Wednesday, August 24, 2016

1 Saamuveal 22 | 1 சாமுவேல் 22 | 1 Samuel 22

தாவீது  அவ்விடத்தைவிட்டுத்  தப்பி,  அதுல்லாம்  என்னும்  கெபிக்குப்  போனான்;  அதை  அவன்  சகோதரரும்  அவன்  தகப்பன்  வீட்டார்  அனைவரும்  கேட்டு,  அங்கே  அவனிடத்துக்குப்  போனார்கள்.  (1சாமுவேல்  22:1)

thaaveethu  avvidaththaivittuth  thappi,  athullaam  ennum  kebikkup  poanaan;  athai  avan  sagoathararum  avan  thagappan  veettaar  anaivarum  keattu,  anggea  avanidaththukkup  poanaarga'l.  (1saamuveal  22:1)

ஒடுக்கப்பட்டவர்கள்,  கடன்பட்டவர்கள்,  முறுமுறுக்கிறவர்கள்  யாவரும்  அவனோடே  கூடிக்கொண்டார்கள்;  அவன்  அவர்களுக்குத்  தலைவனானான்;  இந்தப்பிரகாரமாக  ஏறக்குறைய  நானூறுபேர்  அவனோடிருந்தார்கள்.  (1சாமுவேல்  22:2)

odukkappattavarga'l,  kadanpattavarga'l,  mu’rumu’rukki’ravarga'l  yaavarum  avanoadea  koodikko'ndaarga'l;  avan  avarga'lukkuth  thalaivanaanaan;  inthappiragaaramaaga  ea’rakku’raiya  naanoo’rupear  avanoadirunthaarga'l.  (1saamuveal  22:2)

தாவீது  அவ்விடத்தைவிட்டு  மோவாபியரைச்  சேர்ந்த  மிஸ்பேக்குப்  போய்,  மோவாபின்  ராஜாவைப்  பார்த்து:  தேவன்  என்னை  எப்படி  நடத்துவார்  என்று  நான்  அறியுமட்டும்,  என்  தகப்பனும்  என்  தாயும்  உங்களிடத்திலே  தங்கியிருக்கும்படி  தயவுசெய்யும்  என்று  சொல்லி,  (1சாமுவேல்  22:3)

thaaveethu  avvidaththaivittu  moavaabiyaraich  searntha  mispeakkup  poay,  moavaabin  raajaavaip  paarththu:  theavan  ennai  eppadi  nadaththuvaar  en’ru  naan  a’riyumattum,  en  thagappanum  en  thaayum  ungga'lidaththilea  thanggiyirukkumpadi  thayavuseyyum  en’ru  solli,  (1saamuveal  22:3)

அவர்களை  மோவாபின்  ராஜாவினிடத்தில்  அழைத்துக்கொண்டுபோய்விட்டான்;  தாவீது  அரணில்  இருந்த  நாளெல்லாம்  அவர்கள்  அங்கே  அவனோடிருந்தார்கள்.  (1சாமுவேல்  22:4)

avarga'lai  moavaabin  raajaavinidaththil  azhaiththukko'ndupoayvittaan;  thaaveethu  ara'nil  iruntha  naa'lellaam  avarga'l  anggea  avanoadirunthaarga'l.  (1saamuveal  22:4)

பின்பு  காத்  என்னும்  தீர்க்கதரிசி  தாவீதைப்  பார்த்து:  நீர்  அரணில்  இராமல்  யூதாதேசத்திற்குப்  புறப்பட்டுவாரும்  என்றான்;  அப்பொழுது  தாவீது  புறப்பட்டு  ஆரேத்  என்னும்  காட்டிலே  போனான்.  (1சாமுவேல்  22:5)

pinbu  kaath  ennum  theerkkatharisi  thaaveethaip  paarththu:  neer  ara'nil  iraamal  yoothaatheasaththi’rkup  pu’rappattuvaarum  en’raan;  appozhuthu  thaaveethu  pu’rappattu  aareath  ennum  kaattilea  poanaan.  (1saamuveal  22:5)

