ரெகொபெயாம்
ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப்
பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே
இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய
நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள். (2நாளாகமம்
12:1)
regobeyaam raajyaththaith thidappaduththith thannaip
balappaduththikko'ndapin, avanum
avanoadea isravealar anaivarum
karththarudaiya niyaayappiramaa'naththai vittuvittaarga'l. (2naa’laagamam 12:1)
அவர்கள்
கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியினால், ராஜாவாகிய
ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில்
எகிப்தின் ராஜாவாகிய சீஷாக்
ஆயிரத்து இருநூறு இரதங்களோடும்,
அறுபதினாயிரம் குதிரைவீரரோடும் எருசலேமுக்கு
விரோதமாய் வந்தான். (2நாளாகமம்
12:2)
avarga'l karththarukku viroathamaayth thuroagampa'n'ninapadiyinaal, raajaavaagiya regobeyaamin ainthaam
varushaththil egipthin raajaavaagiya seeshaak aayiraththu
irunoo’ru
irathangga'loadum, a’rubathinaayiram kuthiraiveeraroadum erusaleamukku viroathamaay
vanthaan. (2naa’laagamam 12:2)
அவனோடேகூட
எகிப்திலிருந்து வந்த லூபியர்,
சூக்கியர், எத்தியோப்பியரான ஜனங்கள்
எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள். (2நாளாகமம்
12:3)
avanoadeakooda egipthilirunthu vantha
loobiyar, sookkiyar, eththiyoappiyaraana janangga'l e'n'nikkaikku
adanggaathavarga'laayirunthaarga'l. (2naa’laagamam 12:3)
அவன் யூதாவுக்கு அடுத்த
அரணான பட்டணங்களைப் பிடித்து,
எருசலேம்மட்டும் வந்தான். (2நாளாகமம்
12:4)
avan yoothaavukku
aduththa ara'naana patta'nangga'laip pidiththu, erusaleammattum vanthaan. (2naa’laagamam 12:4)
அப்பொழுது
செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே
வந்து கூடியிருக்கிற யூதாவின்
பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை
நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால்
நான் உங்களையும் சீஷாக்கின்
கையிலே விழும்படி விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
என்றான். (2நாளாகமம் 12:5)
appozhuthu semaayaa theerkkatharisi regobeyaamidaththukkum, seeshaakkinimiththam erusaleamilea vanthu
koodiyirukki’ra yoothaavin
pirabukka'lidaththukkum vanthu,
avarga'lai noakki:
neengga'l
ennai vittuvitteerga'l, aagaiyaal naan ungga'laiyum seeshaakkin kaiyilea
vizhumpadi vittuvittean en’ru karththar sollugi’raar en’raan. (2naa’laagamam 12:5)
அப்பொழுது
இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும்
தங்களைத் தாழ்த்திக் கர்த்தர்
நீதியுள்ளவர் என்றார்கள். (2நாளாகமம்
12:6)
appozhuthu isravealin
pirabukka'lum raajaavum
thangga'laith thaazhththik
karththar neethiyu'l'lavar en’raarga'l. (2naa’laagamam 12:6)
அவர்கள்
தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர்
கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை
செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள்
தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால்
அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக்
கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன். (2நாளாகமம்
12:7)
avarga'l thangga'laith thaazhththinathaik karththar
ka'ndapoathu, karththarudaiya vaarththai semaayaavukku u'ndaagi, avar sonnathu: avarga'l thangga'laith thaazhththinaarga'l, aagaiyaal avarga'lai azhikkamaattean; en ukkiram seeshaakkaikko'ndu erusaleaminmeal oot’rappadaathapadikku, avarga'lukkuk kogncham sagaayaththaik katta'laiyiduvean. (2naa’laagamam 12:7)
ஆனாலும்
என்னைச் சேவிக்கிறதற்கும், அந்நிய
தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற
வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச்
சேவிக்கிறவர்களாவார்கள் என்றார். (2நாளாகமம்
12:8)
aanaalum ennaich seavikki’ratha’rkum, anniya theasangga'lin raajyangga'laich seavikki’ratha’rkum irukki’ra viththiyaasaththai avarga'l a’riyumpadikku avanaich seavikki’ravarga'laavaarga'l en’raar. (2naa’laagamam 12:8)
அப்படியே
எகிப்தின் ராஜாவாகிய சீஷாக்
எருசலேமுக்கு விரோதமாய் வந்து,
கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய
அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன்
செய்வித்த பொன்பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
(2நாளாகமம் 12:9)
appadiyea egipthin raajaavaagiya seeshaak erusaleamukku viroathamaay
vanthu, karththarudaiya aalayaththin
pokkishangga'laiyum, raajaavudaiya
aramanaip pokkishangga'laiyum, saalomoan seyviththa ponparisaiga'l aagiya sagalaththaiyum eduththukko'ndu poayvittaan. (2naa’laagamam 12:9)
அவைகளுக்குப்
பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம்
வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து,
அவைகளை ராஜாவின் வாசற்படியைக்
காக்கிற சேவகருடைய தலைவரின்
கையில் ஒப்புவித்தான். (2நாளாகமம்
12:10)
avaiga'lukkup bathilaaga raajaavaagiya regobeyaam ve'ngalap parisaiga'laich seyviththu, avaiga'lai raajaavin
vaasa’rpadiyaik kaakki’ra seavagarudaiya thalaivarin
kaiyil oppuviththaan. (2naa’laagamam 12:10)
ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள்
பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர்
வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத்
தங்கள் அறையிலே வைப்பார்கள்.
