Tuesday, September 06, 2016

2 Iraajaakka'l 3 | 2 இராஜாக்கள் 3 | 2 Kings 3

யூதாவின்  ராஜாவாகிய  யோசபாத்தின்  பதினெட்டாம்  வருஷத்தில்  ஆகாபின்  குமாரனாகிய  யோராம்  சமாரியாவிலே  இஸ்ரவேலின்மேல்  ராஜாவாகிப்  பன்னிரண்டு  வருஷம்  ராஜ்யபாரம்பண்ணி,  (2இராஜாக்கள்  3:1)

yoothaavin  raajaavaagiya  yoasapaaththin  pathinettaam  varushaththil  aagaabin  kumaaranaagiya  yoaraam  samaariyaavilea  isravealinmeal  raajaavaagip  pannira'ndu  varusham  raajyabaarampa'n'ni,  (2iraajaakka’l  3:1)

கர்த்தரின்  பார்வைக்குப்  பொல்லாப்பானதைச்  செய்தான்;  ஆனாலும்  தன்  தகப்பனைப்போலும்  தன்  தாயைப்போலும்  அல்ல;  தன்  தகப்பன்  பண்ணுவித்த  பாகாலின்  சிலையை  அகற்றிவிட்டான்.  (2இராஜாக்கள்  3:2)

karththarin  paarvaikkup  pollaappaanathaich  seythaan;  aanaalum  than  thagappanaippoalum  than  thaayaippoalum  alla;  than  thagappan  pa'n'nuviththa  baagaalin  silaiyai  agat’rivittaan.  (2iraajaakka’l  3:2)

என்றாலும்  இஸ்ரவேலைப்  பாவஞ்செய்யப்பண்ணின  நேபாத்தின்  குமாரனாகிய  யெரொபெயாமின்  பாவங்களை  அவன்  விட்டு  நீங்காமல்  அவைகளிலே  சிக்கிக்கொண்டிருந்தான்.  (2இராஜாக்கள்  3:3)

en’raalum  isravealaip  paavagnseyyappa'n'nina  neabaaththin  kumaaranaagiya  yerobeyaamin  paavangga'lai  avan  vittu  neenggaamal  avaiga'lilea  sikkikko'ndirunthaan.  (2iraajaakka’l  3:3)

மோவாபின்  ராஜாவாகிய  மேசா  ஆடுமாடுகள்  பெருத்தவனாயிருந்து,  இஸ்ரவேலின்  ராஜாவுக்கு  இலட்சம்  ஆட்டுக்குட்டிகளையும்,  இலட்சம்  குறும்பாட்டுக்கடாக்களையும்  செலுத்திவந்தான்.  (2இராஜாக்கள்  3:4)

moavaabin  raajaavaagiya  measaa  aadumaaduga'l  peruththavanaayirunthu,  isravealin  raajaavukku  iladcham  aattukkuttiga'laiyum,  iladcham  ku’rumbaattukkadaakka'laiyum  seluththivanthaan.  (2iraajaakka’l  3:4)

ஆகாப்  இறந்துபோனபின்  மோவாபின்  ராஜா  இஸ்ரவேலின்  ராஜாவுக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணினான்.  (2இராஜாக்கள்  3:5)

aagaab  i’ranthupoanapin  moavaabin  raajaa  isravealin  raajaavukku  viroathamaayk  kalagampa'n'ninaan.  (2iraajaakka’l  3:5)

அக்காலத்திலே  யோராம்  என்னும்  ராஜா  சமாரியாவிலிருந்து  புறப்பட்டு,  இஸ்ரவேலையெல்லாம்  இலக்கம்  பார்த்துப்போய்:  (2இராஜாக்கள்  3:6)

akkaalaththilea  yoaraam  ennum  raajaa  samaariyaavilirunthu  pu’rappattu,  isravealaiyellaam  ilakkam  paarththuppoay:  (2iraajaakka’l  3:6)

