Monday, August 22, 2016

1 Saamuveal 17 | 1 சாமுவேல் 17 | 1 Samuel 17

பெலிஸ்தர்  யுத்தம்பண்ணுகிறதற்குத்  தங்கள்  சேனைகளைச்  சேர்த்து,  யூதாவிலுள்ள  சோக்கோவிலே  ஒருமித்துக்  கூடி,  சோக்கோவுக்கும்  அசெக்காவுக்கும்  நடுவே  இருக்கிற  எபேஸ்தம்மீமிலே  பாளயமிறங்கினார்கள்.  (1சாமுவேல்  17:1)

pelisthar  yuththampa'n'nugi’ratha’rkuth  thangga'l  seanaiga'laich  searththu,  yoothaavilu'l'la  soakkoavilea  orumiththuk  koodi,  soakkoavukkum  asekkaavukkum  naduvea  irukki’ra  epeasthammeemilea  paa'layami’rangginaarga'l.  (1saamuveal  17:1)

சவுலும்  இஸ்ரவேல்  மனுஷரும்  ஒருமித்துக்  கூடி,  ஏலா  பள்ளத்தாக்கிலே  பாளயமிறங்கி,  பெலிஸ்தருக்கு  எதிராக  யுத்தத்திற்கு  அணிவகுத்து  நின்றார்கள்.  (1சாமுவேல்  17:2)

savulum  israveal  manusharum  orumiththuk  koodi,  ealaa  pa'l'laththaakkilea  paa'layami’ranggi,  pelistharukku  ethiraaga  yuththaththi’rku  a'nivaguththu  nin’raarga'l.  (1saamuveal  17:2)

பெலிஸ்தர்  அந்தப்பக்கத்தில்  ஒரு  மலையின்மேலும்,  இஸ்ரவேலர்  இந்தப்பக்கத்தில்  ஒரு  மலையின்மேலும்  நின்றார்கள்;  அவர்களுக்கு  நடுவே  பள்ளத்தாக்கு  இருந்தது.  (1சாமுவேல்  17:3)

pelisthar  anthappakkaththil  oru  malaiyinmealum,  isravealar  inthappakkaththil  oru  malaiyinmealum  nin’raarga'l;  avarga'lukku  naduvea  pa'l'laththaakku  irunthathu.  (1saamuveal  17:3)

அப்பொழுது  காத்  ஊரானாகிய  கோலியாத்  என்னும்  பேருள்ள  ஒரு  வீரன்  பெலிஸ்தரின்  பாளயத்திலிருந்து  புறப்பட்டுவந்து  நடுவே  நிற்பான்;  அவன்  உயரம்  ஆறுமுழமும்  ஒரு  ஜாணுமாம்.  (1சாமுவேல்  17:4)

appozhuthu  kaath  ooraanaagiya  koaliyaath  ennum  pearu'l'la  oru  veeran  pelistharin  paa'layaththilirunthu  pu’rappattuvanthu  naduvea  ni’rpaan;  avan  uyaram  aa’rumuzhamum  oru  jaa'numaam.  (1saamuveal  17:4)

அவன்  தன்  தலையின்மேல்  வெண்கலச்  சீராவைப்  போட்டு,  ஒரு  போர்க்கவசம்  தரித்துக்கொண்டிருப்பான்;  அந்தக்  கவசத்தின்  நிறை  ஐயாயிரம்  சேக்கலான  வெண்கலமாயிருக்கும்.  (1சாமுவேல்  17:5)

avan  than  thalaiyinmeal  ve'ngalach  seeraavaip  poattu,  oru  poarkkavasam  thariththukko'ndiruppaan;  anthak  kavasaththin  ni’rai  aiyaayiram  seakkalaana  ve'ngalamaayirukkum.  (1saamuveal  17:5)

அவன்  தன்  கால்களிலே  வெண்கலக்  கவசத்தையும்  தன்  தோள்களின்மேல்  வெண்கலக்  கேடகத்தையும்  தரித்திருப்பான்.  (1சாமுவேல்  17:6)

avan  than  kaalga'lilea  ve'ngalak  kavasaththaiyum  than  thoa'lga'linmeal  ve'ngalak  keadagaththaiyum  thariththiruppaan.  (1saamuveal  17:6)

அவனுடைய  ஈட்டித்தாங்கு  நெசவுக்காரரின்  படைமரத்தின்  கனதியும்  அவன்  ஈட்டியின்  அலகு  அறுநூறுசேக்கல்  இரும்புமாயிருக்கும்;  பரிசைபிடிக்கிறவன்  அவனுக்கு  முன்னாக  நடப்பான்.  (1சாமுவேல்  17:7)

avanudaiya  eettiththaanggu  nesavukkaararin  padaimaraththin  kanathiyum  avan  eettiyin  alagu  a’runoo’ruseakkal  irumbumaayirukkum;  parisaipidikki’ravan  avanukku  munnaaga  nadappaan.  (1saamuveal  17:7)

அவன்  வந்துநின்று,  இஸ்ரவேல்  சேனைகளைப்  பார்த்துச்  சத்தமிட்டு,  நீங்கள்  யுத்தத்திற்கு  அணிவகுத்து  நிற்கிறது  என்ன?  நான்  பெலிஸ்தன்  அல்லவா?  நீங்கள்  சவுலின்  சேவகர்  அல்லவா?  உங்களில்  ஒருவனைத்  தெரிந்துகொள்ளுங்கள்;  அவன்  என்னிடத்தில்  வரட்டும்.  (1சாமுவேல்  17:8)

avan  vanthunin’ru,  israveal  seanaiga'laip  paarththuch  saththamittu,  neengga'l  yuththaththi’rku  a'nivaguththu  ni’rki’rathu  enna?  naan  pelisthan  allavaa?  neengga'l  savulin  seavagar  allavaa?  ungga'lil  oruvanaith  therinthuko'l'lungga'l;  avan  ennidaththil  varattum.  (1saamuveal  17:8)

