Tuesday, August 09, 2016

Ubaagamam 17 | உபாகமம் 17 | Deuteronomy 17

பழுதும்  அவலட்சணமுமுள்ள  யாதொரு  மாட்டையாவது  ஆட்டையாவது  உன்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பலியிடவேண்டாம்;  அது  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  அருவருப்பாயிருக்கும்.  (உபாகமம்  17:1)

pazhuthum  avaladcha'namumu'l'la  yaathoru  maattaiyaavathu  aattaiyaavathu  un  theavanaagiya  karththarukkup  baliyidavea'ndaam;  athu  un  theavanaagiya  karththarukku  aruvaruppaayirukkum.  (ubaagamam  17:1)

உன்  தேவனாகிய  கர்த்தரின்  கண்களுக்கு  முன்பாக  எந்தப்  புருஷனாவது  ஸ்திரீயாவது  உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குக்  கொடுக்கிற  வாசல்கள்  ஒன்றில்  அக்கிரமஞ்செய்து,  அவருடைய  உடன்படிக்கையை  மீறி,  (உபாகமம்  17:2)

un  theavanaagiya  karththarin  ka'nga'lukku  munbaaga  enthap  purushanaavathu  sthireeyaavathu  un  theavanaagiya  karththar  unakkuk  kodukki’ra  vaasalga'l  on’ril  akkiramagnseythu,  avarudaiya  udanpadikkaiyai  mee’ri,  (ubaagamam  17:2)

நான்  விலக்கியிருக்கிற  வேறே  தேவர்களையாவது  சந்திரசூரியர்  முதலான  வானசேனைகளையாவது  சேவித்து,  அவைகளை  நமஸ்கரிக்கிறதாகக்  காணப்பட்டால்,  (உபாகமம்  17:3)

naan  vilakkiyirukki’ra  vea’rea  theavarga'laiyaavathu  santhirasooriyar  muthalaana  vaanaseanaiga'laiyaavathu  seaviththu,  avaiga'lai  namaskarikki’rathaagak  kaa'nappattaal,  (ubaagamam  17:3)

அது  உன்  செவிகேட்க  உனக்கு  அறிவிக்கப்படும்போது,  நீ  அதை  நன்றாய்  விசாரிக்கக்கடவாய்;  அது  மெய்  என்றும்,  அப்படிப்பட்ட  அருவருப்பு  இஸ்ரவேலில்  நடந்தது  நிச்சயம்  என்றும்  கண்டாயானால்,  (உபாகமம்  17:4)

athu  un  sevikeadka  unakku  a’rivikkappadumpoathu,  nee  athai  nan’raay  visaarikkakkadavaay;  athu  mey  en’rum,  appadippatta  aruvaruppu  isravealil  nadanthathu  nichchayam  en’rum  ka'ndaayaanaal,  (ubaagamam  17:4)

அந்த  அக்கிரமத்தைச்  செய்த  புருஷனையாவது  ஸ்திரீயையாவது  உன்  வாசல்களுக்கு  வெளியே  கொண்டுபோய்,  அப்படிப்பட்டவர்கள்  சாகும்படி  கல்லெறியக்கடவாய்.  (உபாகமம்  17:5)

antha  akkiramaththaich  seytha  purushanaiyaavathu  sthireeyaiyaavathu  un  vaasalga'lukku  ve'liyea  ko'ndupoay,  appadippattavarga'l  saagumpadi  kalle’riyakkadavaay.  (ubaagamam  17:5)

சாவுக்குப்  பாத்திரமானவன்  இரண்டு  மூன்று  சாட்சிகளுடைய  வாக்கினால்  கொலைசெய்யப்படக்கடவன்;  ஒரே  சாட்சியினுடைய  வாக்கினால்  அவன்  கொலைசெய்யப்படலாகாது.  (உபாகமம்  17:6)

saavukkup  paaththiramaanavan  ira'ndu  moon’ru  saadchiga'ludaiya  vaakkinaal  kolaiseyyappadakkadavan;  orea  saadchiyinudaiya  vaakkinaal  avan  kolaiseyyappadalaagaathu.  (ubaagamam  17:6)

