ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில்
இலச்சையான காரியத்தைக் கண்டு,
அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை
எழுதி, அவள் கையிலே
கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். (உபாகமம்
24:1)
oruvan oru sthireeyai vivaagampa'n'nikko'ndapinbu, ava'lidaththil ilachchaiyaana kaariyaththaik ka'ndu,
ava'lmeal piriyamat’ravanaanaal, avan tha'l'luthalin seettai
ezhuthi, ava'l kaiyilea
koduththu, ava'laith than veettilirunthu anuppividalaam. (ubaagamam
24:1)
அவள் அவனுடைய
வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு
மனைவியாகலாம். (உபாகமம் 24:2)
ava'l avanudaiya
veettaivittup poanapinbu, vea’roruvanukku manaiviyaagalaam. (ubaagamam
24:2)
அந்த இரண்டாம்
புருஷனும் அவளை வெறுத்து,
தள்ளுதலின் சீட்டை எழுதி,
அவள் கையிலே கொடுத்து,
அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன்
இறந்துபோனாலும், (உபாகமம் 24:3)
antha ira'ndaam
purushanum ava'lai ve’ruththu, tha'l'luthalin seettai
ezhuthi, ava'l kaiyilea
koduththu, ava'laith than veettilirunthu anuppivittaalum, ava'lai vivaagampa'n'nina antha ira'ndaam purushan
i’ranthupoanaalum, (ubaagamam
24:3)
அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத்
தள்ளிவிட்ட அவளுடைய முந்தின
புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக
அருவருப்பானது; உன் தேவனாகிய
கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக்
கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக. (உபாகமம்
24:4)
ava'l theettuppattapadiyinaal, ava'laith tha'l'livitta ava'ludaiya
munthina purushan thirumbavum ava'lai
manaiviyaagach searththukko'l'lakkoodaathu; athu karththarukku munbaaga aruvaruppaanathu; un theavanaagiya karththar unakkuch suthantharamaagak kodukkum theasaththinmeal paavam
varappa'n'naayaaga. (ubaagamam
24:4)
ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய்
விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல்
யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம்
தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச்
சந்தோஷப்படுத்துவானாக. (உபாகமம் 24:5)
oruvan oru pe'n'naip puthithaay
vivaagampa'n'niyirunthaal, avan yuththaththi’rkup pu’rappadavea'ndaam;
avanmeal yaathoru vealaiyum sumaththavea'ndaam; avan oru varushapariyantham than veettil than ishdappadiyirunthu, thaan vivaagampa'n'nina sthireeyaich santhoashappaduththuvaanaaga. (ubaagamam 24:5)
திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும்
அடகாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும். (உபாகமம்
24:6)
thirigaiyin adikkallaiyaavathu athin mea’rkallaiyaavathu
oruvarum adagaaga vaanggakkoodaathu; athu jeevanai
adagu
vaangguvathupoalaagum. (ubaagamam 24:6)
தன் சகோதரராகிய
இஸ்ரவேல் புத்திரரில் ஒருவனைத்
திருடி, அதினால் ஆதாயந்தேடி,
அவனை விற்றுப்போட்ட ஒருவன்
அகப்பட்டால், அந்தத் திருடன்
கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை
உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். (உபாகமம்
24:7)
than sagoathararaagiya israveal puththiraril
oruvanaith thirudi, athinaal
aathaayantheadi, avanai vit’ruppoatta oruvan agappattaal, anthath thirudan
kolaiseyyappadavea'ndum; ippadiyea
theemaiyai un naduvilirunthu vilakkakkadavaay. (ubaagamam
24:7)
குஷ்டரோகத்தைக்குறித்து லேவியராகிய
ஆசாரியர் உங்களுக்குப் போதிக்கும்
யாவையும் கவனித்துச் செய்யும்படி
மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக்
கவனமாயிருப்பீர்களாக. (உபாகமம் 24:8)
kushdaroagaththaikku’riththu leaviyaraagiya aasaariyar ungga'lukkup poathikkum
yaavaiyum kavaniththuch seyyumpadi migavum echcharikkaiyaayirungga'l; naan avarga'lukkuk katta'laiyittapadiyea seyyak
kavanamaayiruppeerga'laaga. (ubaagamam 24:8)
நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு
வருகிற வழியிலே உங்கள்
தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை
நினைத்துக்கொள்ளுங்கள். (உபாகமம் 24:9)
neengga'l egipthilirunthu pu’rappattu varugi’ra vazhiyilea
ungga'l
theavanaagiya karththar
miriyaamukkuch seythathai ninaiththukko'l'lungga'l. (ubaagamam
24:9)
பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக்
கொடுத்தால், அவன் கொடுக்கும்
அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள்
பிரவேசிக்கவேண்டாம். (உபாகமம் 24:10)
pi’ranukku nee eathaagilum kadanaagak koduththaal,
avan kodukkum adagai vaangga nee avan veetti’rku'l piraveasikkavea'ndaam. (ubaagamam
24:10)
வெளியே நிற்பாயாக;
கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே
உன்னிடத்தில் கொண்டுவருவானாக. (உபாகமம்
24:11)
ve'liyea ni’rpaayaaga; kadan vaangginavan antha adagai ve'liyea unnidaththil
ko'nduvaruvaanaaga. (ubaagamam
24:11)
அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரை
செய்யாமல், (உபாகமம் 24:12)
avan thariththiranaanaal, nee avan adagai vaiththukko'ndu niththirai seyyaamal, (ubaagamam
24:12)
அவன் தன் வஸ்திரத்தைப் போட்டுப்
படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப
அந்த அடகை அவனுக்குக்
கொடுத்துவிடவேண்டும்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு
முன்பாக உனக்கு நீதியாயிருக்கும். (உபாகமம்
24:13)
avan than vasthiraththaip poattup paduththukko'ndu unnai aaseervathikkumpadi,
pozhuthupoagumpoathu, thirumba antha adagai avanukkuk koduththuvidavea'ndum; athu un theavanaagiya karththarukku
munbaaga
unakku neethiyaayirukkum. (ubaagamam
24:13)
உன் சகோதரரிலும்,
உன் தேசத்தின் வாசல்களிலுள்ள
அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான
கூலிக்காரனை ஒடுக்காயாக. (உபாகமம்
24:14)
un sagoathararilum, un theasaththin vaasalga'lilu'l'la anniyarilum
eazhaiyum e'limaiyumaana koolikkaaranai odukkaayaaga. (ubaagamam
24:14)
அவன் வேலைசெய்த
நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக்
கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும்
அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை
நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும். (உபாகமம்
24:15)
avan vealaiseytha naa'lilthaanea, pozhuthupoagumunnea, avan kooliyai avanukkuk
koduththuvidavea'ndum; avan eazhaiyum
athinmeal aavalumaayirukki’raan; athaik kodaavittaal avan unnaikku’riththuk karththarai noakki
mu’raiyiduvaan; athu unakkup paavamaayirukkum. (ubaagamam
24:15)
பிள்ளைகளுக்காகப் பிதாக்களும்,
பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன்
செய்த பாவத்தினிமித்தம் அவனவன்
கொலைசெய்யப்படவேண்டும். (உபாகமம் 24:16)
pi'l'laiga'lukkaagap pithaakka'lum, pithaakka'lukkaagap pi'l'laiga'lum kolaiseyyappadavea'ndaam; avanavan seytha
paavaththinimiththam avanavan kolaiseyyappadavea'ndum. (ubaagamam
24:16)
நீ அந்நியனுடைய
நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின்
நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின்
வஸ்திரத்தை அடகாக வாங்காமலும்
இருந்து, (உபாகமம் 24:17)
nee anniyanudaiya
niyaayaththaiyum thikkat’ra pi'l'laiyin niyaayaththaiyum purattaamalum, vithavaiyin
vasthiraththai adagaaga vaanggaamalum irunthu, (ubaagamam
24:17)
நீ எகிப்திலே
அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய
கர்த்தர் உன்னை அங்கேயிருந்து
மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால்,
இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். (உபாகமம்
24:18)
nee egipthilea adimaiyaayirunthathaiyum, un theavanaagiya karththar unnai anggeayirunthu meettukko'nduvanthathaiyum ninaippaayaaga; aagaiyaal, ippadich seyyumpadi naan unakkuk katta'laiyidugi’rean. (ubaagamam 24:18)
நீ உன் பயிரை அறுக்கையில்
உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய்
வைத்துவந்தாயானால், அதை எடுத்து
வரும்படி திரும்பிப் போகவேண்டாம்;
உன் தேவனாகிய கர்த்தர்
உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற
பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக. (உபாகமம்
24:19)
nee un payirai a’rukkaiyil un vayalilea oru arikkattai ma’rathiyaay vaiththuvanthaayaanaal, athai eduththu varumpadi
thirumbip
poagavea'ndaam; un theavanaagiya karththar un kaippirayaasaththilellaam unnai aaseervathikkumpadi, athaip
paratheasikkum thikkat’ra pi'l'laikkum
vithavaikkum vittuviduvaayaaga. (ubaagamam
24:19)
நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்டபின்பு, கொம்பிலே
தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப்
போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும்
திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும்
விட்டுவிடுவாயாக; (உபாகமம் 24:20)
nee un olivamaraththai uthirththuvittapinbu, kombilea thappiyirukki’rathaip pa’rikkumpadi thirumbip poagavea'ndaam; athaip paratheasikkum thikkat’ra pi'l'laikkum
vithavaikkum vittuviduvaayaaga; (ubaagamam
24:20)
நீ உன் திராட்சப்பழங்களை அறுத்தபின்பு,
மறுபடியும் அதை அறுக்கத்
திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும்
திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும்
விட்டுவிடுவாயாக. (உபாகமம் 24:21)
nee un thiraadchappazhangga'lai a’ruththapinbu, ma’rupadiyum athai a’rukkath thirumbippoagavea'ndaam; athaip paratheasikkum thikkat’ra pi'l'laikkum
vithavaikkum vittuviduvaayaaga. (ubaagamam
24:21)
நீ எகிப்திலே
அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால்,
இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். (உபாகமம்
24:22)
nee egipthilea adimaiyaayirunthathai ninaippaayaaga; aagaiyaal, ippadich seyyumpadi naan unakkuk katta'laiyidugi’rean. (ubaagamam 24:22)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!