பின்பு
சாமுவேல் சவுலை நோக்கி:
இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல்
உம்மை ராஜாவாக அபிஷேகம்
பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும்
கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்
கேளும்: (1சாமுவேல் 15:1)
pinbu saamuveal savulai
noakki: isravealaraagiya thammudaiya janangga'lmeal ummai raajaavaaga abisheagam pa'n'nugi’ratha’rkuk karththar ennai anuppinaarea; ippoathum
karththarudaiya vaarththaiga'lin saththaththaik kea'lum:
(1saamuveal 15:1)
சேனைகளின்
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது,
அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த
செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். (1சாமுவேல்
15:2)
seanaiga'lin karththar sollugi’rathu ennaven’raal, isravealar
egipthilirunthu vanthapoathu,
amaleakku avarga'lukku vazhima’riththa seygaiyai manathilea
vaiththirukki’rean. (1saamuveal
15:2)
இப்போதும்
நீ போய், அமலேக்கை
மடங்கடித்து, அவனுக்கு உண்டான
எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல்
இரக்கம் வைக்காமல், புருஷரையும்,
ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும்,
ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும்
கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். (1சாமுவேல்
15:3)
ippoathum nee poay, amaleakkai
madanggadiththu, avanukku
u'ndaana ellaavat’raiyum sanggariththu, avanmeal
irakkam vaikkaamal, purusharaiyum, sthireega'laiyum, pi'l'laiga'laiyum, kuzhanthaiga'laiyum, maaduga'laiyum, aaduga'laiyum, ottagangga'laiyum, kazhuthaiga'laiyum kon’rupoadakkadavaay
engi’raar
en’ru sonnaan. (1saamuveal
15:3)
அப்பொழுது
சவுல்: இதை ஜனங்களுக்கு
அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத்
தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு
லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள். (1சாமுவேல்
15:4)
appozhuthu
savul: ithai janangga'lukku a’riyappaduththi,
thelaayimilea avarga'laith thogaipaarththaan;
avarga'l
ira'ndu ladcham kaalaadka'lum, yoothaa
janangga'l pathinaayirampearumaayirunthaarga'l. (1saamuveal 15:4)
சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும்
வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான்.
(1சாமுவேல் 15:5)
savul amaleakkudaiya patta'namattum vanthu, pa'l'laththaakkilea oru pathividaiyai vaiththaan.
(1saamuveal 15:5)
சவுல் கேனியரை நோக்கி:
நான் அமலேக்கியரோடேகூட உங்களையும்
வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள்
நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல்
எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள்
அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்;
அப்படியே கேனியர் அமலேக்கியரின்
நடுவிலிருந்து விலகிப்போனார்கள். (1சாமுவேல்
15:6)
savul keaniyarai
noakki: naan amaleakkiyaroadeakooda ungga'laiyum vaarikko'l'laathapadikku, neengga'l avarga'l naduvilirunthu pu’rappattu vilagippoangga'l; israveal
egipthilirunthu vanthapoathu,
neengga'l
avarga'l
ellaarukkum thayavuseytheerga'l en’raan; appadiyea
keaniyar amaleakkiyarin naduvilirunthu vilagippoanaarga'l. (1saamuveal 15:6)
அப்பொழுது
சவுல்: ஆவிலா துவக்கி
எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்
போகும் எல்லைமட்டும் இருந்த
அமலேக்கியரை மடங்கடித்து, (1சாமுவேல்
15:7)
appozhuthu
savul: aavilaa
thuvakki egipthi’rku ethireayirukki’ra
soorukkup poagum ellaimattum iruntha
amaleakkiyarai madanggadiththu, (1saamuveal 15:7)
அமலேக்கியரின்
ராஜாவாகிய ஆகாகை உயிரோடே
பிடித்தான்; ஜனங்கள் யாவரையும்
பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான். (1சாமுவேல்
15:8)
amaleakkiyarin raajaavaagiya aagaakai uyiroadea
pidiththaan; janangga'l yaavaraiyum pattayak karukkinaalea sanggaarampa'n'ninaan. (1saamuveal
