பெலிஸ்தர்
இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்;
இஸ்ரவேல் பெலிஸ்தருக்கு முன்பாக
முறிந்தோடி, கில்போவா மலையிலே
வெட்டுண்டு விழுந்தார்கள். (1நாளாகமம்
10:1)
pelisthar isravealaroadea
yuththampa'n'ninaarga'l;
israveal pelistharukku munbaaga mu’rinthoadi,
kilboavaa malaiyilea
vettu'ndu vizhunthaarga'l. (1naa’laagamam 10:1)
பெலிஸ்தர் சவுலையும்
அவன் குமாரரையும் நெருங்கித்
தொடர்ந்து, சவுலின் குமாரராகிய
யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும் வெட்டிப்போட்டார்கள். (1நாளாகமம்
10:2)
pelisthar savulaiyum
avan kumaararaiyum nerunggith thodarnthu, savulin kumaararaagiya
yoanaththaanaiyum abinathaabaiyum malkisoovaavaiyum
vettippoattaarga'l. (1naa’laagamam 10:2)
சவுலுக்கு விரோதமாய்
யுத்தம் பலத்தது; வில்வீரர்
அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது
சவுல் வில்வீரருக்கு மிகவும்
பயப்பட்டு, (1நாளாகமம் 10:3)
savulukku viroathamaay yuththam
balaththathu;
vilveerar avanaikka'ndu nerungginaarga'l;
appozhuthu savul
vilveerarukku migavum
bayappattu,
(1naa’laagamam 10:3)
தன் ஆயுததாரியை
நோக்கி: அந்த விருத்தசேதனம்
இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை
உருவி, என்னைக் குத்திப்போடு
என்றான்; அவனுடைய ஆயுததாரி
மிகவும் பயப்பட்டதினால் அப்படிச்
செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது
சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.
(1நாளாகமம் 10:4)
than aayuthathaariyai
noakki: antha viruththaseathanam illaathavarga'l
vanthu ennai avamaanappaduththaathapadikku,
nee un pattayaththai uruvi, ennaik
kuththippoadu en’raan;
avanudaiya aayuthathaari migavum bayappattathinaal appadich seyyamaattean en’raan.
appozhuthu savul
pattayaththai
nattu athinmeal
vizhunthaan. (1naa’laagamam 10:4)
சவுல் செத்துப்போனதை
அவன் ஆயுததாரி கண்டபோது,
அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து
செத்துப்போனான். (1நாளாகமம் 10:5)
savul seththuppoanathai
avan aayuthathaari ka'ndapoathu,
avanum pattayaththinmeal
vizhunthu seththuppoanaan.
(1naa’laagamam 10:5)
அப்படியே சவுலும்,
அவன் மூன்றுகுமாரரும், அவன் வீட்டு மனுஷர்
அனைவரும் கூடச் செத்துப்போனார்கள். (1நாளாகமம்
10:6)
appadiyea savulum,
avan moon’rukumaararum,
avan veettu
manushar anaivarum koodach seththuppoanaarga'l. (1naa’laagamam 10:6)
ஜனங்கள் முறிந்தோடினதையும், சவுலும்
அவன் குமாரரும் செத்துப்போனதையும், பள்ளத்தாக்கிலுள்ள இஸ்ரவேலர்
எல்லாரும் கண்டபோது தங்கள்
பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது
பெலிஸ்தர் வந்து, அவைகளில்
குடியிருந்தார்கள். (1நாளாகமம் 10:7)
janangga'l
mu’rinthoadinathaiyum,
savulum avan
kumaararum seththuppoanathaiyum,
pa'l'laththaakkilu'l'la isravealar
ellaarum ka'ndapoathu thangga'l patta'nangga'lai vittu
oadippoanaarga'l;
appozhuthu pelisthar vanthu,
avaiga'lil kudiyirunthaarga'l. (1naa’laagamam 10:7)
வெட்டுண்டவர்களின் வஸ்திரங்களை
உரிந்துகொள்ளப் பெலிஸ்தர் மறுநாளில்
வந்தபோது, அவர்கள் சவுலையும்
அவன் குமாரரையும் கில்போவா
மலையிலே விழுந்துகிடக்கக் கண்டு,
(1நாளாகமம் 10:8)
vettu'ndavarga'lin vasthirangga'lai
urinthuko'l'lap pelisthar ma’runaa'lil vanthapoathu,
avarga'l savulaiyum avan
kumaararaiyum kilboavaa
malaiyilea vizhunthukidakkak
ka'ndu, (1naa’laagamam 10:8)
அவன் வஸ்திரங்களை
உரிந்து, அவன் தலையையும்
அவன் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்கள்
விக்கிரகங்களுக்கும் ஜனங்களுக்கும் அதைப் பிரசித்தப்படுத்தும்படி பெலிஸ்தருடைய
தேசத்திலே சுற்றிலும் செய்தி
அனுப்பி, (1நாளாகமம் 10:9)
avan vasthirangga'lai
urinthu, avan thalaiyaiyum
avan aayuthangga'laiyum
eduththukko'ndu, thangga'l
vikkiragangga'lukkum janangga'lukkum
athaip pirasiththappaduththumpadi
pelistharudaiya theasaththilea
sut’rilum seythi anuppi, (1naa’laagamam
10:9)
அவன் ஆயுதங்களைத்
தங்கள் தேவர்களின் கோவிலிலே
வைத்து, அவன் தலையைத்
தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள். (1நாளாகமம்
10:10)
avan aayuthangga'laith
thangga'l theavarga'lin koavililea vaiththu,
avan thalaiyaith thaagoan koavililea thookkivaiththaarga'l. (1naa’laagamam 10:10)
பெலிஸ்தர் சவுலுக்குச்
செய்த எல்லாவற்றையுங் கீலேயாத்தேசத்து யாபேஸ்
பட்டணத்தார் யாவரும் கேட்டபோது,
(1நாளாகமம் 10:11)
pelisthar savulukkuch seytha
ellaavat’raiyung
keeleayaaththeasaththu
yaabeas patta'naththaar yaavarum
keattapoathu,
(1naa’laagamam 10:11)
பராக்கிரமசாலிகள் எல்லாரும்
எழுந்துபோய், சவுலின் உடலையும்
அவன் குமாரரின் உடல்களையும்
எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து,
அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலிமரத்தின்கீழ் அடக்கம்பண்ணி,
ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள். (1நாளாகமம்
10:12)
baraakkiramasaaliga'l ellaarum ezhunthupoay,
savulin udalaiyum
avan kumaararin udalga'laiyum eduththu, yaabeasukkuk ko'nduvanthu, avarga'l elumbuga'lai
yaabeasilirukki’ra oru karvaalimaraththinkeezh
adakkampa'n'ni, eazhunaa'l ubavaasampa'n'ninaarga'l. (1naa’laagamam 10:12)
அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக்
கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல்
அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான். (1நாளாகமம்
10:13)
appadiyea savul
karththarudaiya vaarththaiyaik kaikko'l'laamal,
karththarukkuch
seytha than
thuroagaththinimiththamum,
avan karththaraith theadaamal
agnchanam paarkki’ravarga'laik
keadkumpadikkuth theadinathinimiththamum
seththuppoanaan.
(1naa’laagamam 10:13)
அதற்காக அவர் அவனைக் கொன்று,
ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய
தாவீது வசமாகத் திருப்பினார்.
(1நாளாகமம் 10:14)
atha’rkaaga avar avanaik
kon’ru, raajyabaaraththai eesaayin kumaaranaagiya
thaaveethu vasamaagath thiruppinaar. (1naa’laagamam
10:14)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!