Monday, August 29, 2016

2 Saamuveal 14 | 2 சாமுவேல் 14 | 2 Samuel 14

ராஜாவின்  இருதயம்  அப்சலோமின்மேல்  இன்னும்  தாங்கலாயிருக்கிறதைச்  செரூயாவின்  குமாரன்  யோவாப்  கண்டு,  (2சாமுவேல்  14:1)

raajaavin  iruthayam  absaloaminmeal  innum  thaanggalaayirukki’rathaich  serooyaavin  kumaaran  yoavaab  ka'ndu,  (2saamuveal  14:1)

அவன்  தெக்கோவாவிலிருக்கிற  புத்தியுள்ள  ஒரு  ஸ்திரீயை  அழைத்து:  நீ  இழவு  கொண்டாடுகிறவளைப்போல,  துக்கவஸ்திரங்களை  உடுத்திக்கொண்டு,  எண்ணெய்  பூசிக்கொள்ளாமல்,  இறந்துபோனவனுக்காக  நெடுநாள்  துக்கிக்கிற  ஸ்திரீயைப்போலக்  காண்பித்து,  (2சாமுவேல்  14:2)

avan  thekkoavaavilirukki’ra  buththiyu'l'la  oru  sthireeyai  azhaiththu:  nee  izhavu  ko'ndaadugi’rava'laippoala,  thukkavasthirangga'lai  uduththikko'ndu,  e'n'ney  poosikko'l'laamal,  i’ranthupoanavanukkaaga  nedunaa'l  thukkikki’ra  sthireeyaippoalak  kaa'nbiththu,  (2saamuveal  14:2)

ராஜாவினிடத்தில்  போய்,  அவரை  நோக்கி:  இன்ன  இன்ன  பிரகாரமாகச்  சொல்  என்று  அவள்  சொல்லவேண்டிய  வார்த்தைகளை  யோவாப்  அவள்  வாயிலே  போட்டான்.  (2சாமுவேல்  14:3)

raajaavinidaththil  poay,  avarai  noakki:  inna  inna  piragaaramaagach  sol  en’ru  ava'l  sollavea'ndiya  vaarththaiga'lai  yoavaab  ava'l  vaayilea  poattaan.  (2saamuveal  14:3)

அப்படியே  தெக்கோவா  ஊராளான  அந்த  ஸ்திரீ  ராஜாவோடே  பேசப்போய்,  தரையிலே  முகங்குப்புற  விழுந்து  வணங்கி:  ராஜாவே,  இரட்சியும்  என்றாள்.  (2சாமுவேல்  14:4)

appadiyea  thekkoavaa  ooraa'laana  antha  sthiree  raajaavoadea  peasappoay,  tharaiyilea  mugangkuppu’ra  vizhunthu  va'nanggi:  raajaavea,  iradchiyum  en’raa'l.  (2saamuveal  14:4)

ராஜா  அவளைப்  பார்த்து:  உனக்கு  என்ன  வேண்டும்  என்றதற்கு,  அவள்:  நான்  விதவையானவள்,  என்  புருஷன்  சென்றுபோனான்.  (2சாமுவேல்  14:5)

raajaa  ava'laip  paarththu:  unakku  enna  vea'ndum  en’ratha’rku,  ava'l:  naan  vithavaiyaanava'l,  en  purushan  sen’rupoanaan.  (2saamuveal  14:5)

உமது  அடியாளுக்கு  இரண்டு  குமாரர்  இருந்தார்கள்;  அவர்கள்  இருவரும்  வெளியிலே  சண்டைபண்ணி,  அவர்களை  விலக்க  ஒருவரும்  இல்லாதபடியினால்,  ஒருவன்  மற்றவனை  அடித்துக்  கொன்றுபோட்டான்.  (2சாமுவேல்  14:6)

umathu  adiyaa'lukku  ira'ndu  kumaarar  irunthaarga'l;  avarga'l  iruvarum  ve'liyilea  sa'ndaipa'n'ni,  avarga'lai  vilakka  oruvarum  illaathapadiyinaal,  oruvan  mat’ravanai  adiththuk  kon’rupoattaan.  (2saamuveal  14:6)