15:8)
சவுலும்
ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில்
முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட
மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான
சகல வஸ்துக்களையும் முற்றிலும்
அழித்துப்போட்டார்கள். (1சாமுவேல் 15:9)
savulum janangga'lum aagaakaiyum, aadumaaduga'lil muthaltharamaanavaiga'laiyum, ira'ndaantharamaanavaiga'laiyum, aattukkuttiga'laiyum, nalamaana
ellaavat’raiyum, azhiththuppoada manathillaamal thappavaiththu, a’rpamaanavaiga'lum uthavaathavaiga'lumaana sagala
vasthukka'laiyum mut’rilum azhiththuppoattaarga'l. (1saamuveal
15:9)
அப்பொழுது
கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு
உண்டாகி, அவர் சொன்னது:
(1சாமுவேல் 15:10)
appozhuthu karththarudaiya vaarththai saamuvealukku u'ndaagi, avar sonnathu: (1saamuveal
15:10)
நான் சவுலை ராஜாவாக்கினது
எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி,
என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்;
அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும்
கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
(1சாமுவேல் 15:11)
naan
savulai raajaavaakkinathu enakku
manasthaabamaayirukki’rathu; avan ennaivittuth thirumbi, en vaarththaiga'lai ni’raiveat’raama’rpoanaan en’raar; appozhuthu
saamuveal manam nonthu, iraamuzhuthum
karththarai noakkik kooppittaan. (1saamuveal
15:11)
மறுநாள்
அதிகாலமே சாமுவேல் சவுலைச்
சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து,
தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம்
நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று
கில்காலுக்குப் போனான் என்று,
சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது. (1சாமுவேல்
15:12)
ma’runaa'l athikaalamea
saamuveal
savulaich santhikkappoanaan; appozhuthu savul
karmealukku vanthu, thanakku
oru jeyasthambam naatti, pinbu pala idangga'lil sen’ru kilgaalukkup poanaan en’ru, saamuvealukku a’rivikkappattathu. (1saamuveal 15:12)
சாமுவேல்
சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி:
நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய
வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான்.
(1சாமுவேல் 15:13)
saamuveal savulinidaththil poanaan; savul
avanai noakki: neer karththaraal aaseervathikkappattavar; karththarudaiya vaarththaiyai
ni’raiveat’rinean en’raan. (1saamuveal
15:13)
அதற்குச்
சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற
ஆடுகளின் சத்தமும், எனக்குக்
கேட்கிற மாடுகளின் சத்தமும்
என்ன என்றான். (1சாமுவேல்
15:14)
atha’rkuch saamuveal: appadiyaanaal
en kaathuga'lil vizhugi’ra aaduga'lin saththamum, enakkuk
keadki’ra
maaduga'lin saththamum enna en’raan. (1saamuveal 15:14)
அதற்குச்
சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக்
கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில்
நலமானவைகளை உம்முடைய தேவனாகிய
கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை
முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்.
(1சாமுவேல் 15:15)
atha’rkuch savul: amaleakkiyaridaththilirunthu avaiga'laik ko'nduvanthaarga'l; janangga'l aadumaaduga'lil nalamaanavaiga'lai ummudaiya
theavanaagiya karththarukkup baliyidumpadikkuth thappavaiththaarga'l; mat’ravaiga'lai mut’rilum azhiththuppoattoam en’raan. (1saamuveal 15:15)
அப்பொழுது
சாமுவேல்: அந்தப் பேச்சை
விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச்
சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன்
என்று சவுலோடே சொன்னான்.
அவன்: சொல்லும் என்றான்.
(1சாமுவேல் 15:16)
appozhuthu
saamuveal: anthap
peachchai
vidum, karththar intha iraaththiriyilea enakkuch sonnathai umakku
a’rivikki’rean en’ru savuloadea sonnaan. avan: sollum
en’raan.
