பெலிஸ்தர் தேவனுடைய
பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள். (1சாமுவேல்
5:1)
pelisthar theavanudaiya pettiyaip pidiththu,
athai ebeneasarilirunthu asthoaththi’rkuk ko'ndupoanaarga'l. (1saamuveal 5:1)
பெலிஸ்தர் தேவனுடைய
பெட்டியைப் பிடித்து, தாகோனின்
கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே
வைத்தார்கள். (1சாமுவேல் 5:2)
pelisthar theavanudaiya pettiyaip pidiththu,
thaagoanin koavililea
ko'nduvanthu, thaagoana'ndaiyilea
vaiththaarga'l. (1saamuveal
5:2)
அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது,
இதோ, தாகோன் கர்த்தருடைய
பெட்டிக்கு முன்பாகத் தரையிலே
முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது
அவர்கள் தாகோனை எடுத்து,
அதை அதின் ஸ்தானத்திலே
திரும்பவும் நிறுத்தினார்கள். (1சாமுவேல்
5:3)
asthoath ooraar ma’runaa'l kaalamea
ezhunthirunthu vanthapoathu, ithoa,
thaagoan
karththarudaiya pettikku munbaagath tharaiyilea mugangkuppu’ra vizhunthukidanthathu; appozhuthu
avarga'l
thaagoanai eduththu,
athai athin sthaanaththilea thirumbavum ni’ruththinaarga'l. (1saamuveal 5:3)
அவர்கள் மறுநாள்
காலமே எழுந்திருந்து வந்தபோது,
இதோ, தாகோன் கர்த்தருடைய
பெட்டிக்கு முன்பாகத் தரையிலே
முகங்குப்புற விழுந்துகிடந்ததுமல்லாமல், தாகோனின்
தலையும் அதின் இரண்டு
கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக்
கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம்
மீதியாயிருந்தது. (1சாமுவேல் 5:4)
avarga'l ma’runaa'l kaalamea
ezhunthirunthu vanthapoathu, ithoa,
thaagoan
karththarudaiya pettikku munbaagath tharaiyilea mugangkuppu’ra vizhunthukidanthathumallaamal, thaagoanin thalaiyum
athin ira'ndu kaiga'lum vaasa’rpadiyinmeal udaipattuk kidanthathu;
thaagoanukku udalmaaththiram meethiyaayirunthathu. (1saamuveal
5:4)
ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின்
பூஜாசாரிகளும் தாகோனின் கோவிலுக்குள்
பிரவேசிக்கிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய
வாசற்படியை மிதிக்கிறதில்லை. (1சாமுவேல்
5:5)
aathalaal innaa'lvaraikkum thaagoanin poojaasaariga'lum thaagoanin koavilukku'l piraveasikki’ra yaavarum asthoaththilirukki’ra thaagoanudaiya vaasa’rpadiyai mithikki’rathillai. (1saamuveal
5:5)
அஸ்தோத் ஊராரைப்
பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும்,
அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
(1சாமுவேல் 5:6)
asthoath ooraaraip paazhaakkumpadikku karththarudaiya kai avarga'lmeal baaramaayirunthathu;
avar asthoaththin janangga'laiyum, athin ellaiga'lukku'l irukki’ravarga'laiyum moolaviyaathiyinaal vaathiththaar. (1saamuveal
5:6)
இப்படி நடந்ததை
அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது:
இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய
தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால், அவருடைய
பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது
என்று சொல்லி; (1சாமுவேல்
5:7)
ippadi nadanthathai asthoaththin
janangga'l ka'ndapoathu:
isravealin theavanudaiya kai namathumealum, nammudaiya
theavanaagiya thaagoaninmealum kadinamaayirukki’rapadiyaal, avarudaiya
petti
nammidaththil irukkalaagaathu en’ru solli;
(1saamuveal 5:7)
பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து,
தங்களண்டையிலே கூடிவரச் செய்து:
இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை
நாம் என்ன செய்யவேண்டும்
என்று கேட்டார்கள். அவர்கள்:
இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை
காத்பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும்
என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின்
தேவனுடைய பெட்டியை எடுத்துச்
சுற்றிக்கொண்டுபோனார்கள். (1சாமுவேல் 5:8)
pelistharin athibathiga'laiyellaam azhaippiththu, thangga'la'ndaiyilea koodivarach seythu: isravealin
theavanudaiya pettiyai naam enna seyyavea'ndum en’ru keattaarga'l. avarga'l: isravealin theavanudaiya
pettiyai
kaathpatta'namattum eduththuch sut’rikko'ndu poagavea'ndum en’raarga'l; appadiyea isravealin
theavanudaiya pettiyai eduththuch sut’rikko'ndupoanaarga'l. (1saamuveal 5:8)
அதை எடுத்துச்
சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய
கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று;
அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள்,
சிறியவர்துவக்கிப் பெரியவர்மட்டும், மூலவியாதியை
உண்டாக்கி, அவர்களை வாதித்தார்.
(1சாமுவேல் 5:9)
athai eduththuch sut’rikko'ndu poanapinbu, karththarudaiya kai anthap patta'naththinmeal mahaa ukkiramaaga i’ranggit’ru; anthap patta'naththin manusharukku'l, si’riyavarthuvakkip periyavarmattum, moolaviyaathiyai u'ndaakki,
avarga'lai vaathiththaar. (1saamuveal
5:9)
அதினால் அவர்கள்
தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு
அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி
எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன்
ஊரார்: எங்களையும் எங்கள்
ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின்
தேவனுடைய பெட்டியை எடுத்து,
எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள்
என்று கூக்குரலிட்டார்கள். (1சாமுவேல்
5:10)
athinaal avarga'l theavanudaiya pettiyai ekroanukku
anuppinaarga'l; theavanudaiya
petti
ekroanukku varugi’rapoathu, ekroan ooraar:
engga'laiyum engga'l janangga'laiyum kon’rupoada, isravealin
theavanudaiya pettiyai eduththu, engga'la'ndaikkuch sut’rikko'ndu vanthaarga'l en’ru kookkuralittaarga'l. (1saamuveal 5:10)
அவர்கள் பெலிஸ்தரின்
அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து:
இஸ்ரவேலின் தேவன் எங்களையும்
எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய
பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப
அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப்
பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய
கை அங்கே மகா பாரமாயிருந்தது. (1சாமுவேல்
5:11)
avarga'l pelistharin
athibathiga'laiyellaam koodivarumpadi azhaiththu:
isravealin theavan engga'laiyum engga'l janangga'laiyum kon’rupoadaathapadikku, avarudaiya
pettiyai
athin sthaanaththi’rkuth thirumba anuppividungga'l en’raarga'l; anthap
patta'namenggum
saavu mummuramaayirunthathu; theavanudaiya
kai anggea mahaa baaramaayirunthathu. (1saamuveal
5:11)
செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப்
பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம்
எழும்பிற்று. (1சாமுவேல் 5:12)
seththuppoagaathirunthavarga'l moolaviyaathiyinaal vaathikkappattathinaal, anthap
patta'naththin kookkural
vaanapariyantham ezhumbit’ru. (1saamuveal 5:12)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!