வம்சத்தார்  எல்லாரும்  உம்முடைய  அடியாளுக்கு  விரோதமாய்  எழும்பி,  தன்  சகோதரனைக்  கொன்றுபோட்டவனை  ஒப்பி;  அவன்  கொன்ற  அவன்  சகோதரனுடைய  பிராணனுக்காக  நாங்கள்  அவனைக்  கொன்றுபோடுவோம்;  சுதந்தரவாளனாயினும்  அவனையும்  அழித்துப்போடுவோம்  என்கிறார்கள்.  இப்படி  என்  புருஷனுக்குப்  பேரும்  நீதியும்  பூமியின்மேல்  வைக்கப்படாதபடிக்கு,  எனக்கு  இன்னும்  மீதியாயிருக்கிற  பொறியையும்  அவித்துப்போட  மனதாயிருக்கிறார்கள்  என்றாள்.  (2சாமுவேல்  14:7)

vamsaththaar  ellaarum  ummudaiya  adiyaa'lukku  viroathamaay  ezhumbi,  than  sagoatharanaik  kon’rupoattavanai  oppi;  avan  kon’ra  avan  sagoatharanudaiya  piraa'nanukkaaga  naangga'l  avanaik  kon’rupoaduvoam;  suthantharavaa'lanaayinum  avanaiyum  azhiththuppoaduvoam  engi’raarga'l.  ippadi  en  purushanukkup  pearum  neethiyum  boomiyinmeal  vaikkappadaathapadikku,  enakku  innum  meethiyaayirukki’ra  po’riyaiyum  aviththuppoada  manathaayirukki’raarga'l  en’raa'l.  (2saamuveal  14:7)

ராஜா  அந்த  ஸ்திரீயைப்  பார்த்து:  நீ  உன்  வீட்டுக்குப்  போ,  உன்  காரியத்தைக்குறித்து  உத்தரவு  கொடுப்பேன்  என்றான்.  (2சாமுவேல்  14:8)

raajaa  antha  sthireeyaip  paarththu:  nee  un  veettukkup  poa,  un  kaariyaththaikku’riththu  uththaravu  koduppean  en’raan.  (2saamuveal  14:8)

பின்னும்  அந்தத்  தெக்கோவாவூர்  ஸ்திரீ  ராஜாவைப்  பார்த்து:  ராஜாவாகிய  என்  ஆண்டவனே,  ராஜாவின்மேலும்  அவர்  சிங்காசனத்தின்மேலும்  குற்றமில்லாதபடிக்கு,  அந்தப்  பழி  என்மேலும்  என்  தகப்பன்  வீட்டின்மேலும்  சுமரக்கடவது  என்றாள்.  (2சாமுவேல்  14:9)

pinnum  anthath  thekkoavaavoor  sthiree  raajaavaip  paarththu:  raajaavaagiya  en  aa'ndavanea,  raajaavinmealum  avar  singgaasanaththinmealum  kut’ramillaathapadikku,  anthap  pazhi  enmealum  en  thagappan  veettinmealum  sumarakkadavathu  en’raa'l.  (2saamuveal  14:9)

அதற்கு  ராஜா:  உனக்கு  விரோதமாகப்  பேசுகிறவனை  என்னிடத்தில்  கொண்டுவா;  அப்பொழுது  அவன்  இனி  உன்னைத்  தொடாதிருப்பான்  என்றான்.  (2சாமுவேல்  14:10)

atha’rku  raajaa:  unakku  viroathamaagap  peasugi’ravanai  ennidaththil  ko'nduvaa;  appozhuthu  avan  ini  unnaith  thodaathiruppaan  en’raan.  (2saamuveal  14:10)