(1saamuveal 15:16)
அப்பொழுது
சாமுவேல்: நீர் உம்முடைய
பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ
இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்;
கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக
அபிஷேகம் பண்ணுவித்தாரே. (1சாமுவேல்
15:17)
appozhuthu
saamuveal: neer ummudaiya paarvaikkuch si’riyavaraayirunthapoathu allavoa
israveal koaththirangga'lukkuth thalaivaraaneer; karththar
ummai isravealinmeal raajaavaaga abisheagam pa'n'nuviththaarea. (1saamuveal
15:17)
இப்போதும்
கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப்
பாவிகளைச் சங்கரித்து, அவர்களை
நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு
யுத்தம்பண்ணு என்று சொல்லி,
உம்மை அந்த வழியாய்
அனுப்பினார். (1சாமுவேல் 15:18)
ippoathum karththar:
nee poay amaleakkiyaraagiya anthap
paaviga'laich
sanggariththu, avarga'lai nirmoolamaakkith theerumattum, avarga'loadu yuththampa'n'nu en’ru solli, ummai antha vazhiyaay
anuppinaar. (1saamuveal 15:18)
இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து,
கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது
என்ன என்றான். (1சாமுவேல்
15:19)
ippadiyirukka, neer karththarudaiya
sollaikkea'laamal, ko'l'laiyinmeal pa’ranthu, karththarudaiya paarvaikkup
pollaappaanathaich seythathu enna en’raan. (1saamuveal 15:19)
சவுல் சாமுவேலை நோக்கி:
நான் கர்த்தருடைய சொல்லைக்
கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின
வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய
ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச்
சங்காரம் பண்ணினேன். (1சாமுவேல்
15:20)
savul saamuvealai noakki:
naan karththarudaiya sollaik keattu, karththar
ennai anuppina vazhiyaayp
poay, amaleakkin raajaavaagiya aagaakaik ko'nduvanthu,
amaleakkiyaraich sanggaaram pa'n'ninean.
(1saamuveal 15:20)
ஜனங்களோ
உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே
பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும்
ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள்
என்றான். (1சாமுவேல் 15:21)
janangga'loa ummudaiya theavanaagiya karththarukkuk kilgaalilea baliyidugi’ratha’rkaaga, ko'l'laiyilea
saabaththeedaagum aadumaaduga'lilea pirathaanamaanavaiga'laip pidiththukko'ndu vanthaarga'l en’raan. (1saamuveal
15:21)
அதற்குச்
சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க
தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
(1சாமுவேல் 15:22)
atha’rkuch saamuveal: karththarudaiya saththaththi’rkuk keezhppadigi’rathaippaarkkilum,
sarvaangga thaganangga'lum baliga'lum karththarukkup piriyamaayirukkumoa? baliyaippaarkkilum keezhppadithalum, aattukkadaakka'lin ni'naththaippaarkkilum sevikoduththalum uththamam.
(1saamuveal 15:22)
இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய
பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும்
விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது;
நீர் கர்த்தருடைய வார்த்தையைப்
புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார்
என்றான். (1சாமுவேல் 15:23)
ira'ndagampa'n'nuthal pillisooniya paavaththi’rkum, murattaattampa'n'nuthal
avabakthikkum vikkiragaaraathanaikkum
sariyaay irukki’rathu; neer karththarudaiya vaarththaiyaip pu’rakka'niththapadiyinaalea, avar ummai raajaavaayiraathapadikkup pu’rakka'niththuth tha'l'linaar
en’raan.
(1saamuveal 15:23)
அப்பொழுது
சவுல் சாமுவேலை நோக்கி:
நான் கர்த்தருடைய கட்டளையையும்
உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே
பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப்
பயந்து, அவர்கள் சொல்லைக்
கேட்டேன். (1சாமுவேல் 15:24)
appozhuthu
savul saamuvealai noakki:
naan karththarudaiya katta'laiyaiyum ummudaiya
vaarththaiga'laiyum mee’rinathinaalea paavagnseythean; naan janangga'lukkup bayanthu, avarga'l sollaik
keattean.
(1saamuveal 15:24)
இப்போதும்
நீர் என் பாவத்தை
மன்னித்து, நான் கர்த்தரைப்
பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான்.
(1சாமுவேல் 15:25)
ippoathum neer en paavaththai
manniththu, naan karththaraip
pa'ninthuko'l'lumpadikku, ennoadeakoodath thirumbivaarum en’raan. (1saamuveal
15:25)
சாமுவேல்
சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய
வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர்
உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார்
என்றான். (1சாமுவேல் 15:26)
saamuveal savulaip paarththu:
naan ummoadeakoodath thirumbivaruvathillai; karththarudaiya vaarththaiyaip pu’rakka'niththeer; neer isravealinmeal raajaavaayiraathapadikku, karththar
ummaiyum pu’rakka'niththuth
tha'l'linaar en’raan. (1saamuveal 15:26)
போகும்படி
சாமுவேல் திரும்புகிறபோது, சவுல்,
அவன் சால்வையின் தொங்கலைப்
பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று. (1சாமுவேல்
15:27)
poagumpadi saamuveal thirumbugi’rapoathu,
savul, avan saalvaiyin thonggalaip pidiththukko'ndaan, athu kizhinthupoayit’ru. (1saamuveal 15:27)
அப்பொழுது
சாமுவேல் அவனை நோக்கி:
கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின்
ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய
தோழனுக்கு அதைக் கொடுத்தார்.
