நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய
பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய
நியாயங்களையும், அவருடைய கற்பனைகளையும்
எப்பொழுதும் கைக்கொள்வாயாக. (உபாகமம்
11:1)
nee un theavanaagiya karththaridaththil anbukoornthu, avarudaiya
piramaa'nangga'laiyum, avarudaiya
katta'laiga'laiyum, avarudaiya
niyaayangga'laiyum, avarudaiya
ka’rpanaiga'laiyum eppozhuthum
kaikko'lvaayaaga. (ubaagamam
11:1)
உங்கள் தேவனாகிய
கர்த்தர் செய்த சிட்சையையும்,
அவருடைய மகத்துவத்தையும், அவருடைய
பலத்த கையையும், அவருடைய
ஓங்கிய புயத்தையும், (உபாகமம்
11:2)
ungga'l theavanaagiya karththar seytha sidchaiyaiyum, avarudaiya magaththuvaththaiyum, avarudaiya
balaththa
kaiyaiyum, avarudaiya oanggiya puyaththaiyum, (ubaagamam
11:2)
அவர் எகிப்தின்
நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய
பார்வோனுக்கும், அவன் தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய
கிரியைகளையும், (உபாகமம் 11:3)
avar egipthin naduvilea
egipthin
raajaavaagiya paarvoanukkum, avan theasam anaiththi’rkum seytha
avarudaiya adaiyaa'langga'laiyum, avarudaiya kiriyaiga'laiyum, (ubaagamam
11:3)
எகிப்திய சேனையும்
அவர்கள் குதிரைகளும் இரதங்களும்
உங்களைப் பின்தொடர்ந்துவருகையில், கர்த்தர்
சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை
அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை
அழித்த அவருடைய செய்கையையும்,
(உபாகமம் 11:4)
egipthiya seanaiyum avarga'l kuthiraiga'lum irathangga'lum ungga'laip pinthodarnthuvarugaiyil, karththar sivantha samuththiraththin jalaththai
avarga'lmeal pura'lappa'n'ni, innaa'lvaraikkum irukki’rathupoala, avarga'lai azhiththa
avarudaiya seygaiyaiyum, (ubaagamam
11:4)
நீங்கள் இவ்விடத்திற்கு வருமளவும்
அவர் உங்களுக்கு வனாந்தரத்தில்
செய்ததையும், (உபாகமம் 11:5)
neengga'l ivvidaththi’rku varuma'lavum avar ungga'lukku vanaantharaththil
seythathaiyum, (ubaagamam
11:5)
பூமி தன் வாயைத் திறந்து,
எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான
தாத்தானையும் அபிராமையும், அவர்கள்
குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர்
எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த
அவர்களுடைய சகல பொருள்களையும்
விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும்
காணாமலும் இருக்கிற உங்கள்
பிள்ளைகளுடன் நான் பேசவில்லை;
இன்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள். (உபாகமம்
11:6)
boomi than vaayaith
thi’ranthu, eliyaab ennum rooban kumaaranudaiya makka'laana
thaaththaanaiyum abiraamaiyum, avarga'l kudumbangga'laiyum, avarga'l koodaarangga'laiyum, isravealar
ellaarukku'l'lum avarga'lukku iruntha avarga'ludaiya
sagala poru'lga'laiyum vizhunggumpadi
seythathaiyum, a’riyaamalum kaa'naamalum
irukki’ra
ungga'l
pi'l'laiga'ludan naan peasavillai; in’ru neengga'lea a’rinthuko'l'lungga'l. (ubaagamam
11:6)
கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள்
கண்கள் அல்லவோ கண்டது.
