Friday, July 15, 2016

Thaaniyeal 11 | தானியேல் 11 | Daniel 11

மேதியனாகிய  தரியு  அரசாண்ட  முதலாம்  வருஷத்திலே  நான்  அவனைத்  திடப்படுத்தவும்  பலப்படுத்தவும்  அவனுக்குத்  துணை  நின்றேன்.  (தானியேல்  11:1)

meathiyanaagiya  thariyu  arasaa'nda  muthalaam  varushaththilea  naan  avanaith  thidappaduththavum  balappaduththavum  avanukkuth  thu'nai  nin’rean.  (thaaniyeal  11:1)

இப்போது  நான்  மெய்யான  செய்தியை  உனக்கு  அறிவிப்பேன்;  இதோ,  இன்னும்  மூன்று  ராஜாக்கள்  பெர்சியாவில்  எழும்புவார்கள்;  அதின்பின்பு  நாலாம்  ராஜாவாயிருப்பவன்  எல்லாரிலும்  மகா  ஐசுவரிய  சம்பன்னனாகி,  தன்  ஐசுவரியத்தினால்  பலங்கொண்டு,  கிரேக்கு  ராஜ்யத்துக்கு  விரோதமாகச்  சகலரையும்  எழுப்பிவிடுவான்.  (தானியேல்  11:2)

ippoathu  naan  meyyaana  seythiyai  unakku  a’rivippean;  ithoa,  innum  moon’ru  raajaakka'l  persiyaavil  ezhumbuvaarga'l;  athinpinbu  naalaam  raajaavaayiruppavan  ellaarilum  mahaa  aisuvariya  sambannanaagi,  than  aisuvariyaththinaal  balangko'ndu,  kireakku  raajyaththukku  viroathamaagach  sagalaraiyum  ezhuppividuvaan.  (thaaniyeal  11:2)

ஆனாலும்  பராக்கிரமமுள்ள  ஒரு  ராஜா  எழும்பி,  பிரபலமாய்  ஆண்டு,  தனக்கு  இஷ்டமானபடி  செய்வான்.  (தானியேல்  11:3)

aanaalum  baraakkiramamu'l'la  oru  raajaa  ezhumbi,  pirabalamaay  aa'ndu,  thanakku  ishdamaanapadi  seyvaan.  (thaaniyeal  11:3)

அவன்  எழும்பினபின்பு,  அவனுடைய  ராஜ்யம்  உடைந்துபோய்,  வானத்தின்  நாலு  திசைகளிலும்  பகுக்கப்படும்;  ஆனாலும்  அது  அவனுடைய  சந்ததியாருக்கு  அல்ல,  அவன்  செய்த  ஆளுகையின்படியும்  அல்ல;  அவனுடைய  ராஜ்யம்  பிடுங்கப்பட்டு,  அவனுடையவர்களல்லாத  வேறேபேர்களிடமாய்த்  தாண்டிப்போம்.  (தானியேல்  11:4)

avan  ezhumbinapinbu,  avanudaiya  raajyam  udainthupoay,  vaanaththin  naalu  thisaiga'lilum  pagukkappadum;  aanaalum  athu  avanudaiya  santhathiyaarukku  alla,  avan  seytha  aa'lugaiyinpadiyum  alla;  avanudaiya  raajyam  pidunggappattu,  avanudaiyavarga'lallaatha  vea’reapearga'lidamaayth  thaa'ndippoam.  (thaaniyeal  11:4)

தென்றிசை  ராஜா  பலவானாயிருப்பான்;  ஆனாலும்  அவனுடைய  பிரபுக்களில்  ஒருவன்  அவனைப்பார்க்கிலும்  பலவானாகி  ஆளுவான்;  இவனுடைய  ஆளுகை  பலத்த  ஆளுகையாயிருக்கும்.  (தானியேல்  11:5)

then’risai  raajaa  balavaanaayiruppaan;  aanaalum  avanudaiya  pirabukka'lil  oruvan  avanaippaarkkilum  balavaanaagi  aa'luvaan;  ivanudaiya  aa'lugai  balaththa  aa'lugaiyaayirukkum.  (thaaniyeal  11:5)

