இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய
அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது,
அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான்.
(எஸ்தர் 2:1)
ivaiga'lukkuppinbu, raajaavaagiya agaasvearuvin ukkiram
tha'ninthapoathu, avan vasthiyaiyum
ava'l seythathaiyum ava'laikku’riththuth theermaanikkappattathaiyum ninaiththaan.
(esthar 2:1)
அப்பொழுது ராஜாவைச்
சேவிக்கிற அவனுடைய ஊழியக்காரர்
அவனை நோக்கி: ரூபவதிகளாயிருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத்
தேடவேண்டும். (எஸ்தர் 2:2)
appozhuthu raajaavaich seavikki’ra avanudaiya oozhiyakkaarar avanai
noakki: roobavathiga'laayirukki’ra kannippe'nga'lai raajaavukkaagath theadavea'ndum. (esthar
2:2)
அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின்
நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள்
ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி,
சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து,
ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின்
பிரதானியாகிய யேகாயின் வசத்திலே
ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள்
அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். (எஸ்தர்
2:3)
atha’rkaaga raajaa
thammudaiya raajyaththin naaduga'lilellaam visaarippukkaararai vaikkavea'ndum; ivarga'l roobavathiga'laayirukki’ra sagala kannippe'nga'laiyum kootti, soosaan aramanaiyilirukki’ra kannimaadaththukku azhaiththuvanthu, sthireega'laik kaavalpa'n'nugi’ra raajaavin
pirathaaniyaagiya yeakaayin vasaththilea oppuvikkavea'ndum; avarga'ludaiya
suththigarippukku vea'ndiyavaiga'l avarga'lukkuk kodukkappadavea'ndum. (esthar
2:3)
அப்பொழுது ராஜாவின்
கண்களுக்குப் பிரியமான கன்னி வஸ்திக்குப் பதிலாகப்
பட்டத்து ஸ்திரீயாக வேண்டும்
என்றார்கள்; இந்த வார்த்தை
ராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அப்படியே
செய்தான். (எஸ்தர் 2:4)
appozhuthu raajaavin
ka'nga'lukkup piriyamaana
kanni vasthikkup bathilaagap pattaththu sthireeyaaga vea'ndum en’raarga'l; intha vaarththai
raajaavukku nalamaayth thoan’rinapadiyaal appadiyea seythaan. (esthar
2:4)
அப்பொழுது சூசான்
அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின்
குமாரன் சீமேயினுடைய மகனாகிய
யாவீரின் குமாரன் மொர்தெகாய்
என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான்.
(எஸ்தர் 2:5)
appozhuthu soosaan aramanaiyilea
benyameeniyanaagiya keesin kumaaran seemeayinudaiya maganaagiya yaaveerin kumaaran
morthekaay ennum pearu'l'la oru yoothan irunthaan.
(esthar 2:5)
அவன் பாபிலோன்
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின்
ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது,
அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான். (எஸ்தர்
2:6)
avan baabiloan raajaavaagiya neabukaathneachchaar yoothaavin raajaavaagiya ekoniyaavaip
pidiththukko'ndu poagi’rapoathu, avanoadeakooda erusaleamilirunthu pidiththukko'ndu poagappattavarga'lil oruvanaayirunthaan. (esthar
2:6)
அவன் தன் சிறிய தகப்பன்
குமாரத்தியாகிய எஸ்தர் என்னும்
அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத்
தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய்
அவளைத் தன் குமாரத்தியாக
எடுத்துக்கொண்டான். (எஸ்தர் 2:7)
avan than si’riya
thagappan
kumaaraththiyaagiya esthar
ennum athsaa'lai va'larththaan; ava'lukkuth
thaaythagappanillai; anthap
pe'n roobavathiyum
saunthariyamudaiyava'lumaayirunthaa'l; ava'l thagappanum ava'l thaayum
mara'namadainthapoathu, morthekaay ava'laith
than kumaaraththiyaaga eduththukko'ndaan. (esthar
2:7)
ராஜாவின் கட்டளையும்
தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம்
பெண்கள் கூட்டப்பட்டு, சூசான்
அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில்
ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின்
அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக்
காவல்பண்ணுகிற யேகாயின் வசத்தில்
ஒப்புவிக்கப்பட்டாள். (எஸ்தர் 2:8)
raajaavin katta'laiyum theermaanamum
pirasiththamaagi, aneagam pe'nga'l koottappattu, soosaan
aramanaiyilu'l'la yeakaayin vasaththil oppuvikkappadugi’rapoathu, estharum
raajaavin aramanaikku azhaiththukko'ndupoagappattu, sthireega'laik kaavalpa'n'nugi’ra yeakaayin vasaththil oppuvikkappattaa'l. (esthar
2:8)
அந்தப் பெண் அவன் பார்வைக்கு
நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது;
ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத்
தேவையான மற்றவைகளையும் அவளுக்குக்
கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு
நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த
ஒரு இடத்திலே அவளையும்
அவள் தாதிமார்களையும் வைத்தான்.