அவன்  என்னோடு  யுத்தம்பண்ணவும்  என்னைக்  கொல்லவும்  சமர்த்தனானால்,  நாங்கள்  உங்களுக்கு  வேலைக்காரராயிருப்போம்;  நான்  அவனை  ஜெயித்து  அவனைக்  கொல்வேனானால்,  நீங்கள்  எங்களுக்கு  வேலைக்காரராயிருந்து,  எங்களைச்  சேவிக்கவேண்டும்  என்று  சொல்லி,  (1சாமுவேல்  17:9)

avan  ennoadu  yuththampa'n'navum  ennaik  kollavum  samarththanaanaal,  naangga'l  ungga'lukku  vealaikkaararaayiruppoam;  naan  avanai  jeyiththu  avanaik  kolveanaanaal,  neengga'l  engga'lukku  vealaikkaararaayirunthu,  engga'laich  seavikkavea'ndum  en’ru  solli,  (1saamuveal  17:9)

பின்னும்  அந்தப்  பெலிஸ்தன்:  நான்  இன்றையதினம்  இஸ்ரவேலுடைய  சேனைகளை  நிந்தித்தேன்;  நாம்  ஒருவரோடு  ஒருவர்  யுத்தம்பண்ண  ஒருவனை  விடுங்கள்  என்று  சொல்லிக்கொண்டுவருவான்.  (1சாமுவேல்  17:10)

pinnum  anthap  pelisthan:  naan  in’raiyathinam  isravealudaiya  seanaiga'lai  ninthiththean;  naam  oruvaroadu  oruvar  yuththampa'n'na  oruvanai  vidungga'l  en’ru  sollikko'nduvaruvaan.  (1saamuveal  17:10)

சவுலும்  இஸ்ரவேலர்  அனைவரும்  அந்தப்  பெலிஸ்தனுடைய  வார்த்தைகளைக்  கேட்டு,  கலங்கி  மிகவும்  பயப்பட்டார்கள்.  (1சாமுவேல்  17:11)

savulum  isravealar  anaivarum  anthap  pelisthanudaiya  vaarththaiga'laik  keattu,  kalanggi  migavum  bayappattaarga'l.  (1saamuveal  17:11)

தாவீது  என்பவன்  யூதாவிலுள்ள  பெத்லெகேம்  ஊரானாகிய  ஈசாய்  என்னும்  பேருள்ள  எப்பிராத்திய  மனுஷனுடைய  குமாரனாயிருந்தான்;  ஈசாயுக்கு  எட்டுக்  குமாரர்  இருந்தார்கள்;  இவன்  சவுலின்  நாட்களிலே  மற்ற  ஜனங்களுக்குள்ளே  வயதுசென்ற  கிழவனாய்  மதிக்கப்பட்டான்.  (1சாமுவேல்  17:12)

thaaveethu  enbavan  yoothaavilu'l'la  bethleheam  ooraanaagiya  eesaay  ennum  pearu'l'la  eppiraaththiya  manushanudaiya  kumaaranaayirunthaan;  eesaayukku  ettuk  kumaarar  irunthaarga'l;  ivan  savulin  naadka'lilea  mat’ra  janangga'lukku'l'lea  vayathusen’ra  kizhavanaay  mathikkappattaan.  (1saamuveal  17:12)

ஈசாயினுடைய  மூன்று  மூத்த  குமாரர்  சவுலோடேகூட  யுத்தத்திற்குப்  போயிருந்தார்கள்;  யுத்தத்திற்குப்  போயிருந்த  அவனுடைய  மூன்று  குமாரரில்  மூத்தவனுக்கு  எலியாப்  என்றும்,  இரண்டாங்குமாரனுக்கு  அபினதாப்  என்றும்,  மூன்றாங்குமாரனுக்குச்  சம்மா  என்றும்  பேர்.  (1சாமுவேல்  17:13)

eesaayinudaiya  moon’ru  mooththa  kumaarar  savuloadeakooda  yuththaththi’rkup  poayirunthaarga'l;  yuththaththi’rkup  poayiruntha  avanudaiya  moon’ru  kumaararil  mooththavanukku  eliyaab  en’rum,  ira'ndaangkumaaranukku  abinathaab  en’rum,  moon’raangkumaaranukkuch  sammaa  en’rum  pear.  (1saamuveal  17:13)

தாவீது  எல்லாருக்கும்  இளையவன்;  மூத்தவர்களாகிய  அந்த  மூன்றுபேரும்  சவுலோடேகூடப்  போயிருந்தார்கள்.  (1சாமுவேல்  17:14)

thaaveethu  ellaarukkum  i'laiyavan;  mooththavarga'laagiya  antha  moon’rupearum  savuloadeakoodap  poayirunthaarga'l.  (1saamuveal  17:14)

தாவீது  சவுலைவிட்டுத்  திரும்பிப்  போய்  பெத்லெகேமிலிருக்கிற  தன்  தகப்பனுடைய  ஆடுகளை  மேய்த்துக்கொண்டிருந்தான்.  (1சாமுவேல்  17:15)

thaaveethu  savulaivittuth  thirumbip  poay  bethleheamilirukki’ra  than  thagappanudaiya  aaduga'lai  meayththukko'ndirunthaan.  (1saamuveal  17:15)

