Tuesday, August 09, 2016

Ubaagamam 19 | உபாகமம் 19 | Deuteronomy 19

உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குக்  கொடுக்கும்  தேசத்தின்  ஜாதிகளை  உன்  தேவனாகிய  கர்த்தர்  வேரற்றுப்போகப்  பண்ணுவதினால்,  நீ  அவர்கள்  தேசத்தைச்  சுதந்தரித்துக்கொண்டு,  அவர்கள்  பட்டணங்களிலும்  அவர்கள்  வீடுகளிலும்  குடியேறும்போது,  (உபாகமம்  19:1)

un  theavanaagiya  karththar  unakkuk  kodukkum  theasaththin  jaathiga'lai  un  theavanaagiya  karththar  vearat’ruppoagap  pa'n'nuvathinaal,  nee  avarga'l  theasaththaich  suthanthariththukko'ndu,  avarga'l  patta'nangga'lilum  avarga'l  veeduga'lilum  kudiyea’rumpoathu,  (ubaagamam  19:1)

நீ  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குச்  சுதந்தரிக்கக்  கொடுக்கும்  உன்  தேசத்தின்  நடுவிலே,  உனக்காக  மூன்று  பட்டணங்களைப்  பிரித்துவைக்கக்கடவாய்.  (உபாகமம்  19:2)

nee  un  theavanaagiya  karththar  unakkuch  suthantharikkak  kodukkum  un  theasaththin  naduvilea,  unakkaaga  moon’ru  patta'nangga'laip  piriththuvaikkakkadavaay.  (ubaagamam  19:2)

கொலைசெய்தவன்  எவனும்  அங்கே  ஓடிப்போகும்படி  உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்னைச்  சுதந்தரிக்கப்பண்ணப்போகிற  உன்  தேசத்தின்  எல்லையை  நீ  மூன்று  பங்காகப்  பகுத்து  அதற்கு  வழியை  உண்டுபண்ணக்கடவாய்.  (உபாகமம்  19:3)

kolaiseythavan  evanum  anggea  oadippoagumpadi  un  theavanaagiya  karththar  unnaich  suthantharikkappa'n'nappoagi’ra  un  theasaththin  ellaiyai  nee  moon’ru  panggaagap  paguththu  atha’rku  vazhiyai  u'ndupa'n'nakkadavaay.  (ubaagamam  19:3)

கொலைசெய்து  அங்கே  ஓடிப்போய்,  உயிரோடிருக்கத்தக்கவன்  யாரென்றால்:  தான்  முன்னே  பகைத்திராத  பிறனொருவனை  மனதறியாமல்  கொன்றவன்தானே.  (உபாகமம்  19:4)

kolaiseythu  anggea  oadippoay,  uyiroadirukkaththakkavan  yaaren’raal:  thaan  munnea  pagaiththiraatha  pi’ranoruvanai  manatha’riyaamal  kon’ravanthaanea.  (ubaagamam  19:4)

ஒருவன்  விறகுவெட்ட  மற்றொருவனோடே  காட்டில்  போய்,  மரத்தை  வெட்டத்  தன்  கையிலிருந்த  கோடரியை  ஓங்கும்போது,  இரும்பானது  காம்பை  விட்டுக்  கழன்று  மற்றவன்மேல்  பட்டதினால்  அவன்  இறந்துபோனால்,  (உபாகமம்  19:5)

oruvan  vi’raguvetta  mat’roruvanoadea  kaattil  poay,  maraththai  vettath  than  kaiyiliruntha  koadariyai  oanggumpoathu,  irumbaanathu  kaambai  vittuk  kazhan’ru  mat’ravanmeal  pattathinaal  avan  i’ranthupoanaal,  (ubaagamam  19:5)

இரத்தப்பழிக்காரன்  தன்  மனம்  எரிகையில்,  கொலைசெய்தவனை  வழி  தூரமாயிருக்கிறதினாலே  பின்தொடர்ந்து  பிடித்து,  அவனைக்  கொன்றுபோடாதபடிக்கு,  இவன்  அந்தப்  பட்டணங்கள்  ஒன்றில்  ஓடிப்போய்  உயிரோடிருப்பானாக;  இவன்  அவனை  முன்னே  பகைக்காதபடியினால்,  இவன்மேல்  சாவுக்கான  குற்றம்  சுமரவில்லை.  (உபாகமம்  19:6)

iraththappazhikkaaran  than  manam  erigaiyil,  kolaiseythavanai  vazhi  thooramaayirukki’rathinaalea  pinthodarnthu  pidiththu,  avanaik  kon’rupoadaathapadikku,  ivan  anthap  patta'nangga'l  on’ril  oadippoay  uyiroadiruppaanaaga;  ivan  avanai  munnea  pagaikkaathapadiyinaal,  ivanmeal  saavukkaana  kut’ram  sumaravillai.  (ubaagamam  19:6)