(எஸ்தர் 2:9)
anthap pe'n avan paarvaikku
nan’raayirunthathinaal, ava'lukku
avan ka'nga'lilea thayaikidaiththathu; aagaiyaal ava'ludaiya suththigarippukku vea'ndiyavaiga'laiyum, ava'lukkuth
theavaiyaana mat’ravaiga'laiyum ava'lukkuk
kodukkavum, raaja aramanaiyilirukki’ra eazhu thaathimaarga'lai ava'lukku niyamikkavum
jaakkirathaippattu kannimaadaththil si’rantha oru idaththilea ava'laiyum
ava'l thaathimaarga'laiyum vaiththaan. (esthar
2:9)
எஸ்தரோவென்றால் தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தாள்; மொர்தெகாய்
அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக்
கற்பித்திருந்தான். (எஸ்தர் 2:10)
estharoaven’raal than kulaththaiyum, than poorvoaththaraththaiyum a’rivikkaathirunthaa'l; morthekaay athaith therivikkavea'ndaamen’ru ava'lukkuk
ka’rpiththirunthaan. (esthar
2:10)
எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு
நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய்
நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு
முன்பாக உலாவுவான். (எஸ்தர்
2:11)
estharudaiya sugaseythiyaiyum ava'lukku
nadakkungkaariyaththaiyum a’riya morthekaay naadoa’rum kannimaadaththu mut’raththukku munbaaga ulaavuvaan.
(esthar 2:11)
ஒவ்வொரு பெண்ணும்
ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம்
சுகந்தவர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்றச்
சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள்
நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின்
முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச்
செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய
அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய
முறை வருகிறபோது, (எஸ்தர்
2:12)
ovvoru pe'n'num
aa’rumaatham ve'l'laippoa'lath thailaththinaalum, aa’rumaatham suganthavarkkangga'linaalum, sthireega'lukkuriya mat’rach suththigarippuga'linaalum joadikkappadugi’ra naadka'l ni’raivea’ri, ivvithamaay sthireega'lin mu’raimaippadi pannira'ndu
maathamaagach seyyappattuth theernthapinbu, raajaavaagiya agaasvearuvinidaththil piraveasikka, ava'lava'ludaiya mu’rai varugi’rapoathu, (esthar
2:12)
இப்படி ஜோடிக்கப்பட்ட
பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட
ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று
கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும். (எஸ்தர்
2:13)
ippadi joadikkappatta pe'n raajaavinidaththil piraveasippaa'l; kannimaadaththilirunthu thannoadeakooda raaja aramanaikkuppoaga, ava'l thanakku
vea'ndumen’ru keadpavaiyellaam ava'lukkuk
kodukkappadum. (esthar 2:13)
சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து,
காலமே, அபிமான ஸ்திரீகளைக்
காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய
சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின்
இரண்டாம் மாடத்துக்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப்
பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது. (எஸ்தர்
2:14)
saayanggaalaththilea ava'l u'l'lea piraveasiththu, kaalamea,
abimaana
sthireega'laik kaavalpa'n'nugi’ra raajaavin
pirathaaniyaagiya saaskaasudaiya visaarippukku'l'lirukki’ra sthireega'lin ira'ndaam maadaththukkuth thirumbivaruvaa'l; raajaa
thannai virumbip pearsolli azhaippiththaalozhiya ava'l orupoathum raajaavinidaththil piraveasikkakkoodaathu. (esthar
2:14)
மொர்தெகாய் தனக்குக்
குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறியதகப்பனாகிய அபியாயேலின்
குமாரத்தியுமான எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது,
அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற
ராஜாவின் பிரதானியாகிய யேகாய்
நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும்
கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக்
காண்கிற எல்லார் கண்களிலும்
தயைகிடைத்தது. (எஸ்தர் 2:15)
morthekaay thanakkuk
kumaaraththiyaay eat’rukko'ndava'lum,
avan si’riyathagappanaagiya abiyaayealin kumaaraththiyumaana esthar
raajaavinidaththil piraveasikki’ratha’rku mu’raivanthapoathu,
ava'l sthireega'laik kaavalpa'n'nugi’ra raajaavin pirathaaniyaagiya yeakaay niyamiththa kaariyameayallaamal vea’ron’rum keadkavillai; estharukkuth
thannaik kaa'ngi’ra ellaar ka'nga'lilum thayaikidaiththathu. (esthar
2:15)
அப்படியே எஸ்தர்
ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற
ஏழாம் வருஷம் தேபேத்
மாதமாகிய பத்தாம் மாதத்திலே
ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள்.