தாவீதும்  அவனோடிருந்த  மனுஷரும்  காணப்பட்ட  செய்தியைச்  சவுல்  கேள்விப்பட்டான்;  சவுல்  கிபியாவைச்  சேர்ந்த  ராமாவில்  ஒரு  தோப்பிலே  உட்கார்ந்து,  தன்னுடைய  ஊழியக்காரர்  எல்லாரும்  தன்னைச்  சூழ்ந்துநிற்க,  தன்  ஈட்டியைத்  தன்  கையிலே  பிடித்துக்கொண்டிருக்கும்போது,  (1சாமுவேல்  22:6)

thaaveethum  avanoadiruntha  manusharum  kaa'nappatta  seythiyaich  savul  kea'lvippattaan;  savul  kibiyaavaich  searntha  raamaavil  oru  thoappilea  udkaarnthu,  thannudaiya  oozhiyakkaarar  ellaarum  thannaich  soozhnthuni’rka,  than  eettiyaith  than  kaiyilea  pidiththukko'ndirukkumpoathu,  (1saamuveal  22:6)

சவுல்  தன்னண்டையில்  நிற்கிற  தன்  ஊழியக்காரரைப்  பார்த்து:  பென்யமீன்  புத்திரரே,  கேளுங்கள்;  ஈசாயின்  மகன்  உங்களெல்லாருக்கும்  வயல்களையும்  திராட்சத்தோட்டங்களையும்  கொடுப்பானோ?  உங்களெல்லாரையும்  ஆயிரத்துக்கு  அதிபதிகளும்  நூற்றுக்கு  அதிபதிகளுமாக  வைப்பானோ?  (1சாமுவேல்  22:7)

savul  thanna'ndaiyil  ni’rki’ra  than  oozhiyakkaararaip  paarththu:  benyameen  puththirarea,  kea'lungga'l;  eesaayin  magan  ungga'lellaarukkum  vayalga'laiyum  thiraadchaththoattangga'laiyum  koduppaanoa?  ungga'lellaaraiyum  aayiraththukku  athibathiga'lum  noot’rukku  athibathiga'lumaaga  vaippaanoa?  (1saamuveal  22:7)

நீங்களெல்லாரும்  எனக்கு  விரோதமாகக்  கட்டுப்பாடு  பண்ணிக்கொண்டது  என்ன?  ஈசாயின்  மகனுடனே  என்  குமாரன்  உடன்படிக்கைபண்ணும்போது,  என்  செவிக்கு  அதை  ஒருவனும்  வெளிப்படுத்தவில்லை;  எனக்காகப்  பரிதாபப்பட்டு,  என்  செவிக்கு  அதை  வெளிப்படுத்த  உங்களில்  ஒருவனாகிலும்  இல்லையா?  இந்நாளில்  இருக்கிறபடி  எனக்குச்  சதிபண்ண,  என்  குமாரன்  என்  வேலைக்காரனை  எனக்கு  விரோதமாக  எடுத்துவிட்டானே  என்றான்.  (1சாமுவேல்  22:8)

neengga'lellaarum  enakku  viroathamaagak  kattuppaadu  pa'n'nikko'ndathu  enna?  eesaayin  maganudanea  en  kumaaran  udanpadikkaipa'n'numpoathu,  en  sevikku  athai  oruvanum  ve'lippaduththavillai;  enakkaagap  parithaabappattu,  en  sevikku  athai  ve'lippaduththa  ungga'lil  oruvanaagilum  illaiyaa?  innaa'lil  irukki’rapadi  enakkuch  sathipa'n'na,  en  kumaaran  en  vealaikkaaranai  enakku  viroathamaaga  eduththuvittaanea  en’raan.  (1saamuveal  22:8)