மோவாபின்  ராஜா  எனக்கு  விரோதமாய்க்  கலகம்பண்ணினான்;  மோவாபியர்மேல்  யுத்தம்பண்ண,  என்னோடேகூட  வருகிறீரா  என்று  யூதாவின்  ராஜாவாகிய  யோசபாத்தைக்  கேட்டனுப்பினதற்கு;  அவன்  நான்  வருகிறேன்;  நான்தான்  நீர்,  என்னுடைய  ஜனங்கள்  உம்முடைய  ஜனங்கள்,  என்னுடைய  குதிரைகள்  உம்முடைய  குதிரைகள்  என்றான்.  (2இராஜாக்கள்  3:7)

moavaabin  raajaa  enakku  viroathamaayk  kalagampa'n'ninaan;  moavaabiyarmeal  yuththampa'n'na,  ennoadeakooda  varugi’reeraa  en’ru  yoothaavin  raajaavaagiya  yoasapaaththaik  keattanuppinatha’rku;  avan  naan  varugi’rean;  naanthaan  neer,  ennudaiya  janangga'l  ummudaiya  janangga'l,  ennudaiya  kuthiraiga'l  ummudaiya  kuthiraiga'l  en’raan.  (2iraajaakka’l  3:7)

எந்த  வழியாய்ப்  போவோம்  என்று  கேட்டான்;  அதற்கு  அவன்:  ஏதோம்  வனாந்தரவழியாய்  என்றான்.  (2இராஜாக்கள்  3:8)

entha  vazhiyaayp  poavoam  en’ru  keattaan;  atha’rku  avan:  eathoam  vanaantharavazhiyaay  en’raan.  (2iraajaakka’l  3:8)

அப்படியே  இஸ்ரவேலின்  ராஜாவும்  யூதாவின்  ராஜாவும்  ஏதோமின்  ராஜாவும்  சேர்ந்து  போனார்கள்;  ஆனாலும்  அவர்கள்  ஏழுநாள்  சுற்றித்திரிந்தபோது,  அவர்களைப்  பின்செல்லுகிற  இராணுவத்துக்கும்  மிருகஜீவன்களுக்கும்  தண்ணீர்  இல்லாமற்போயிற்று.  (2இராஜாக்கள்  3:9)

appadiyea  isravealin  raajaavum  yoothaavin  raajaavum  eathoamin  raajaavum  searnthu  poanaarga'l;  aanaalum  avarga'l  eazhunaa'l  sut’riththirinthapoathu,  avarga'laip  pinsellugi’ra  iraa'nuvaththukkum  mirugajeevanga'lukkum  tha'n'neer  illaama’rpoayit’ru.  (2iraajaakka’l  3:9)

அப்பொழுது  இஸ்ரவேலின்  ராஜா:  ஐயோ,  இந்த  மூன்று  ராஜாக்களையும்  கர்த்தர்  மோவாபியரின்  கையில்  ஒப்புக்கொடுக்க  வரவழைத்தாரே  என்றான்.  (2இராஜாக்கள்  3:10)

appozhuthu  isravealin  raajaa:  aiyoa,  intha  moon’ru  raajaakka'laiyum  karththar  moavaabiyarin  kaiyil  oppukkodukka  varavazhaiththaarea  en’raan.  (2iraajaakka’l  3:10)

அப்பொழுது  யோசபாத்:  நாம்  கர்த்தரிடத்தில்  விசாரிக்கும்படி  கர்த்தருடைய  தீர்க்கதரிசி  ஒருவரும்  இங்கே  இல்லையா  என்று  கேட்டதற்கு,  எலியாவின்  கைகளுக்குத்  தண்ணீர்  வார்த்த  சாப்பாத்தின்  குமாரனாகிய  எலிசா  இங்கே  இருக்கிறான்  என்று  இஸ்ரவேல்  ராஜாவின்  ஊழியக்காரரில்  ஒருவன்  மறுமொழியாகச்  சொன்னான்.  (2இராஜாக்கள்  3:11)

appozhuthu  yoasapaath:  naam  karththaridaththil  visaarikkumpadi  karththarudaiya  theerkkatharisi  oruvarum  inggea  illaiyaa  en’ru  keattatha’rku,  eliyaavin  kaiga'lukkuth  tha'n'neer  vaarththa  saappaaththin  kumaaranaagiya  elisaa  inggea  irukki’raan  en’ru  israveal  raajaavin  oozhiyakkaararil  oruvan  ma’rumozhiyaagach  sonnaan.  (2iraajaakka’l  3:11)