(எஸ்தர் 2:16)
appadiyea esthar
raajaavaagiya agaasvearu arasaa'lugi’ra eazhaam varusham
theabeath
maathamaagiya paththaam
maathaththilea raajaavinidaththil aramanaikku
azhaiththukko'ndu poagappattaa'l. (esthar
2:16)
ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல்
அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு
அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும்
கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து,
அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே
பட்டத்து ஸ்திரீயாக்கினான். (எஸ்தர்
2:17)
raajaa sagala sthireega'laippaarkkilum estharmeal
anbuvaiththaan; sagala
kannigaiga'laippaarkkilum ava'lukku
avan samugaththil athiga thayaiyum padchamum kidaiththathu; aagaiyaal avan raajakireedaththai ava'l sirasinmeal vaiththu,
ava'lai vasthiyin sthaanaththilea pattaththu sthireeyaakkinaan. (esthar
2:17)
அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப்
பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்குச்
சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான்.
(எஸ்தர் 2:18)
appozhuthu raajaa
thannudaiya ellaap pirabukka'lukkum oozhiyakkaararukkum, estharinimiththam oru periya virunthuseythu, naaduga'lukkuch salakkara'nai u'ndaakki,
raajasthithikkuththakka vegumaanangga'laik koduththaan.
(esthar 2:18)
இரண்டாந்தரம் கன்னிகைகள்
சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின்
அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தான். (எஸ்தர்
2:19)
ira'ndaantharam kannigaiga'l searkkappadumpoathu, morthekaay raajaavin aramanai
vaasalil
udkaarnthirunthaan. (esthar 2:19)
எஸ்தர் மொர்தெகாய்
தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர்
மொர்தெகாய் இடத்திலே வளரும்போது
அவன் சொற்கேட்டு நடந்ததுபோல,
இப்பொழுதும் அவன் சொற்கேட்டு
நடந்துவந்தாள். (எஸ்தர் 2:20)
esthar morthekaay thanakkuk ka’rpiththirunthapadi, than poorvoaththaraththaiyum than kulaththaiyum therivikkaathirunthaa'l; esthar
morthekaay idaththilea
va'larumpoathu avan so’rkeattu nadanthathupoala, ippozhuthum
avan so’rkeattu nadanthuvanthaa'l. (esthar
2:20)
அந்நாட்களில் மொர்தெகாய்
ராஜாவின் அரமனை வாசலில்
உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின்
இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும்
தேரேசும் வர்மம் வைத்து,
ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள். (எஸ்தர்
2:21)
annaadka'lil morthekaay raajaavin aramanai
vaasalil
udkaarnthirukki’rapoathu, vaasalkaakki’ra raajaavin ira'ndu
pirathaaniga'laagiya bikthaanum theareasum varmam
vaiththu, raajaavaagiya agaasvearuvinmeal
kaipoada vagaitheadinaarga'l. (esthar
2:21)
இந்தக் காரியம்
மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய
எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர்
மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள்.
(எஸ்தர் 2:22)
inthak kaariyam
morthekaaykkuth theriyavanthathinaal, avan athai raajaaththiyaagiya estharukku
a’riviththaan; esthar
morthekaayin pearaal
athai raajaavukkuch sonnaa'l. (esthar
2:22)
அந்தக் காரியம்
விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று
காணப்பட்டது; ஆகையால் அவர்கள்
இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே
நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது. (எஸ்தர்
2:23)
anthak kaariyam
visaarikkappadugi’rapoathu, athu meyyen’ru kaa'nappattathu; aagaiyaal avarga'l iruvarum maraththilea
thookkippoadappattaarga'l; ithu raaja samugaththilea naa'laagamappusthagaththilea ezhuthappattirukki’rathu. (esthar
2:23)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!