அப்பொழுது  சவுலின்  ஊழியக்காரரோடே  நின்ற  ஏதோமியனாகிய  தோவேக்கு  பிரதியுத்தரமாக:  ஈசாயின்  மகனை  நோபிலிருக்கிற  அகிதூபின்  குமாரனாகிய  அகிமெலேக்கிடத்தில்  வரக்கண்டேன்.  (1சாமுவேல்  22:9)

appozhuthu  savulin  oozhiyakkaararoadea  nin’ra  eathoamiyanaagiya  thoaveakku  pirathiyuththaramaaga:  eesaayin  maganai  noabilirukki’ra  agithoobin  kumaaranaagiya  agimeleakkidaththil  varakka'ndean.  (1saamuveal  22:9)

இவன்  அவனுக்காகக்  கர்த்தரிடத்தில்  விசாரித்து,  அவனுக்கு  வழிக்கு  போஜனத்தைக்  கொடுத்து,  பெலிஸ்தனாகிய  கோலியாத்தின்  பட்டயத்தையும்  அவனுக்குக்  கொடுத்தான்  என்றான்.  (1சாமுவேல்  22:10)

ivan  avanukkaagak  karththaridaththil  visaariththu,  avanukku  vazhikku  poajanaththaik  koduththu,  pelisthanaagiya  koaliyaaththin  pattayaththaiyum  avanukkuk  koduththaan  en’raan.  (1saamuveal  22:10)

அப்பொழுது  ராஜா:  அகிதூபின்  குமாரனாகிய  அகிமெலேக்  என்னும்  ஆசாரியனையும்,  நோபிலிருக்கிற  அவன்  தகப்பன்  வீட்டாராகிய  எல்லா  ஆசாரியரையும்  அழைப்பித்தான்;  அவர்களெல்லாரும்  ராஜாவினிடத்தில்  வந்தார்கள்.  (1சாமுவேல்  22:11)

appozhuthu  raajaa:  agithoobin  kumaaranaagiya  agimeleak  ennum  aasaariyanaiyum,  noabilirukki’ra  avan  thagappan  veettaaraagiya  ellaa  aasaariyaraiyum  azhaippiththaan;  avarga'lellaarum  raajaavinidaththil  vanthaarga'l.  (1saamuveal  22:11)

அப்பொழுது  சவுல்:  அகிதூபின்  குமாரனே  கேள்  என்று  சொல்ல,  அவன்:  இதோ,  இருக்கிறேன்  என்  ஆண்டவனே  என்றான்.  (1சாமுவேல்  22:12)

appozhuthu  savul:  agithoobin  kumaaranea  kea'l  en’ru  solla,  avan:  ithoa,  irukki’rean  en  aa'ndavanea  en’raan.  (1saamuveal  22:12)

அப்பொழுது  சவுல்  அவனை  நோக்கி:  நீயும்  ஈசாயின்  மகனும்  எனக்கு  விரோதமாய்க்  கட்டுப்பாடுபண்ணி,  இந்நாளில்  இருக்கிறபடி  எனக்குச்  சதிபண்ண  அவன்  எனக்கு  விரோதமாக  எழும்பும்படிக்கு,  நீ  அவனுக்கு  அப்பமும்  பட்டயமும்  கொடுத்து,  தேவசந்நிதியில்  அவனுக்காக  விசாரித்தது  என்ன  என்றான்.  (1சாமுவேல்  22:13)

appozhuthu  savul  avanai  noakki:  neeyum  eesaayin  maganum  enakku  viroathamaayk  kattuppaadupa'n'ni,  innaa'lil  irukki’rapadi  enakkuch  sathipa'n'na  avan  enakku  viroathamaaga  ezhumbumpadikku,  nee  avanukku  appamum  pattayamum  koduththu,  theavasannithiyil  avanukkaaga  visaariththathu  enna  en’raan.  (1saamuveal  22:13)