அவனைக்  கொலைசெய்கிறதற்குச்  சாட்சிகளுடைய  கைகள்  முந்தியும்  எல்லா  ஜனங்களுடைய  கைகள்  பிந்தியும்  அவன்மேல்  இருப்பதாக;  இப்படியே  தீமையை  உன்  நடுவிலிருந்து  விலக்கக்கடவாய்.  (உபாகமம்  17:7)

avanaik  kolaiseygi’ratha’rkuch  saadchiga'ludaiya  kaiga'l  munthiyum  ellaa  janangga'ludaiya  kaiga'l  pinthiyum  avanmeal  iruppathaaga;  ippadiyea  theemaiyai  un  naduvilirunthu  vilakkakkadavaay.  (ubaagamam  17:7)

உன்  வாசல்களில்  இரத்தப்பழிகளைக்  குறித்தும்,  வியாச்சியங்களைக்  குறித்தும்,  காயம்பட்ட  சேதங்களைக்குறித்தும்  வழக்கு  நேரிட்டு,  நியாயந்தீர்ப்பது  உனக்கு  அரிதாயிருந்தால்,  நீ  எழுந்து,  உன்  தேவனாகிய  கர்த்தர்  தெரிந்து  ஏற்படுத்தின  ஸ்தானத்திற்குப்  போய்,  (உபாகமம்  17:8)

un  vaasalga'lil  iraththappazhiga'laik  ku’riththum,  viyaachchiyangga'laik  ku’riththum,  kaayampatta  seathangga'laikku’riththum  vazhakku  nearittu,  niyaayantheerppathu  unakku  arithaayirunthaal,  nee  ezhunthu,  un  theavanaagiya  karththar  therinthu  ea’rpaduththina  sthaanaththi’rkup  poay,  (ubaagamam  17:8)

லேவியரான  ஆசாரியரிடத்திலும்  அந்நாட்களில்  இருக்கிற  நியாயாதிபதியினிடத்திலும்  விசாரிக்கவேண்டும்;  நியாயம்  இன்னதென்று  அவர்கள்  உனக்கு  அறிவிப்பார்கள்.  (உபாகமம்  17:9)

leaviyaraana  aasaariyaridaththilum  annaadka'lil  irukki’ra  niyaayaathibathiyinidaththilum  visaarikkavea'ndum;  niyaayam  innathen’ru  avarga'l  unakku  a’rivippaarga'l.  (ubaagamam  17:9)

கர்த்தர்  தெரிந்துகொண்ட  இடத்திலிருந்து  அவர்கள்  உனக்கு  அறிவிக்கும்  தீர்ப்புக்கு  நீ  இணங்கி,  அவர்கள்  உனக்கு  விதிக்கிறபடி  செய்யக்  கவனமாயிருப்பாயாக.  (உபாகமம்  17:10)

karththar  therinthuko'nda  idaththilirunthu  avarga'l  unakku  a’rivikkum  theerppukku  nee  i'nanggi,  avarga'l  unakku  vithikki’rapadi  seyyak  kavanamaayiruppaayaaga.  (ubaagamam  17:10)

அவர்கள்  உனக்கு  அறிவிக்கும்  தீர்ப்பை  விட்டு  வலதுபுறம்  இடதுபுறம்  சாயாமல்,  அவர்கள்  உனக்கு  உணர்த்தும்  பிரமாணத்தின்படியும்,  உனக்குச்  சொல்லும்  நியாயத்தீர்ப்பின்படியும்  செய்யக்கடவாய்.  (உபாகமம்  17:11)

avarga'l  unakku  a’rivikkum  theerppai  vittu  valathupu’ram  idathupu’ram  saayaamal,  avarga'l  unakku  u'narththum  piramaa'naththinpadiyum,  unakkuch  sollum  niyaayaththeerppinpadiyum  seyyakkadavaay.  (ubaagamam  17:11)

