உன் தேவனாகிய
கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக்
கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து,
அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம்பண்ணும்போது, (உபாகமம்
26:1)
un theavanaagiya karththar
unakkuch suthantharamaagak kodukkum
theasaththil nee poaych searnthu, athaik
kattikko'ndu, athil vaasampa'n'numpoathu,
(ubaagamam 26:1)
உன் தேவனாகிய
கர்த்தர் உனக்குக் கொடுக்கும்
உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின்
கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து,
உன் தேவனாகிய கர்த்தர்
தமது நாமம் விளங்கும்படி
தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய், (உபாகமம் 26:2)
un theavanaagiya karththar
unakkuk kodukkum un theasaththil nee payiridum
nilaththin kaniga'lilellaam munthina palanai
eduththu, oru koodaiyilea
vaiththu, un theavanaagiya karththar
thamathu naamam vi'langgumpadi therinthuko'ndirukkum sthaanaththi’rkup poay, (ubaagamam 26:2)
அந்நாட்களில் இருக்கும்
ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர்
எங்களுக்குக் கொடுக்க நம்முடைய
பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில்
வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய
தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில்
அறிக்கையிடுகிறேன் என்பாயாக. (உபாகமம்
26:3)
annaadka'lil irukkum
aasaariyanidaththil sen’ru, avanai noakki:
karththar engga'lukkuk kodukka nammudaiya
pithaakka'lukku aa'naiyitta theasaththil vanthu
searnthean en’ru in’ru ummudaiya
theavanaagiya karththarudaiya sannithiyil a’rikkaiyidugi’rean enbaayaaga. (ubaagamam
26:3)
அப்பொழுது ஆசாரியன்
அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி,
அதை உன் தேவனாகிய
கர்த்தரின் பலிபீடத்திற்கு முன்பாக
வைக்கக்கடவன். (உபாகமம் 26:4)
appozhuthu aasaariyan anthak
koodaiyai un kaiyilirunthu
vaanggi,
athai un theavanaagiya karththarin
balipeedaththi’rku munbaaga vaikkakkadavan. (ubaagamam
26:4)
அப்பொழுது நீ உன் தேவனாகிய
கர்த்தருடைய சந்நிதியில் நின்று
வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
என் தகப்பன் அழிவுக்கு
நேரான சீரியா தேசத்தானாயிருந்தான்; அவன் கொஞ்சம் ஜனங்களோடே
எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச்
சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான
ஜாதியானான். (உபாகமம் 26:5)
appozhuthu nee un theavanaagiya karththarudaiya sannithiyil nin’ru vasaniththuch sollavea'ndiyathu ennaven’raal: en thagappan azhivukku nearaana seeriyaa theasaththaanaayirunthaan; avan kogncham janangga'loadea egipthukkuppoay,
avvidaththil paratheasiyaaych sagnchariththu, anggea periya balaththa thiradchiyaana jaathiyaanaan. (ubaagamam
26:5)
எகிப்தியர் எங்களை
ஒடுக்கி, எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல்
கடினமான வேலையைச் சுமத்தினபோது,
(உபாகமம் 26:6)
egipthiyar engga'lai odukki, engga'laich si’rumaippaduththi, engga'lmeal kadinamaana
vealaiyaich sumaththinapoathu, (ubaagamam
26:6)
எங்கள் பிதாக்களின்
தேவனாகிய கர்த்தரை நோக்கிக்
கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள்
சத்தத்தைக் கேட்டு, எங்கள்
சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள்
ஒடுக்கத்தையும் பார்த்து, (உபாகமம்
26:7)
engga'l pithaakka'lin theavanaagiya karththarai
noakkik kooppittoam; karththar engga'l saththaththaik keattu, engga'l si’rumaiyaiyum engga'l varuththaththaiyum engga'l odukkaththaiyum paarththu,
(ubaagamam 26:7)
எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய
புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, (உபாகமம்
26:8)
engga'laip balaththa kaiyinaalum, oanggiya puyaththinaalum, mahaa bayanggarangga'linaalum, adaiyaa'langga'linaalum, a’rputhangga'linaalum, egipthilirunthu pu’rappadappa'n'ni,
(ubaagamam 26:8)
எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து,
பாலும் தேனும் ஓடுகிற
தேசமாகிய இந்தத் தேசத்தை
எங்களுக்குக் கொடுத்தார். (உபாகமம்
26:9)
engga'lai ivvidaththukku azhaiththuvanthu, paalum
theanum oadugi’ra theasamaagiya inthath
theasaththai engga'lukkuk koduththaar.