அந்தப்  பெலிஸ்தன்  காலையிலும்  மாலையிலும்  நாற்பதுநாள்  வந்துவந்து  நிற்பான்.  (1சாமுவேல்  17:16)

anthap  pelisthan  kaalaiyilum  maalaiyilum  naa’rpathunaa'l  vanthuvanthu  ni’rpaan.  (1saamuveal  17:16)

ஈசாய்  தன்  குமாரனாகிய  தாவீதை  நோக்கி:  உன்  சகோதரருக்கு  இந்த  ஒரு  மரக்கால்  வறுத்த  பயற்றையும்,  இந்தப்  பத்து  அப்பங்களையும்  எடுத்துக்கொண்டு,  பாளயத்திலிருக்கிற  உன்  சகோதரரிடத்தில்  ஓட்டமாய்ப்  போய்,  (1சாமுவேல்  17:17)

eesaay  than  kumaaranaagiya  thaaveethai  noakki:  un  sagoathararukku  intha  oru  marakkaal  va’ruththa  payat’raiyum,  inthap  paththu  appangga'laiyum  eduththukko'ndu,  paa'layaththilirukki’ra  un  sagoathararidaththil  oattamaayp  poay,  (1saamuveal  17:17)

இந்தப்  பத்துப்  பால்கட்டிகளை  ஆயிரம்பேருக்கு  அதிபதியானவனிடத்தில்  கொடுத்து,  உன்  சகோதரர்  சுகமாயிருக்கிறார்களா  என்று  விசாரித்து,  அவர்களிடத்தில்  அடையாளம்  வாங்கிக்  கொண்டுவா  என்றான்.  (1சாமுவேல்  17:18)

inthap  paththup  paalkattiga'lai  aayirampearukku  athibathiyaanavanidaththil  koduththu,  un  sagoatharar  sugamaayirukki’raarga'laa  en’ru  visaariththu,  avarga'lidaththil  adaiyaa'lam  vaanggik  ko'nduvaa  en’raan.  (1saamuveal  17:18)

அப்பொழுது  சவுலும்,  அவர்களும்,  இஸ்ரவேலர்  எல்லாரும்,  ஏலா  பள்ளத்தாக்கிலே  பெலிஸ்தரோடு  யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.  (1சாமுவேல்  17:19)

appozhuthu  savulum,  avarga'lum,  isravealar  ellaarum,  ealaa  pa'l'laththaakkilea  pelistharoadu  yuththampa'n'nikko'ndirunthaarga'l.  (1saamuveal  17:19)

தாவீது  அதிகாலையில்  எழுந்து,  ஆடுகளைக்  காவலாளி  வசமாய்  விட்டு,  ஈசாய்  தனக்குக்  கற்பித்தபடியே  எடுத்துக்கொண்டுபோய்,  இரதங்கள்  இருக்கிற  இடத்திலே  வந்தான்;  சேனைகள்  அணிவகுத்து  நின்று,  யுத்தத்திற்கென்று  ஆர்ப்பரித்தார்கள்.  (1சாமுவேல்  17:20)

thaaveethu  athikaalaiyil  ezhunthu,  aaduga'laik  kaavalaa'li  vasamaay  vittu,  eesaay  thanakkuk  ka’rpiththapadiyea  eduththukko'ndupoay,  irathangga'l  irukki’ra  idaththilea  vanthaan;  seanaiga'l  a'nivaguththu  nin’ru,  yuththaththi’rken’ru  aarppariththaarga'l.  (1saamuveal  17:20)

இஸ்ரவேலரும்  பெலிஸ்தரும்  ஒருவருக்கு  எதிராக  ஒருவர்  அணிவகுத்துக்கொண்டிருந்தார்கள்.  (1சாமுவேல்  17:21)

isravealarum  pelistharum  oruvarukku  ethiraaga  oruvar  a'nivaguththukko'ndirunthaarga'l.  (1saamuveal  17:21)

அப்பொழுது  தாவீது:  தான்  கொண்டுவந்தவைகளை  இறக்கி,  ரஸ்துக்களைக்  காக்கிறவன்  வசமாக  வைத்துவிட்டு,  சேனைக்குள்  ஓடி,  தன்  சகோதரரைப்  பார்த்து:  சுகமாயிருக்கிறீர்களா  என்று  கேட்டான்.  (1சாமுவேல்  17:22)

appozhuthu  thaaveethu:  thaan  ko'nduvanthavaiga'lai  i’rakki,  rasthukka'laik  kaakki’ravan  vasamaaga  vaiththuvittu,  seanaikku'l  oadi,  than  sagoathararaip  paarththu:  sugamaayirukki’reerga'laa  en’ru  keattaan.  (1saamuveal  17:22)

அவன்  இவர்களோடே  பேசிக்கொண்டிருக்கையில்,  இதோ,  காத்  ஊரானாகிய  கோலியாத்  என்னும்  பேருள்ள  அந்தப்  பெலிஸ்த  வீரன்  பெலிஸ்தரின்  சேனைகளிலிருந்து  எழும்பிவந்து  நின்று,  முன்  சொன்ன  வார்த்தைகளையே  சொன்னான்;  அதைத்  தாவீது  கேட்டான்.  (1சாமுவேல்  17:23)

avan  ivarga'loadea  peasikko'ndirukkaiyil,  ithoa,  kaath  ooraanaagiya  koaliyaath  ennum  pearu'l'la  anthap  pelistha  veeran  pelistharin  seanaiga'lilirunthu  ezhumbivanthu  nin’ru,  mun  sonna  vaarththaiga'laiyea  sonnaan;  athaith  thaaveethu  keattaan.  (1saamuveal  17:23)

