தேசாதிபதிக்குச் செலுத்தும்
ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலாபட்டணந்துவக்கி வனாந்தரமட்டும் சேர்த்துச்
சீயோன் குமாரத்தியின் மலைக்கு
அனுப்புங்கள். (ஏசாயா 16:1)
theasaathibathikkuch seluththum aattukkuttiga'lai neengga'l sealaapatta'nanthuvakki vanaantharamattum
searththuch seeyoan
kumaaraththiyin malaikku anuppungga'l. (easaayaa
16:1)
இல்லாவிட்டால் கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு
அலைகிற குருவியைப்போல மோவாபின்
குமாரத்திகள் அர்னோன் நதியின்
துறைகளிடத்திலிருப்பார்கள். (ஏசாயா 16:2)
illaavittaal koottaivittuth thuraththappattu alaigi’ra kuruviyaippoala moavaabin kumaaraththiga'l arnoan
nathiyin thu’raiga'lidaththiliruppaarga'l. (easaayaa
16:2)
நீ
ஆலோசனைபண்ணி, நியாயஞ்செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடாதிரு. (ஏசாயா
16:3)
nee aaloasanaipa'n'ni, niyaayagnseythu, maththiyaanaththilea un nizhalai iravaippoalaakki, thuraththappattavarga'lai ma’raiththukko'l,
oadivarugi’ravarga'laik kaattikkodaathiru. (easaayaa
16:3)
மோவாபே, துரத்திவிடப்பட்ட என் ஜனங்கள் உன்னிடத்தில்
தங்கட்டும்; சங்கரிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன்
இல்லாதேபோவான்; சங்கரிப்பு ஒழிந்துபோம்;
மிதிக்கிறவர்கள் தேசத்தில் இராதபடிக்கு
அழிந்துபோவார்கள். (ஏசாயா 16:4)
moavaabea, thuraththividappatta en janangga'l unnidaththil thanggattum; sanggarikki’ravanukkuth thappa
avarga'lukku adaikkalamaayiru; odukkugi’ravan illaatheapoavaan; sanggarippu ozhinthupoam;
mithikki’ravarga'l theasaththil iraathapadikku azhinthupoavaarga'l. (easaayaa
16:4)
கிருபையினாலே சிங்காசனம்
ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத்
துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர்
அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே
நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார். (ஏசாயா
16:5)
kirubaiyinaalea singgaasanam sthaabikkappadum; niyaayam
visaariththuth thurithamaay
neethiseygi’ra oruvar
athinmeal thaaveethin koodaaraththilea niyaayaathibathiyaay u'nmaiyoadea
veet’riruppaar. (easaayaa
16:5)
மோவாபின் பெருமையையும்,
அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக்
கேட்டோம்; அவன் மெத்தப்
பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.
(ஏசாயா 16:6)
moavaabin perumaiyaiyum, avan meattimaiyaiyum, avan aganggaaraththaiyum,
avan ukkiraththaiyum ku’riththuk keattoam; avan meththap perumaikkaaran; aanaalum
avan veembu
sellaathu. (easaayaa
16:6)
ஆகையால், மோவாபியர்
ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள்,
எல்லாரும் ஏகமாய் அலறுவார்கள்;
கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள்
தகர்க்கப்பட்டதே என்று அவைகளுக்காகப்
பெருமூச்சு விடுவார்கள். (ஏசாயா
16:7)
aagaiyaal, moavaabiyar oruvarukkaaga oruvar
ala’ruvaarga'l, ellaarum
eagamaay
ala’ruvaarga'l; kiraareaseath oorin asthibaarangga'l thagarkkappattathea en’ru avaiga'lukkaagap perumoochchu viduvaarga'l. (easaayaa
16:7)
எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின;
சிப்மாஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின்
அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள்
யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில்
படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள்
நீண்டு கடலுக்கப்பாலே எட்டியிருந்தது. (ஏசாயா
16:8)
esboan
oor vayalga'l vaadippoayina; sibmaaoorth thiraadchachsediyin nalla kodiga'lai jaathiga'lin athibathiga'l na’rukkippoattaarga'l; avaiga'l yaasearmattum sen’ru vanaantharaththil padarnthirunthathu; avaiga'lin kodiga'l nee'ndu
kadalukkappaalea ettiyirunthathu.
(easaayaa 16:8)
ஆகையால் யாசேருக்காக
அழுததுபோல, சிப்மாஊர்த் திராட்சச்செடிக்காகவும் மிகவும்
அழுவேன்; எஸ்போனே, எலெயாலேயே,
உனக்கு என் கண்ணீரைப்
பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற
சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று. (ஏசாயா
16:9)
aagaiyaal yaasearukkaaga azhuthathupoala,
sibmaaoorth thiraadchachsedikkaagavum migavum azhuvean; esboanea, eleyaaleayea,
unakku en ka'n'neeraip
paaychchuvean; un vasanthakaalaththup
pazhangga'lukkaagavum, un thiraadchappazha a’ruppukkaagavum aaravaarikki’ra
santhoasha
saththam vizhunthupoayit’ru. (easaayaa
16:9)
பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும்
களிப்பும் அற்றுப்போயின; திராட்சத்தோட்டங்களில் பாடலுமில்லை
ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் இரசத்தை
மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை
ஓயப்பண்ணினேன். (ஏசாயா 16:10)
payirve'liyilirunthu santhoashamum ka'lippum
at’ruppoayina; thiraadchaththoattangga'lil paadalumillai
aarpparippumillai; aalaiyil irasaththai mithikki’ravanumillai;
santhoasha aaravaaraththai oayappa'n'ninean. (easaayaa
16:10)
ஆகையால் மோவாபினிமித்தம் என் குடல்களும், கிராரேசினிமித்தம் என் உள்ளமும் சுரமண்டலத்தைப் போலத் தொனிக்கிறது. (ஏசாயா
16:11)
aagaiyaal moavaabinimiththam en kudalga'lum, kiraareasinimiththam en u'l'lamum surama'ndalaththaip poalath
thonikki’rathu. (easaayaa
16:11)
மோவாப்
மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனைசெய்யத் தன் பரிசுத்த ஸ்தானத்திலே
பிரவேசிப்பான்; ஆனாலும் அநுகூலப்படமாட்டான். (ஏசாயா
16:12)
moavaab
meadaiga'linmeal saliththuppoanaan en’ru kaa'nappadumpoathu, piraarththanaiseyyath than parisuththa sthaanaththilea piraveasippaan; aanaalum
anugoolappadamaattaan. (easaayaa
16:12)
மோவாபைக்குறித்து அக்காலத்திலே
கர்த்தர் சொன்ன வார்த்தை
இதுவே. (ஏசாயா 16:13)
moavaabaikku’riththu akkaalaththilea karththar sonna
vaarththai ithuvea. (easaayaa
16:13)
ஒரு
கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த மூன்று
வருஷங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும்
அதின் மகா ஜனக்கூட்டமும்
சீரழிந்துபோம்; அதில் மீதியாயிருப்பது மிகவும்
சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று கர்த்தர் இப்பொழுது
சொல்லுகிறார். (ஏசாயா 16:14)
oru koolikkaaranudaiya varushangga'lukkoththa moon’ru varushangga'lukku'l'lea moavaabin magimaiyum athin mahaa janakkoottamum seerazhinthupoam; athil meethiyaayiruppathu migavum si’rithum a’rpamumaayirukkum en’ru karththar
ippozhuthu sollugi’raar. (easaayaa
16:14)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!