Thursday, July 14, 2016

Thaaniyeal 6 | தானியேல் 6 | Daniel 6

ராஜ்யம்  முழுவதையும்  ஆளும்படிக்குத்  தன்  ராஜ்யத்தின்மேல்  நூற்றிருபது  தேசாதிபதிகளையும்,  (தானியேல்  6:1)

raajyam  muzhuvathaiyum  aa'lumpadikkuth  than  raajyaththinmeal  noot’rirubathu  theasaathibathiga'laiyum,  (thaaniyeal  6:1)

ராஜாவுக்கு  நஷ்டம்  வராதபடிக்கு  அந்த  தேசாதிபதிகள்  கணக்கு  ஒப்புவிக்கிறதற்காக  அவர்களுக்கு  மேலாக  மூன்று  பிரதானிகளையும்  ஏற்படுத்துவது  தரியுவுக்கு  நலமென்று  கண்டது;  இவர்களில்  தானியேல்  ஒருவனாயிருந்தான்.  (தானியேல்  6:2)

raajaavukku  nashdam  varaathapadikku  antha  theasaathibathiga'l  ka'nakku  oppuvikki’ratha’rkaaga  avarga'lukku  mealaaga  moon’ru  pirathaaniga'laiyum  ea’rpaduththuvathu  thariyuvukku  nalamen’ru  ka'ndathu;  ivarga'lil  thaaniyeal  oruvanaayirunthaan.  (thaaniyeal  6:2)

இப்படியிருக்கையில்  தானியேல்  பிரதானிகளுக்கும்  தேசாதிபதிகளுக்கும்  மேற்பட்டவனாயிருந்தான்;  தானியேலுக்குள்  விசேஷித்த  ஆவி  இருந்தமையால்  அவனை  ராஜ்யம்  முழுமைக்கும்  அதிகாரியாக  ஏற்படுத்த  ராஜா  நினைத்தான்.  (தானியேல்  6:3)

ippadiyirukkaiyil  thaaniyeal  pirathaaniga'lukkum  theasaathibathiga'lukkum  mea’rpattavanaayirunthaan;  thaaniyealukku'l  viseashiththa  aavi  irunthamaiyaal  avanai  raajyam  muzhumaikkum  athigaariyaaga  ea’rpaduththa  raajaa  ninaiththaan.  (thaaniyeal  6:3)

அப்பொழுது  பிரதானிகளும்  தேசாதிபதிகளும்  ராஜ்யத்தின்  விசாரிப்பிலே  தானியேலைக்  குற்றப்படுத்தும்படி  முகாந்தரம்  தேடினார்கள்;  ஆனாலும்  ஒரு  முகாந்தரத்தையும்  குற்றத்தையும்  கண்டுபிடிக்க  அவர்களால்  கூடாதிருந்தது;  அவன்  உண்மையுள்ளவனாயிருந்தபடியால்  அவன்மேல்  சுமத்த  யாதொரு  குற்றமும்  குறைவும்  காணப்படவில்லை.  (தானியேல்  6:4)

appozhuthu  pirathaaniga'lum  theasaathibathiga'lum  raajyaththin  visaarippilea  thaaniyealaik  kut’rappaduththumpadi  mugaantharam  theadinaarga'l;  aanaalum  oru  mugaantharaththaiyum  kut’raththaiyum  ka'ndupidikka  avarga'laal  koodaathirunthathu;  avan  u'nmaiyu'l'lavanaayirunthapadiyaal  avanmeal  sumaththa  yaathoru  kut’ramum  ku’raivum  kaa'nappadavillai.  (thaaniyeal  6:4)

அப்பொழுது  அந்த  மனுஷர்:  நாம்  இந்தத்  தானியேலை  அவனுடைய  தேவனைப்பற்றிய  வேதவிஷயத்திலே  குற்றப்படுத்தும்  முகாந்தரத்தைக்  கண்டுபிடித்தாலொழிய  அவனை  வேறொன்றிலும்  குற்றப்படுத்தும்  முகாந்தரத்தைக்  கண்டுபிடிக்கக்கூடாது  என்றார்கள்.  (தானியேல்  6:5)

appozhuthu  antha  manushar:  naam  inthath  thaaniyealai  avanudaiya  theavanaippat’riya  veathavishayaththilea  kut’rappaduththum  mugaantharaththaik  ka'ndupidiththaalozhiya  avanai  vea’ron’rilum  kut’rappaduththum  mugaantharaththaik  ka'ndupidikkakkoodaathu  en’raarga'l.  (thaaniyeal  6:5)