இஸ்ரவேலர்  எல்லாரும்  அந்த  மனுஷனைக்  காணும்போது  மிகவும்  பயப்பட்டு,  அவன்  முகத்துக்கு  விலகி  ஓடிப்போவார்கள்.  (1சாமுவேல்  17:24)

isravealar  ellaarum  antha  manushanaik  kaa'numpoathu  migavum  bayappattu,  avan  mugaththukku  vilagi  oadippoavaarga'l.  (1saamuveal  17:24)

அந்நேரத்திலே  இஸ்ரவேலர்:  வந்து  நிற்கிற  அந்த  மனுஷனைக்  கண்டீர்களா,  இஸ்ரவேலை  நிந்திக்க  வந்து  நிற்கிறான்;  இவனைக்  கொல்லுகிறவன்  எவனோ,  அவனை  ராஜா  மிகவும்  ஐசுவரியவானாக்கி,  அவனுக்குத்  தம்முடைய  குமாரத்தியைத்  தந்து,  அவன்  தகப்பன்  வீட்டாருக்கு  இஸ்ரவேலிலே  சர்வமானியம்  கொடுப்பார்  என்றார்கள்.  (1சாமுவேல்  17:25)

annearaththilea  isravealar:  vanthu  ni’rki’ra  antha  manushanaik  ka'ndeerga'laa,  isravealai  ninthikka  vanthu  ni’rki’raan;  ivanaik  kollugi’ravan  evanoa,  avanai  raajaa  migavum  aisuvariyavaanaakki,  avanukkuth  thammudaiya  kumaaraththiyaith  thanthu,  avan  thagappan  veettaarukku  isravealilea  sarvamaaniyam  koduppaar  en’raarga'l.  (1saamuveal  17:25)

அப்பொழுது  தாவீது  தன்னண்டையிலே  நிற்கிறவர்களைப்  பார்த்து,  இந்தப்  பெலிஸ்தனைக்  கொன்று  இஸ்ரவேலுக்கு  நேரிட்ட  நிந்தையை  நீக்குகிறவனுக்கு  என்ன  செய்யப்படும்;  ஜீவனுள்ள  தேவனுடைய  சேனைகளை  நிந்திக்கிறதற்கு  விருத்தசேதனம்  இல்லாத  இந்த  பெலிஸ்தன்  எம்மாத்திரம்  என்றான்.  (1சாமுவேல்  17:26)

appozhuthu  thaaveethu  thanna'ndaiyilea  ni’rki’ravarga'laip  paarththu,  inthap  pelisthanaik  kon’ru  isravealukku  nearitta  ninthaiyai  neekkugi’ravanukku  enna  seyyappadum;  jeevanu'l'la  theavanudaiya  seanaiga'lai  ninthikki’ratha’rku  viruththaseathanam  illaatha  intha  pelisthan  emmaaththiram  en’raan.  (1saamuveal  17:26)

அதற்கு  ஜனங்கள்:  அவனைக்  கொல்லுகிறவனுக்கு  இன்ன  இன்னபடி  செய்யப்படும்  என்று  முன்  சொன்ன  வார்த்தைகளையே  அவனுக்குச்  சொன்னார்கள்.  (1சாமுவேல்  17:27)

atha’rku  janangga'l:  avanaik  kollugi’ravanukku  inna  innapadi  seyyappadum  en’ru  mun  sonna  vaarththaiga'laiyea  avanukkuch  sonnaarga'l.  (1saamuveal  17:27)

அந்த  மனுஷரோடே  அவன்  பேசிக்கொண்டிருக்கிறதை  அவன்  மூத்த  சகோதரனாகிய  எலியாப்  கேட்டபோது,  அவன்  தாவீதின்மேல்  கோபங்கொண்டு:  நீ  இங்கே  வந்தது  என்ன?  வனாந்தரத்திலுள்ள  அந்தக்  கொஞ்ச  ஆடுகளை  நீ  யார்  வசத்தில்  விட்டாய்?  யுத்தத்தைப்  பார்க்க  அல்லவா  வந்தாய்?  உன்  துணிகரத்தையும்,  உன்  இருதயத்தின்  அகங்காரத்தையும்  நான்  அறிவேன்  என்றான்.  (1சாமுவேல்  17:28)

antha  manusharoadea  avan  peasikko'ndirukki’rathai  avan  mooththa  sagoatharanaagiya  eliyaab  keattapoathu,  avan  thaaveethinmeal  koabangko'ndu:  nee  inggea  vanthathu  enna?  vanaantharaththilu'l'la  anthak  kogncha  aaduga'lai  nee  yaar  vasaththil  vittaay?  yuththaththaip  paarkka  allavaa  vanthaay?  un  thu'nigaraththaiyum,  un  iruthayaththin  aganggaaraththaiyum  naan  a’rivean  en’raan.  (1saamuveal  17:28)

அதற்குத்  தாவீது:  நான்  இப்பொழுது  செய்தது  என்ன?  நான்  வந்ததற்கு  முகாந்தரம்  இல்லையா  என்று  சொல்லி,  (1சாமுவேல்  17:29)

atha’rkuth  thaaveethu:  naan  ippozhuthu  seythathu  enna?  naan  vanthatha’rku  mugaantharam  illaiyaa  en’ru  solli,  (1saamuveal  17:29)

