அப்பொழுது
தாவீது: தேவனாகிய கர்த்தருடைய
ஆலயம் இருக்கும் ஸ்தலம்
இதுவே; இஸ்ரவேல் பலியிடும்
சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும்
ஸ்தலமும் இதுவே என்றான்.
(1நாளாகமம் 22:1)
appozhuthu thaaveethu:
theavanaagiya karththarudaiya aalayam
irukkum sthalam ithuvea;
israveal baliyidum sarvaangga thaganabalipeedam irukkum
sthalamum ithuvea en’raan. (1naa’laagamam 22:1)
பின்பு
தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நியஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய
ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை
வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை
ஏற்படுத்தினான். (1நாளாகமம் 22:2)
pinbu thaaveethu israveal
theasaththilirukki’ra anniyajaathiyaaraik koodivarachseythu, theavanudaiya
aalayaththaik kattugi’ratha’rkaana kalluga'lai vettip pa'nippaduththum kalthachcharai ea’rpaduththinaan. (1naa’laagamam 22:2)
தாவீது
வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய
ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான
இரும்பையும், நிறுத்து முடியாத
ஏராளமான வெண்கலத்தையும், (1நாளாகமம்
22:3)
thaaveethu vaasalga'lin kathavuga'lukku vea'ndiya aa'niga'lukkum keelga'lukkum miguthiyaana irumbaiyum, ni’ruththu mudiyaatha
earaa'lamaana ve'ngalaththaiyum, (1naa’laagamam 22:3)
எண்ணிறந்த
கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும்
தீரியரும் தாவீதுக்குத் திரளான
கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். (1நாளாகமம்
22:4)
e'n'ni’rantha keathurumarangga'laiyum sambaathiththaan; seethoaniyarum theeriyarum
thaaveethukkuth thira'laana keathurumarangga'laik ko'nduvanthaarga'l. (1naa’laagamam 22:4)
தாவீது:
என் குமாரனாகிய சாலொமோன்
வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும்
ஆலயம் சகல தேசங்களிலும்
கீர்த்தியும் மகிமையும் உடையதாய்
விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால்
அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே
சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி,
தாவீது தன் மரணத்திற்கு
முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான். (1நாளாகமம்
22:5)
thaaveethu: en kumaaranaagiya saalomoan vaalibanum i'laignanumaayirukki’raan; karththarukkuk kattappadum aalayam sagala
theasangga'lilum keerththiyum
magimaiyum udaiyathaay
vi'langgumpadi mahaa periyathaayirukkavea'ndum; aagaiyaal atha’rkaaga vea'ndiyavaiga'lai ippozhuthea seagarampa'n'navea'ndum en’ru solli,
thaaveethu than mara'naththi’rku munnea
thira'laaych
savathariththuvaiththaan. (1naa’laagamam 22:5)
அவன் தன் குமாரனாகிய
சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின்
தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக்
கட்டுகிறதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து, (1நாளாகமம்
22:6)
avan than kumaaranaagiya saalomoanai azhaiththu,
isravealin theavanaagiya karththarukku aalayaththaik
kattugi’ratha’rkaaga avanukkuk katta'laikoduththu, (1naa’laagamam 22:6)
சாலொமோனை
நோக்கி: என் குமாரனே,
நான் என் தேவனாகிய
கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில்
நினைத்திருந்தேன். (1நாளாகமம் 22:7)
saalomoanai noakki:
en kumaaranea, naan en theavanaagiya karththarin
naamaththi’rku oru aalayaththaik katta en iruthayaththil ninaiththirunthean. (1naa’laagamam 22:7)
ஆனாலும்
கர்த்தருடைய வார்த்தை எனக்கு
உண்டாகி: நீ திரளான
இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப் பண்ணினாய்;
நீ என் நாமத்திற்கு
ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு
முன்பாக மிகுதியான இரத்தத்தைத்
தரையிலே சிந்தப்பண்ணினாய். (1நாளாகமம்
22:8)
aanaalum karththarudaiya vaarththai
enakku u'ndaagi: nee thira'laana
iraththaththaich
sinthi, periya yuththangga'laip pa'n'ninaay;
nee en naamaththi’rku aalayaththaik
kattavea'ndaam; enakku
munbaaga
miguthiyaana iraththaththaith tharaiyilea sinthappa'n'ninaay. (1naa’laagamam 22:8)
இதோ, உனக்குப் பிறக்கப்போகிற
குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி
அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்;
ஆகையால் அவன் பேர் சாலொமோன் என்னப்படும்;
அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவேன்.
(1நாளாகமம் 22:9)
ithoa, unakkup
pi’rakkappoagi’ra kumaaran
amaithiyu'l'la purushanaayiruppaan; sut’rilumirukkum avan saththurukka'laiyellaam vilakki
avanai amarnthirukkach seyvean; aagaiyaal avan pear saalomoan ennappadum;
avan naadka'lil isravealinmeal samaathaanaththaiyum amarikkaiyaiyum aru'luvean.
(1naa’laagamam 22:9)
அவன் என் நாமத்திற்கு
ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; இஸ்ரவேலை
ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின்
சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
(1நாளாகமம் 22:10)
avan en naamaththi’rku aalayaththaik kattuvaan; avan enakkuk kumaaranaayiruppaan, naan avanukkup pithaavaayiruppean; isravealai
aa'lum avanudaiya raajaanggaththin singgaasanaththai en’ren’raikkum nilaippaduththuvean en’raar. (1naa’laagamam 22:10)
இப்போதும்
என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர்
உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின்
ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக.