அவர்கள்  சில  வருஷங்களுக்குப்பின்பு,  ஒருவரோடொருவர்  சம்பந்தம்பண்ணும்படிக்குத்  தென்றிசை  ராஜாவின்  குமாரத்தி  வடதிசை  ராஜாவினிடத்தில்  வருவாள்;  ஆனாலும்  அவளுக்குப்  புயபலம்  இராமற்போம்;  அவனும்  அவனுடைய  புயமும்  நிலைநிற்பதில்லை;  அவளும்  அவளை  அழைத்துவந்தவர்களும்,  அவளைப்  பெற்றவனும்,  அவளை  அக்காலங்களில்  பலப்படுத்தினவனும்  ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.  (தானியேல்  11:6)

avarga'l  sila  varushangga'lukkuppinbu,  oruvaroadoruvar  sambanthampa'n'numpadikkuth  then’risai  raajaavin  kumaaraththi  vadathisai  raajaavinidaththil  varuvaa'l;  aanaalum  ava'lukkup  puyabalam  iraama’rpoam;  avanum  avanudaiya  puyamum  nilaini’rpathillai;  ava'lum  ava'lai  azhaiththuvanthavarga'lum,  ava'laip  pet’ravanum,  ava'lai  akkaalangga'lil  balappaduththinavanum  oppukkodukkappaduvaarga'l.  (thaaniyeal  11:6)

ஆனாலும்  அவளுடைய  வேர்களின்  கிளையாகிய  ஒருவன்  தன்  ஸ்தானத்தில்  எழும்பி,  இராணுவத்தோடே  வந்து,  வடதிசை  ராஜாவின்  அரணிப்புக்குள்  பிரவேசித்து,  அவர்களை  விரோதித்து,  (தானியேல்  11:7)

aanaalum  ava'ludaiya  vearga'lin  ki'laiyaagiya  oruvan  than  sthaanaththil  ezhumbi,  iraa'nuvaththoadea  vanthu,  vadathisai  raajaavin  ara'nippukku'l  piraveasiththu,  avarga'lai  viroathiththu,  (thaaniyeal  11:7)

அவர்களுடைய  அதிபதிகளையும்,  அவர்களுடைய  விலையேறப்பெற்ற  வெள்ளியும்  பொன்னுமாகிய  பாத்திரங்களையும்,  அவர்களுடைய  தெய்வங்களையுங்கூட  எகிப்துக்குக்  கொண்டுபோய்,  சில  வருஷங்கள்மட்டும்  வடதிசை  ராஜாவைப்பார்க்கிலும்  நிலையாய்  நிற்பான்.  (தானியேல்  11:8)

avarga'ludaiya  athibathiga'laiyum,  avarga'ludaiya  vilaiyea’rappet’ra  ve'l'liyum  ponnumaagiya  paaththirangga'laiyum,  avarga'ludaiya  theyvangga'laiyungkooda  egipthukkuk  ko'ndupoay,  sila  varushangga'lmattum  vadathisai  raajaavaippaarkkilum  nilaiyaay  ni’rpaan.  (thaaniyeal  11:8)

தென்றிசை  ராஜா  அவன்  ராஜ்யத்துக்கு  விரோதமாக  வந்து,  தன்  தேசத்துக்குத்  திரும்பிப்போவான்.  (தானியேல்  11:9)

then’risai  raajaa  avan  raajyaththukku  viroathamaaga  vanthu,  than  theasaththukkuth  thirumbippoavaan.  (thaaniyeal  11:9)

ஆனாலும்  அவனுடைய  குமாரர்  யுத்தஞ்செய்ய  எத்தனித்து,  திரளான  சேனைகளைக்  கூட்டுவார்கள்;  இவர்களில்  ஒருவன்  நிச்சயமாய்  வந்து,  வெள்ளம்போலக்  கடந்து,  திரும்பவும்  தன்னுடைய  அரண்மட்டும்  யுத்தங்கலந்து  சேருவான்.  (தானியேல்  11:10)

aanaalum  avanudaiya  kumaarar  yuththagnseyya  eththaniththu,  thira'laana  seanaiga'laik  koottuvaarga'l;  ivarga'lil  oruvan  nichchayamaay  vanthu,  ve'l'lampoalak  kadanthu,  thirumbavum  thannudaiya  ara'nmattum  yuththangkalanthu  searuvaan.  (thaaniyeal  11:10)

அப்பொழுது  தென்றிசை  ராஜா  கடுங்கோபங்கொண்டு  புறப்பட்டுப்போய்,  வடதிசை  ராஜாவோடே  யுத்தம்பண்ணுவான்;  இவன்  பெரிய  சேனையை  ஏகமாய்  நிறுத்துவான்;  ஆனாலும்  இந்தச்  சேனை  அவன்  கையில்  ஒப்புக்கொடுக்கப்படும்.  (தானியேல்  11:11)

appozhuthu  then’risai  raajaa  kadungkoabangko'ndu  pu’rappattuppoay,  vadathisai  raajaavoadea  yuththampa'n'nuvaan;  ivan  periya  seanaiyai  eagamaay  ni’ruththuvaan;  aanaalum  inthach  seanai  avan  kaiyil  oppukkodukkappadum.  (thaaniyeal  11:11)