பின்பு  அந்தப்  பிரதானிகளும்  தேசாதிபதிகளும்  கூட்டங்கூடி  ராஜாவினிடத்தில்  போய்,  அவனை  நோக்கி:  தரியு  ராஜாவே,  நீர்  என்றும்  வாழ்க.  (தானியேல்  6:6)

pinbu  anthap  pirathaaniga'lum  theasaathibathiga'lum  koottangkoodi  raajaavinidaththil  poay,  avanai  noakki:  thariyu  raajaavea,  neer  en’rum  vaazhga.  (thaaniyeal  6:6)

எவனாகிலும்  முப்பது  நாள்வரையில்  ராஜாவாகிய  உம்மைத்தவிர  எந்தத்  தேவனையானாலும்  மனுஷனையானாலும்  நோக்கி,  யாதொரு  காரியத்தைக்குறித்து  விண்ணப்பம்பண்ணினால்,  அவன்  சிங்கங்களின்  கெபியிலே  போடப்பட,  ராஜா  கட்டளை  பிறப்பித்து,  உறுதியான  தாக்கீது  செய்யவேண்டுமென்று  ராஜ்யத்தினுடைய  எல்லாப்  பிரதானிகளும்,  தேசாதிபதிகளும்,  பிரபுக்களும்,  மந்திரிமார்களும்,  தலைவர்களும்  ஆலோசனைபண்ணிக்  கொண்டிருக்கிறார்கள்.  (தானியேல்  6:7)

evanaagilum  muppathu  naa'lvaraiyil  raajaavaagiya  ummaiththavira  enthath  theavanaiyaanaalum  manushanaiyaanaalum  noakki,  yaathoru  kaariyaththaikku’riththu  vi'n'nappampa'n'ninaal,  avan  singgangga'lin  kebiyilea  poadappada,  raajaa  katta'lai  pi’rappiththu,  u’ruthiyaana  thaakkeethu  seyyavea'ndumen’ru  raajyaththinudaiya  ellaap  pirathaaniga'lum,  theasaathibathiga'lum,  pirabukka'lum,  manthirimaarga'lum,  thalaivarga'lum  aaloasanaipa'n'nik  ko'ndirukki’raarga'l.  (thaaniyeal  6:7)

ஆதலால்  இப்போதும்  ராஜாவே,  மேதியருக்கும்  பெர்சியருக்கும்  இருக்கிற  மாறாத  பிரமாணத்தின்படியே,  அந்தத்  தாக்கீது  மாற்றப்படாதபடி  நீர்  அதைக்  கட்டளையிட்டு,  அதற்குக்  கையெழுத்து  வைக்கவேண்டும்  என்றார்கள்.  (தானியேல்  6:8)

aathalaal  ippoathum  raajaavea,  meathiyarukkum  persiyarukkum  irukki’ra  maa’raatha  piramaa'naththinpadiyea,  anthath  thaakkeethu  maat’rappadaathapadi  neer  athaik  katta'laiyittu,  atha’rkuk  kaiyezhuththu  vaikkavea'ndum  en’raarga'l.  (thaaniyeal  6:8)

அப்படியே  ராஜாவாகிய  தரியு  அந்தக்  கட்டளைப்  பத்திரத்துக்குக்  கையெழுத்து  வைத்தான்.  (தானியேல்  6:9)

appadiyea  raajaavaagiya  thariyu  anthak  katta'laip  paththiraththukkuk  kaiyezhuththu  vaiththaan.  (thaaniyeal  6:9)