அங்கே  உன்  தேவனாகிய  கர்த்தருக்கு  ஆராதனை  செய்யும்படி  நிற்கிற  ஆசாரியனுடைய  சொல்லையாகிலும்,  நியாயாதிபதியினுடைய  சொல்லையாகிலும்  கேளாமல்,  ஒருவன்  இடும்புசெய்தால்,  அவன்  சாகக்கடவன்;  இப்படியே  தீமையை  இஸ்ரவேலிலிருந்து  விலக்கக்கடவாய்.  (உபாகமம்  17:12)

anggea  un  theavanaagiya  karththarukku  aaraathanai  seyyumpadi  ni’rki’ra  aasaariyanudaiya  sollaiyaagilum,  niyaayaathibathiyinudaiya  sollaiyaagilum  kea'laamal,  oruvan  idumbuseythaal,  avan  saagakkadavan;  ippadiyea  theemaiyai  isravealilirunthu  vilakkakkadavaay.  (ubaagamam  17:12)

அப்பொழுது  ஜனங்கள்  எல்லாரும்  அதைக்  கேட்டு,  பயந்து,  இனி  இடும்பு  செய்யாதிருப்பார்கள்.  (உபாகமம்  17:13)

appozhuthu  janangga'l  ellaarum  athaik  keattu,  bayanthu,  ini  idumbu  seyyaathiruppaarga'l.  (ubaagamam  17:13)

உன்  தேவனாகிய  கர்த்தர்  உனக்குக்  கொடுக்கும்  தேசத்தில்  நீ  போய்ச்  சேர்ந்து,  அதைச்  சுதந்தரித்துக்கொண்டு,  அதில்  குடியேறினபின்,  நீ:  என்னைச்  சுற்றிலும்  இருக்கிற  சகல  ஜாதிகளையும்  போல,  நானும்  எனக்கு  ஒரு  ராஜாவை  ஏற்படுத்தவேண்டும்  என்பாயானால்;  (உபாகமம்  17:14)

un  theavanaagiya  karththar  unakkuk  kodukkum  theasaththil  nee  poaych  searnthu,  athaich  suthanthariththukko'ndu,  athil  kudiyea’rinapin,  nee:  ennaich  sut’rilum  irukki’ra  sagala  jaathiga'laiyum  poala,  naanum  enakku  oru  raajaavai  ea’rpaduththavea'ndum  enbaayaanaal;  (ubaagamam  17:14)

உன்  தேவனாகிய  கர்த்தர்  தெரிந்துகொள்பவனையே  உனக்கு  ராஜாவாக  வைக்கக்கடவாய்;  உன்  சகோதரருக்குள்ளிருக்கிற  ஒருவனையே  உன்மேல்  ராஜாவாக  ஏற்படுத்தக்கடவாய்;  உன்  சகோதரன்  அல்லாத  அந்நியனை  ராஜாவாக  ஏற்படுத்தக்கூடாது.  (உபாகமம்  17:15)

un  theavanaagiya  karththar  therinthuko'lbavanaiyea  unakku  raajaavaaga  vaikkakkadavaay;  un  sagoathararukku'l'lirukki’ra  oruvanaiyea  unmeal  raajaavaaga  ea’rpaduththakkadavaay;  un  sagoatharan  allaatha  anniyanai  raajaavaaga  ea’rpaduththakkoodaathu.  (ubaagamam  17:15)