அகிமெலேக்  ராஜாவுக்குப்  பிரதியுத்தரமாக:  உம்முடைய  எல்லா  ஊழியக்காரரிலும்  தாவீதைப்போல,  ராஜாவுக்கு  மருமகனும்,  உம்முடைய  கட்டளைகளின்படி  செய்துவருகிறவனும்,  உம்முடைய  வீட்டிலே  கனமுள்ளவனுமாயிருக்கிற  உண்மையுள்ளவன்  யார்?  (1சாமுவேல்  22:14)

agimeleak  raajaavukkup  pirathiyuththaramaaga:  ummudaiya  ellaa  oozhiyakkaararilum  thaaveethaippoala,  raajaavukku  marumaganum,  ummudaiya  katta'laiga'linpadi  seythuvarugi’ravanum,  ummudaiya  veettilea  kanamu'l'lavanumaayirukki’ra  u'nmaiyu'l'lavan  yaar?  (1saamuveal  22:14)

இன்றையதினம்  அவனுக்காக  தேவ  சந்நிதியில்  விசாரிக்கத்  தொடங்கினேனோ?  அது  எனக்குத்  தூரமாயிருப்பதாக;  ராஜா  தம்முடைய  அடியானாகிய  என்மேலாகிலும்  என்  தகப்பன்  வீட்டாரில்  எவன்மேலாகிலும்  குற்றம்  சுமத்தவேண்டாம்;  உம்முடைய  அடியான்  இவைகளிலெல்லாம்  ஒரு  சிறிய  காரியமாகிலும்  பெரிய  காரியமாகிலும்  அறிந்திருந்ததில்லை  என்றான்.  (1சாமுவேல்  22:15)

in’raiyathinam  avanukkaaga  theava  sannithiyil  visaarikkath  thodanggineanoa?  athu  enakkuth  thooramaayiruppathaaga;  raajaa  thammudaiya  adiyaanaagiya  enmealaagilum  en  thagappan  veettaaril  evanmealaagilum  kut’ram  sumaththavea'ndaam;  ummudaiya  adiyaan  ivaiga'lilellaam  oru  si’riya  kaariyamaagilum  periya  kaariyamaagilum  a’rinthirunthathillai  en’raan.  (1saamuveal  22:15)

ராஜாவோ:  அகிமெலேக்கே,  நீயும்  உன்  தகப்பன்  வீட்டார்  அனைவரும்  சாகவே  சாகவேண்டும்  என்றான்.  (1சாமுவேல்  22:16)

raajaavoa:  agimeleakkea,  neeyum  un  thagappan  veettaar  anaivarum  saagavea  saagavea'ndum  en’raan.  (1saamuveal  22:16)

பின்பு  ராஜா  தன்னண்டையிலே  நிற்கிற  சேவகரை  நோக்கி:  நீங்கள்  போய்,  கர்த்தருடைய  ஆசாரியர்களைக்  கொல்லுங்கள்;  அவர்கள்  கையும்  தாவீதோடே  இருக்கிறது;  அவன்  ஓடிப்போகிறதை  அவர்கள்  அறிந்திருந்தும்,  அதை  எனக்கு  வெளிப்படுத்தவில்லை  என்றான்;  ராஜாவின்  வேலைக்காரரோ,  கர்த்தருடைய  ஆசாரியர்களைக்  கொல்லத்  தங்கள்  கைகளை  நீட்ட  சம்மதிக்கவில்லை.  (1சாமுவேல்  22:17)

pinbu  raajaa  thanna'ndaiyilea  ni’rki’ra  seavagarai  noakki:  neengga'l  poay,  karththarudaiya  aasaariyarga'laik  kollungga'l;  avarga'l  kaiyum  thaaveethoadea  irukki’rathu;  avan  oadippoagi’rathai  avarga'l  a’rinthirunthum,  athai  enakku  ve'lippaduththavillai  en’raan;  raajaavin  vealaikkaararoa,  karththarudaiya  aasaariyarga'laik  kollath  thangga'l  kaiga'lai  neetta  sammathikkavillai.  (1saamuveal  22:17)