அப்பொழுது  யோசபாத்  அவனை  நோக்கி:  கர்த்தருடைய  வார்த்தை  அவனிடத்தில்  இருக்கிறது  என்றான்;  இஸ்ரவேலின்  ராஜாவும்  யோசபாத்தும்  ஏதோமின்  ராஜாவும்  அவனிடத்தில்  போனார்கள்.  (2இராஜாக்கள்  3:12)

appozhuthu  yoasapaath  avanai  noakki:  karththarudaiya  vaarththai  avanidaththil  irukki’rathu  en’raan;  isravealin  raajaavum  yoasapaaththum  eathoamin  raajaavum  avanidaththil  poanaarga'l.  (2iraajaakka’l  3:12)

எலிசா  இஸ்ரவேலின்  ராஜாவைப்  பார்த்து:  எனக்கும்  உமக்கும்  என்ன?  நீர்  உம்முடைய  தகப்பனின்  தீர்க்கதரிசிகளிடத்திலும்,  உம்முடைய  தாயாரின்  தீர்க்கதரிசிகளிடத்திலும்  போம்  என்றான்.  அதற்கு  இஸ்ரவேலின்  ராஜா:  அப்படியல்ல,  கர்த்தர்  இந்த  மூன்று  ராஜாக்களையும்  மோவாபியரின்  கையில்  ஒப்புக்கொடுக்கிறதற்கு  வரவழைத்தார்  என்றான்.  (2இராஜாக்கள்  3:13)

elisaa  isravealin  raajaavaip  paarththu:  enakkum  umakkum  enna?  neer  ummudaiya  thagappanin  theerkkatharisiga'lidaththilum,  ummudaiya  thaayaarin  theerkkatharisiga'lidaththilum  poam  en’raan.  atha’rku  isravealin  raajaa:  appadiyalla,  karththar  intha  moon’ru  raajaakka'laiyum  moavaabiyarin  kaiyil  oppukkodukki’ratha’rku  varavazhaiththaar  en’raan.  (2iraajaakka’l  3:13)

அதற்கு  எலிசா:  நான்  யூதாவின்  ராஜாவாகிய  யோசபாத்தின்  முகத்தைப்  பாராதிருந்தால்  நான்  உம்மை  நோக்கவுமாட்டேன்,  உம்மைப்  பார்க்கவுமாட்டேன்  என்று  சேனைகளுடைய  கர்த்தருக்கு  முன்நிற்கிற  நான்  அவருடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்.  (2இராஜாக்கள்  3:14)

atha’rku  elisaa:  naan  yoothaavin  raajaavaagiya  yoasapaaththin  mugaththaip  paaraathirunthaal  naan  ummai  noakkavumaattean,  ummaip  paarkkavumaattean  en’ru  seanaiga'ludaiya  karththarukku  munni’rki’ra  naan  avarudaiya  jeevanaikko'ndu  sollugi’rean.  (2iraajaakka’l  3:14)

இப்போதும்  ஒரு  சுரமண்டல  வாத்தியக்காரனை  என்னிடத்தில்  கொண்டுவாருங்கள்  என்றான்;  சுரமண்டல  வாத்தியக்காரன்  வந்து  வாசித்தபோது  கர்த்தருடைய  கரம்  அவன்மேல்  இறங்கி,  (2இராஜாக்கள்  3:15)

ippoathum  oru  surama'ndala  vaaththiyakkaaranai  ennidaththil  ko'nduvaarungga'l  en’raan;  surama'ndala  vaaththiyakkaaran  vanthu  vaasiththapoathu  karththarudaiya  karam  avanmeal  i’ranggi,  (2iraajaakka’l  3:15)

அவன்:  கர்த்தர்  உரைக்கிறது  என்னவென்றால்,  இந்தப்  பள்ளத்தாக்கிலே  எங்கும்  வாய்க்கால்களை  வெட்டுங்கள்.  (2இராஜாக்கள்  3:16)

avan:  karththar  uraikki’rathu  ennaven’raal,  inthap  pa'l'laththaakkilea  enggum  vaaykkaalga'lai  vettungga'l.  (2iraajaakka’l  3:16)

நீங்கள்  காற்றையும்  காணமாட்டீர்கள்,  மழையையும்  காணமாட்டீர்கள்;  ஆனாலும்  நீங்களும்  உங்கள்  ஆடுமாடுகளும்  உங்கள்  மிருகஜீவன்களும்  குடிக்கும்படிக்கு,  இந்தப்  பள்ளத்தாக்கு  தண்ணீரால்  நிரப்பப்படும்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (2இராஜாக்கள்  3:17)

neengga'l  kaat’raiyum  kaa'namaatteerga'l,  mazhaiyaiyum  kaa'namaatteerga'l;  aanaalum  neengga'lum  ungga'l  aadumaaduga'lum  ungga'l  mirugajeevanga'lum  kudikkumpadikku,  inthap  pa'l'laththaakku  tha'n'neeraal  nirappappadum  en’ru  karththar  sollugi’raar.  (2iraajaakka’l  3:17)