பின்னும்  அவள்:  இரத்தப்பழி  வாங்குகிறவர்கள்  அழிம்புசெய்து,  என்  குமாரனை  அதம்பண்ணப்  பெருகிப்போகாதபடிக்கு,  ராஜாவானவர்  தம்முடைய  தேவனாகிய  கர்த்தரை  நினைப்பாராக  என்றாள்.  அதற்கு  ராஜா:  உன்  குமாரனுடைய  மயிரில்  ஒன்றாவது  தரையில்  விழுவதில்லை  என்று  கர்த்தரின்  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்.  (2சாமுவேல்  14:11)

pinnum  ava'l:  iraththappazhi  vaanggugi’ravarga'l  azhimbuseythu,  en  kumaaranai  athampa'n'nap  perugippoagaathapadikku,  raajaavaanavar  thammudaiya  theavanaagiya  karththarai  ninaippaaraaga  en’raa'l.  atha’rku  raajaa:  un  kumaaranudaiya  mayiril  on’raavathu  tharaiyil  vizhuvathillai  en’ru  karththarin  jeevanaikko'ndu  sollugi’rean  en’raan.  (2saamuveal  14:11)

அப்பொழுது  அந்த  ஸ்திரீ:  ராஜாவாகிய  என்  ஆண்டவனோடே  உமது  அடியாள்  ஒரு  வார்த்தைசொல்ல  உத்தரவாக  வேண்டும்  என்றாள்.  அவன்:  சொல்லு  என்றான்.  (2சாமுவேல்  14:12)

appozhuthu  antha  sthiree:  raajaavaagiya  en  aa'ndavanoadea  umathu  adiyaa'l  oru  vaarththaisolla  uththaravaaga  vea'ndum  en’raa'l.  avan:  sollu  en’raan.  (2saamuveal  14:12)

அப்பொழுது  அந்த  ஸ்திரீ:  பின்னை  ஏன்  தேவனுடைய  ஜனத்திற்கு  விரோதமாய்  இப்படிப்பட்ட  நினைவை  நீர்  கொண்டிருக்கிறீர்,  துரத்துண்ட  தம்முடையவனை  ராஜா  திரும்ப  அழைக்காததினாலே,  ராஜா  இப்பொழுது  சொன்ன  வார்த்தையினால்  குற்றமுள்ளவரைப்போல்  இருக்கிறார்.  (2சாமுவேல்  14:13)

appozhuthu  antha  sthiree:  pinnai  ean  theavanudaiya  janaththi’rku  viroathamaay  ippadippatta  ninaivai  neer  ko'ndirukki’reer,  thuraththu'nda  thammudaiyavanai  raajaa  thirumba  azhaikkaathathinaalea,  raajaa  ippozhuthu  sonna  vaarththaiyinaal  kut’ramu'l'lavaraippoal  irukki’raar.  (2saamuveal  14:13)

நாம்  மரிப்பது  நிச்சயம்,  திரும்பச்  சேர்க்கக்கூடாதபடிக்கு,  தரையிலே  சுவறுகிற  தண்ணீரைப்போல்  இருக்கிறோம்;  தேவன்  ஜீவனை  எடுத்துக்கொள்ளாமல்,  துரத்துண்டவன்  முற்றிலும்  தம்மைவிட்டு  விலக்கப்படாதிருக்கும்  நினைவுகளை  நினைக்கிறார்.  (2சாமுவேல்  14:14)

naam  marippathu  nichchayam,  thirumbach  searkkakkoodaathapadikku,  tharaiyilea  suva’rugi’ra  tha'n'neeraippoal  irukki’roam;  theavan  jeevanai  eduththukko'l'laamal,  thuraththu'ndavan  mut’rilum  thammaivittu  vilakkappadaathirukkum  ninaivuga'lai  ninaikki’raar.  (2saamuveal  14:14)