அவனை  விட்டு,  வேறொருவனிடத்தில்  திரும்பி,  அந்தப்பிரகாரமாகவே  கேட்டான்;  ஜனங்கள்  முன்போலவே  உத்தரவு  சொன்னார்கள்.  (1சாமுவேல்  17:30)

avanai  vittu,  vea’roruvanidaththil  thirumbi,  anthappiragaaramaagavea  keattaan;  janangga'l  munpoalavea  uththaravu  sonnaarga'l.  (1saamuveal  17:30)

தாவீது  சொன்ன  வார்த்தைகளை  அவர்கள்  கேட்டு,  அதைச்  சவுலின்  சமுகத்தில்  அறிவித்தார்கள்;  அப்பொழுது  அவன்  அவனை  அழைப்பித்தான்.  (1சாமுவேல்  17:31)

thaaveethu  sonna  vaarththaiga'lai  avarga'l  keattu,  athaich  savulin  samugaththil  a’riviththaarga'l;  appozhuthu  avan  avanai  azhaippiththaan.  (1saamuveal  17:31)

தாவீது  சவுலை  நோக்கி:  இவனிமித்தம்  ஒருவனுடைய  இருதயமும்  கலங்க  வேண்டியதில்லை;  உம்முடைய  அடியானாகிய  நான்  போய்,  இந்தப்  பெலிஸ்தனோடே  யுத்தம்பண்ணுவேன்  என்றான்.  (1சாமுவேல்  17:32)

thaaveethu  savulai  noakki:  ivanimiththam  oruvanudaiya  iruthayamum  kalangga  vea'ndiyathillai;  ummudaiya  adiyaanaagiya  naan  poay,  inthap  pelisthanoadea  yuththampa'n'nuvean  en’raan.  (1saamuveal  17:32)

அப்பொழுது  சவுல்  தாவீதை  நோக்கி:  நீ  இந்தப்  பெலிஸ்தனோடே  எதிர்த்து  யுத்தம்பண்ண  உன்னால்  ஆகாது;  நீ  இளைஞன்,  அவனோ  தன்  சிறுவயதுமுதல்  யுத்தவீரன்  என்றான்.  (1சாமுவேல்  17:33)

appozhuthu  savul  thaaveethai  noakki:  nee  inthap  pelisthanoadea  ethirththu  yuththampa'n'na  unnaal  aagaathu;  nee  i'laignan,  avanoa  than  si’ruvayathumuthal  yuththaveeran  en’raan.  (1saamuveal  17:33)

தாவீது  சவுலைப்பார்த்து:  உம்முடைய  அடியான்  என்  தகப்பனுடைய  ஆடுகளை  மேய்த்துக்கொண்டிருக்கிறபோது,  ஒருவிசை  ஒரு  சிங்கமும்,  ஒருவிசை  ஒரு  கரடியும்  வந்து,  மந்தையிலிருக்கிற  ஒரு  ஆட்டைப்  பிடித்துக்கொண்டது.  (1சாமுவேல்  17:34)

thaaveethu  savulaippaarththu:  ummudaiya  adiyaan  en  thagappanudaiya  aaduga'lai  meayththukko'ndirukki’rapoathu,  oruvisai  oru  singgamum,  oruvisai  oru  karadiyum  vanthu,  manthaiyilirukki’ra  oru  aattaip  pidiththukko'ndathu.  (1saamuveal  17:34)

நான்  அதைத்  தொடர்ந்துபோய்,  அதை  அடித்து,  அதை  அதின்  வாய்க்குத்  தப்புவித்தேன்;  அது  என்மேல்  பாய்ந்தபோது,  நான்  அதின்  தாடியைப்  பிடித்து,  அதை  அடித்துக்  கொன்றுபோட்டேன்.  (1சாமுவேல்  17:35)

naan  athaith  thodarnthupoay,  athai  adiththu,  athai  athin  vaaykkuth  thappuviththean;  athu  enmeal  paaynthapoathu,  naan  athin  thaadiyaip  pidiththu,  athai  adiththuk  kon’rupoattean.  (1saamuveal  17:35)

அந்தச்  சிங்கத்தையும்  அந்தக்  கரடியையும்  உம்முடைய  அடியானாகிய  நான்  கொன்றேன்;  விருத்தசேதனமில்லாத  இந்தப்  பெலிஸ்தனும்  அவைகளில்  ஒன்றைப்போல  இருப்பான்;  அவன்  ஜீவனுள்ள  தேவனுடைய  சேனைகளை  நிந்தித்தானே  என்றான்.  (1சாமுவேல்  17:36)

anthach  singgaththaiyum  anthak  karadiyaiyum  ummudaiya  adiyaanaagiya  naan  kon’rean;  viruththaseathanamillaatha  inthap  pelisthanum  avaiga'lil  on’raippoala  iruppaan;  avan  jeevanu'l'la  theavanudaiya  seanaiga'lai  ninthiththaanea  en’raan.  (1saamuveal  17:36)

பின்னும்  தாவீது:  என்னைச்  சிங்கத்தின்  கைக்கும்  கரடியின்  கைக்கும்  தப்புவித்த  கர்த்தர்  இந்தப்  பெலிஸ்தனுடைய  கைக்கும்  தப்புவிப்பார்  என்றான்;  அப்பொழுது  சவுல்  தாவீதைப்  பார்த்து:  போ,  கர்த்தர்  உன்னுடனேகூட  இருப்பாராக  என்றான்.  (1சாமுவேல்  17:37)

pinnum  thaaveethu:  ennaich  singgaththin  kaikkum  karadiyin  kaikkum  thappuviththa  karththar  inthap  pelisthanudaiya  kaikkum  thappuvippaar  en’raan;  appozhuthu  savul  thaaveethaip  paarththu:  poa,  karththar  unnudaneakooda  iruppaaraaga  en’raan.  (1saamuveal  17:37)