இது  கர்த்தரின்  பார்வைக்கு  அற்பகாரியம்;  மோவாபியரையும்  உங்கள்  கையிலே  ஒப்புக்கொடுப்பார்.  (2இராஜாக்கள்  3:18)

ithu  karththarin  paarvaikku  a’rpakaariyam;  moavaabiyaraiyum  ungga'l  kaiyilea  oppukkoduppaar.  (2iraajaakka’l  3:18)

நீங்கள்  சகல  கோட்டைகளையும்  சகல  சிறந்த  பட்டணங்களையும்  தகர்த்து,  நல்ல  மரங்களையெல்லாம்  வெட்டி,  நீரூற்றுகளையெல்லாம்  தூர்த்து,  நல்ல  நிலத்தையெல்லாம்  கல்மேடுகளாக்கிக்  கெடுப்பீர்கள்  என்றான்.  (2இராஜாக்கள்  3:19)

neengga'l  sagala  koattaiga'laiyum  sagala  si’rantha  patta'nangga'laiyum  thagarththu,  nalla  marangga'laiyellaam  vetti,  neeroot’ruga'laiyellaam  thoorththu,  nalla  nilaththaiyellaam  kalmeaduga'laakkik  keduppeerga'l  en’raan.  (2iraajaakka’l  3:19)

மறுநாள்  காலமே  பலிசெலுத்தப்படும்  நேரத்தில்,  இதோ,  தண்ணீர்  ஏதோம்  தேசவழியாய்  வந்ததினால்  தேசம்  தண்ணீரால்  நிரம்பிற்று.  (2இராஜாக்கள்  3:20)

ma’runaa'l  kaalamea  baliseluththappadum  nearaththil,  ithoa,  tha'n'neer  eathoam  theasavazhiyaay  vanthathinaal  theasam  tha'n'neeraal  nirambit’ru.  (2iraajaakka’l  3:20)

தங்களோடு  யுத்தம்பண்ண  ராஜாக்கள்  வருகிறதை  மோவாபியரெல்லாரும்  கேட்டபோது,  அவர்கள்  ஆயுதம்  தரிக்கத்தக்க  வயதுள்ளவர்களையும்,  அதற்கு  மேல்தரமானவர்கள்  எல்லாரையும்  கூட்டி  அழைத்துக்கொண்டுவந்து  எல்லையிலே  நின்றார்கள்.  (2இராஜாக்கள்  3:21)

thangga'loadu  yuththampa'n'na  raajaakka'l  varugi’rathai  moavaabiyarellaarum  keattapoathu,  avarga'l  aayutham  tharikkaththakka  vayathu'l'lavarga'laiyum,  atha’rku  mealtharamaanavarga'l  ellaaraiyum  kootti  azhaiththukko'nduvanthu  ellaiyilea  nin’raarga'l.  (2iraajaakka’l  3:21)

மோவாபியர்  அதிகாலமே  எழுந்தபோது  சூரியன்  தண்ணீரின்மேல்  பிரகாசித்ததினால்  அந்தத்  தண்ணீர்  அவர்களுக்கு  இரத்தம்போல்  சிவப்பாய்க்  காணப்பட்டது.  (2இராஜாக்கள்  3:22)

moavaabiyar  athikaalamea  ezhunthapoathu  sooriyan  tha'n'neerinmeal  piragaasiththathinaal  anthath  tha'n'neer  avarga'lukku  iraththampoal  sivappaayk  kaa'nappattathu.  (2iraajaakka’l  3:22)

அதினால்  அவர்கள்:  இது  இரத்தம்,  அந்த  ராஜாக்கள்  தங்களைத்  தாங்களே  ஒருவரை  ஒருவர்  வெட்டிக்கொண்டு  மாண்டுபோனார்கள்;  ஆதலால்  மோவாபியரே,  கொள்ளைக்கு  வாருங்கள்  என்று  சொன்னார்கள்.  (2இராஜாக்கள்  3:23)

athinaal  avarga'l:  ithu  iraththam,  antha  raajaakka'l  thangga'laith  thaangga'lea  oruvarai  oruvar  vettikko'ndu  maa'ndupoanaarga'l;  aathalaal  moavaabiyarea,  ko'l'laikku  vaarungga'l  en’ru  sonnaarga'l.  (2iraajaakka’l  3:23)