(1சாமுவேல் 15:28)
appozhuthu
saamuveal avanai
noakki: karththar in’ru ummidaththiliruntha isravealin
raajyaththaik kizhiththuppoattu; ummaippaarkkilum uththamanaayirukki’ra ummudaiya
thoazhanukku athaik koduththaar.
(1saamuveal 15:28)
இஸ்ரவேலின்
ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை;
தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை;
மனம்மாற அவர் மனுஷன்
அல்ல என்றான். (1சாமுவேல்
15:29)
isravealin jeyabalamaanavar poysollugi’rathum illai; thaam sonnathaippat’ri manasthaabappadugi’rathum illai; manammaa’ra avar manushan alla en’raan. (1saamuveal 15:29)
அதற்கு
அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது
என் ஜனத்தின் மூப்பருக்கு
முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும்
நீர் என்னைக் கனம்பண்ணி,
நான் உம்முடைய தேவனாகிய
கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத்
திரும்பிவாரும் என்றான். (1சாமுவேல்
15:30)
atha’rku avan: naan paavagnseythean; ippoathu en janaththin moopparukku
munbaagavum, isravealukku
munbaagavum neer ennaik kanampa'n'ni,
naan ummudaiya theavanaagiya karththaraip
pa'ninthuko'l'lumpadikku, ennoadeakoodath thirumbivaarum en’raan. (1saamuveal
15:30)
அப்பொழுது
சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப்
பின்சென்றான்; சவுல் கர்த்தரைப்
பணிந்துகொண்டான். (1சாமுவேல் 15:31)
appozhuthu
saamuveal thirumbich savulukkup pinsen’raan; savul
karththaraip pa'ninthuko'ndaan. (1saamuveal
15:31)
பின்பு
சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய
ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்;
ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில்
வந்து, மரணத்தின் கசப்பு
அற்றுப்போனது நிச்சயம் என்றான்.
(1சாமுவேல் 15:32)
pinbu saamuveal: amaleakkin
raajaavaagiya aagaakai ennidaththil
ko'nduvaarungga'l en’raan; aagaak santhoashamaay avanidaththil
vanthu, mara'naththin kasappu at’ruppoanathu nichchayam en’raan. (1saamuveal
15:32)
சாமுவேல்:
உன் பட்டயம் ஸ்திரீகளைப்
பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி; சாமுவேல்
கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக
ஆகாகைத் துண்டித்துப்போட்டான். (1சாமுவேல்
15:33)
saamuveal: un pattayam sthireega'laip pi'l'laiyat’ravarga'laakkinathupoala, sthireega'lukku'l'lea un thaayum pi'l'laiyat’rava'laavaa'l en’ru solli; saamuveal kilgaalilea karththarukku
munbaaga
aagaakaith thu'ndiththuppoattaan. (1saamuveal 15:33)
பின்பு
சாமுவேல் ராமாவுக்குப் போனான்;
சவுலோ தன் ஊராகிய
கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப்
போய்விட்டான். (1சாமுவேல் 15:34)
pinbu saamuveal raamaavukkup
poanaan; savuloa
than ooraagiya kibiyaavilirukki’ra than veettukkup poayvittaan. (1saamuveal 15:34)
சவுல் மரணமடையும் நாள்மட்டும்
சாமுவேல் அப்புறம் அவனைக்
கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர்
மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத்
துக்கித்துக்கொண்டிருந்தான். (1சாமுவேல் 15:35)
savul mara'namadaiyum naa'lmattum saamuveal appu’ram avanaik
ka'ndu peasavillai; isravealinmeal savulai raajaavaakkinatha’rkaagak karththar manasthaabappattathinimiththam, saamuveal savulukkaagath thukkiththukko'ndirunthaan. (1saamuveal
15:35)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!