தானியேலோவென்றால்,  அந்தப்  பத்திரத்துக்குக்  கையெழுத்து  வைக்கப்பட்டதென்று  அறிந்தபோதிலும்,  தன்  வீட்டுக்குள்ளேபோய்,  தன்  மேல்  அறையிலே  எருசலேமுக்கு  நேராகப்  பலகணிகள்  திறந்திருக்க,  அங்கே  தான்  முன்  செய்துவந்தபடியே,  தினம்  மூன்று  வேளையும்  தன்  தேவனுக்கு  முன்பாக  முழங்காற்படியிட்டு  ஜெபம்பண்ணி,  ஸ்தோத்திரம்  செலுத்தினான்.  (தானியேல்  6:10)

thaaniyealoaven’raal,  anthap  paththiraththukkuk  kaiyezhuththu  vaikkappattathen’ru  a’rinthapoathilum,  than  veettukku'l'leapoay,  than  meal  a’raiyilea  erusaleamukku  nearaagap  palaga'niga'l  thi’ranthirukka,  anggea  thaan  mun  seythuvanthapadiyea,  thinam  moon’ru  vea'laiyum  than  theavanukku  munbaaga  muzhanggaa’rpadiyittu  jebampa'n'ni,  sthoaththiram  seluththinaan.  (thaaniyeal  6:10)

அப்பொழுது  அந்த  மனுஷர்  கூட்டங்கூடி,  தானியேல்  தன்  தேவனுக்கு  முன்பாக  ஜெபம்பண்ணி  விண்ணப்பம்செய்கிறதைக்  கண்டார்கள்.  (தானியேல்  6:11)

appozhuthu  antha  manushar  koottangkoodi,  thaaniyeal  than  theavanukku  munbaaga  jebampa'n'ni  vi'n'nappamseygi’rathaik  ka'ndaarga'l.  (thaaniyeal  6:11)

பின்பு  அவர்கள்  ராஜாவுக்கு  முன்பாக  வந்து,  ராஜாவின்  தாக்கீதைக்குறித்து:  எந்த  மனுஷனாகிலும்  முப்பது  நாள்வரையில்  ராஜாவாகிய  உம்மைத்தவிர  எந்த  தேவனையானாலும்  மனுஷனையானாலும்  நோக்கி  யாதொரு  காரியத்தைக்குறித்து  விண்ணப்பம்பண்ணினால்,  அவன்  சிங்கங்களின்  கெபியிலே  போடப்படவேண்டும்  என்று  நீர்  கட்டளைப்பத்திரத்தில்  கையெழுத்து  வைத்தீர்  அல்லவா  என்றார்கள்.  அதற்கு  ராஜா:  அந்தக்  காரியம்  மேதியருக்கும்  பெர்சியருக்கும்  இருக்கிற  மாறாத  பிரமாணத்தின்படி  உறுதியாக்கப்பட்டதே  என்றான்.  (தானியேல்  6:12)

pinbu  avarga'l  raajaavukku  munbaaga  vanthu,  raajaavin  thaakkeethaikku’riththu:  entha  manushanaagilum  muppathu  naa'lvaraiyil  raajaavaagiya  ummaiththavira  entha  theavanaiyaanaalum  manushanaiyaanaalum  noakki  yaathoru  kaariyaththaikku’riththu  vi'n'nappampa'n'ninaal,  avan  singgangga'lin  kebiyilea  poadappadavea'ndum  en’ru  neer  katta'laippaththiraththil  kaiyezhuththu  vaiththeer  allavaa  en’raarga'l.  atha’rku  raajaa:  anthak  kaariyam  meathiyarukkum  persiyarukkum  irukki’ra  maa’raatha  piramaa'naththinpadi  u’ruthiyaakkappattathea  en’raan.  (thaaniyeal  6:12)

அப்பொழுது  அவர்கள்  ராஜாவை  நோக்கி:  சிறைபிடிக்கப்பட்ட  யூதேயா  தேசத்தின்  புத்திரரில்  தானியேல்  என்பவன்  உம்மையும்  நீர்  கையெழுத்து  வைத்துக்கொடுத்த  கட்டளையையும்  மதியாமல்,  தினம்  மூன்று  வேளையும்  தான்  பண்ணும்  விண்ணப்பத்தைப்  பண்ணுகிறான்  என்றார்கள்.  (தானியேல்  6:13)

appozhuthu  avarga'l  raajaavai  noakki:  si’raipidikkappatta  yootheayaa  theasaththin  puththiraril  thaaniyeal  enbavan  ummaiyum  neer  kaiyezhuththu  vaiththukkoduththa  katta'laiyaiyum  mathiyaamal,  thinam  moon’ru  vea'laiyum  thaan  pa'n'num  vi'n'nappaththaip  pa'n'nugi’raan  en’raarga'l.  (thaaniyeal  6:13)

