தீருவின்
ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு
ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுருமரங்களையும், தச்சரையும்,
கல்தச்சரையும் அனுப்பினான். (1நாளாகமம்
14:1)
theeruvin raajaavaagiya eeraam
thaaveethinidaththil sthaanaabathiga'laiyum, avanukku
oru veettaik kattugi’ratha’rkuk keathurumarangga'laiyum, thachcharaiyum, kalthachcharaiyum anuppinaan. (1naa’laagamam 14:1)
கர்த்தர்
தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத்
திடப்படுத்தி, இஸ்ரவேல் என்னும்
தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய
ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார்
என்று தாவீது அறிந்துகொண்டான். (1நாளாகமம்
14:2)
karththar thannai
isravealinmeal raajaavaagath thidappaduththi, israveal
ennum thammudaiya janaththinimiththam thannudaiya
raajyaththai migavum uyarththinaar en’ru thaaveethu
a’rinthuko'ndaan. (1naa’laagamam 14:2)
எருசலேமிலே
தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி,
பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
(1நாளாகமம் 14:3)
erusaleamilea thaaveethu pinnum
aneaga
sthireega'lai vivaagampa'n'ni, pinnum
kumaararaiyum kumaaraththiga'laiyum pet’raan. (1naa’laagamam 14:3)
எருசலேமிலே
அவனுக்குப் பிறந்த குமாரரின்
நாமங்களாவன: சம்முவா, சோபாப்,
நாத்தான், சாலொமோன், (1நாளாகமம்
14:4)
erusaleamilea avanukkup pi’rantha kumaararin
naamangga'laavana: sammuvaa, soabaab, naaththaan, saalomoan, (1naa’laagamam 14:4)
இப்கார்,
எலிசூவா, எல்பெலேத், (1நாளாகமம்
14:5)
ibkaar, elisoovaa, elpeleath,
(1naa’laagamam 14:5)
நோகா, நெப்பேக், யப்பியா,
(1நாளாகமம் 14:6)
noagaa, neppeak, yappiyaa,
(1naa’laagamam 14:6)
எலிஷாமா,
பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.
(1நாளாகமம் 14:7)
elishaamaa, beliyaathaa, elippeleath
enbavaiga'l. (1naa’laagamam 14:7)
தாவீது
சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக
அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்
எல்லாரும் தாவீதைத் தேடும்படி
வந்தார்கள்; அதைத் தாவீது
கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப்
புறப்பட்டான். (1நாளாகமம் 14:8)
thaaveethu samastha isravealinmealum raajaavaaga abisheagampa'n'nappattathaip pelisthar
kea'lvippattapoathu, pelisthar
ellaarum thaaveethaith theadumpadi
vanthaarga'l; athaith
thaaveethu keattapoathu avarga'lukku viroathamaagap pu’rappattaan. (1naa’laagamam 14:8)
பெலிஸ்தர்
வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். (1நாளாகமம்
14:9)
pelisthar vanthu
reppaayeem pa'l'laththaakkilea paraviyirunthaarga'l. (1naa’laagamam 14:9)
பெலிஸ்தருக்கு
விரோதமாகப் போகலாமா, அவர்களை
என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக்
கேட்டபோது, கர்த்தர்: போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
(1நாளாகமம் 14:10)
pelistharukku viroathamaagap poagalaamaa, avarga'lai en kaiyil oppukkoduppeeraa en’ru thaaveethu
theavanaik keattapoathu, karththar: poa, avarga'lai un kaiyil
oppukkoduppean en’raar. (1naa’laagamam 14:10)
அவர்கள்
பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது
அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள்
உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார் என்றான்;
அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும்
பேரிட்டார்கள். (1நாளாகமம் 14:11)
avarga'l baagaalpiraaseemukku vanthapoathu,
thaaveethu anggea avarga'lai mu’riya adiththu: tha'n'neerga'l udainthoadugi’rathupoala, theavan
en kaiyinaal en saththurukka'lai udainthoadappa'n'ninaar en’raan; athinimiththam antha sthalaththi’rkup baagaalpiraaseem ennum pearittaarga'l. (1naa’laagamam 14:11)
அங்கே அவர்கள் தங்கள்
தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது
கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே
சுட்டெரிக்கப்பட்டன. (1நாளாகமம் 14:12)
anggea avarga'l thangga'l theyvangga'laivittu oadippoanaarga'l; thaaveethu
ka’rpiththapadi avaiga'l akkiniyaalea sutterikkappattana. (1naa’laagamam 14:12)
பெலிஸ்தர்
மறுபடியும் வந்து அந்தப்
பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். (1நாளாகமம்
14:13)
pelisthar ma’rupadiyum vanthu
anthap pa'l'laththaakkilea i’rangginaarga'l. (1naa’laagamam 14:13)
அப்பொழுது
தாவீது திரும்பத் தேவனிடத்தில்
விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே
போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச்
சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு
எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
(1நாளாகமம் 14:14)
appozhuthu thaaveethu
thirumbath theavanidaththil visaariththatha’rku, theavan nee avarga'lukkup pinnaalea poagaamal, avarga'lukkup pakkamaaych sut’ri, musukkattaich sediga'lukku ethireayirunthu, avarga'lmeal paaynthu,
(1naa’laagamam 14:14)
முசுக்கட்டைச்
செடிகளின் நுனிகளிலே செல்லுகிற
இரைச்சலை நீ கேட்கும்போது,
யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின்
பாளயத்தை முறிய அடிக்க,
தேவன் உனக்கு முன்னே
புறப்பட்டிருப்பார் என்றார். (1நாளாகமம்
14:15)
musukkattaich sediga'lin nuniga'lilea sellugi’ra iraichchalai nee keadkumpoathu, yuththaththi’rkup pu’rappadu; pelistharin
paa'layaththai mu’riya adikka, theavan
unakku munnea pu’rappattiruppaar en’raar. (1naa’laagamam 14:15)
தேவன் தனக்குக் கற்பித்தபடியே
தாவீது செய்தபோது, பெலிஸ்தரின்
இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக்
காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.
(1நாளாகமம் 14:16)
theavan thanakkuk
ka’rpiththapadiyea thaaveethu seythapoathu, pelistharin
iraa'nuvaththaik kibiyoan thuvakkik kaasearmattum mu’riya adiththaarga'l. (1naa’laagamam 14:16)
அப்படியே
தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி,
அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக்
கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார். (1நாளாகமம்
14:17)
appadiyea thaaveethin
keerththi
sagala theasangga'lilum pirasiththamaagi, avanukkup bayappadugi’ra bayaththaik karththar sagala jaathiga'linmealum varappa'n'ninaar. (1naa’laagamam 14:17)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!