இதினிமித்தம்  மூன்று  பட்டணங்களை  உனக்காகப்  பிரித்துவைக்கக்கடவாய்  என்று  நான்  உனக்குக்  கட்டளையிடுகிறேன்.  (உபாகமம்  19:7)

ithinimiththam  moon’ru  patta'nangga'lai  unakkaagap  piriththuvaikkakkadavaay  en’ru  naan  unakkuk  katta'laiyidugi’rean.  (ubaagamam  19:7)

நீ  உன்  தேவனாகிய  கர்த்தரிடத்தில்  அன்புகூர்ந்து,  எந்நாளும்  அவர்  வழிகளில்  நடப்பதற்காக,  இன்று  நான்  உனக்குக்  கற்பிக்கிற  இந்த  எல்லாக்  கற்பனைகளையும்  கைக்கொண்டு  அதின்படி  செய்து,  (உபாகமம்  19:8)

nee  un  theavanaagiya  karththaridaththil  anbukoornthu,  ennaa'lum  avar  vazhiga'lil  nadappatha’rkaaga,  in’ru  naan  unakkuk  ka’rpikki’ra  intha  ellaak  ka’rpanaiga'laiyum  kaikko'ndu  athinpadi  seythu,  (ubaagamam  19:8)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உன்  பிதாக்களுக்கு  ஆணையிட்டபடியே,  அவர்  உன்  எல்லையை  விஸ்தாரமாக்கி,  உன்  பிதாக்களுக்குக்  கொடுப்பேன்  என்று  சொன்ன  தேசம்  முழுவதையும்  உனக்குக்  கொடுத்தால்,  (உபாகமம்  19:9)

un  theavanaagiya  karththar  un  pithaakka'lukku  aa'naiyittapadiyea,  avar  un  ellaiyai  visthaaramaakki,  un  pithaakka'lukkuk  koduppean  en’ru  sonna  theasam  muzhuvathaiyum  unakkuk  koduththaal,  (ubaagamam  19:9)

அப்பொழுது  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குச்  சுதந்தரமாகக்  கொடுக்கும்  உன்  தேசத்தில்  குற்றமில்லாத  இரத்தம்  சிந்தப்படுகிறதினால்  உன்மேல்  இரத்தப்பழி  சுமராதபடிக்கு,  இந்த  மூன்று  பட்டணங்களும்  அல்லாமல்  இன்னும்  மூன்று  பட்டணங்களை  ஏற்படுத்தக்கடவாய்.  (உபாகமம்  19:10)

appozhuthu  un  theavanaagiya  karththar  unakkuch  suthantharamaagak  kodukkum  un  theasaththil  kut’ramillaatha  iraththam  sinthappadugi’rathinaal  unmeal  iraththappazhi  sumaraathapadikku,  intha  moon’ru  patta'nangga'lum  allaamal  innum  moon’ru  patta'nangga'lai  ea’rpaduththakkadavaay.  (ubaagamam  19:10)

ஒருவன்  பிறனொருவனைப்  பகைத்து,  அவனுக்குப்  பதிவிருந்து,  அவனுக்கு  விரோதமாய்  எழும்பி,  அவன்  சாகும்படி  அவனை  அடித்து,  இந்தப்  பட்டணங்களில்  ஒன்றில்  ஓடிப்போயிருப்பானாகில்,  (உபாகமம்  19:11)

oruvan  pi’ranoruvanaip  pagaiththu,  avanukkup  pathivirunthu,  avanukku  viroathamaay  ezhumbi,  avan  saagumpadi  avanai  adiththu,  inthap  patta'nangga'lil  on’ril  oadippoayiruppaanaagil,  (ubaagamam  19:11)

அந்தப்  பட்டணத்தின்  மூப்பர்கள்  ஆள்  அனுப்பி,  அங்கேயிருந்து  அவனைக்  கொண்டுவரும்படி  செய்து,  அவன்  சாகும்படிக்கு  அவனை  இரத்தப்பழி  வாங்குகிறவன்  கையில்  ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.  (உபாகமம்  19:12)

anthap  patta'naththin  moopparga'l  aa'l  anuppi,  anggeayirunthu  avanaik  ko'nduvarumpadi  seythu,  avan  saagumpadikku  avanai  iraththappazhi  vaanggugi’ravan  kaiyil  oppukkodukkakkadavarga'l.  (ubaagamam  19:12)

உன்  கண்  அவனுக்கு  இரங்கவேண்டாம்;  குற்றமில்லாத  இரத்தப்பழியை  இஸ்ரவேலை  விட்டு  விலக்கக்கடவாய்;  அப்பொழுது  நீ  நன்றாயிருப்பாய்.  (உபாகமம்  19:13)

un  ka'n  avanukku  iranggavea'ndaam;  kut’ramillaatha  iraththappazhiyai  isravealai  vittu  vilakkakkadavaay;  appozhuthu  nee  nan’raayiruppaay.  (ubaagamam  19:13)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குச்  சுதந்தரமாகக்  கொடுக்கும்  தேசத்தில்  உன்  கைவசமாயிருக்கும்  காணியாட்சியிலே  முன்னோர்கள்  குறித்திருக்கிற  பிறனுடைய  எல்லையை  ஒற்றிப்போடாயாக.  (உபாகமம்  19:14)

un  theavanaagiya  karththar  unakkuch  suthantharamaagak  kodukkum  theasaththil  un  kaivasamaayirukkum  kaa'niyaadchiyilea  munnoarga'l  ku’riththirukki’ra  pi’ranudaiya  ellaiyai  ot’rippoadaayaaga.  (ubaagamam  19:14)