அவர்கள்  இஸ்ரவேலின்  பாளயத்திற்கு  வந்தபோதோவெனில்,  இஸ்ரவேலர்  எழும்பி,  மோவாபியரைத்  தங்களுக்கு  முன்பாக  ஓடிப்போகத்தக்கதாய்  முறிய  அடித்து,  அவர்கள்  தேசத்திற்குள்  புகுந்து,  அங்கேயும்  மோவாபியரை  முறிய  அடித்து,  (2இராஜாக்கள்  3:24)

avarga'l  isravealin  paa'layaththi’rku  vanthapoathoavenil,  isravealar  ezhumbi,  moavaabiyaraith  thangga'lukku  munbaaga  oadippoagaththakkathaay  mu’riya  adiththu,  avarga'l  theasaththi’rku'l  pugunthu,  anggeayum  moavaabiyarai  mu’riya  adiththu,  (2iraajaakka’l  3:24)

பட்டணங்களை  இடித்து,  சகல  நல்ல  நிலத்திலும்  கல்லெறிந்து  நிரப்பி,  நீரூற்றுகளையெல்லாம்  தூர்த்து,  நல்ல  மரங்களையெல்லாம்  வெட்டிப்போட்டார்கள்;  கிராரேசேத்திலேமாத்திரம்  அதின்  மதில்கள்  இன்னும்  இடிபடாதிருக்கிறபோது;  கவண்காரர்  அதைச்  சுற்றிக்கொண்டு  அதையும்  சேதமாக்கினார்கள்.  (2இராஜாக்கள்  3:25)

patta'nangga'lai  idiththu,  sagala  nalla  nilaththilum  kalle’rinthu  nirappi,  neeroot’ruga'laiyellaam  thoorththu,  nalla  marangga'laiyellaam  vettippoattaarga'l;  kiraareaseaththileamaaththiram  athin  mathilga'l  innum  idipadaathirukki’rapoathu;  kava'nkaarar  athaich  sut’rikko'ndu  athaiyum  seathamaakkinaarga'l.  (2iraajaakka’l  3:25)

யுத்தம்  மும்முரமாகிறதென்று  மோவாபியரின்  ராஜா  கண்டபோது,  அவன்  ஏதோமின்  ராஜாவின்மேல்  வலுமையாய்  விழுகிறதற்குப்  பட்டயம்  உருவுகிற  எழுநூறுபேரைக்  கூட்டிக்கொண்டுபோனான்;  ஆனாலும்  அவர்களாலே  கூடாமற்போயிற்று.  (2இராஜாக்கள்  3:26)

yuththam  mummuramaagi’rathen’ru  moavaabiyarin  raajaa  ka'ndapoathu,  avan  eathoamin  raajaavinmeal  valumaiyaay  vizhugi’ratha’rkup  pattayam  uruvugi’ra  ezhunoo’rupearaik  koottikko'ndupoanaan;  aanaalum  avarga'laalea  koodaama’rpoayit’ru.  (2iraajaakka’l  3:26)

அப்பொழுது  அவன்  தன்  ஸ்தானத்தில்  ராஜாவாகப்போகிற  தன்  சேஷ்டபுத்திரனைப்  பிடித்து,  அலங்கத்தின்மேல்  அவனைச்  சர்வாங்க  தகனமாகப்  பலியிட்டான்;  அப்பொழுது  இஸ்ரவேலர்மேல்  கடுங்கோபம்மூண்டதினால்,  அவர்கள்  அவனைவிட்டுப்  புறப்பட்டு,  தங்கள்  தேசத்திற்குத்  திரும்பிவிட்டார்கள்.  (2இராஜாக்கள்  3:27)

appozhuthu  avan  than  sthaanaththil  raajaavaagappoagi’ra  than  seashdapuththiranaip  pidiththu,  alanggaththinmeal  avanaich  sarvaangga  thaganamaagap  baliyittaan;  appozhuthu  isravealarmeal  kadungkoabammoo'ndathinaal,  avarga'l  avanaivittup  pu’rappattu,  thangga'l  theasaththi’rkuth  thirumbivittaarga'l.  (2iraajaakka’l  3:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!