சவுல்  தாவீதுக்குத்  தன்  வஸ்திரங்களை  உடுத்துவித்து  வெண்கலமான  ஒரு  சீராவை  அவன்  தலையின்மேல்  போட்டு,  ஒரு  கவசத்தையும்  அவனுக்குத்  தரிப்பித்தான்.  (1சாமுவேல்  17:38)

savul  thaaveethukkuth  than  vasthirangga'lai  uduththuviththu  ve'ngalamaana  oru  seeraavai  avan  thalaiyinmeal  poattu,  oru  kavasaththaiyum  avanukkuth  tharippiththaan.  (1saamuveal  17:38)

அவனுடைய  பட்டயத்தை  தாவீது  தன்  வஸ்திரங்கள்மேல்  கட்டிக்கொண்டு,  அதிலே  அவனுக்குப்  பழக்கமில்லாததினால்  நடந்துபார்த்தான்;  அப்பொழுது  தாவீது  சவுலை  நோக்கி:  நான்  இவைகளைப்  போட்டுக்கொண்டு  போகக்கூடாது;  இந்த  அப்பியாசம்  எனக்கு  இல்லை  என்று  சொல்லி,  அவைகளைக்  களைந்துபோட்டு,  (1சாமுவேல்  17:39)

avanudaiya  pattayaththai  thaaveethu  than  vasthirangga'lmeal  kattikko'ndu,  athilea  avanukkup  pazhakkamillaathathinaal  nadanthupaarththaan;  appozhuthu  thaaveethu  savulai  noakki:  naan  ivaiga'laip  poattukko'ndu  poagakkoodaathu;  intha  appiyaasam  enakku  illai  en’ru  solli,  avaiga'laik  ka'lainthupoattu,  (1saamuveal  17:39)

தன்  தடியைக்  கையிலே  பிடித்துக்கொண்டு,  ஆற்றிலிருக்கிற  ஐந்து  கூழாங்கல்லுகளைத்  தெரிந்தெடுத்து,  அவைகளை  மேய்ப்பருக்குரிய  தன்னுடைய  அடைப்பப்பையிலே  போட்டு,  தன்  கவணைத்  தன்  கையிலே  பிடித்துக்கொண்டு,  அந்தப்  பெலிஸ்தனண்டையிலே  போனான்.  (1சாமுவேல்  17:40)

than  thadiyaik  kaiyilea  pidiththukko'ndu,  aat’rilirukki’ra  ainthu  koozhaangkalluga'laith  therintheduththu,  avaiga'lai  meaypparukkuriya  thannudaiya  adaippappaiyilea  poattu,  than  kava'naith  than  kaiyilea  pidiththukko'ndu,  anthap  pelisthana'ndaiyilea  poanaan.  (1saamuveal  17:40)

பெலிஸ்தனும்  நடந்து,  தாவீதண்டைக்குக்  கிட்டிவந்தான்;  பரிசையைப்  பிடிக்கிறவன்  அவனுக்கு  முன்னாக  நடந்தான்.  (1சாமுவேல்  17:41)

pelisthanum  nadanthu,  thaaveetha'ndaikkuk  kittivanthaan;  parisaiyaip  pidikki’ravan  avanukku  munnaaga  nadanthaan.  (1saamuveal  17:41)

பெலிஸ்தன்  சுற்றிப்பார்த்து:  தாவீதைக்  கண்டு,  அவன்  இளைஞனும்  சவுந்தரிய  ரூபமான  சிவந்த  மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால்,  அவனை  அசட்டைபண்ணினான்.  (1சாமுவேல்  17:42)

pelisthan  sut’rippaarththu:  thaaveethaik  ka'ndu,  avan  i'laignanum  savunthariya  roobamaana  sivantha  meaniyu'l'lavanumaayirunthapadiyinaal,  avanai  asattaipa'n'ninaan.  (1saamuveal  17:42)

பெலிஸ்தன்  தாவீதைப்  பார்த்து:  நீ  தடிகளோடே  என்னிடத்தில்  வர  நான்  நாயா  என்று  சொல்லி,  அவன்  தன்  தேவர்களைக்கொண்டு  தாவீதைச்  சபித்தான்.  (1சாமுவேல்  17:43)

pelisthan  thaaveethaip  paarththu:  nee  thadiga'loadea  ennidaththil  vara  naan  naayaa  en’ru  solli,  avan  than  theavarga'laikko'ndu  thaaveethaich  sabiththaan.  (1saamuveal  17:43)

பின்னும்  அந்தப்  பெலிஸ்தன்  தாவீதைப்  பார்த்து:  என்னிடத்தில்  வா;  நான்  உன்  மாம்சத்தை  ஆகாயத்துப்  பறவைகளுக்கும்  காட்டு  மிருகங்களுக்கும்  கொடுப்பேன்  என்றான்.  (1சாமுவேல்  17:44)

pinnum  anthap  pelisthan  thaaveethaip  paarththu:  ennidaththil  vaa;  naan  un  maamsaththai  aagaayaththup  pa’ravaiga'lukkum  kaattu  mirugangga'lukkum  koduppean  en’raan.  (1saamuveal  17:44)