அவன்  அநேக  குதிரைகளைச்  சம்பாதியாமலும்,  அநேக  குதிரைகளைத்  தனக்குச்  சம்பாதிக்கும்படிக்கு  ஜனங்களைத்  திரும்ப  எகிப்திற்குப்  போகப்பண்ணாமலும்  இருக்கக்கடவன்;  இனி  அந்த  வழியாய்  நீங்கள்  திரும்பிப்போகவேண்டாம்  என்று  கர்த்தர்  உங்களுக்குச்  சொல்லியிருக்கிறாரே.  (உபாகமம்  17:16)

avan  aneaga  kuthiraiga'laich  sambaathiyaamalum,  aneaga  kuthiraiga'laith  thanakkuch  sambaathikkumpadikku  janangga'laith  thirumba  egipthi’rkup  poagappa'n'naamalum  irukkakkadavan;  ini  antha  vazhiyaay  neengga'l  thirumbippoagavea'ndaam  en’ru  karththar  ungga'lukkuch  solliyirukki’raarea.  (ubaagamam  17:16)

அவன்  இருதயம்  பின்வாங்கிப்  போகாதபடி  அவன்  அநேகம்  ஸ்திரீகளைப்  படைக்கவேண்டாம்;  வெள்ளியும்  பொன்னும்  தனக்கு  மிகுதியாய்ப்  பெருகப்பண்ணவும்  வேண்டாம்.  (உபாகமம்  17:17)

avan  iruthayam  pinvaanggip  poagaathapadi  avan  aneagam  sthireega'laip  padaikkavea'ndaam;  ve'l'liyum  ponnum  thanakku  miguthiyaayp  perugappa'n'navum  vea'ndaam.  (ubaagamam  17:17)

அவன்  தன்  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கும்போது,  அவனுடைய  இருதயம்  அவன்  சகோதரர்பேரில்  மேட்டிமைகொள்ளாமலும்,  கற்பனையைவிட்டு  வலதுபுறம்  இடதுபுறம்  சாயாமலும்,  (உபாகமம்  17:18)

avan  than  singgaasanaththinmeal  veet’rirukkumpoathu,  avanudaiya  iruthayam  avan  sagoathararpearil  meattimaiko'l'laamalum,  ka’rpanaiyaivittu  valathupu’ram  idathupu’ram  saayaamalum,  (ubaagamam  17:18)

இந்த  நியாயப்பிரமாணத்தின்  எல்லா  வார்த்தைகளையும்,  இந்தக்  கட்டளைகளையும்  கைக்கொண்டு,  இவைகளின்படி  செய்வதற்காகத்  தன்  தேவனாகிய  கர்த்தருக்குப்  பயந்திருக்கும்படி  கற்றுக்கொள்ளும்பொருட்டு,  (உபாகமம்  17:19)

intha  niyaayappiramaa'naththin  ellaa  vaarththaiga'laiyum,  inthak  katta'laiga'laiyum  kaikko'ndu,  ivaiga'linpadi  seyvatha’rkaagath  than  theavanaagiya  karththarukkup  bayanthirukkumpadi  kat’rukko'l'lumporuttu,  (ubaagamam  17:19)

அவன்  லேவியராகிய  ஆசாரியரிடத்திலிருக்கிற  நியாயப்பிரமாண  நூலைப்பார்த்து,  தனக்காக  ஒரு  பிரதியை  எழுதி,  தன்னிடத்தில்  வைத்துக்கொண்டு,  தன்  ஜீவனுள்ள  நாளெல்லாம்  அதை  வாசிக்கக்கடவன்;  இப்படிச்  செய்வதினால்,  தானும்  தன்  குமாரரும்  இஸ்ரவேலின்  நடுவே  தங்கள்  ராஜ்யத்திலே  நீடித்து  வாழுவார்கள்.  (உபாகமம்  17:20)

avan  leaviyaraagiya  aasaariyaridaththilirukki’ra  niyaayappiramaa'na  noolaippaarththu,  thanakkaaga  oru  pirathiyai  ezhuthi,  thannidaththil  vaiththukko'ndu,  than  jeevanu'l'la  naa'lellaam  athai  vaasikkakkadavan;  ippadich  seyvathinaal,  thaanum  than  kumaararum  isravealin  naduvea  thangga'l  raajyaththilea  neediththu  vaazhuvaarga'l.  (ubaagamam  17:20)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!