அப்பொழுது
சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும்
நோக்கி: இதோ, நீங்கள்
எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள்
சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். (1சாமுவேல்
12:1)
appozhuthu
saamuveal isravealar
anaivaraiyum noakki: ithoa,
neengga'l
enakkuch sonnapadiyellaam ungga'l so’rkeattu ungga'lukku oru raajaavai
ea’rpaduththinean. (1saamuveal
12:1)
இப்போதும்
இதோ, ராஜாவானவர் உங்களுக்கு
முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்; நான் என் சிறுவயதுமுதல்
இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாகச்
சஞ்சரித்துவந்தேன். (1சாமுவேல் 12:2)
ippoathum ithoa,
raajaavaanavar ungga'lukku munbaagach sagnchariththuvarugi’raar; naanoa kizhavanum
naraiththavanumaanean; en kumaarar
ungga'loadiruppaarga'l; naan en si’ruvayathumuthal innaa'lvaraikkum ungga'lukku munbaagach sagnchariththuvanthean.
(1saamuveal 12:2)
இதோ, இருக்கிறேன்; கர்த்தரின்
சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி
வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி
சொல்லுங்கள்; நான் யாருடைய
எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய
கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு
அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம்
வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்;
அப்படியுண்டானால் அதை உங்களுக்குத்
திரும்பக் கொடுப்பேன் என்றான்.
(1சாமுவேல் 12:3)
ithoa, irukki’rean; karththarin sannithiyilum avar abisheagampa'n'ni vaiththavarukku munbaagavum ennaikku’riththuch saadchi sollungga'l; naan yaarudaiya
eruthai eduththukko'ndean? yaarudaiya
kazhuthaiyai eduththukko'ndean? yaarukku
aniyaayagnseythean? yaarukku
idukka'nseythean? yaar kaiyil parithaanam
vaanggikko'ndu ka'nsaadaiyaayirunthean?
sollungga'l; appadiyu'ndaanaal athai ungga'lukkuth thirumbak koduppean en’raan. (1saamuveal
12:3)
அதற்கு
அவர்கள்: நீர் எங்களுக்கு
அநியாயஞ் செய்யவும் இல்லை;
எங்களுக்கு இடுக்கண் செய்யவும்
இல்லை; ஒருவர் கையிலும்
ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள். (1சாமுவேல்
12:4)
atha’rku avarga'l: neer engga'lukku aniyaayagn seyyavum illai;
engga'lukku idukka'n seyyavum illai;
oruvar kaiyilum on’rum vaanggavum illai en’raarga'l. (1saamuveal
12:4)
அதற்கு
அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும்
கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர்
உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார்; அவர் அபிஷேகம்பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி
என்றான்; அதற்கு அவர்கள்:
அவர் சாட்சிதான் என்றார்கள்.
(1சாமுவேல் 12:5)
atha’rku avan: neengga'l en kaiyil on’rum ka'ndupidikkavillai enbatha’rkuk karththar ungga'lukku ethiraagach saadchiyaayirukki’raar; avar abisheagampa'n'ninavarum in’ru atha’rkuch saadchi en’raan; atha’rku avarga'l: avar saadchithaan en’raarga'l. (1saamuveal 12:5)
அப்புறம்
சாமுவேல் ஜனங்களை நோக்கி:
மோசேயையும் ஆரோனையும் ஏற்படுத்தினவரும், உங்கள்
பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் கர்த்தரே.
(1சாமுவேல் 12:6)
appu’ram saamuveal janangga'lai noakki:
moaseayaiyum aaroanaiyum
ea’rpaduththinavarum, ungga'l pithaakka'lai
egipthutheasaththilirunthu pu’rappadappa'n'ninavarum karththarea.