அவன்  இந்தச்  சேனையை  நீக்கினபின்பு,  அவனுடைய  இருதயம்  கர்வங்கொள்ளும்;  அவன்  அநேகமாயிரம்பேரை  மடிவிப்பான்;  ஆனாலும்  பலங்கொள்ளமாட்டான்.  (தானியேல்  11:12)

avan  inthach  seanaiyai  neekkinapinbu,  avanudaiya  iruthayam  karvangko'l'lum;  avan  aneagamaayirampearai  madivippaan;  aanaalum  balangko'l'lamaattaan.  (thaaniyeal  11:12)

சில  வருஷங்கள்  சென்றபின்பு  வடதிசை  ராஜா  திரும்ப  முந்தின  சேனையிலும்  பெரிதான  சேனையைச்  சேர்த்து,  மகா  பெரிய  சேனையோடும்  வெகு  சம்பத்தோடும்  நிச்சயமாய்  வருவான்.  (தானியேல்  11:13)

sila  varushangga'l  sen’rapinbu  vadathisai  raajaa  thirumba  munthina  seanaiyilum  perithaana  seanaiyaich  searththu,  mahaa  periya  seanaiyoadum  vegu  sambaththoadum  nichchayamaay  varuvaan.  (thaaniyeal  11:13)

அக்காலங்களில்  தென்றிசை  ராஜாவுக்கு  விரோதமாக  அநேகர்  எழும்புவார்கள்;  அப்பொழுது  உன்  ஜனத்திலுள்ள  துண்டரிக்கக்காரரின்  புத்திரர்  தரிசனத்தை  நிறைவேற்றத்  தங்களை  உயர்த்துவார்கள்.  (தானியேல்  11:14)

akkaalangga'lil  then’risai  raajaavukku  viroathamaaga  aneagar  ezhumbuvaarga'l;  appozhuthu  un  janaththilu'l'la  thu'ndarikkakkaararin  puththirar  tharisanaththai  ni’raiveat’rath  thangga'lai  uyarththuvaarga'l.  (thaaniyeal  11:14)

வடதிசை  ராஜா  வந்து,  கொத்தளம்  போட்டு,  அரணான  நகரங்களைப்  பிடிப்பான்;  தென்றிசை  ராஜாவின்  புயபலங்களும்  அவன்  தெரிந்துகொண்ட  ஜனமும்  நில்லாமற்போம்;  எதிர்க்கிறதற்குப்  பெலன்  இராது.  (தானியேல்  11:15)

vadathisai  raajaa  vanthu,  koththa'lam  poattu,  ara'naana  nagarangga'laip  pidippaan;  then’risai  raajaavin  puyabalangga'lum  avan  therinthuko'nda  janamum  nillaama’rpoam;  ethirkki’ratha’rkup  belan  iraathu.  (thaaniyeal  11:15)

ஆகையால்  அவனுக்கு  விரோதமாக  வருகிறவன்  தன்  இஷ்டப்படிச்  செய்வான்;  அவனுக்கு  முன்பாக  நிலைநிற்பவன்  ஒருவனும்  இல்லை;  அவன்  சிங்காரமான  தேசத்தில்  தங்குவான்;  எல்லாம்  அவன்  கைவசமாகும்.  (தானியேல்  11:16)

aagaiyaal  avanukku  viroathamaaga  varugi’ravan  than  ishdappadich  seyvaan;  avanukku  munbaaga  nilaini’rpavan  oruvanum  illai;  avan  singgaaramaana  theasaththil  thangguvaan;  ellaam  avan  kaivasamaagum.  (thaaniyeal  11:16)

தன்  ராஜ்யத்தின்  வல்லமையோடெல்லாம்  தானும்  தன்னோடேகூடச்  செம்மைமார்க்கத்தாரும்  வர,  இவன்  தன்  முகத்தைத்  திருப்புவான்;  இப்படிச்  செய்து  கெடுதியுண்டாகும்படி  அவனுக்கு  ஒரு  கன்னிப்பெண்ணைக்  கொடுப்பான்,  ஆனாலும்  அவளாலே  ஸ்திரம்பெறான்;  அவள்  அவன்  பட்சத்தில்  நில்லாள்.  (தானியேல்  11:17)

than  raajyaththin  vallamaiyoadellaam  thaanum  thannoadeakoodach  semmaimaarkkaththaarum  vara,  ivan  than  mugaththaith  thiruppuvaan;  ippadich  seythu  keduthiyu'ndaagumpadi  avanukku  oru  kannippe'n'naik  koduppaan,  aanaalum  ava'laalea  sthirampe’raan;  ava'l  avan  padchaththil  nillaa'l.  (thaaniyeal  11:17)

