha’rku a'likkappadum; avarga'l karththarudaiya magimaiyaiyum, namathu
theavanudaiya magaththuvaththaiyum
kaa'nbaarga'l. (easaayaa
35:2)
தளர்ந்த கைகளைத்
திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். (ஏசாயா
35:3)
tha'larntha kaiga'laith thidappaduththi, tha'l'laadugi’ra muzhangkaalga'laip balappaduththungga'l. (easaayaa 35:3)
மனம்
பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள்
பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள்
தேவன் பதிலளிக்கவும் வருவார்;
அவர் வந்து உங்களை
இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
(ஏசாயா 35:4)
manam patha’rugi’ravarga'laip paarththu:
neengga'l
bayappadaathirungga'l, thidanko'l'lungga'l; ithoa,
ungga'l
theavan neethiyaich sarikkattavum, ungga'l theavan
bathila'likkavum varuvaar;
avar vanthu ungga'lai iradchippaar en’ru sollungga'l. (easaayaa 35:4)
அப்பொழுது குருடரின்
கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின்
செவிகள் திறவுண்டுபோம். (ஏசாயா
35:5)
appozhuthu kurudarin ka'nga'l thi’rakkappattu, sevidarin seviga'l thi’ravu'ndupoam. (easaayaa
35:5)
அப்பொழுது முடவன்
மானைப்போல் குதிப்பான்; ஊமையன்
நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே
தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும்
பாய்ந்தோடும். (ஏசாயா 35:6)
appozhuthu mudavan maanaippoal
kuthippaan; oomaiyan naavum
kembeerikkum; vanaantharaththilea tha'n'neerga'lum, kaduve'liyilea aa’ruga'lum paaynthoadum.
(easaayaa 35:6)
வெட்டாந்தரை தண்ணீர்த்
தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்; வலுசர்ப்பங்கள் தாபரித்துக்
கிடந்த இடங்களிலே புல்லும்
கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.
(ஏசாயா 35:7)
vettaantharai tha'n'neerth
thadaagamum, va’ra'nda nilam neeroot’ruga'lumaagum; valusarppangga'l thaabariththuk kidantha idangga'lilea pullum
ko’rukkaiyum naa'nalum
u'ndaagum. (easaayaa
35:7)
அங்கே
பெரும்பாதையான வழியும் இருக்கும்;
அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன்
அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள்
பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
(ஏசாயா 35:8)
anggea
perumpaathaiyaana vazhiyum irukkum;
athu parisuththa vazhi ennappadum; theettu'l'lavan athilea
nadanthuvaruvathillai; antha vazhiyil
nadakki’ravarga'l peathaiyaraayirunthaalum thisaikettup poavathillai. (easaayaa
35:8)
அங்கே
சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம்
அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். (ஏசாயா
35:9)
anggea singgam iruppathillai; thushdamirugam anggea poavathumillai, anggea kaa'nappadavumaattaathu; meedkappattavarga'lea athil nadappaarga'l. (easaayaa
35:9)
கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி,
ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு
வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி
அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும்
மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும்
தவிப்பும் ஓடிப்போம். (ஏசாயா
35:10)
karththaraal meedkappattavarga'l thirumbi, aananthakka'lippudan paadi, seeyoanukku varuvaarga'l; niththiya
magizhchchi avarga'l thalaiyinmealirukkum; santhoashamum magizhchchiyum adaivaarga'l; sagnchalamum thavippum
oadippoam. (easaayaa 35:10)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!