ராஜா  இந்த  வார்த்தைகளைக்  கேட்டபோது,  தன்னில்  மிகவும்  சஞ்சலப்பட்டு,  தானியேலைக்  காப்பாற்றும்படிக்கு  அவன்பேரில்  தன்  மனதை  வைத்து,  அவனைத்  தப்புவிக்கிறதற்காகச்  சூரியன்  அஸ்தமிக்குமட்டும்  பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தான்.  (தானியேல்  6:14)

raajaa  intha  vaarththaiga'laik  keattapoathu,  thannil  migavum  sagnchalappattu,  thaaniyealaik  kaappaat’rumpadikku  avanpearil  than  manathai  vaiththu,  avanaith  thappuvikki’ratha’rkaagach  sooriyan  asthamikkumattum  pirayaasappattukko'ndirunthaan.  (thaaniyeal  6:14)

அப்பொழுது  அந்த  மனுஷர்  ராஜாவினிடத்தில்  கூட்டமாய்  வந்து:  ராஜா  கட்டளையிட்ட  எந்தத்  தாக்கீதும்  கட்டளையும்  மாற்றப்படக்கூடாதென்பது  மேதியருக்கும்  பெர்சியருக்கும்  பிரமாணமாயிருக்கிறதென்று  அறிவீராக  என்றார்கள்.  (தானியேல்  6:15)

appozhuthu  antha  manushar  raajaavinidaththil  koottamaay  vanthu:  raajaa  katta'laiyitta  enthath  thaakkeethum  katta'laiyum  maat’rappadakkoodaathenbathu  meathiyarukkum  persiyarukkum  piramaa'namaayirukki’rathen’ru  a’riveeraaga  en’raarga'l.  (thaaniyeal  6:15)

அப்பொழுது  ராஜா  கட்டளையிட,  அவர்கள்  தானியேலைக்  கொண்டுவந்து,  அவனைச்  சிங்கங்களின்  கெபியிலே  போட்டார்கள்.  ராஜா  தானியேலை  நோக்கி:  நீ  இடைவிடாமல்  ஆராதிக்கிற  உன்  தேவன்  உன்னைத்  தப்புவிப்பார்  என்றான்.  (தானியேல்  6:16)

appozhuthu  raajaa  katta'laiyida,  avarga'l  thaaniyealaik  ko'nduvanthu,  avanaich  singgangga'lin  kebiyilea  poattaarga'l.  raajaa  thaaniyealai  noakki:  nee  idaividaamal  aaraathikki’ra  un  theavan  unnaith  thappuvippaar  en’raan.  (thaaniyeal  6:16)

ஒரு  கல்  கெபியினுடைய  வாசலின்மேல்  கொண்டுவந்து  வைக்கப்பட்டது;  தானியேலைப்பற்றிய  தீர்மானம்  மாற்றப்படாதபடிக்கு  ராஜா  தன்  மோதிரத்தினாலும்  தன்  பிரபுக்களின்  மோதிரத்தினாலும்  அதின்மேல்  முத்திரைபோட்டான்.  (தானியேல்  6:17)

oru  kal  kebiyinudaiya  vaasalinmeal  ko'nduvanthu  vaikkappattathu;  thaaniyealaippat’riya  theermaanam  maat’rappadaathapadikku  raajaa  than  moathiraththinaalum  than  pirabukka'lin  moathiraththinaalum  athinmeal  muththiraipoattaan.  (thaaniyeal  6:17)

பின்பு  ராஜா  தன்  அரமனைக்குப்போய்,  இராமுழுதும்  போஜனம்பண்ணாமலும்,  கீதவாத்தியம்  முதலானவைகளைத்  தனக்கு  முன்பாக  வரவொட்டாமலும்  இருந்தான்;  அவனுக்கு  நித்திரையும்  வராமற்போயிற்று.  (தானியேல்  6:18)

pinbu  raajaa  than  aramanaikkuppoay,  iraamuzhuthum  poajanampa'n'naamalum,  keethavaaththiyam  muthalaanavaiga'laith  thanakku  munbaaga  varavottaamalum  irunthaan;  avanukku  niththiraiyum  varaama’rpoayit’ru.  (thaaniyeal  6:18)