(1saamuveal 12:6)
இப்போதும்
கர்த்தர் உங்களுக்கும் உங்கள்
பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில்
உங்களோடே நியாயம் பேசும்படிக்கு
நீங்கள் நில்லுங்கள். (1சாமுவேல்
12:7)
ippoathum karththar
ungga'lukkum ungga'l pithaakka'lukkum seythuvantha ellaa neethiyaana kiriyaiga'laikku’riththum, naan karththarudaiya sannithiyil ungga'loadea niyaayam
peasumpadikku neengga'l nillungga'l. (1saamuveal
12:7)
யாக்கோபு
எகிப்திலே போயிருக்கும்போது, உங்கள்
பிதாக்கள் கர்த்தரை நோக்கி
முறையிட்டார்கள், அப்பொழுது கர்த்தர்
மோசேயையும் ஆரோனையும் அனுப்பினார்;
அவர்கள் உங்கள் பிதாக்களை
எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை
இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணினார்கள். (1சாமுவேல்
12:8)
yaakkoabu egipthilea poayirukkumpoathu, ungga'l pithaakka'l
karththarai noakki mu’raiyittaarga'l, appozhuthu
karththar moaseayaiyum aaroanaiyum anuppinaar;
avarga'l
ungga'l
pithaakka'lai egipthilirunthu azhaiththuvanthu, avarga'lai intha sthalaththilea kudiyirukkappa'n'ninaarga'l. (1saamuveal 12:8)
அவர்கள்
தங்கள் தேவனாகிய கர்த்தரை
மறந்துபோகிறபோது, அவர் அவர்களை
ஆத்சோரின் சேனாபதியாகிய சிசெராவின்
கையிலும், பெலிஸ்தரின் கையிலும்,
மோவாபிய ராஜாவின் கையிலும்
விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு
விரோதமாக யுத்தம்பண்ணினார்கள். (1சாமுவேல்
12:9)
avarga'l thangga'l theavanaagiya karththarai ma’ranthupoagi’rapoathu, avar avarga'lai aathsoarin seanaabathiyaagiya siseraavin kaiyilum,
pelistharin kaiyilum, moavaabiya raajaavin
kaiyilum vit’ruppoattaar; ivarga'l avarga'lukku viroathamaaga yuththampa'n'ninaarga'l. (1saamuveal
12:9)
ஆகையால்
அவர்கள் கர்த்தரை நோக்கி
முறையிட்டு: நாங்கள் கர்த்தரை
விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் சேவித்ததினாலே, பாவஞ்செய்தோம்; இப்போதும்
எங்கள் சத்துருக்களின் கைக்கு
எங்களை நீங்கலாக்கி ரட்சியும்;
இனி உம்மைச் சேவிப்போம்
என்றார்கள். (1சாமுவேல் 12:10)
aagaiyaal avarga'l karththarai noakki
mu’raiyittu: naangga'l karththarai
vittup
baagaalga'laiyum astharoaththaiyum seaviththathinaalea, paavagnseythoam; ippoathum
engga'l saththurukka'lin kaikku
engga'lai
neenggalaakki radchiyum; ini ummaich seavippoam en’raarga'l. (1saamuveal 12:10)
அப்பொழுது
கர்த்தர் எருபாகாலையும் பேதானையும்
யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி,
நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும்
இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும்
உங்களை நீங்கலாக்கி ரட்சித்தார்.
(1சாமுவேல் 12:11)
appozhuthu karththar
erubaagaalaiyum beathaanaiyum yepthaavaiyum saamuvealaiyum anuppi,
neengga'l
bayamillaamal kudiyirukkumpadikkuch
sut’rilum iruntha
ungga'l saththurukka'lin kaikkum
ungga'lai
neenggalaakki radchiththaar. (1saamuveal
12:11)
அம்மோன்
புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ்
உங்களுக்கு விரோதமாய் வருகிறதை
நீங்கள் கண்டபோது, உங்கள்
தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு
ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல,
ஒரு ராஜா எங்கள்மேல்
ஆளவேண்டும் என்றீர்கள். (1சாமுவேல்
12:12)
ammoan puththirarin
raajaavaagiya naagaas ungga'lukku viroathamaay
varugi’rathai neengga'l ka'ndapoathu,
ungga'l
theavanaagiya karththarea
ungga'lukku raajaavaayirunthum, neengga'l ennai noakki: appadiyalla,
oru raajaa engga'lmeal aa'lavea'ndum
en’reerga'l. (1saamuveal
12:12)
இப்போதும்
நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட
ராஜா, இதோ, இருக்கிறார்;
இதோ, கர்த்தர் உங்களுக்கு
ஒரு ராஜாவை ஏற்படுத்தினார். (1சாமுவேல்
12:13)
ippoathum neengga'l vea'ndum
en’ru
virumbith
therinthuko'nda raajaa, ithoa,
irukki’raar; ithoa,
karththar ungga'lukku oru raajaavai
ea’rpaduththinaar. (1saamuveal
12:13)
நீங்கள்
கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க்
கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து,
அவரைச் சேவித்து, அவருடைய
சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும்
உங்களை ஆளுகிற ராஜாவும்
உங்கள் தேவனாகிய கர்த்தரைப்
பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள். (1சாமுவேல் 12:14)
neengga'l karththarudaiya vaakkukku
viroathamaayk kalagampa'n'naamal karththarukkup bayanthu, avaraich seaviththu, avarudaiya saththaththi’rkuk keezhppadinthaal, neengga'lum ungga'lai aa'lugi’ra raajaavum
ungga'l
theavanaagiya karththaraip
pinpat’rugi’ravarga'laayiruppeerga'l. (1saamuveal 12:14)
நீங்கள்
கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய
வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால், கர்த்தருடைய
கை உங்கள் பிதாக்களுக்கு
விரோதமாயிருந்தது போல உங்களுக்கும்
விரோதமாயிருக்கும். (1சாமுவேல் 12:15)
neengga'l karththarudaiya
saththaththi’rkuk keezhppadiyaamal, karththarudaiya vaakkukku
viroathamaayk kalagampa'n'nineerga'laanaal, karththarudaiya kai ungga'l pithaakka'lukku viroathamaayirunthathu poala ungga'lukkum viroathamaayirukkum. (1saamuveal