இப்போதும்  நான்  என்  ஆண்டவனாகிய  ராஜாவோடே  இந்த  வார்த்தையைப்  பேசவந்த  முகாந்தரம்  என்னவென்றால்:  ஜனங்கள்  எனக்குப்  பயமுண்டாக்கினதினால்,  நான்  ராஜாவோடே  பேசவந்தேன்;  ஒருவேளை  ராஜா  தமது  அடியாளுடைய  வார்த்தையின்படி  செய்வார்  என்று  உமது  அடியாளாகிய  நான்  நினைத்ததினாலும்  வந்தேனே  ஒழிய  வேறில்லை.  (2சாமுவேல்  14:15)

ippoathum  naan  en  aa'ndavanaagiya  raajaavoadea  intha  vaarththaiyaip  peasavantha  mugaantharam  ennaven’raal:  janangga'l  enakkup  bayamu'ndaakkinathinaal,  naan  raajaavoadea  peasavanthean;  oruvea'lai  raajaa  thamathu  adiyaa'ludaiya  vaarththaiyinpadi  seyvaar  en’ru  umathu  adiyaa'laagiya  naan  ninaiththathinaalum  vantheanea  ozhiya  vea’rillai.  (2saamuveal  14:15)

என்னையும்  என்  குமாரனையும்  ஏகமாய்த்  தேவனுடைய  சுதந்தரத்திற்குப்  புறம்பாக்கி,  அழிக்க  நினைக்கிற  மனுஷனுடைய  கைக்குத்  தமது  அடியாளை  நீங்கலாக்கிவிடும்படிக்கு  ராஜா  கேட்பார்.  (2சாமுவேல்  14:16)

ennaiyum  en  kumaaranaiyum  eagamaayth  theavanudaiya  suthantharaththi’rkup  pu’rambaakki,  azhikka  ninaikki’ra  manushanudaiya  kaikkuth  thamathu  adiyaa'lai  neenggalaakkividumpadikku  raajaa  keadpaar.  (2saamuveal  14:16)

ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  வார்த்தை  எனக்கு  ஆறுதலாயிருக்கும்  என்று  உமது  அடியாளாகிய  நான்  எண்ணினேன்;  நன்மையையும்  தீமையையும்  கேட்கும்படி,  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  தேவனுடைய  தூதனைப்போல  இருக்கிறார்;  இதற்காக  உம்முடைய  தேவனாகிய  கர்த்தர்  உம்மோடேகூட  இருக்கிறார்  என்றாள்.  (2சாமுவேல்  14:17)

raajaavaagiya  en  aa'ndavanudaiya  vaarththai  enakku  aa’ruthalaayirukkum  en’ru  umathu  adiyaa'laagiya  naan  e'n'ninean;  nanmaiyaiyum  theemaiyaiyum  keadkumpadi,  raajaavaagiya  en  aa'ndavan  theavanudaiya  thoothanaippoala  irukki’raar;  itha’rkaaga  ummudaiya  theavanaagiya  karththar  ummoadeakooda  irukki’raar  en’raa'l.  (2saamuveal  14:17)

அப்பொழுது  ராஜா  அந்த  ஸ்திரீக்குப்  பிரதியுத்தரமாக:  நான்  உன்னிடத்தில்  கேட்கும்  காரியத்தை  நீ  எனக்கு  மறைக்கவேண்டாம்  என்றான்.  அதற்கு  அந்த  ஸ்திரீ,  ராஜாவாகிய  என்  ஆண்டவர்  சொல்வாராக  என்றாள்.  (2சாமுவேல்  14:18)

appozhuthu  raajaa  antha  sthireekkup  pirathiyuththaramaaga:  naan  unnidaththil  keadkum  kaariyaththai  nee  enakku  ma’raikkavea'ndaam  en’raan.  atha’rku  antha  sthiree,  raajaavaagiya  en  aa'ndavar  solvaaraaga  en’raa'l.  (2saamuveal  14:18)

அப்பொழுது  ராஜா:  இதிலெல்லாம்  யோவாப்  உனக்கு  உட்கையாய்  இருக்கவில்லையா  என்று  கேட்டான்.  அதற்கு  ஸ்திரீ  பிரதியுத்தரமாக,  ராஜாவாகிய  என்  ஆண்டவன்  சொன்னதற்கெல்லாம்  வலதுபக்கத்திலாவது  இடதுபக்கத்திலாவது  விலகுவதற்கு  ஒருவராலும்  கூடாது  என்று  ராஜாவாகிய  என்  ஆண்டவனுடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்;  உமது  அடியானாகிய  யோவாப்தான்  இதை  எனக்குக்  கற்பித்து,  அவனே  இந்த  எல்லா  வார்த்தைகளையும்  உமது  அடியாளின்  வாயிலே  போட்டான்.  (2சாமுவேல்  14:19)

