Friday, August 26, 2016

2 Saamuveal 1 | 2 சாமுவேல் 1 | 2 Samuel 1

சவுல்  மரித்தபின்பு,  தாவீது  அமலேக்கியரை  முறிய  அடித்து,  சிக்லாகுக்குத்  திரும்பிவந்து,  இரண்டுநாள்  அங்கே  இருந்தபிற்பாடு,  (2சாமுவேல்  1:1)

savul  mariththapinbu,  thaaveethu  amaleakkiyarai  mu’riya  adiththu,  siklaagukkuth  thirumbivanthu,  ira'ndunaa'l  anggea  irunthapi’rpaadu,  (2saamuveal  1:1)

மூன்றாம்  நாளிலே  ஒரு  மனுஷன்  சவுலின்  பாளயத்திலிருந்து  புறப்பட்டு,  தன்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  தன்  தலையின்மேல்  புழுதியைப்  போட்டுக்  கொண்டு,  தாவீதினிடத்தில்  வந்து,  தரையிலே  விழுந்து  வணங்கினான்.  (2சாமுவேல்  1:2)

moon’raam  naa'lilea  oru  manushan  savulin  paa'layaththilirunthu  pu’rappattu,  than  vasthirangga'laik  kizhiththukko'ndu,  than  thalaiyinmeal  puzhuthiyaip  poattuk  ko'ndu,  thaaveethinidaththil  vanthu,  tharaiyilea  vizhunthu  va'nangginaan.  (2saamuveal  1:2)

தாவீது  அவனைப்  பார்த்து:  நீ  எங்கேயிருந்து  வந்தாய்  என்று  கேட்டதற்கு,  அவன்:  இஸ்ரவேலின்  பாளயத்திலிருந்து  தப்பிவந்தேன்  என்றான்.  (2சாமுவேல்  1:3)

thaaveethu  avanaip  paarththu:  nee  enggeayirunthu  vanthaay  en’ru  keattatha’rku,  avan:  isravealin  paa'layaththilirunthu  thappivanthean  en’raan.  (2saamuveal  1:3)

தாவீது  அவனைப்  பார்த்து:  நடந்த  செய்தி  என்ன?  சொல்  என்று  கேட்டதற்கு,  அவன்:  ஜனங்கள்  யுத்தத்தைவிட்டு  முறிந்தோடிப்போனார்கள்;  ஜனங்களில்  அநேகம்பேர்  விழுந்து  மடிந்துபோனார்கள்;  சவுலும்  அவர்  குமாரனாகிய  யோனத்தானும்  மடிந்தார்கள்  என்றான்.  (2சாமுவேல்  1:4)

thaaveethu  avanaip  paarththu:  nadantha  seythi  enna?  sol  en’ru  keattatha’rku,  avan:  janangga'l  yuththaththaivittu  mu’rinthoadippoanaarga'l;  janangga'lil  aneagampear  vizhunthu  madinthupoanaarga'l;  savulum  avar  kumaaranaagiya  yoanaththaanum  madinthaarga'l  en’raan.  (2saamuveal  1:4)

சவுலும்  அவர்  குமாரனாகிய  யோனத்தானும்  மடிந்துபோனது  உனக்கு  எப்படித்  தெரியும்  என்று  தாவீது  தனக்கு  அதை  அறிவிக்கிற  வாலிபனிடத்தில்  கேட்டதற்கு,  (2சாமுவேல்  1:5)

savulum  avar  kumaaranaagiya  yoanaththaanum  madinthupoanathu  unakku  eppadith  theriyum  en’ru  thaaveethu  thanakku  athai  a’rivikki’ra  vaalibanidaththil  keattatha’rku,  (2saamuveal  1:5)

அந்த  வாலிபன்:  நான்  தற்செயலாய்க்  கில்போவா  மலைக்குப்  போனேன்;  அப்பொழுது  இதோ,  சவுல்  தம்முடைய  ஈட்டியின்மேல்  சாய்ந்துகொண்டிருந்தார்;  இரதங்களும்  குதிரைவீரரும்  அவரைத்  தொடர்ந்து  நெருங்கினார்கள்.  (2சாமுவேல்  1:6)

antha  vaaliban:  naan  tha’rseyalaayk  kilboavaa  malaikkup  poanean;  appozhuthu  ithoa,  savul  thammudaiya  eettiyinmeal  saaynthuko'ndirunthaar;  irathangga'lum  kuthiraiveerarum  avaraith  thodarnthu  nerungginaarga'l.  (2saamuveal  1:6)