அப்பொழுது  ராஜா  தோவேக்கை  நோக்கி:  நீ  போய்  ஆசாரியர்களைக்  கொன்றுபோடு  என்றான்;  ஏதோமியனாகிய  தோவேக்கு  ஆசாரியர்கள்மேல்  விழுந்து,  சணல்நூல்  ஏபோத்தைத்  தரித்திருக்கும்  எண்பத்தைந்துபேரை  அன்றையதினம்  கொன்றான்.  (1சாமுவேல்  22:18)

appozhuthu  raajaa  thoaveakkai  noakki:  nee  poay  aasaariyarga'laik  kon’rupoadu  en’raan;  eathoamiyanaagiya  thoaveakku  aasaariyarga'lmeal  vizhunthu,  sa'nalnool  eaboaththaith  thariththirukkum  e'nbaththainthupearai  an’raiyathinam  kon’raan.  (1saamuveal  22:18)

ஆசாரியர்களின்  பட்டணமாகிய  நோபிலுமுள்ள  புருஷரையும்,  ஸ்திரீகளையும்,  பிள்ளைகளையும்,  குழந்தைகளையும்,  மாடுகளையும்,  கழுதைகளையும்,  ஆடுகளையும்  பட்டயக்கருக்கினால்  வெட்டிப்போட்டான்.  (1சாமுவேல்  22:19)

aasaariyarga'lin  patta'namaagiya  noabilumu'l'la  purusharaiyum,  sthireega'laiyum,  pi'l'laiga'laiyum,  kuzhanthaiga'laiyum,  maaduga'laiyum,  kazhuthaiga'laiyum,  aaduga'laiyum  pattayakkarukkinaal  vettippoattaan.  (1saamuveal  22:19)

அகிதூபின்  குமாரனாகிய  அகிமெலேக்கின்  குமாரரில்  அபியத்தார்  என்னும்  பேருள்ள  ஒருவன்  தப்பி,  தாவீது  இருக்கும்  புறமாக  ஓடிப்போய்,  (1சாமுவேல்  22:20)

agithoobin  kumaaranaagiya  agimeleakkin  kumaararil  abiyaththaar  ennum  pearu'l'la  oruvan  thappi,  thaaveethu  irukkum  pu’ramaaga  oadippoay,  (1saamuveal  22:20)

சவுல்  கர்த்தருடைய  ஆசாரியர்களைக்  கொன்றுபோட்ட  செய்தியை  தாவீதுக்கு  அறிவித்தான்.  (1சாமுவேல்  22:21)

savul  karththarudaiya  aasaariyarga'laik  kon’rupoatta  seythiyai  thaaveethukku  a’riviththaan.  (1saamuveal  22:21)

அப்பொழுது  தாவீது  அபியத்தாரைப்  பார்த்து:  ஏதோமியனாகிய  தோவேக்கு  அங்கே  இருந்தபடியினாலே,  அவன்  எவ்விதத்திலும்  சவுலுக்கு  அதை  அறிவிப்பான்  என்று  அன்றையதினமே  அறிந்திருந்தேன்;  உன்  தகப்பன்  வீட்டாராகிய  எல்லாருடைய  மரணத்துக்கும்  காரணம்  நானே.  (1சாமுவேல்  22:22)

appozhuthu  thaaveethu  abiyaththaaraip  paarththu:  eathoamiyanaagiya  thoaveakku  anggea  irunthapadiyinaalea,  avan  evvithaththilum  savulukku  athai  a’rivippaan  en’ru  an’raiyathinamea  a’rinthirunthean;  un  thagappan  veettaaraagiya  ellaarudaiya  mara'naththukkum  kaara'nam  naanea.  (1saamuveal  22:22)

நீ  என்னிடத்தில்  இரு,  பயப்படவேண்டாம்;  என்  பிராணனை  வாங்கத்தேடுகிறவனே  உன்  பிராணனையும்  வாங்கத்தேடுகிறான்;  நீ  என்  ஆதரவிலே  இரு  என்றான்.  (1சாமுவேல்  22:23)

nee  ennidaththil  iru,  bayappadavea'ndaam;  en  piraa'nanai  vaanggaththeadugi’ravanea  un  piraa'nanaiyum  vaanggaththeadugi’raan;  nee  en  aatharavilea  iru  en’raan.  (1saamuveal  22:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!