(உபாகமம் 11:7)
karththar seytha magaththuvamaana kiriyaiga'laiyellaam ungga'l ka'nga'l allavoa
ka'ndathu. (ubaagamam 11:7)
ஆகையால் நீங்கள்
பலப்படும்படிக்கும், (உபாகமம் 11:8)
aagaiyaal neengga'l balappadumpadikkum,
(ubaagamam 11:8)
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள்
பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும், கர்த்தர்
உங்கள் பிதாக்களுக்கும் அவர்கள்
சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட
பாலும் தேனும் ஓடுகிற
தேசத்தில் நீங்கள் நீடித்து
வாழும்படிக்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற
கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக. (உபாகமம்
11:9)
neengga'l suthantharikkappoagi’ra theasaththukku'l piraveasiththu athaich suthantharikkumpadikkum, karththar
ungga'l
pithaakka'lukkum avarga'l santhathikkum koduppean
en’ru
avarga'lukku aa'naiyitta paalum
theanum oadugi’ra theasaththil neengga'l neediththu vaazhumpadikkum, in’ru naan ungga'lukkuk ka’rpikki’ra ka’rpanaiga'laiyellaam kaikko'lveerga'laaga. (ubaagamam
11:9)
நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த
எகிப்து தேசத்தைப்போல் இராது;
அங்கே நீ விதையை
விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய்.
(உபாகமம் 11:10)
nee suthantharikkappoagi’ra theasam nee vittuvantha egipthu theasaththaippoal iraathu;
anggea
nee vithaiyai vithaiththu,
keeraiththoattaththi’rku neerppaaychchugi’rathupoala
un kaalaal neerppaaychchi vanthaay.
(ubaagamam 11:10)
நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ,
மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்;
அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும்
தேசம்; (உபாகமம் 11:11)
neengga'l suthantharikkappoagi’ra theasamoa, malaiga'lum pa'l'laththaakkuga'lumu'l'la theasam; athu vaanaththin
mazhaith tha'n'neeraik kudikkum
theasam;
(ubaagamam 11:11)
அது உன் தேவனாகிய கர்த்தர்
விசாரிக்கிற தேசம், வருஷத்தின்
துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும்
எப்பொழுதும் உன் தேவனாகிய
கர்த்தரின் கண்கள் அதின்மேல்
வைக்கப்பட்டிருக்கும். (உபாகமம் 11:12)
athu un theavanaagiya karththar visaarikki’ra theasam, varushaththin thuvakkamuthal varushaththin
mudivumattum eppozhuthum
un theavanaagiya karththarin ka'nga'l athinmeal
vaikkappattirukkum. (ubaagamam
11:12)
நீங்கள் உங்கள்
தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள்
முழு இருதயத்தோடும் உங்கள்
முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து, அவரைச்
சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற
என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், (உபாகமம்
11:13)
neengga'l ungga'l theavanaagiya karththaridaththil ungga'l muzhu iruthayaththoadum ungga'l muzhu aaththumaavoadum anbukoornthu, avaraich seavikkumpadi, naan in’ru ungga'lukkuk ka’rpikki’ra en ka’rpanaiga'lukkuk keezhppadinthaal, (ubaagamam
11:13)
நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள்
தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி,
(உபாகமம் 11:14)
nee un thaaniyaththaiyum un thiraadcharasaththaiyum un e'n'neyaiyum
searkkumpadikku, naan eat’rakaalaththil
ungga'l
theasaththil munmaariyaiyum pinmaariyaiyum peyyappa'n'ni, (ubaagamam
11:14)
மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படி செய்வேன்,
நீ சாப்பிட்டுத் திர்ப்தியடைவாய் என்கிறார்.
