Monday, July 18, 2016

Yaaththiraagamam 11 | யாத்திராகமம் 11 | Exodus 11

அப்பொழுது  கர்த்தர்  மோசேயை  நோக்கி:  இன்னும்  ஒரு  வாதையைப்  பார்வோன்மேலும்  எகிப்தின்மேலும்  வரப்பண்ணுவேன்;  அதற்குப்பின்  அவன்  உங்களை  இவ்விடத்திலிருந்து  போகவிடுவான்;  சமூலமாய்  உங்களைப்  போகவிடுவதும்  அல்லாமல்,  உங்களை  இவ்விடத்திலிருந்து  துரத்தியும்  விடுவான்.  (யாத்திராகமம்  11:1)

appozhuthu  karththar  moaseayai  noakki:  innum  oru  vaathaiyaip  paarvoanmealum  egipthinmealum  varappa'n'nuvean;  atha’rkuppin  avan  ungga'lai  ivvidaththilirunthu  poagaviduvaan;  samoolamaay  ungga'laip  poagaviduvathum  allaamal,  ungga'lai  ivvidaththilirunthu  thuraththiyum  viduvaan.  (yaaththiraagamam  11:1)

இப்பொழுது  ஒவ்வொருவனும்  அவனவன்  அயலானிடத்திலும்,  ஒவ்வொருத்தியும்  அவளவள்  அயலாளிடத்திலும்  வெள்ளியுடைமைகளையும்  பொன்னுடைமைகளையும்  கேட்கும்படி  ஜனங்களுக்குச்  சொல்  என்றார்.  (யாத்திராகமம்  11:2)

ippozhuthu  ovvoruvanum  avanavan  ayalaanidaththilum,  ovvoruththiyum  ava'lava'l  ayalaa'lidaththilum  ve'l'liyudaimaiga'laiyum  ponnudaimaiga'laiyum  keadkumpadi  janangga'lukkuch  sol  en’raar.  (yaaththiraagamam  11:2)

அப்படியே  கர்த்தர்  ஜனங்களுக்கு  எகிப்தியரின்  கண்களில்  தயவுகிடைக்கும்படி  செய்தார்.  மோசே  என்பவன்  எகிப்து  தேசத்தில்  பார்வோனுடைய  ஊழியக்காரரின்  பார்வைக்கும்  ஜனங்களின்  பார்வைக்கும்  மிகவும்  பெரியவனாயிருந்தான்.  (யாத்திராகமம்  11:3)

appadiyea  karththar  janangga'lukku  egipthiyarin  ka'nga'lil  thayavukidaikkumpadi  seythaar.  moasea  enbavan  egipthu  theasaththil  paarvoanudaiya  oozhiyakkaararin  paarvaikkum  janangga'lin  paarvaikkum  migavum  periyavanaayirunthaan.  (yaaththiraagamam  11:3)

அப்பொழுது  மோசே:  கர்த்தர்  நடுராத்திரியிலே  நான்  எகிப்தின்  மத்தியில்  புறப்பட்டுப்போவேன்.  (யாத்திராகமம்  11:4)

appozhuthu  moasea:  karththar  naduraaththiriyilea  naan  egipthin  maththiyil  pu’rappattuppoavean.  (yaaththiraagamam  11:4)

அப்பொழுது  சிங்காசனத்தின்மேல்  வீற்றிருக்கும்  பார்வோனுடைய  தலைப்பிள்ளைமுதல்  ஏந்திரம்  அரைக்கும்  அடிமைப்பெண்ணுடைய  தலைப்பிள்ளைவரைக்கும்,  எகிப்து  தேசத்திலிருக்கிற  முதற்பேறனைத்தும்  மிருகஜீவன்களின்  தலையீற்றனைத்தும்  சாகும்  என்று  உரைக்கிறார்  என்று  சொன்னதுமன்றி,  (யாத்திராகமம்  11:5)

appozhuthu  singgaasanaththinmeal  veet’rirukkum  paarvoanudaiya  thalaippi'l'laimuthal  eanthiram  araikkum  adimaippe'n'nudaiya  thalaippi'l'laivaraikkum,  egipthu  theasaththilirukki’ra  mutha’rpea’ranaiththum  mirugajeevanga'lin  thalaiyeet’ranaiththum  saagum  en’ru  uraikki’raar  en’ru  sonnathuman’ri,  (yaaththiraagamam  11:5)