appozhuthu  raajaa:  ithilellaam  yoavaab  unakku  udkaiyaay  irukkavillaiyaa  en’ru  keattaan.  atha’rku  sthiree  pirathiyuththaramaaga,  raajaavaagiya  en  aa'ndavan  sonnatha’rkellaam  valathupakkaththilaavathu  idathupakkaththilaavathu  vilaguvatha’rku  oruvaraalum  koodaathu  en’ru  raajaavaagiya  en  aa'ndavanudaiya  jeevanaikko'ndu  sollugi’rean;  umathu  adiyaanaagiya  yoavaabthaan  ithai  enakkuk  ka’rpiththu,  avanea  intha  ellaa  vaarththaiga'laiyum  umathu  adiyaa'lin  vaayilea  poattaan.  (2saamuveal  14:19)

நான்  இந்தக்  காரியத்தை  உபமானமாய்ப்  பேசுகிறதற்கு  உமது  அடியானாகிய  யோவாப்  அதற்குக்  காரணமாயிருந்தான்;  ஆனாலும்  தேசத்தில்  நடக்கிறதையெல்லாம்  அறிய,  என்  ஆண்டவனுடைய  ஞானம்  தேவதூதனுடைய  ஞானத்தைப்போல்  இருக்கிறது  என்றாள்.  (2சாமுவேல்  14:20)

naan  inthak  kaariyaththai  ubamaanamaayp  peasugi’ratha’rku  umathu  adiyaanaagiya  yoavaab  atha’rkuk  kaara'namaayirunthaan;  aanaalum  theasaththil  nadakki’rathaiyellaam  a’riya,  en  aa'ndavanudaiya  gnaanam  theavathoothanudaiya  gnaanaththaippoal  irukki’rathu  en’raa'l.  (2saamuveal  14:20)

அப்பொழுது  ராஜா  யோவாபைப்பார்த்து:  இதோ,  இந்தக்  காரியத்தைச்  செய்கிறேன்,  நீ  போய்  அப்சலோம்  என்னும்  பிள்ளையாண்டானைத்  திரும்ப  அழைத்துக்கொண்டுவா  என்றான்.  (2சாமுவேல்  14:21)

appozhuthu  raajaa  yoavaabaippaarththu:  ithoa,  inthak  kaariyaththaich  seygi’rean,  nee  poay  absaloam  ennum  pi'l'laiyaa'ndaanaith  thirumba  azhaiththukko'nduvaa  en’raan.  (2saamuveal  14:21)

அப்பொழுது  யோவாப்  தரையிலே  முகங்குப்புற  விழுந்து  வணங்கி,  ராஜாவை  வாழ்த்தி:  ராஜா  தமது  அடியானுடைய  வார்த்தையின்படி  செய்ததினால்,  என்  ஆண்டவனாகிய  ராஜாவின்  கண்களில்  எனக்குத்  தயைகிடைத்தது  என்று  இன்று  உமது  அடியானுக்குத்  தெரியவந்தது  என்றான்.  (2சாமுவேல்  14:22)

appozhuthu  yoavaab  tharaiyilea  mugangkuppu’ra  vizhunthu  va'nanggi,  raajaavai  vaazhththi:  raajaa  thamathu  adiyaanudaiya  vaarththaiyinpadi  seythathinaal,  en  aa'ndavanaagiya  raajaavin  ka'nga'lil  enakkuth  thayaikidaiththathu  en’ru  in’ru  umathu  adiyaanukkuth  theriyavanthathu  en’raan.  (2saamuveal  14:22)

பின்பு  யோவாப்  எழுந்து,  கேசூருக்குப்  போய்,  அப்சலோமை  எருசலேமுக்கு  அழைத்துக்கொண்டுவந்தான்.  (2சாமுவேல்  14:23)

pinbu  yoavaab  ezhunthu,  keasoorukkup  poay,  absaloamai  erusaleamukku  azhaiththukko'nduvanthaan.  (2saamuveal  14:23)