(2நாளாகமம் 12:11)
raajaa karththarudaiya aalayaththukku'l piraveasikkumpoathu, aramanaich seavagar vanthu,
avaiga'lai eduththukko'ndupoay, thirumbath thangga'l a’raiyilea vaippaarga'l. (2naa’laagamam 12:11)
அவன் தன்னைத் தாழ்த்தினபடியினால், கர்த்தர்
அவனை முழுதும் அழிக்காதபடிக்கு அவருடைய
கோபம் அவனைவிட்டுத் திரும்பிற்று;
யூதாவிலே இன்னும் சில காரியங்கள் சீராயிருந்தது. (2நாளாகமம்
12:12)
avan thannaith
thaazhththinapadiyinaal, karththar avanai
muzhuthum azhikkaathapadikku avarudaiya
koabam
avanaivittuth thirumbit’ru; yoothaavilea
innum sila kaariyangga'l seeraayirunthathu. (2naa’laagamam 12:12)
அப்படியே
ராஜாவாகிய ரெகொபெயாம் எருசலேமிலே
தன்னைத் திடப்படுத்திக்கொண்டு அரசாண்டான்;
ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு
வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய
நாமம் விளங்கும்படி இஸ்ரவேல்
கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய
எருசலேமிலே பதினேழு வருஷம்
ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான
அவனுடைய தாயின்பேர் நாமாள்.
(2நாளாகமம் 12:13)
appadiyea raajaavaagiya regobeyaam erusaleamilea thannaith
thidappaduththikko'ndu arasaa'ndaan; regobeyaam raajaavaagi’rapoathu naa’rpaththoru vayathaayirunthu, karththar
thammudaiya naamam vi'langgumpadi israveal
koaththirangga'lilellaam therinthuko'nda nagaramaagiya erusaleamilea pathineazhu varusham
raajyabaarampa'n'ninaan; ammoan
jaathiyaana avanudaiya thaayinpear
naamaa'l. (2naa’laagamam 12:13)
அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல்
பொல்லாப்பானதைச் செய்தான். (2நாளாகமம்
12:14)
avan karththaraith
theadugi’ratha’rkuth than iruthayaththai nearaakkaamal
pollaappaanathaich seythaan. (2naa’laagamam 12:14)
ரெகொபெயாமின்
ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின்
புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின்
வம்ச அட்டவணையிலும் அல்லவோ
எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம்
நடந்துகொண்டிருந்தது. (2நாளாகமம் 12:15)
regobeyaamin aathiyoadanthamaana nadapadiga'l semaayaavin pusthagaththilum, gnaanathirushdikkaaranaagiya iththoavin vamsa attava'naiyilum allavoa
ezhuthiyirukki’rathu; regobeyaamukkum yerobeyaamukkum sagala naa'lum
yuththam nadanthuko'ndirunthathu. (2naa’laagamam 12:15)
ரெகொபெயாம்
தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின்
நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில்
ராஜாவானான். (2நாளாகமம் 12:16)
regobeyaam than pithaakka'loadea niththiraiyadainthapin thaaveethin
nagaraththil adakkampa'n'nappattaan; avan kumaaranaagiya abiyaa avan sthaanaththil
raajaavaanaan. (2naa’laagamam 12:16)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!