அதினால்  எகிப்து  தேசம்  எங்கும்  முன்னும்  பின்னும்  ஒருக்காலும்  உண்டாகாத  பெரிய  கூக்குரல்  உண்டாகும்.  (யாத்திராகமம்  11:6)

athinaal  egipthu  theasam  enggum  munnum  pinnum  orukkaalum  u'ndaagaatha  periya  kookkural  u'ndaagum.  (yaaththiraagamam  11:6)

ஆனாலும்  கர்த்தர்  எகிப்தியருக்கும்  இஸ்ரவேலருக்கும்  பண்ணுகிற  வித்தியாசத்தை  நீங்கள்  அறியும்படிக்கு,  இஸ்ரவேல்  புத்திரர்  அனைவருக்குள்ளும்  மனிதர்முதல்  மிருகஜீவன்கள்வரைக்கும்  ஒரு  நாயாகிலும்  தன்  நாவை  அசைப்பதில்லை.  (யாத்திராகமம்  11:7)

aanaalum  karththar  egipthiyarukkum  isravealarukkum  pa'n'nugi’ra  viththiyaasaththai  neengga'l  a’riyumpadikku,  israveal  puththirar  anaivarukku'l'lum  manitharmuthal  mirugajeevanga'lvaraikkum  oru  naayaagilum  than  naavai  asaippathillai.  (yaaththiraagamam  11:7)

அப்பொழுது  உம்முடைய  ஊழியக்காரராகிய  இவர்கள்  எல்லாரும்  என்னிடத்தில்  வந்து,  பணிந்து,  நீயும்  உன்னைப்  பின்பற்றுகிறவர்கள்  யாவரும்  புறப்பட்டுப்போங்கள்  என்று  சொல்லுவார்கள்;  அதின்பின்  புறப்படுவேன்  என்று  சொல்லி,  உக்கிரமான  கோபத்தோடே  பார்வோனை  விட்டுப்  புறப்பட்டான்.  (யாத்திராகமம்  11:8)

appozhuthu  ummudaiya  oozhiyakkaararaagiya  ivarga'l  ellaarum  ennidaththil  vanthu,  pa'ninthu,  neeyum  unnaip  pinpat’rugi’ravarga'l  yaavarum  pu’rappattuppoangga'l  en’ru  solluvaarga'l;  athinpin  pu’rappaduvean  en’ru  solli,  ukkiramaana  koabaththoadea  paarvoanai  vittup  pu’rappattaan.  (yaaththiraagamam  11:8)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  எகிப்து  தேசத்தில்  என்  அற்புதங்கள்  அநேகமாகும்படிக்கு,  பார்வோன்  உங்களுக்குச்  செவிகொடுக்கமாட்டான்  என்று  சொல்லியிருந்தார்.  (யாத்திராகமம்  11:9)

karththar  moaseayai  noakki:  egipthu  theasaththil  en  a’rputhangga'l  aneagamaagumpadikku,  paarvoan  ungga'lukkuch  sevikodukkamaattaan  en’ru  solliyirunthaar.  (yaaththiraagamam  11:9)

மோசேயும்  ஆரோனும்  இந்த  அற்புதங்களையெல்லாம்  பார்வோனுக்கு  முன்பாகச்  செய்தார்கள்.  கர்த்தர்  பார்வோனின்  இருதயத்தைக்  கடினப்படுத்தினதினால்,  அவன்  இஸ்ரவேல்  புத்திரரைத்  தன்  தேசத்திலிருந்து  போகவிடவில்லை.  (யாத்திராகமம்  11:10)

moaseayum  aaroanum  intha  a’rputhangga'laiyellaam  paarvoanukku  munbaagach  seythaarga'l.  karththar  paarvoanin  iruthayaththaik  kadinappaduththinathinaal,  avan  israveal  puththiraraith  than  theasaththilirunthu  poagavidavillai.  (yaaththiraagamam  11:10)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!