மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன: (யாத்திராகமம்
21:1)
mealum, nee avarga'lukku a’rivikkavea'ndiya
piramaa'nangga'laavana: (yaaththiraagamam 21:1)
எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால்,
அவன் ஆறுவருஷம் சேவித்து,
ஏழாம் வருஷத்திலே ஒன்றும்
கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவன்.
(யாத்திராகமம் 21:2)
ebireyaril oru adimaiyaik
ko'ndaayaanaal, avan aa’ruvarusham seaviththu, eazhaam
varushaththilea on’rum kodaamal viduthalaipet’rup poagakkadavan. (yaaththiraagamam 21:2)
ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்;
விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப்
போகக்கடவள். (யாத்திராகமம் 21:3)
on’rikkaaranaay vanthirunthaanaanaal, on’rikkaaranaayp poagakkadavan; vivaagampa'n'ninavanaay vanthirunthaanaanaal, avan pe'njaathi avanoadeakoodap poagakkadava'l. (yaaththiraagamam 21:3)
அவன் எஜமான்
அவனுக்கு ஒரு பெண்ணை
விவாகஞ்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு
ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும்
இருந்தால், அந்தப் பெண்ணும்
அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப்
போகக்கடவன். (யாத்திராகமம் 21:4)
avan ejamaan
avanukku oru pe'n'nai
vivaagagnseythukoduththum, ava'l avanukku aa'npi'l'laiga'laiyaavathu pe'npi'l'laiga'laiyaavathu pet’rum irunthaal,
anthap pe'n'num ava'l pi'l'laiga'lum ava'l ejamaanaich searakkadavarga'l; avan maaththiram
on’riyaayp poagakkadavan. (yaaththiraagamam 21:4)
அந்த வேலைக்காரன்:
என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்;
நான் விடுதலை பெற்றுப்போக
மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால்,
(யாத்திராகமம் 21:5)
antha vealaikkaaran: en ejamaanaiyum en pe'njaathiyaiyum en pi'l'laiga'laiyum neasikki’rean; naan viduthalai pet’ruppoaga manathillai en’ru manappoorvamaaych
solvaanaanaal, (yaaththiraagamam 21:5)
அவன் எஜமான்
அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக்
கதவின் அருகேயாவது கதவுநிலையின்
அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான்
அவன் காதைக் கம்பியினாலே
குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே
சேவித்துக்கொண்டிருக்கக்கடவன். (யாத்திராகமம் 21:6)
avan ejamaan
avanai niyaayaathibathiga'lidaththil azhaiththukko'ndupoay, avanaik
kathavin arugeayaavathu kathavunilaiyin arugeayaavathu
searappa'n'ni, anggea avan ejamaan avan kaathaik kambiyinaalea kuththakkadavan; pinbu avan en’raikkum avanidaththilea
seaviththukko'ndirukkakkadavan. (yaaththiraagamam 21:6)
ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக
விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல
அவள் போகக்கூடாது. (யாத்திராகமம்
21:7)
oruvan than maga'lai vealaikkaariyaaga vit’ruppoattaanaanaal, vealaikkaaran
viduthalaipet’rup poavathupoala
ava'l poagakkoodaathu. (yaaththiraagamam 21:7)
அவளைத் தனக்கு
நியமித்துக் கொண்ட எஜமானின்
பார்வைக்கு அவள் தகாதவளாய்ப்
போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி,
அவளை அந்நியர் கையில்
விற்றுப்போட அவனுக்கு அதிகாரம்
இல்லை. (யாத்திராகமம் 21:8)
ava'laith thanakku
niyamiththuk ko'nda ejamaanin
paarvaikku ava'l thagaathava'laayp poanaal,
ava'l meedkappadalaam; avan ava'lukkuth thuroagampa'n'ni, ava'lai
anniyar kaiyil vit’ruppoada avanukku
athigaaram illai.