காலமே  கிழக்கு  வெளுக்கும்போது  ராஜா  எழுந்திருந்து,  சிங்கங்களின்  கெபிக்குத்  தீவிரமாய்ப்  போனான்.  (தானியேல்  6:19)

kaalamea  kizhakku  ve'lukkumpoathu  raajaa  ezhunthirunthu,  singgangga'lin  kebikkuth  theeviramaayp  poanaan.  (thaaniyeal  6:19)

ராஜா  கெபியின்  கிட்டவந்தபோது,  துயரசத்தமாய்த்  தானியேலைக்  கூப்பிட்டு:  தானியேலே,  ஜீவனுள்ள  தேவனுடைய  தாசனே,  நீ  இடைவிடாமல்  ஆராதிக்கிற  உன்  தேவன்  உன்னைச்  சிங்கங்களுக்குத்  தப்புவிக்க  வல்லவராயிருந்தாரா  என்று  தானியேலைக்  கேட்டான்.  (தானியேல்  6:20)

raajaa  kebiyin  kittavanthapoathu,  thuyarasaththamaayth  thaaniyealaik  kooppittu:  thaaniyealea,  jeevanu'l'la  theavanudaiya  thaasanea,  nee  idaividaamal  aaraathikki’ra  un  theavan  unnaich  singgangga'lukkuth  thappuvikka  vallavaraayirunthaaraa  en’ru  thaaniyealaik  keattaan.  (thaaniyeal  6:20)

அப்பொழுது  தானியேல்:  ராஜாவே,  நீர்  என்றும்  வாழ்க.  (தானியேல்  6:21)

appozhuthu  thaaniyeal:  raajaavea,  neer  en’rum  vaazhga.  (thaaniyeal  6:21)

சிங்கங்கள்  என்னைச்  சேதப்படுத்தாதபடிக்குத்  தேவன்  தம்முடைய  தூதனை  அனுப்பி,  அவைகளின்  வாயைக்  கட்டிப்போட்டார்;  அதேனென்றால்  அவருக்கு  முன்பாக  நான்  குற்றமற்றவனாய்க்  காணப்பட்டேன்;  ராஜாவாகிய  உமக்கு  முன்பாகவும்  நான்  நீதிகேடு  செய்ததில்லை  என்றான்.  (தானியேல்  6:22)

singgangga'l  ennaich  seathappaduththaathapadikkuth  theavan  thammudaiya  thoothanai  anuppi,  avaiga'lin  vaayaik  kattippoattaar;  atheanen’raal  avarukku  munbaaga  naan  kut’ramat’ravanaayk  kaa'nappattean;  raajaavaagiya  umakku  munbaagavum  naan  neethikeadu  seythathillai  en’raan.  (thaaniyeal  6:22)

அப்பொழுது  ராஜா  தன்னில்  மிகவும்  சந்தோஷப்பட்டு,  தானியேலைக்  கெபியிலிருந்து  தூக்கிவிடச்  சொன்னான்;  அப்படியே  தானியேல்  கெபியிலிருந்து  தூக்கிவிடப்பட்டான்;  அவன்  தன்  தேவன்பேரில்  விசுவாசித்திருந்தபடியால்,  அவனில்  ஒரு  சேதமும்  காணப்படவில்லை.  (தானியேல்  6:23)

appozhuthu  raajaa  thannil  migavum  santhoashappattu,  thaaniyealaik  kebiyilirunthu  thookkividach  sonnaan;  appadiyea  thaaniyeal  kebiyilirunthu  thookkividappattaan;  avan  than  theavanpearil  visuvaasiththirunthapadiyaal,  avanil  oru  seathamum  kaa'nappadavillai.  (thaaniyeal  6:23)