அதற்குத்  தாவீது:  பெலிஸ்தனை  நோக்கி:  நீ  பட்டயத்தோடும்,  ஈட்டியோடும்,  கேடகத்தோடும்  என்னிடத்தில்  வருகிறாய்;  நானோ  நீ  நிந்தித்த  இஸ்ரவேலுடைய  இராணுவங்களின்  தேவனாகிய  சேனைகளுடைய  கர்த்தரின்  நாமத்திலே  உன்னிடத்தில்  வருகிறேன்.  (1சாமுவேல்  17:45)

atha’rkuth  thaaveethu:  pelisthanai  noakki:  nee  pattayaththoadum,  eettiyoadum,  keadagaththoadum  ennidaththil  varugi’raay;  naanoa  nee  ninthiththa  isravealudaiya  iraa'nuvangga'lin  theavanaagiya  seanaiga'ludaiya  karththarin  naamaththilea  unnidaththil  varugi’rean.  (1saamuveal  17:45)

இன்றையதினம்  கர்த்தர்  உன்னை  என்  கையில்  ஒப்புக்கொடுப்பார்;  நான்  உன்னைக்  கொன்று,  உன்  தலையை  உன்னை  விட்டு  வாங்கி,  பெலிஸ்தருடைய  பாளயத்தின்  பிணங்களை  இன்றையதினம்  ஆகாயத்துப்  பறவைகளுக்கும்,  பூமியின்  காட்டு  மிருகங்களுக்கும்  கொடுப்பேன்;  அதனால்  இஸ்ரவேலில்  தேவன்  ஒருவர்  உண்டு  என்று  பூலோகத்தார்  எல்லாரும்  அறிந்துகொள்ளுவார்கள்.  (1சாமுவேல்  17:46)

in’raiyathinam  karththar  unnai  en  kaiyil  oppukkoduppaar;  naan  unnaik  kon’ru,  un  thalaiyai  unnai  vittu  vaanggi,  pelistharudaiya  paa'layaththin  pi'nangga'lai  in’raiyathinam  aagaayaththup  pa’ravaiga'lukkum,  boomiyin  kaattu  mirugangga'lukkum  koduppean;  athanaal  isravealil  theavan  oruvar  u'ndu  en’ru  booloagaththaar  ellaarum  a’rinthuko'l'luvaarga'l.  (1saamuveal  17:46)

கர்த்தர்  பட்டயத்தினாலும்  ஈட்டியினாலும்  ரட்சிக்கிறவர்  அல்ல  என்று  இந்த  ஜனக்கூட்டமெல்லாம்  அறிந்துகொள்ளும்;  யுத்தம்  கர்த்தருடையது;  அவர்  உங்களை  எங்கள்  கையில்  ஒப்புக்கொடுப்பார்  என்றான்.  (1சாமுவேல்  17:47)

karththar  pattayaththinaalum  eettiyinaalum  radchikki’ravar  alla  en’ru  intha  janakkoottamellaam  a’rinthuko'l'lum;  yuththam  karththarudaiyathu;  avar  ungga'lai  engga'l  kaiyil  oppukkoduppaar  en’raan.  (1saamuveal  17:47)

அப்பொழுது  அந்தப்  பெலிஸ்தன்  எழும்பி,  தாவீதுக்கு  எதிராகக்  கிட்டிவருகையில்,  தாவீது  தீவிரமாய்  அந்தச்  சேனைக்கும்  அந்தப்  பெலிஸ்தனுக்கும்  எதிராக  ஓடி,  (1சாமுவேல்  17:48)

appozhuthu  anthap  pelisthan  ezhumbi,  thaaveethukku  ethiraagak  kittivarugaiyil,  thaaveethu  theeviramaay  anthach  seanaikkum  anthap  pelisthanukkum  ethiraaga  oadi,  (1saamuveal  17:48)

தன்  கையை  அடைப்பத்திலே  போட்டு,  அதிலிருந்து  ஒரு  கல்லை  எடுத்து,  கவணிலே  வைத்துச்  சுழற்றி,  பெலிஸ்தனுடைய  நெற்றியிலே  பட  எறிந்தான்;  அந்தக்  கல்  அவன்  நெற்றியில்  பதிந்து  போனதினால்,  அவன்  தரையிலே  முகங்குப்புற  விழுந்தான்.  (1சாமுவேல்  17:49)

than  kaiyai  adaippaththilea  poattu,  athilirunthu  oru  kallai  eduththu,  kava'nilea  vaiththuch  suzhat’ri,  pelisthanudaiya  net’riyilea  pada  e’rinthaan;  anthak  kal  avan  net’riyil  pathinthu  poanathinaal,  avan  tharaiyilea  mugangkuppu’ra  vizhunthaan.  (1saamuveal  17:49)

இவ்விதமாகத்  தாவீது  ஒரு  கவணினாலும்  ஒரு  கல்லினாலும்  பெலிஸ்தனை  மேற்கொண்டு,  அவனை  மடங்கடித்து,  அவனைக்  கொன்றுபோட்டான்;  தாவீதின்  கையில்  பட்டயம்  இல்லாதிருந்தது.  (1சாமுவேல்  17:50)

ivvithamaagath  thaaveethu  oru  kava'ninaalum  oru  kallinaalum  pelisthanai  mea’rko'ndu,  avanai  madanggadiththu,  avanaik  kon’rupoattaan;  thaaveethin  kaiyil  pattayam  illaathirunthathu.  (1saamuveal  17:50)

ஆகையால்  தாவீது  பெலிஸ்தனண்டையில்  ஓடி  அவன்மேல்  நின்று,  அவன்  பட்டயத்தை  எடுத்து,  அதை  அதின்  உறையிலிருந்து  உருவி,  அவனைக்  கொன்று,  அதினாலே  அவன்  தலையை  வெட்டிப்போட்டான்;  அப்பொழுது  தங்கள்  வீரன்  செத்துப்போனான்  என்று  பெலிஸ்தர்  கண்டு,  ஓடிப்போனார்கள்.  (1சாமுவேல்  17:51)

aagaiyaal  thaaveethu  pelisthana'ndaiyil  oadi  avanmeal  nin’ru,  avan  pattayaththai  eduththu,  athai  athin  u’raiyilirunthu  uruvi,  avanaik  kon’ru,  athinaalea  avan  thalaiyai  vettippoattaan;  appozhuthu  thangga'l  veeran  seththuppoanaan  en’ru  pelisthar  ka'ndu,  oadippoanaarga'l.  (1saamuveal  17:51)