பின்பு  இவன்  தன்  முகத்தைத்  தீவுகளுக்கு  நேராகத்  திருப்பி,  அநேகந்  தீவுகளைப்  பிடிப்பான்;  ஆனாலும்  ஒரு  சேனாபதி  இவன்  செய்கிற  நிந்தையை  ஒழியப்பண்ணுவதுமல்லாமல்,  இவன்  செய்த  நிந்தையினிமித்தம்  இவனுக்குச்  சரிக்குச்  சரிக்கட்டுவான்.  (தானியேல்  11:18)

pinbu  ivan  than  mugaththaith  theevuga'lukku  nearaagath  thiruppi,  aneagan  theevuga'laip  pidippaan;  aanaalum  oru  seanaabathi  ivan  seygi’ra  ninthaiyai  ozhiyappa'n'nuvathumallaamal,  ivan  seytha  ninthaiyinimiththam  ivanukkuch  sarikkuch  sarikkattuvaan.  (thaaniyeal  11:18)

ஆகையால்  தன்  முகத்தைத்  தன்  தேசத்தின்  அரண்களுக்கு  நேராகத்  திருப்புவான்;  அங்கே  இடறிவிழுந்து  காணப்படாமற்போவான்.  (தானியேல்  11:19)

aagaiyaal  than  mugaththaith  than  theasaththin  ara'nga'lukku  nearaagath  thiruppuvaan;  anggea  ida’rivizhunthu  kaa'nappadaama’rpoavaan.  (thaaniyeal  11:19)

செழிப்பான  ராஜ்யத்தில்  தண்டல்காரனைத்  திரியப்பண்ணுகிற  ஒருவன்  தன்  ஸ்தானத்தில்  எழும்புவான்;  ஆகிலும்  சிலநாளைக்குள்  கோபமில்லாமலும்  யுத்தமில்லாமலும்  நாசமடைவான்.  (தானியேல்  11:20)

sezhippaana  raajyaththil  tha'ndalkaaranaith  thiriyappa'n'nugi’ra  oruvan  than  sthaanaththil  ezhumbuvaan;  aagilum  silanaa'laikku'l  koabamillaamalum  yuththamillaamalum  naasamadaivaan.  (thaaniyeal  11:20)

அவன்  ஸ்தானத்தில்  அவமதிக்கப்பட்டவன்  ஒருவன்  எழும்புவான்;  இவனுக்கு  ராஜ்யபாரத்தின்  மேன்மையைக்  கொடாதிருப்பார்கள்;  ஆனாலும்  இவன்  சமாதானமாய்  நுழைந்து,  இச்சகம்பேசி,  ராஜ்யத்தைக்  கட்டிக்கொள்ளுவான்.  (தானியேல்  11:21)

avan  sthaanaththil  avamathikkappattavan  oruvan  ezhumbuvaan;  ivanukku  raajyabaaraththin  meanmaiyaik  kodaathiruppaarga'l;  aanaalum  ivan  samaathaanamaay  nuzhainthu,  ichchagampeasi,  raajyaththaik  kattikko'l'luvaan.  (thaaniyeal  11:21)

பிரவாகமாய்  வருகிற  சேனைகள்  இவனாலே  பிரவாகமாய்  முறிக்கப்படும்;  உடன்படிக்கையின்  தலைவனும்  முறிக்கப்படுவான்.  (தானியேல்  11:22)

piravaagamaay  varugi’ra  seanaiga'l  ivanaalea  piravaagamaay  mu’rikkappadum;  udanpadikkaiyin  thalaivanum  mu’rikkappaduvaan.  (thaaniyeal  11:22)

ஏனென்றால்  அவனோடே  சம்பந்தம்பண்ணின  நாட்கள்முதல்  அவன்  சூதாய்  நடந்து,  கொஞ்சம்  ஜனங்களோடே  புறப்பட்டுவந்து  பெலங்கொள்ளுவான்.  (தானியேல்  11:23)

eanen’raal  avanoadea  sambanthampa'n'nina  naadka'lmuthal  avan  soothaay  nadanthu,  kogncham  janangga'loadea  pu’rappattuvanthu  belangko'l'luvaan.  (thaaniyeal  11:23)