(yaaththiraagamam 21:8)
அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல
அவளையும் நடத்தக்கடவன். (யாத்திராகமம்
21:9)
avan than kumaaranukku ava'lai
niyamiththirunthaanaanaal, than kumaaraththiga'lai nadaththuvathupoala ava'laiyum
nadaththakkadavan. (yaaththiraagamam 21:9)
அவன் வேறொரு
பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய
அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக.
(யாத்திராகமம் 21:10)
avan vea’roru pe'n'naik
ko'ndaanaagil, iva'lukkuriya
annavasthira vivaagakkadamai aagiya ivaiga'lil ku’raivuseyyaamal iruppaanaaga. (yaaththiraagamam 21:10)
இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப்போகக்கடவள். (யாத்திராகமம்
21:11)
immoon’rum avan ava'lukkuch seyyaama’rpoanaal, ava'l pa'nangkodaamal viduthalaipet’ruppoagakkadava'l. (yaaththiraagamam 21:11)
ஒரு மனிதனைச்
சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க்
கொலைசெய்யப்படக்கடவன். (யாத்திராகமம் 21:12)
oru manithanaich saagumpadi adiththavan,
nichchayamaayk kolaiseyyappadakkadavan. (yaaththiraagamam 21:12)
ஒருவன் பதிவிருந்து
கொல்லாமல், தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக்
கொன்றால், அவன் ஓடிப்போய்ச்
சேரவேண்டிய ஸ்தலத்தை உனக்கு
நியமிப்பேன். (யாத்திராகமம் 21:13)
oruvan pathivirunthu
kollaamal, theavachseyalaayth than kaikku
nearittavanaik kon’raal, avan oadippoaych searavea'ndiya sthalaththai
unakku niyamippean. (yaaththiraagamam 21:13)
ஒருவன் பிறனுக்கு
விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத்
துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும். (யாத்திராகமம்
21:14)
oruvan pi’ranukku viroathamaagach
sathimoasagnseythu, avanaith
thu'nigaramaayk kon’rupoattaal, avanai en balipeedaththilirunthum pidiththukko'ndupoayk kolaiseyyavea'ndum. (yaaththiraagamam 21:14)
தன் தகப்பனையாவது
தன் தாயையாவது அடிக்கிறவன்
நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன். (யாத்திராகமம்
21:15)
than thagappanaiyaavathu than thaayaiyaavathu adikki’ravan nichchayamaayk kolaiseyyappadakkadavan. (yaaththiraagamam 21:15)
ஒருவன் ஒரு மனிதனைத் திருடி
விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன். (யாத்திராகமம்
21:16)
oruvan oru manithanaith thirudi
vit’ruppoattaalum, ivan avan vasaththilirukkak ka'ndupidikkappattaalum, avan nichchayamaayk kolaiseyyappadakkadavan.
(yaaththiraagamam 21:16)
தன் தகப்பனையாவது
தன் தாயையாவது சபிக்கிறவன்
நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன். (யாத்திராகமம்
21:17)
than thagappanaiyaavathu than thaayaiyaavathu
sabikki’ravan nichchayamaayk kolaiseyyappadakkadavan.