ஒருவன்  எந்த  அக்கிரமத்தையாவது  எந்தப்  பாவத்தையாவது  செய்தான்  என்று  சொல்லப்பட்டால்,  ஒரே  சாட்சியினால்  நியாயந்தீர்க்கக்கூடாது;  இரண்டு  மூன்று  சாட்சிகளுடைய  வாக்கினாலே  காரியம்  நிலைவரப்படவேண்டும்.  (உபாகமம்  19:15)

oruvan  entha  akkiramaththaiyaavathu  enthap  paavaththaiyaavathu  seythaan  en’ru  sollappattaal,  orea  saadchiyinaal  niyaayantheerkkakkoodaathu;  ira'ndu  moon’ru  saadchiga'ludaiya  vaakkinaalea  kaariyam  nilaivarappadavea'ndum.  (ubaagamam  19:15)

ஒருவன்மேல்  ஒரு  குற்றத்தைச்  சுமத்தும்படி,  ஒரு  பொய்ச்சாட்சிக்காரன்  அவன்மேல்  சாட்சிசொல்ல  எழும்பினால்,  (உபாகமம்  19:16)

oruvanmeal  oru  kut’raththaich  sumaththumpadi,  oru  poychsaadchikkaaran  avanmeal  saadchisolla  ezhumbinaal,  (ubaagamam  19:16)

வழக்காடுகிற  இருவரும்  கர்த்தருடைய  சந்நிதியில்  அக்காலத்தில்  இருக்கும்  ஆசாரியர்களுக்கும்  நியாயாதிபதிகளுக்கும்  முன்பாக  வந்து  நிற்பார்களாக.  (உபாகமம்  19:17)

vazhakkaadugi’ra  iruvarum  karththarudaiya  sannithiyil  akkaalaththil  irukkum  aasaariyarga'lukkum  niyaayaathibathiga'lukkum  munbaaga  vanthu  ni’rpaarga'laaga.  (ubaagamam  19:17)

அப்பொழுது  நியாயாதிபதிகள்  நன்றாய்  விசாரணைசெய்யக்கடவர்கள்;  சாட்சி  கள்ளச்சாட்சி  என்றும்,  தன்  சகோதரன்மேல்  அபாண்டமாய்க்  குற்றஞ்சாற்றினான்  என்றும்  கண்டால்,  (உபாகமம்  19:18)

appozhuthu  niyaayaathibathiga'l  nan’raay  visaara'naiseyyakkadavarga'l;  saadchi  ka'l'lachsaadchi  en’rum,  than  sagoatharanmeal  abaa'ndamaayk  kut’ragnsaat’rinaan  en’rum  ka'ndaal,  (ubaagamam  19:18)

அவன்  தன்  சகோதரனுக்குச்  செய்ய  நினைத்தபடியே  அவனுக்குச்  செய்யக்கடவீர்கள்;  இவ்விதமாய்த்  தீமையை  உன்  நடுவிலிருந்து  விலக்குவாயாக.  (உபாகமம்  19:19)

avan  than  sagoatharanukkuch  seyya  ninaiththapadiyea  avanukkuch  seyyakkadaveerga'l;  ivvithamaayth  theemaiyai  un  naduvilirunthu  vilakkuvaayaaga.  (ubaagamam  19:19)

மற்றவர்களும்  அதைக்  கேட்டுப்  பயந்து,  இனி  உங்களுக்குள்ளே  அப்படிப்பட்ட  தீமையைச்  செய்யாதிருப்பார்கள்.  (உபாகமம்  19:20)

mat’ravarga'lum  athaik  keattup  bayanthu,  ini  ungga'lukku'l'lea  appadippatta  theemaiyaich  seyyaathiruppaarga'l.  (ubaagamam  19:20)

உன்  கண்  அவனுக்கு  இரங்கவேண்டாம்;  ஜீவனுக்கு  ஜீவன்,  கண்ணுக்குக்  கண்,  பல்லுக்குப்  பல்,  கைக்குக்  கை,  காலுக்குக்  கால்  கொடுக்கப்படவேண்டும்.  (உபாகமம்  19:21)

un  ka'n  avanukku  iranggavea'ndaam;  jeevanukku  jeevan,  ka'n'nukkuk  ka'n,  pallukkup  pal,  kaikkuk  kai,  kaalukkuk  kaal  kodukkappadavea'ndum.  (ubaagamam  19:21)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!