அவர்  திரும்பிப்  பார்த்து:  என்னைக்  கண்டு  கூப்பிட்டார்;  அதற்கு  நான்:  இதோ,  இருக்கிறேன்  என்றேன்.  (2சாமுவேல்  1:7)

avar  thirumbip  paarththu:  ennaik  ka'ndu  kooppittaar;  atha’rku  naan:  ithoa,  irukki’rean  en’rean.  (2saamuveal  1:7)

அப்பொழுது  அவர்:  நீ  யார்  என்று  என்னைக்  கேட்டார்;  நான்  அமலேக்கியன்  என்று  சொன்னேன்.  (2சாமுவேல்  1:8)

appozhuthu  avar:  nee  yaar  en’ru  ennaik  keattaar;  naan  amaleakkiyan  en’ru  sonnean.  (2saamuveal  1:8)

அவர்  என்னை  நோக்கி:  நீ  என்னண்டையில்  கிட்டவந்து  நின்று,  என்னைக்  கொன்றுபோடு;  என்  பிராணன்  முழுதும்  இன்னும்  போகாததினால்  எனக்கு  வேதனையாயிருக்கிறது  என்றார்.  (2சாமுவேல்  1:9)

avar  ennai  noakki:  nee  enna'ndaiyil  kittavanthu  nin’ru,  ennaik  kon’rupoadu;  en  piraa'nan  muzhuthum  innum  poagaathathinaal  enakku  veathanaiyaayirukki’rathu  en’raar.  (2saamuveal  1:9)

அப்பொழுது  நான்,  அவர்  விழுந்தபின்பு  பிழைக்கமாட்டார்  என்று  நிச்சயித்து,  அவரண்டையில்  போய்  நின்று,  அவரைக்  கொன்றுபோட்டேன்;  பிற்பாடு  அவர்  தலையின்மேல்  இருந்த  முடியையும்  அவர்  புயத்தில்  இருந்த  அஸ்தகடகத்தையும்  எடுத்துக்கொண்டு,  அவைகளை  இங்கே  என்  ஆண்டவனிடத்திற்குக்  கொண்டுவந்தேன்  என்றான்.  (2சாமுவேல்  1:10)

appozhuthu  naan,  avar  vizhunthapinbu  pizhaikkamaattaar  en’ru  nichchayiththu,  avara'ndaiyil  poay  nin’ru,  avaraik  kon’rupoattean;  pi’rpaadu  avar  thalaiyinmeal  iruntha  mudiyaiyum  avar  puyaththil  iruntha  asthakadagaththaiyum  eduththukko'ndu,  avaiga'lai  inggea  en  aa'ndavanidaththi’rkuk  ko'nduvanthean  en’raan.  (2saamuveal  1:10)

அப்பொழுது  தாவீதும்  அவனோடிருந்த  சகல  மனுஷரும்  தங்கள்  வஸ்திரங்களைக்  கிழித்துக்கொண்டு,  (2சாமுவேல்  1:11)

appozhuthu  thaaveethum  avanoadiruntha  sagala  manusharum  thangga'l  vasthirangga'laik  kizhiththukko'ndu,  (2saamuveal  1:11)

சவுலும்,  அவன்  குமாரனாகிய  யோனத்தானும்,  கர்த்தருடைய  ஜனங்களும்,  இஸ்ரவேல்  குடும்பத்தாரும்,  பட்டயத்தாலே  விழுந்தபடியினால்  புலம்பி  அழுது  சாயங்காலமட்டும்  உபவாசமாயிருந்தார்கள்.  (2சாமுவேல்  1:12)

savulum,  avan  kumaaranaagiya  yoanaththaanum,  karththarudaiya  janangga'lum,  israveal  kudumbaththaarum,  pattayaththaalea  vizhunthapadiyinaal  pulambi  azhuthu  saayanggaalamattum  ubavaasamaayirunthaarga'l.  (2saamuveal  1:12)

தாவீது  அதைத்  தனக்கு  அறிவித்த  வாலிபனைப்  பார்த்து:  நீ  எவ்விடத்தான்  என்று  கேட்டதற்கு,  அவன்:  நான்  அந்நிய  ஜாதியானுடைய  மகன்,  நான்  அமலேக்கியன்  என்றான்.  (2சாமுவேல்  1:13)

thaaveethu  athaith  thanakku  a’riviththa  vaalibanaip  paarththu:  nee  evvidaththaan  en’ru  keattatha’rku,  avan:  naan  anniya  jaathiyaanudaiya  magan,  naan  amaleakkiyan  en’raan.  (2saamuveal  1:13)