(yaaththiraagamam 21:17)
மனிதர் சண்டைபண்ணி,
ஒருவன் மற்றொருவனைக் கல்லால்
எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது அவன் சாவாமல் கட்டில்கிடையாய்க் கிடந்து,
(யாத்திராகமம் 21:18)
manithar sa'ndaipa'n'ni, oruvan
mat’roruvanaik kallaal
e’rinthathinaalaavathu kaiyaal
adiththathinaalaavathu avan saavaamal kattilkidaiyaayk kidanthu,
(yaaththiraagamam 21:18)
திரும்ப எழுந்திருந்து
வெளியிலே தன் ஊன்றுகோலைப்
பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன்
ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்; ஆனாலும்,
அவனுக்கு வேலை மினக்கெட்ட
நஷ்டத்தைக் கொடுத்து, அவனை நன்றாய்க் குணமாக்குவிக்கக்கடவன். (யாத்திராகமம்
21:19)
thirumba ezhunthirunthu ve'liyilea
than oon’rukoalaip pidiththukko'ndu nadamaadinaal, adiththavan
aakkinaikku neenggalaayiruppaan;
aanaalum, avanukku vealai
minakketta nashdaththaik
koduththu, avanai nan’raayk ku'namaakkuvikkakkadavan. (yaaththiraagamam 21:19)
ஒருவன் தனக்கு
அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால்
அடித்ததினாலே, அவன் கையால்
இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும். (யாத்திராகமம்
21:20)
oruvan thanakku
adimaiyaanavanaiyaavathu thanakku adimaiyaanava'laiyaavathu, koalaal
adiththathinaalea, avan kaiyaal
i’ranthupoanaal, pazhikkuppazhi vaanggappadavea'ndum. (yaaththiraagamam 21:20)
ஒரு நாளாவது
இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அவர்கள்
அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை. (யாத்திராகமம்
21:21)
oru naa'laavathu
ira'ndu naa'laavathu uyiroadirunthaal, avarga'l avanudaiya
udaimaiyaagaiyaal, pazhivaanggavea'ndiyathillai. (yaaththiraagamam 21:21)
மனிதர் சண்டைபண்ணி,
கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை
அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம்
விழுந்துபோனால், அடிபட்ட ஸ்திரீயின்
புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும்
தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும். (யாத்திராகமம்
21:22)
manithar sa'ndaipa'n'ni, karppavathiyaana oru sthireeyai adiththathinaal, ava'lukku
vea’rea seathamillaamal karppam
vizhunthupoanaal, adipatta sthireeyin purushan
adiththavanmeal sumaththugi’ratha’rkuththakkathaayum
niyaayaathibathiga'l
seyyum theerppinpadiyum tha'ndam
kodukkavea'ndum. (yaaththiraagamam 21:22)
வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு
ஜீவன், (யாத்திராகமம் 21:23)
vea’rea seathamu'ndaanaal, jeevanukku
jeevan, (yaaththiraagamam 21:23)
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், (யாத்திராகமம் 21:24)
ka'n'nukkuk ka'n, pallukkup pal, kaikkuk kai, kaalukkuk kaal, (yaaththiraagamam 21:24)
சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம்,
தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும். (யாத்திராகமம்
21:25)
soottukkuch soodu, kaayaththukkuk kaayam,
thazhumbukkuth thazhumbu pazhi kodukkavea'ndum. (yaaththiraagamam 21:25)
ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும்
தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும்
அடித்ததினால் அதைக் கெடுத்தால்,
அவன் கண்ணுக்குப் பதிலாக
அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும். (யாத்திராகமம்
21:26)
oruvan than adimaiyaanavan ka'n'naiyaagilum than adimaippe'n'nin ka'n'naiyaagilum adiththathinaal athaik
keduththaal, avan ka'n'nukkup
bathilaaga avanai
viduthalaipa'n'nividavea'ndum. (yaaththiraagamam 21:26)
அவன் தன் அடிமையானவன் பல்லையாவது
தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது
உதிர அடித்தால், அவன் பல்லுக்குப் பதிலாக
அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும். (யாத்திராகமம்
21:27)
avan than adimaiyaanavan pallaiyaavathu than adimaippe'n'nin pallaiyaavathu uthira
adiththaal, avan pallukkup
bathilaaga avanai
viduthalaipa'n'nividavea'ndum. (yaaththiraagamam 21:27)
ஒரு மாடு ஒரு புருஷனையாவது
ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால்
சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது
மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு
நீங்கலாயிருப்பான். (யாத்திராகமம் 21:28)
oru maadu oru purushanaiyaavathu oru sthireeyaiyaavathu muttinathinaal
saavu'ndaanaal, antha maadu kalle’riyappadavea'ndum, athin maamsam pusikkappadalaagaathu; appozhuthu
maattin
ejamaan aakkinaikku neenggalaayiruppaan. (yaaththiraagamam 21:28)
தன் மாடு வழக்கமாய் முட்டுகிற
மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டி வைக்காததினால், அது ஒரு புருஷனையாவது
ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால், மாடும்
கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும்
கொலைசெய்யப்படவேண்டும். (யாத்திராகமம் 21:29)
than maadu vazhakkamaay muttugi’ra maadaayirunthu, athu athin ejamaanukku
a’rivikkappattum, avan athaik katti vaikkaathathinaal, athu oru purushanaiyaavathu oru sthireeyaiyaavathu kon’rupoattaal, maadum kalle’riyappadavea'ndum, athin ejamaanum kolaiseyyappadavea'ndum. (yaaththiraagamam 21:29)
அபராதம் கொடுக்கும்படி
தீர்க்கப்பட்டதானால், அவன் தன் ஜீவனை மீட்கும்பொருளாக விதிக்கப்பட்ட
அபராதத்தைக் கொடுக்கக்கடவன். (யாத்திராகமம்
21:30)
abaraatham kodukkumpadi theerkkappattathaanaal, avan than jeevanai
meedkumporu'laaga vithikkappatta abaraathaththaik kodukkakkadavan. (yaaththiraagamam 21:30)
அது ஒருவன்
மகனை முட்டினாலும் சரி, ஒருவன் மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச்
செய்யப்படவேண்டும். (யாத்திராகமம் 21:31)
athu oruvan
maganai
muttinaalum sari,
oruvan maga'lai muttinaalum sari, inthath
theerppinpadiyea avanukkuch seyyappadavea'ndum. (yaaththiraagamam 21:31)
அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவது முட்டினால்,
அதற்கு உடையவன் அவர்களுடைய
எஜமானுக்கு முப்பது சேக்கல்
நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும். (யாத்திராகமம்
21:32)
antha maadu oru adimaiyaanavanaiyaavathu oru adimaippe'n'naiyaavathu muttinaal, atha’rku udaiyavan
avarga'ludaiya ejamaanukku
muppathu seakkal ni’raiyaana ve'l'liyaik
kodukkakkadavan; maadu kalle’riyappadavea'ndum. (yaaththiraagamam 21:32)
ஒருவன் ஒரு குழியைத் திறந்து
வைத்ததினாலாவது, ஒரு குழியை
வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது
ஒரு கழுதையாவது விழுந்தால்,
(யாத்திராகமம் 21:33)
oruvan oru kuzhiyaith thi’ranthu vaiththathinaalaavathu, oru kuzhiyai vetti athai moodaatheapoanathinaalaavathu, athilea
oru maadaavathu oru kazhuthaiyaavathu vizhunthaal,
(yaaththiraagamam 21:33)
குழிக்கு உடையவன்
அதற்கு ஈடாகப் பணத்தை
மிருகத்தின் எஜமானுக்குக் கொடுக்கக்கடவன்; செத்ததோ
அவனுடையதாகவேண்டும். (யாத்திராகமம் 21:34)
kuzhikku udaiyavan
atha’rku
eedaagap
pa'naththai mirugaththin ejamaanukkuk kodukkakkadavan; seththathoa avanudaiyathaagavea'ndum. (yaaththiraagamam 21:34)
ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை
முட்டினதினால் அது செத்தால்,
உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள்
விற்று, அதின் கிரயத்தைப்
பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள். (யாத்திராகமம்
21:35)
oruvanudaiya maadu mat’ravanudaiya maattai muttinathinaal athu
seththaal, uyiroadirukki’ra maattai avarga'l vit’ru, athin kirayaththaip panggittu, seththathaiyum panggittukko'l'lakkadavarga'l. (yaaththiraagamam 21:35)
அந்த மாடு முன்னமே முட்டுகிற
மாடென்று அதின் எஜமான்
அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக்
கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும். (யாத்திராகமம்
21:36)
antha maadu munnamea muttugi’ra maaden’ru athin ejamaan a’rinthirunthum, athaik
kattivaikkaathirunthaal, avan maattukku maattaik kodukkakkadavan;
seththathoa avanudaiyathaagavea'ndum. (yaaththiraagamam 21:36)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!