ராஜா:  அவன்  என்  முகத்தைப்  பார்க்கவேண்டியதில்லை;  தன்  வீட்டுக்குத்  திரும்பிப்போகட்டும்  என்றான்;  அப்படியே  அப்சலோம்  ராஜாவின்  முகத்தைப்  பார்க்காமல்  தன்  வீட்டுக்குத்  திரும்பிப்போனான்.  (2சாமுவேல்  14:24)

raajaa:  avan  en  mugaththaip  paarkkavea'ndiyathillai;  than  veettukkuth  thirumbippoagattum  en’raan;  appadiyea  absaloam  raajaavin  mugaththaip  paarkkaamal  than  veettukkuth  thirumbippoanaan.  (2saamuveal  14:24)

இஸ்ரவேலர்  அனைவருக்குள்ளும்  அப்சலோமைப்போல்  சவுந்தரியமுள்ளவனும்  மெச்சிக்கொள்ளப்பட்டவனும்  இல்லை;  உள்ளங்கால்  தொடங்கி  உச்சந்தலைமட்டும்  அவனில்  ஒரு  பழுதும்  இல்லாதிருந்தது.  (2சாமுவேல்  14:25)

isravealar  anaivarukku'l'lum  absaloamaippoal  savunthariyamu'l'lavanum  mechchikko'l'lappattavanum  illai;  u'l'langkaal  thodanggi  uchchanthalaimattum  avanil  oru  pazhuthum  illaathirunthathu.  (2saamuveal  14:25)

அவன்  தன்  தலைமயிர்  தனக்குப்  பாரமாயிருப்பதினால்  வருஷாந்தரம்  சிரைத்துக்கொள்ளுவான்;  சிரைக்கும்போது,  அவன்  தலைமயிர்  ராஜாவுடைய  நிறையின்படி  இருநூறு  சேக்கல்  நிறையாயிருக்கும்.  (2சாமுவேல்  14:26)

avan  than  thalaimayir  thanakkup  baaramaayiruppathinaal  varushaantharam  siraiththukko'l'luvaan;  siraikkumpoathu,  avan  thalaimayir  raajaavudaiya  ni’raiyinpadi  irunoo’ru  seakkal  ni’raiyaayirukkum.  (2saamuveal  14:26)

அப்சலோமுக்கு  மூன்று  குமாரரும்,  தாமார்  என்னும்  பேர்கொண்ட  ஒரு  குமாரத்தியும்  பிறந்திருந்தார்கள்;  இவள்  ரூபவதியான  பெண்ணாயிருந்தாள்.  (2சாமுவேல்  14:27)

absaloamukku  moon’ru  kumaararum,  thaamaar  ennum  pearko'nda  oru  kumaaraththiyum  pi’ranthirunthaarga'l;  iva'l  roobavathiyaana  pe'n'naayirunthaa'l.  (2saamuveal  14:27)

அப்சலோம்,  ராஜாவின்  முகத்தைக்காணாமலே,  இரண்டு  வருஷம்  எருசலேமிலே  குடியிருந்தான்.  (2சாமுவேல்  14:28)

absaloam,  raajaavin  mugaththaikkaa'naamalea,  ira'ndu  varusham  erusaleamilea  kudiyirunthaan.  (2saamuveal  14:28)

ஆகையால்  அப்சலோம்  யோவாபை  ராஜாவினிடத்தில்  அனுப்பும்படி  அழைப்பித்தான்;  அவனோ  அவனிடத்திற்கு  வரமாட்டேன்  என்றான்;  இரண்டாம்விசையும்  அவன்  அழைத்தனுப்பினான்;  அவன்  வரமாட்டேன்  என்றான்.  (2சாமுவேல்  14:29)

aagaiyaal  absaloam  yoavaabai  raajaavinidaththil  anuppumpadi  azhaippiththaan;  avanoa  avanidaththi’rku  varamaattean  en’raan;  ira'ndaamvisaiyum  avan  azhaiththanuppinaan;  avan  varamaattean  en’raan.  (2saamuveal  14:29)