தாவீது  அவனை  நோக்கி:  கர்த்தர்  அபிஷேகம்பண்ணினவரைக்  கொன்றுபோடும்படி  நீ  உன்  கையை  நீட்டப்  பயப்படாமற்போனது  என்ன  என்று  சொல்லி,  (2சாமுவேல்  1:14)

thaaveethu  avanai  noakki:  karththar  abisheagampa'n'ninavaraik  kon’rupoadumpadi  nee  un  kaiyai  neettap  bayappadaama’rpoanathu  enna  en’ru  solli,  (2saamuveal  1:14)

வாலிபரில்  ஒருவனைக்  கூப்பிட்டு,  நீ  கிட்டப்போய்  அவன்மேல்  விழுந்து,  அவனை  வெட்டு  என்றான்;  அவன்  அவனை  வெட்டினான்;  அவன்  செத்தான்.  (2சாமுவேல்  1:15)

vaalibaril  oruvanaik  kooppittu,  nee  kittappoay  avanmeal  vizhunthu,  avanai  vettu  en’raan;  avan  avanai  vettinaan;  avan  seththaan.  (2saamuveal  1:15)

தாவீது  அவனைப்  பார்த்து:  உன்  இரத்தப்பழி  உன்  தலையின்மேல்  இருப்பதாக;  கர்த்தர்  அபிஷேகம்பண்ணினவரை  நான்  கொன்றுபோட்டேன்  என்று  உன்  வாயே  உனக்கு  விரோதமான  சாட்சி  சொல்லிற்று  என்றான்.  (2சாமுவேல்  1:16)

thaaveethu  avanaip  paarththu:  un  iraththappazhi  un  thalaiyinmeal  iruppathaaga;  karththar  abisheagampa'n'ninavarai  naan  kon’rupoattean  en’ru  un  vaayea  unakku  viroathamaana  saadchi  sollit’ru  en’raan.  (2saamuveal  1:16)

தாவீது  சவுலின்பேரிலும்,  அவன்  குமாரனாகிய  யோனத்தானின்பேரிலும்,  புலம்பல்  பாடினான்.  (2சாமுவேல்  1:17)

thaaveethu  savulinpearilum,  avan  kumaaranaagiya  yoanaththaaninpearilum,  pulambal  paadinaan.  (2saamuveal  1:17)

(வில்வித்தையை  யூதா  புத்திரருக்குக்  கற்றுக்கொடுக்கும்படி  கட்டளையிட்டான்;  அது  யாசேரின்  புஸ்தகத்தில்  எழுதியிருக்கிறது.)  அவன்  பாடின  புலம்பலாவது:  (2சாமுவேல்  1:18)

(vilviththaiyai  yoothaa  puththirarukkuk  kat’rukkodukkumpadi  katta'laiyittaan;  athu  yaasearin  pusthagaththil  ezhuthiyirukki’rathu.)  avan  paadina  pulambalaavathu:  (2saamuveal  1:18)

இஸ்ரவேலின்  அலங்காரம்  உயர்ந்த  ஸ்தானங்களில்  அதமாயிற்று;  பராக்கிரமசாலிகள்  விழுந்துபோனார்கள்.  (2சாமுவேல்  1:19)

isravealin  alanggaaram  uyarntha  sthaanangga'lil  athamaayit’ru;  baraakkiramasaaliga'l  vizhunthupoanaarga'l.  (2saamuveal  1:19)

பெலிஸ்தரின்  குமாரத்திகள்  சந்தோஷப்படாதபடிக்கும்,  விருத்தசேதனம்  இல்லாதவர்களின்  குமாரத்திகள்  களிகூராதபடிக்கும்,  அதைக்  காத்பட்டணத்தில்  அறிவியாமலும்  அஸ்கலோனின்  வீதிகளில்  பிரஸ்தாபப்படுத்தாமலும்  இருங்கள்.  (2சாமுவேல்  1:20)

pelistharin  kumaaraththiga'l  santhoashappadaathapadikkum,  viruththaseathanam  illaathavarga'lin  kumaaraththiga'l  ka'likooraathapadikkum,  athaik  kaathpatta'naththil  a’riviyaamalum  askaloanin  veethiga'lil  pirasthaabappaduththaamalum  irungga'l.  (2saamuveal  1:20)