(ubaagamam 26:9)
இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர்
எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய
கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன்
என்று சொல்லி, அதை உன் தேவனாகிய
கர்த்தருடைய சந்நிதியில் வைத்து,
உன் தேவனாகிய கர்த்தருடைய
சந்நிதியில் பணிந்து, (உபாகமம்
26:10)
ippozhuthum, ithoa,
karththaavea, theavareer enakkuk
koduththa nilaththinudaiya kaniga'lin mutha’rpalanaik ko'nduvanthean en’ru solli, athai un theavanaagiya karththarudaiya sannithiyil vaiththu,
un theavanaagiya karththarudaiya
sannithiyil pa'ninthu,
(ubaagamam 26:10)
நீயும் லேவியனும்,
உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும்
உன் தேவனாகிய கர்த்தர்
உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக. (உபாகமம்
26:11)
neeyum leaviyanum,
unnidaththil irukki’ra paratheasiyum un theavanaagiya karththar
unakkum un veettaarukkum anukkiragampa'n'nina
sagala nanmaiga'linimiththamum
santhoashappaduveerga'laaga. (ubaagamam
26:11)
தசமபாகம் செலுத்தும்
வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே,
நீ உன் வரத்திலெல்லாம் பத்தில்
ஒன்றை எடுத்து, லேவியனும்
பரதேசியும் திக்கற்ற பிள்ளையும்
விதவையும் உன் வாசல்களில்
புசித்துத் திர்ப்தியாகும்படி அவர்களுக்குக்
கொடுத்துத் தீர்ந்தபின்பு, (உபாகமம்
26:12)
thasamapaagam seluththum varushamaagiya moon’raam varushaththilea, nee un varaththilellaam paththil
on’rai
eduththu, leaviyanum paratheasiyum thikkat’ra pi'l'laiyum
vithavaiyum un vaasalga'lil pusiththuth thirpthiyaagumpadi avarga'lukkuk koduththuth theernthapinbu, (ubaagamam
26:12)
நீ உன் தேவனாகிய கர்த்தருடைய
சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர்
எனக்குக் கொடுத்த எல்லாக்
கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான
பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து,
லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற
பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்;
உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும்
நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை.
(உபாகமம் 26:13)
nee un theavanaagiya karththarudaiya
sannithiyil poay avarai noakki:
theavareer enakkuk koduththa
ellaak katta'laiga'linpadiyum, naan parisuththamaana poru'lga'lai en veettilirunthu eduththuvanthu, leaviyanukkum
paratheasikkum thikkat’ra pi'l'laikkum
vithavaikkum koduththean; ummudaiya
katta'laiga'lil on’raiyum naan mee’ravum illai ma’rakkavum illai.
(ubaagamam 26:13)
நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை,
தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவும்
இல்லை; இழவுகாரியத்துக்காக அதில் ஒன்றும் படைக்கவும்
இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின்
சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர்
எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும்
செய்தேன். (உபாகமம் 26:14)
naan thukkangko'ndaadumpoathu athil pusikkavum illai, theettaana kaariyaththukku athil on’rum edukkavum illai;
izhavukaariyaththukkaaga athil on’rum padaikkavum illai;
naan en theavanaagiya karththarin saththaththi’rkuk keezhppadinthu, theavareer
enakkuk katta'laiyittapadi sagalamum seythean. (ubaagamam
26:14)
நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய
பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு
ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த
பாலும் தேனும் ஓடுகிற
தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக. (உபாகமம்
26:15)
neer umathu
parisuththa vaasasthalamaagiya paraloagaththilirunthu
noakkippaarththu, umathu janangga'laagiya isravealaraiyum, neer engga'l pithaakka'lukku aa'naiyittapadiyea, engga'lukkuk koduththa
paalum theanum oadugi’ra theasaththaiyum aaseervathiyum en’ru solvaayaaga. (ubaagamam 26:15)
இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும்பொருட்டு, இன்று உன் தேவனாகிய
கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால்
உன் முழு இருதயத்தோடும்
உன் முழு ஆத்துமாவோடும்
அவைகளைக் காத்து நடக்கக்கடவாய். (உபாகமம்
26:16)
inthak katta'laiga'linpadiyum niyaayangga'linpadiyum nee
seyyumporuttu, in’ru un theavanaagiya karththar
unakkuk katta'laiyidugi’raar; aagaiyaal un muzhu iruthayaththoadum un muzhu aaththumaavoadum avaiga'laik kaaththu
nadakkakkadavaay. (ubaagamam 26:16)
கர்த்தர் எனக்கு
தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில்
நடந்து, அவர் கட்டளைகளையும்
அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு,
அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன்
என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய். (உபாகமம்
26:17)
karththar enakku
theavanaayiruppaar en’rum, naan avar vazhiga'lil nadanthu, avar katta'laiga'laiyum avar ka’rpanaiga'laiyum avar niyaayangga'laiyum kaikko'ndu, avar saththaththi’rkuk keezhppadivean en’rum nee in’ru avarukku vaakkukkoduththaay. (ubaagamam
26:17)
கர்த்தரும் உனக்கு
வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால்,
எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும்,
(உபாகமம் 26:18)
karththarum unakku
vaakkukkoduththu unakkuch solliyirukki’rapadi: nee ennudaiya katta'laiga'laiyellaam kaikko'ndaal, enakkuch sontha janamaayiruppaay en’rum, (ubaagamam
26:18)
நான் உண்டுபண்ணின
எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும்
உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்
என்றும், நான் சொன்னபடியே,
நீ உன் தேவனாகிய
கர்த்தரான எனக்குப் பரிசுத்த
ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச்
சொல்லுகிறார் என்றான். (உபாகமம்
26:19)
naan u'ndupa'n'nina ellaa jaathiga'laippaarkkilum,
pugazhchchiyilum keerththiyilum magimaiyilum unnaich si’ranthirukkumpadi
seyvean en’rum, naan sonnapadiyea, nee un theavanaagiya karththaraana
enakkup parisuththa janamaayiruppaay en’rum, avar in’ru unakkuch sollugi’raar en’raan. (ubaagamam
26:19)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!