அப்பொழுது  அவன்  தன்  வேலைக்காரரைப்  பார்த்து:  இதோ  என்  நிலத்திற்கு  அருகே  யோவாபின்  நிலம்  இருக்கிறது;  அதிலே  அவனுக்கு  வாற்கோதுமை  விளைந்திருக்கிறது;  நீங்கள்  போய்  அதைத்  தீக்கொளுத்திப்போடுங்கள்  என்றான்;  அப்படியே  அப்சலோமின்  வேலைக்காரர்  அந்த  நிலத்தை  தீக்கொளுத்திப்போட்டார்கள்.  (2சாமுவேல்  14:30)

appozhuthu  avan  than  vealaikkaararaip  paarththu:  ithoa  en  nilaththi’rku  arugea  yoavaabin  nilam  irukki’rathu;  athilea  avanukku  vaa’rkoathumai  vi'lainthirukki’rathu;  neengga'l  poay  athaith  theekko'luththippoadungga'l  en’raan;  appadiyea  absaloamin  vealaikkaarar  antha  nilaththai  theekko'luththippoattaarga'l.  (2saamuveal  14:30)

அப்பொழுது  யோவாப்  எழுந்திருந்து,  அப்சலோமிடத்தில்  வீட்டிற்குள்  போய்,  என்னுடைய  நிலத்தை  உம்முடைய  வேலைக்காரர்  தீக்கொளுத்திப்போட்டது  என்ன  என்று  அவனைக்  கேட்டான்.  (2சாமுவேல்  14:31)

appozhuthu  yoavaab  ezhunthirunthu,  absaloamidaththil  veetti’rku'l  poay,  ennudaiya  nilaththai  ummudaiya  vealaikkaarar  theekko'luththippoattathu  enna  en’ru  avanaik  keattaan.  (2saamuveal  14:31)

அப்சலோம்  யோவாபைப்  பார்த்து:  இதோ,  நான்  ஏன்  கேசூரிலிருந்து  வந்தேன்;  நான்  அங்கே  இருந்துவிட்டால்  நலம்  என்று  ராஜாவுக்குச்  சொல்லும்படி  உம்மை  ராஜாவினிடத்தில்  அனுப்புவதற்காக  உம்மை  இங்கே  வரும்படி  அழைப்பித்தேன்;  இப்போதும்  நான்  ராஜாவின்  முகத்தைப்  பார்க்கட்டும்;  என்மேல்  குற்றமிருந்தால்  அவர்  என்னைக்  கொன்றுபோடட்டும்  என்றான்.  (2சாமுவேல்  14:32)

absaloam  yoavaabaip  paarththu:  ithoa,  naan  ean  keasoorilirunthu  vanthean;  naan  anggea  irunthuvittaal  nalam  en’ru  raajaavukkuch  sollumpadi  ummai  raajaavinidaththil  anuppuvatha’rkaaga  ummai  inggea  varumpadi  azhaippiththean;  ippoathum  naan  raajaavin  mugaththaip  paarkkattum;  enmeal  kut’ramirunthaal  avar  ennaik  kon’rupoadattum  en’raan.  (2saamuveal  14:32)

யோவாப்  ராஜாவினிடத்தில்  போய்,  அதை  அவனுக்கு  அறிவித்தபோது,  அப்சலோமை  அழைப்பித்தான்;  அவன்  ராஜாவினிடத்தில்  வந்து,  ராஜாவுக்கு  முன்பாகத்  தரையிலே  முகங்குப்புற  விழுந்து  வணங்கினான்,  அப்பொழுது  ராஜா  அப்சலோமை  முத்தமிட்டான்.  (2சாமுவேல்  14:33)

yoavaab  raajaavinidaththil  poay,  athai  avanukku  a’riviththapoathu,  absaloamai  azhaippiththaan;  avan  raajaavinidaththil  vanthu,  raajaavukku  munbaagath  tharaiyilea  mugangkuppu’ra  vizhunthu  va'nangginaan,  appozhuthu  raajaa  absaloamai  muththamittaan.  (2saamuveal  14:33)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!