12:15)
இப்பொழுது
கர்த்தர் உங்கள் கண்களுக்கு
முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று
பாருங்கள். (1சாமுவேல் 12:16)
ippozhuthu karththar
ungga'l
ka'nga'lukku munbaagach seyyum periya
kaariyaththai nin’ru paarungga'l. (1saamuveal 12:16)
இன்று கோதுமை அறுப்பின்
நாள் அல்லவா? நீங்கள்
உங்களுக்கு ஒரு ராஜாவைக்
கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச்
செய்த உங்களுடைய பொல்லாப்புப்
பெரியதென்று நீங்கள் கண்டு உணரும்படிக்கு, நான் கர்த்தரை நோக்கி
விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும்
கட்டளையிடுவார் என்று சொல்லி,
(1சாமுவேல் 12:17)
in’ru koathumai a’ruppin naa'l allavaa? neengga'l ungga'lukku oru raajaavaik keattathinaal, karththarin
paarvaikkuch seytha
ungga'ludaiya pollaappup
periyathen’ru neengga'l ka'ndu
u'narumpadikku, naan karththarai
noakki vi'n'nappampa'n'nuvean; appozhuthu
idimuzhakkangga'laiyum mazhaiyaiyum
katta'laiyiduvaar en’ru solli, (1saamuveal
12:17)
சாமுவேல்
கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அன்றையதினமே
கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும்
கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள்
எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும்
பயந்து; (1சாமுவேல் 12:18)
saamuveal karththarai
noakki vi'n'nappampa'n'ninaan; an’raiyathinamea karththar
idimuzhakkangga'laiyum mazhaiyaiyum
katta'laiyittaar; appozhuthu
janangga'l ellaarum
karththarukkum saamuvealukkum migavum bayanthu; (1saamuveal
12:18)
சாமுவேலைப்
பார்த்து: நாங்கள் சாகாதபடிக்கு
உம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உம்முடைய
அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்;
நாங்கள் செய்த எல்லாப்
பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும்
என்று கேட்ட இந்தப்
பாவத்தையும் கூட்டிக்கொண்டோம் என்று ஜனங்கள் எல்லாரும்
சொன்னார்கள். (1சாமுவேல் 12:19)
saamuvealaip paarththu:
naangga'l saagaathapadikku ummudaiya
theavanaagiya karththaridaththil ummudaiya
adiyaarukkaaga vi'n'nappam seyyum;
naangga'l seytha
ellaap paavangga'loadum engga'lukku oru raajaa
vea'ndum en’ru keatta inthap paavaththaiyum koottikko'ndoam en’ru janangga'l ellaarum sonnaarga'l. (1saamuveal
12:19)
அப்பொழுது
சாமுவேல் ஜனங்களை நோக்கி:
பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப்
பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும்
கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல்
கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள்.
(1சாமுவேல் 12:20)
appozhuthu
saamuveal janangga'lai noakki:
bayappadaatheayungga'l; neengga'l inthap pollaappaiyellaam seytheerga'l; aagilum karththarai
vittup
pinvaanggaamal karththarai
ungga'l
muzhu iruthayaththoadum seaviyungga'l. (1saamuveal 12:20)
விலகிப்போகாதிருங்கள்; மற்றப்படி
பிரயோஜனமற்றதும் ரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப்
பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே.
(1சாமுவேல் 12:21)
vilagippoagaathirungga'l; mat’rappadi pirayoajanamat’rathum radchikkamaattaathathumaayirukki’ra vee'naanavaiga'laip pinpat’ruveerga'l; avaiga'l vee'naanavaiga'lea. (1saamuveal 12:21)
கர்த்தர்
உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர்
தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார். (1சாமுவேல்
12:22)
karththar ungga'laith thamakku
janamaakkikko'l'lap piriyamaanapadiyinaal, karththar
thammudaiya magaththuvamaana naamaththinimiththam thamathu
janaththaik kaividamaattaar. (1saamuveal 12:22)
நானும்
உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு
விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும்
செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன்.
(1சாமுவேல் 12:23)
naanum ungga'lukkaaga vi'n'nappam seyyaathiruppeanaagil karththarukku viroathamaagap paavagnseygi’ravanaayiruppean;
athu enakkuth thooramaayiruppathaaga; nanmaiyum sevvaiyumaana vazhiyai
naan ungga'lukkup poathippean.
(1saamuveal 12:23)
நீங்கள்
எப்படியும் கர்த்தருக்குப் பயந்து,
உங்கள் முழு இருதயத்தோடும்
உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு
மகிமையான காரியங்களைச் செய்தார்
என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். (1சாமுவேல்
12:24)
neengga'l eppadiyum karththarukkup bayanthu, ungga'l muzhu iruthayaththoadum u'nmaiyaay
avaraich seavikkakkadaveerga'l; avar ungga'lidaththil evva'lavu
magimaiyaana kaariyangga'laich seythaar enbathaich sinthiththuppaarungga'l. (1saamuveal 12:24)
நீங்கள்
இன்னும் பொல்லாப்பைச் செய்யவே
செய்வீர்களானால், நீங்களும் உங்கள்
ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.
(1சாமுவேல் 12:25)
neengga'l innum pollaappaich seyyavea seyveerga'laanaal, neengga'lum ungga'l raajaavum naasamadaiveerga'l en’raan. (1saamuveal 12:25)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!