(1நாளாகமம் 22:11)
ippoathum en kumaaranea, nee baakkiyavaanaayirunthu, karththar
unnaikku’riththuch sonnapadiyea un theavanaagiya karththarin aalayaththaik
kattumpadi, avar unnudaneakooda iruppaaraaga. (1naa’laagamam 22:11)
கர்த்தர்
உனக்கு ஞானத்தையும் உணர்வையும்
அருளிச்செய்து, உன் தேவனாகிய
கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு,
இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக்
கட்டளையிடுவாராக. (1நாளாகமம் 22:12)
karththar unakku
gnaanaththaiyum u'narvaiyum aru'lichseythu, un theavanaagiya karththarin niyaayappiramaa'naththaik kaikko'ndu,
isravealai aa'lumpadi unakkuk
katta'laiyiduvaaraaga. (1naa’laagamam 22:12)
கர்த்தர்
இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த
நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு,
பயப்படாமலும் கலங்காமலும் இரு. (1நாளாகமம் 22:13)
karththar isravealukkaaga moaseakkuk ka’rpiththa niyamangga'laiyum niyaayangga'laiyum seyya nee kavanamaayirunthaal baakkiyavaanaayiruppaay; nee balangko'ndu thairiyamaayiru, bayappadaamalum kalanggaamalum iru. (1naa’laagamam 22:13)
இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய
ஆலயத்திற்காக ஒரு லட்சம்
தாலந்து பொன்னையும், பத்துலட்சம்
தாலந்து வெள்ளியையும், நிறுத்து
முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும்
சவதரித்தும், மரங்களையும் கற்களையும்
சவதரித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு
அதிகமாய்ச் சவதரிப்பாய். (1நாளாகமம்
22:14)
ithoa, naan en si’rumaiyilea karththarudaiya aalayaththi’rkaaga oru ladcham thaalanthu
ponnaiyum, paththuladcham thaalanthu ve'l'liyaiyum, ni’ruththu mudiyaatha
thira'laana ve'ngalaththaiyum irumbaiyum savathariththum, marangga'laiyum ka’rka'laiyum savathariththum vaiththean;
nee innum avaiga'lukku athigamaaych savatharippaay. (1naa’laagamam 22:14)
வேலைசெய்யத்தக்க திரளான
சிற்பாசாரிகளும், தச்சரும் கல்தச்சரும்,
எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள். (1நாளாகமம்
22:15)
vealaiseyyaththakka thira'laana si’rpaasaariga'lum, thachcharum kalthachcharum, entha vealaiyilum nibu'naraanavarga'lum unnoadirukki’raarga'l. (1naa’laagamam 22:15)
பொன்னுக்கும்,
வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும்
கணக்கில்லை; நீ எழும்பிக்
காரியத்தை நடப்பி; கர்த்தர்
உன்னோடே இருப்பாராக என்றான்.
(1நாளாகமம் 22:16)
ponnukkum, ve'l'likkum,
ve'ngalaththukkum, irumbukkum ka'nakkillai;
nee ezhumbik kaariyaththai
nadappi; karththar unnoadea
iruppaaraaga en’raan. (1naa’laagamam 22:16)
தன் குமாரனாகிய சாலொமோனுக்கு
உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின்
பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச்
சொன்னது: (1நாளாகமம் 22:17)
than kumaaranaagiya saalomoanukku uthaviseyya, thaaveethu
isravealin pirabukka'l anaivarukkum ka’rpiththuch sonnathu: (1naa’laagamam 22:17)
உங்கள்
தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து நான்கு
திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார்
அல்லவா? தேசத்தின் குடிகளை
என் கையில் ஒப்புக்கொடுத்தார்; கர்த்தருக்கு
முன்பாகவும், அவருடைய ஜனத்திற்கு
முன்பாகவும் தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது. (1நாளாகமம்
22:18)
ungga'l theavanaagiya karththar ungga'loadirunthu naangu thisaiyilum ungga'lukku i'laippaa’ruthalaith thanthaar
allavaa? theasaththin kudiga'lai en kaiyil
oppukkoduththaar; karththarukku munbaagavum, avarudaiya
janaththi’rku munbaagavum theasam keezhppattirukki’rathu. (1naa’laagamam 22:18)
இப்போதும்
நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள்
ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய
கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி,
கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும்,
தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய
நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள்
எழும்பி, தேவனாகிய கர்த்தரின்
பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள்
என்றான். (1நாளாகமம் 22:19)
ippoathum neengga'l ungga'l iruthayaththaiyum, ungga'l aaththumaththaiyum, ungga'l theavanaagiya karththaraith
theadugi’ratha’rku nearaakki,
karththarudaiya udanpadikkaip pettiyaiyum, theavanudaiya
parisuththap pa'nimuttuga'laiyum, karththarudaiya naamaththi’rkuk kattappadum antha aalayaththi’rku'l ko'ndupoagumpadikku, neengga'l ezhumbi, theavanaagiya karththarin parisuththa sthalaththaik
kattungga'l en’raan. (1naa’laagamam 22:19)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!