கில்போவா  மலைகளே,  உங்கள்மேல்  பனியும்  மழையும்  பெய்யாமலும்,  காணிக்கைக்கு  ஏற்ற  பலன்தரும்  வயல்கள்  இராமலும்  போவதாக;  அங்கே  பராக்கிரமசாலிகளுடைய  கேடகம்  அவமதிக்கப்பட்டது;  சவுல்  தைலத்தால்  அபிஷேகம்பண்ணப்படாதவர்போல  அவர்  கேடகமும்  அவமதிக்கப்பட்டதே.  (2சாமுவேல்  1:21)

kilboavaa  malaiga'lea,  ungga'lmeal  paniyum  mazhaiyum  peyyaamalum,  kaa'nikkaikku  eat’ra  palantharum  vayalga'l  iraamalum  poavathaaga;  anggea  baraakkiramasaaliga'ludaiya  keadagam  avamathikkappattathu;  savul  thailaththaal  abisheagampa'n'nappadaathavarpoala  avar  keadagamum  avamathikkappattathea.  (2saamuveal  1:21)

கொலையுண்டவர்களின்  இரத்தத்தைக்  குடியாமலும்,  பராக்கிரமசாலிகளின்  நிணத்தை  உண்ணாமலும்,  யோனத்தானுடைய  வில்  பின்வாங்கினதில்லை;  சவுலின்  பட்டயம்  வெறுமையாய்த்  திரும்பினதில்லை.  (2சாமுவேல்  1:22)

kolaiyu'ndavarga'lin  iraththaththaik  kudiyaamalum,  baraakkiramasaaliga'lin  ni'naththai  u'n'naamalum,  yoanaththaanudaiya  vil  pinvaangginathillai;  savulin  pattayam  ve’rumaiyaayth  thirumbinathillai.  (2saamuveal  1:22)

உயிரோடே  இருக்கையில்  சவுலும்  யோனத்தானும்  பிரியமும்  இன்பமுமாயிருந்தார்கள்;  மரணத்திலும்  பிரிந்துபோனதில்லை;  கழுகுகளைப்பார்க்கிலும்  வேகமும்,  சிங்கங்களைப்பார்க்கிலும்  பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.  (2சாமுவேல்  1:23)

uyiroadea  irukkaiyil  savulum  yoanaththaanum  piriyamum  inbamumaayirunthaarga'l;  mara'naththilum  pirinthupoanathillai;  kazhuguga'laippaarkkilum  veagamum,  singgangga'laippaarkkilum  balamumu'l'lavarga'laayirunthaarga'l.  (2saamuveal  1:23)

இஸ்ரவேலின்  குமாரத்திகளே,  உங்களுக்கு  இரத்தாம்பரத்தைச்  சிறப்பாய்  உடுப்பித்து,  உங்கள்  உடையின்மேல்  பொன்  ஆபரணங்களைத்  தரிப்பித்த  சவுலுக்காக  அழுது  புலம்புங்கள்.  (2சாமுவேல்  1:24)

isravealin  kumaaraththiga'lea,  ungga'lukku  iraththaambaraththaich  si’rappaay  uduppiththu,  ungga'l  udaiyinmeal  pon  aabara'nangga'laith  tharippiththa  savulukkaaga  azhuthu  pulambungga'l.  (2saamuveal  1:24)

போர்முகத்தில்  பராக்கிரமசாலிகள்  விழுந்தார்களே,  யோனத்தானே,  உயரமான  ஸ்தலங்களிலே  வெட்டுண்டு  போனாயே.  (2சாமுவேல்  1:25)

poarmugaththil  baraakkiramasaaliga'l  vizhunthaarga'lea,  yoanaththaanea,  uyaramaana  sthalangga'lilea  vettu'ndu  poanaayea.  (2saamuveal  1:25)

என்  சகோதரனாகிய  யோனத்தானே,  உனக்காக  நான்  வியாகுலப்படுகிறேன்;  நீ  எனக்கு  வெகு  இன்பமாயிருந்தாய்;  உன்  சிநேகம்  ஆச்சரியமாயிருந்தது;  ஸ்திரீகளின்  சிநேகத்தைப்பார்க்கிலும்  அதிகமாயிருந்தது.  (2சாமுவேல்  1:26)

en  sagoatharanaagiya  yoanaththaanea,  unakkaaga  naan  viyaagulappadugi’rean;  nee  enakku  vegu  inbamaayirunthaay;  un  sineagam  aachchariyamaayirunthathu;  sthireega'lin  sineagaththaippaarkkilum  athigamaayirunthathu.  (2saamuveal  1:26)

பராக்கிரமசாலிகள்  விழுந்துபோனார்களே;  யுத்த  ஆயுதங்கள்  எல்லாம்  அழிந்துபோயிற்றே,  என்று  பாடினான்.  (2சாமுவேல்  1:27)

baraakkiramasaaliga'l  vizhunthupoanaarga'lea;  yuththa  aayuthangga'l  ellaam  azhinthupoayit’rea,  en’ru  paadinaan.  (2saamuveal  1:27)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!