(உபாகமம் 11:15)
mirugajeevanga'lukkaaga un ve'liga'lilea pul mu'laikkumpadi
seyvean, nee saappittuth thirpthiyadaivaay engi’raar. (ubaagamam
11:15)
உங்கள் இருதயம்
வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி
அந்நிய தேவர்களைச் சேவித்து
அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி
எச்சரிக்கையாயிருங்கள். (உபாகமம் 11:16)
ungga'l iruthayam vagnchikkappadaamalum, neengga'l vazhivilagi anniya
theavarga'laich
seaviththu avarga'lai namaskariyaamalum irukkumpadi
echcharikkaiyaayirungga'l. (ubaagamam 11:16)
இல்லாவிடில் கர்த்தருடைய
கோபம் உங்கள்மேல் மூண்டு,
மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக்
கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; கர்த்தர்
உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள்
சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள். (உபாகமம்
11:17)
illaavidil karththarudaiya koabam ungga'lmeal moo'ndu,
mazhai peyyaama’rpoagavum, theasam than palanaik kodaamalirukkavum vaanaththai
adaiththuppoaduvaar; karththar ungga'lukkuk koduththa
nalla theasaththilirunthu neengga'l seekkiraththil azhinthupoaveerga'l. (ubaagamam
11:17)
ஆகையால் கர்த்தர்
உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன்
என்று அவர்களுக்கு ஆணையிட்ட
தேசத்தில் உங்கள் நாட்களும்,
உங்கள் பிள்ளைகளின் நாட்களும்,
பூமியின்மேல் வானம் இருக்கும்
நாட்களைப்போல அநேகமாயிருக்கும்படிக்கு, (உபாகமம்
11:18)
aagaiyaal karththar ungga'l pithaakka'lukkuk koduppean
en’ru
avarga'lukku aa'naiyitta theasaththil ungga'l naadka'lum,
ungga'l
pi'l'laiga'lin naadka'lum,
boomiyinmeal vaanam
irukkum naadka'laippoala aneagamaayirukkumpadikku, (ubaagamam
11:18)
நீங்கள் என் வார்த்தைகளை உங்கள்
இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும்
பதித்து, அவைகளை உங்கள்
கையின்மேல் அடையாளமாகக் கட்டி,
உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து,
(உபாகமம் 11:19)
neengga'l en vaarththaiga'lai ungga'l iruthayaththilum ungga'l aaththumaavilum pathiththu,
avaiga'lai ungga'l kaiyinmeal
adaiyaa'lamaagak katti, ungga'l ka'nga'lin naduvea
gnaabagakku’riyaaga vaiththu, (ubaagamam
11:19)
அவைகளை உங்கள்
பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள்
வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே
நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசுவீர்களாக.
(உபாகமம் 11:20)
avaiga'lai ungga'l pi'l'laiga'lukku ubatheasiththu, neengga'l veettil udkaarnthirukki’rapoathum, vazhiyilea
nadakki’rapoathum, paduththukko'l'lugi’rapoathum, ezhunthirukki’rapoathum avaiga'laikku’riththup peasuveerga'laaga. (ubaagamam 11:20)
அவைகளை உங்கள்
வீட்டு நிலைகளிலும் உங்கள்
வாசல்களிலும் எழுதுவீர்களாக. (உபாகமம்
11:21)
avaiga'lai ungga'l veettu nilaiga'lilum ungga'l vaasalga'lilum ezhuthuveerga'laaga. (ubaagamam 11:21)
நீங்கள் உங்கள்
தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து,
அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக்
கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால், (உபாகமம்
11:22)
neengga'l ungga'l theavanaagiya karththaridaththil anbukoornthu, avar vazhiga'lilellaam nadanthu, avaraip
pat’rikko'ndirukkumpadi, naan ungga'lukkuch seyyak ka’rpikki’ra inthak ka’rpanaiga'laiyellaam jaakkirathaiyaayk kaikko'lveerga'laanaal, (ubaagamam
11:22)
கர்த்தர் உங்களுக்கு
முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள்
துரத்துவீர்கள். (உபாகமம் 11:23)
karththar ungga'lukku munbaaga antha jaathiga'laiyellaam thuraththividuvaar; ungga'laippaarkkilum janam peruththa balaththa jaathiga'lai neengga'l thuraththuveerga'l. (ubaagamam
11:23)
உங்கள் உள்ளங்கால்
மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும்
தொடங்கி, ஐபிராத்து நதியையும்
தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள்
எல்லையாயிருக்கும். (உபாகமம் 11:24)
ungga'l u'l'langkaal mithikkum
idamellaam ungga'ludaiyathaayirukkum; vanaantharaththaiyum leebanoanaiyum thodanggi, aipiraaththu
nathiyaiyum thodanggi, kadaisich samuththiramvaraikkum ungga'l ellaiyaayirukkum. (ubaagamam
11:24)
உங்கள்முன் ஒருவரும்
எதிர்த்து நிற்பதில்லை; உங்கள்
தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச்
சொன்னபடி உங்களால் உண்டாகும்
பயமும் கெடியும் நீங்கள்
மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரப்பண்ணுவார். (உபாகமம்
11:25)
ungga'lmun oruvarum ethirththu
ni’rpathillai; ungga'l theavanaagiya karththar
ungga'lukkuch
sonnapadi ungga'laal u'ndaagum bayamum kediyum
neengga'l
mithikkum boomiyinmealellaam varappa'n'nuvaar. (ubaagamam
11:25)
இதோ, இன்று நான் உங்களுக்கு
முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும்
வைக்கிறேன். (உபாகமம் 11:26)
ithoa, in’ru naan ungga'lukku munbaaga aaseervaathaththaiyum saabaththaiyum vaikki’rean. (ubaagamam
11:26)
இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற
உங்கள் தேவனாகிய கர்த்தரின்
கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும்,
(உபாகமம் 11:27)
in’ru naan ungga'lukkuk ka’rpikki’ra ungga'l theavanaagiya karththarin ka’rpanaiga'lukkuk keezhppadintheerga'laanaal aaseervaathamum, (ubaagamam 11:27)
எங்கள் தேவனாகிய
கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு
விதிக்கிற வழியைவிட்டு விலகி,
நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும்
வரும். (உபாகமம் 11:28)
engga'l theavanaagiya karththarin ka’rpanaiga'lukkuk keezhppadiyaamal, in’ru naan ungga'lukku vithikki’ra vazhiyaivittu vilagi, neengga'l a’riyaatha vea’rea theavarga'laip pinpat’ruveerga'laanaal saabamum varum.
(ubaagamam 11:28)
நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில்
உன் தேவனாகிய கர்த்தர்
உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போது, கெரிசீம்
மலையின்மேல் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும்
கூறக்கடவாய். (உபாகமம் 11:29)
nee suthantharikkappoagi’ra theasaththil un theavanaagiya karththar
unnaip piraveasikkappa'n'numpoathu,
keriseem
malaiyinmeal aaseervaathaththaiyum
eabaal
malaiyinmeal saabaththaiyum koo’rakkadavaay. (ubaagamam
11:29)
அவைகள் யோர்தானுக்கு
அப்புறத்திலே சூரியன் அஸ்தமிக்கிற
மேற்குவழியாய்க் கானானியர் குடியிருக்கிற
நாட்டு வெளியிலே கில்காலுக்கு
எதிரான மோரே என்னும்
சமபூமியின் அருகேயல்லவோ இருக்கிறது?
(உபாகமம் 11:30)
avaiga'l yoarthaanukku appu’raththilea
sooriyan asthamikki’ra mea’rkuvazhiyaayk kaanaaniyar
kudiyirukki’ra naattu ve'liyilea
kilgaalukku ethiraana
moarea ennum samaboomiyin arugeayallavoa irukki’rathu? (ubaagamam 11:30)
உங்கள் தேவனாகிய
கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற
தேசத்தைச் சுதந்தரிப்பதற்கு, நீங்கள்
யோர்தானைக் கடந்துபோய், அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருப்பீர்கள். (உபாகமம்
11:31)
ungga'l theavanaagiya karththar ungga'lukkuk kodukki’ra theasaththaich suthantharippatha’rku, neengga'l yoarthaanaik kadanthupoay,
athaich suthanthariththukko'ndu, athilea
kudiyiruppeerga'l. (ubaagamam
11:31)
ஆகையால் உங்களுக்கு
இன்று நான் ஏற்படுத்துகிற
சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு
நடக்கக்கடவீர்கள். (உபாகமம் 11:32)
aagaiyaal ungga'lukku in’ru naan ea’rpaduththugi’ra sagala
katta'laiga'laiyum, niyaayangga'laiyum kaikko'ndu
nadakkakkadaveerga'l. (ubaagamam
11:32)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!