அப்பொழுது  இஸ்ரவேலரும்  யூதா  மனுஷரும்  எழும்பி,  ஆர்ப்பரித்து,  பள்ளத்தாக்கின்  எல்லைமட்டும்,  எக்ரோனின்  வாசல்கள்மட்டும்,  பெலிஸ்தரைத்  துரத்தினார்கள்;  சாராயீமின்  வழியிலும்,  காத்பட்டணமட்டும்,  எக்ரோன்  பட்டணமட்டும்,  பெலிஸ்தர்  வெட்டுண்டு  விழுந்தார்கள்.  (1சாமுவேல்  17:52)

appozhuthu  isravealarum  yoothaa  manusharum  ezhumbi,  aarppariththu,  pa'l'laththaakkin  ellaimattum,  ekroanin  vaasalga'lmattum,  pelistharaith  thuraththinaarga'l;  saaraayeemin  vazhiyilum,  kaathpatta'namattum,  ekroan  patta'namattum,  pelisthar  vettu'ndu  vizhunthaarga'l.  (1saamuveal  17:52)

இஸ்ரவேல்  புத்திரர்  பெலிஸ்தரை  மூர்க்கமாய்த்  துரத்தினபிற்பாடு,  திரும்பிவந்து,  அவர்களுடைய  பாளயங்களைக்  கொள்ளையிட்டார்கள்.  (1சாமுவேல்  17:53)

israveal  puththirar  pelistharai  moorkkamaayth  thuraththinapi’rpaadu,  thirumbivanthu,  avarga'ludaiya  paa'layangga'laik  ko'l'laiyittaarga'l.  (1saamuveal  17:53)

தாவீது  பெலிஸ்தனுடைய  தலையை  எடுத்து,  அதை  எருசலேமுக்குக்  கொண்டு  வந்தான்;  அவன்  ஆயுதங்களையோ  தன்  கூடாரத்திலே  வைத்தான்.  (1சாமுவேல்  17:54)

thaaveethu  pelisthanudaiya  thalaiyai  eduththu,  athai  erusaleamukkuk  ko'ndu  vanthaan;  avan  aayuthangga'laiyoa  than  koodaaraththilea  vaiththaan.  (1saamuveal  17:54)

தாவீது  பெலிஸ்தனுக்கு  எதிராகப்  புறப்பட்டுப்போகிறதைச்  சவுல்  கண்டபோது,  அவன்  சேனாபதியாகிய  அப்னேரைப்  பார்த்து:  அப்னேரே,  இந்த  வாலிபன்  யாருடைய  மகன்  என்று  கேட்டான்;  அதற்கு  அப்னேர்:  ராஜாவே,  எனக்குத்  தெரியாது  என்று  உம்முடைய  ஜீவனைக்கொண்டு  சொல்லுகிறேன்  என்றான்.  (1சாமுவேல்  17:55)

thaaveethu  pelisthanukku  ethiraagap  pu’rappattuppoagi’rathaich  savul  ka'ndapoathu,  avan  seanaabathiyaagiya  abnearaip  paarththu:  abnearea,  intha  vaaliban  yaarudaiya  magan  en’ru  keattaan;  atha’rku  abnear:  raajaavea,  enakkuth  theriyaathu  en’ru  ummudaiya  jeevanaikko'ndu  sollugi’rean  en’raan.  (1saamuveal  17:55)

அப்பொழுது  ராஜா:  அந்தப்  பிள்ளையாண்டான்  யாருடைய  மகன்  என்று  விசாரி  என்றான்.  (1சாமுவேல்  17:56)

appozhuthu  raajaa:  anthap  pi'l'laiyaa'ndaan  yaarudaiya  magan  en’ru  visaari  en’raan.  (1saamuveal  17:56)

தாவீது  பெலிஸ்தனைக்  கொன்று  திரும்புகையில்,  அப்னேர்  அவனைச்  சவுலுக்கு  முன்பாக  அழைத்துக்கொண்டு  போய்விட்டான்;  பெலிஸ்தனுடைய  தலை  அவன்  கையில்  இருந்தது.  (1சாமுவேல்  17:57)

thaaveethu  pelisthanaik  kon’ru  thirumbugaiyil,  abnear  avanaich  savulukku  munbaaga  azhaiththukko'ndu  poayvittaan;  pelisthanudaiya  thalai  avan  kaiyil  irunthathu.  (1saamuveal  17:57)

அப்பொழுது  சவுல்:  வாலிபனே,  நீ  யாருடைய  மகன்  என்று  அவனைக்  கேட்டதற்கு,  தாவீது:  நான்  பெத்லெகேம்  ஊரானாயிருக்கிற  உம்முடைய  அடியானாகிய  ஈசாயின்  மகன்  என்றான்.  (1சாமுவேல்  17:58)

appozhuthu  savul:  vaalibanea,  nee  yaarudaiya  magan  en’ru  avanaik  keattatha’rku,  thaaveethu:  naan  bethleheam  ooraanaayirukki’ra  ummudaiya  adiyaanaagiya  eesaayin  magan  en’raan.  (1saamuveal  17:58)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!