தானியேலின்மேல்  குற்றஞ்சாற்றின  மனுஷரையோவென்றால்,  ராஜா  கொண்டுவரச்சொன்னான்;  அவர்களையும்  அவர்கள்  குமாரரையும்  அவர்கள்  மனைவிகளையும்  சிங்கங்களின்  கெபியிலே  போட்டார்கள்;  அவர்கள்  கெபியின்  அடியிலே  சேருமுன்னே  சிங்கங்கள்  அவர்கள்மேல்  பாய்ந்து,  அவர்கள்  எலும்புகளையெல்லாம்  நொறுக்கிப்போட்டது.  (தானியேல்  6:24)

thaaniyealinmeal  kut’ragnsaat’rina  manusharaiyoaven’raal,  raajaa  ko'nduvarachsonnaan;  avarga'laiyum  avarga'l  kumaararaiyum  avarga'l  manaiviga'laiyum  singgangga'lin  kebiyilea  poattaarga'l;  avarga'l  kebiyin  adiyilea  searumunnea  singgangga'l  avarga'lmeal  paaynthu,  avarga'l  elumbuga'laiyellaam  no’rukkippoattathu.  (thaaniyeal  6:24)

பின்பு  ராஜாவாகிய  தரியு  தேசமெங்கும்  குடியிருக்கிற  எல்லா  ஜனங்களுக்கும்  ஜாதியாருக்கும்  பாஷைக்காரருக்கும்  எழுதினது  என்னவென்றால்:  உங்களுக்குச்  சமாதானம்  பெருகக்கடவது.  (தானியேல்  6:25)

pinbu  raajaavaagiya  thariyu  theasamenggum  kudiyirukki’ra  ellaa  janangga'lukkum  jaathiyaarukkum  baashaikkaararukkum  ezhuthinathu  ennaven’raal:  ungga'lukkuch  samaathaanam  perugakkadavathu.  (thaaniyeal  6:25)

என்  ராஜ்யத்தின்  ஆளுகைக்குள்  எங்குமுள்ளவர்கள்  யாவரும்  தானியேலின்  தேவனுக்கு  முன்பாக  நடுங்கிப்  பயப்படவேண்டுமென்று  என்னாலே  தீர்மானம்பண்ணப்படுகிறது;  அவர்  ஜீவனுள்ள  தேவன்,  அவர்  என்றென்றைக்கும்  நிலைத்திருக்கிறவர்;  அவருடைய  ராஜ்யம்  அழியாதது;  அவருடைய  கர்த்தத்துவம்  முடிவுபரியந்தமும்  நிற்கும்.  (தானியேல்  6:26)

en  raajyaththin  aa'lugaikku'l  enggumu'l'lavarga'l  yaavarum  thaaniyealin  theavanukku  munbaaga  nadunggip  bayappadavea'ndumen’ru  ennaalea  theermaanampa'n'nappadugi’rathu;  avar  jeevanu'l'la  theavan,  avar  en’ren’raikkum  nilaiththirukki’ravar;  avarudaiya  raajyam  azhiyaathathu;  avarudaiya  karththaththuvam  mudivupariyanthamum  ni’rkum.  (thaaniyeal  6:26)

தானியேலைச்  சிங்கங்களின்  கைக்குத்  தப்புவித்த  அவரே  தப்புவிக்கிறவரும்  இரட்சிக்கிறவரும்,  வானத்திலும்  பூமியிலும்  அடையாளங்களையும்  அற்புதங்களையும்  செய்கிறவருமாயிருக்கிறார்  என்று  எழுதினான்.  (தானியேல்  6:27)

thaaniyealaich  singgangga'lin  kaikkuth  thappuviththa  avarea  thappuvikki’ravarum  iradchikki’ravarum,  vaanaththilum  boomiyilum  adaiyaa'langga'laiyum  a’rputhangga'laiyum  seygi’ravarumaayirukki’raar  en’ru  ezhuthinaan.  (thaaniyeal  6:27)

தரியுவின்  ராஜ்யபார  காலத்திலும்,  பெர்சியனாகிய  கோரேசுடைய  ராஜ்யபாரகாலத்திலும்  தானியேலின்  காரியம்  ஜெயமாயிருந்தது.  (தானியேல்  6:28)

thariyuvin  raajyabaara  kaalaththilum,  persiyanaagiya  koareasudaiya  raajyabaarakaalaththilum  thaaniyealin  kaariyam  jeyamaayirunthathu.  (thaaniyeal  6:28)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!