தேசம்  சுகவாழ்வோடும்  சம்பூரணத்தோடும்  இருக்கையில்,  அவன்  உட்பிரவேசித்து,  தன்  பிதாக்களும்  தன்  பிதாக்களின்  பிதாக்களும்  செய்யாததைச்  செய்வான்,  கொள்ளையிட்டுச்  சூறையாடி,  பொருளை  அவர்களுக்கு  இறைத்துப்  பங்கிட்டு,  அரண்களுக்கு  விரோதமாகத்  தனக்குள்  உபாயங்களை  யோசிப்பான்;  சிலகாலமட்டும்  இப்படியிருக்கும்.  (தானியேல்  11:24)

theasam  sugavaazhvoadum  sampoora'naththoadum  irukkaiyil,  avan  udpiraveasiththu,  than  pithaakka'lum  than  pithaakka'lin  pithaakka'lum  seyyaathathaich  seyvaan,  ko'l'laiyittuch  soo’raiyaadi,  poru'lai  avarga'lukku  i’raiththup  panggittu,  ara'nga'lukku  viroathamaagath  thanakku'l  ubaayangga'lai  yoasippaan;  silakaalamattum  ippadiyirukkum.  (thaaniyeal  11:24)

பின்னும்  தென்றிசை  ராஜாவுக்கு  விரோதமாகப்  பெரிய  சேனையோடே  போர்செய்யத்  தன்  வல்லமையையும்  தன்  ஸ்திரத்தையும்  எழுப்புவான்;  அப்பொழுது  தென்றிசை  ராஜா  மிகவும்  பலத்த  பெரிய  இராணுவத்தோடே  போய்  யுத்தங்கலப்பான்;  ஆனாலும்  அவர்கள்  அவனுக்கு  விரோதமாகத்  துராலோசனை  பண்ணியிருந்தபடியால்,  அவன்  நிற்கமாட்டான்.  (தானியேல்  11:25)

pinnum  then’risai  raajaavukku  viroathamaagap  periya  seanaiyoadea  poarseyyath  than  vallamaiyaiyum  than  sthiraththaiyum  ezhuppuvaan;  appozhuthu  then’risai  raajaa  migavum  balaththa  periya  iraa'nuvaththoadea  poay  yuththangkalappaan;  aanaalum  avarga'l  avanukku  viroathamaagath  thuraaloasanai  pa'n'niyirunthapadiyaal,  avan  ni’rkamaattaan.  (thaaniyeal  11:25)

அவனுடைய  போஜனங்களைச்  சாப்பிடுகிறவர்கள்  அவனை  நாசப்படுத்துவார்கள்;  ஆகையால்  அவனுடைய  இராணுவம்  பிரவாகமாய்  வரும்;  அநேகர்  கொலையுண்டு  விழுவார்கள்.  (தானியேல்  11:26)

avanudaiya  poajanangga'laich  saappidugi’ravarga'l  avanai  naasappaduththuvaarga'l;  aagaiyaal  avanudaiya  iraa'nuvam  piravaagamaay  varum;  aneagar  kolaiyu'ndu  vizhuvaarga'l.  (thaaniyeal  11:26)

இந்த  இரண்டு  ராஜாக்களின்  இருதயமும்  தீமை  செய்ய  நினைக்கும்;  ஒரே  பந்தியிலிருந்து  பொய்பேசுவார்கள்;  ஆனாலும்  அது  வாய்ப்பதில்லை;  குறித்தகாலத்துக்கு  முடிவு  இன்னும்  நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்.  (தானியேல்  11:27)

intha  ira'ndu  raajaakka'lin  iruthayamum  theemai  seyya  ninaikkum;  orea  panthiyilirunthu  poypeasuvaarga'l;  aanaalum  athu  vaayppathillai;  ku’riththakaalaththukku  mudivu  innum  ni’ruththivaikkappattirukkum.  (thaaniyeal  11:27)

அவன்  மகா  சம்பத்தோடே  தன்  தேசத்துக்குத்  திரும்பி,  தன்  இருதயத்தைப்  பரிசுத்த  உடன்படிக்கைக்கு  விரோதமாக  வைத்து,  அதற்கானதைச்  செய்து,  தன்  தேசத்துக்குத்  திரும்பிப்  போவான்.  (தானியேல்  11:28)

avan  mahaa  sambaththoadea  than  theasaththukkuth  thirumbi,  than  iruthayaththaip  parisuththa  udanpadikkaikku  viroathamaaga  vaiththu,  atha’rkaanathaich  seythu,  than  theasaththukkuth  thirumbip  poavaan.  (thaaniyeal  11:28)

குறித்தகாலத்திலே  திரும்பவும்  தென்தேசத்திற்கு  வருவான்;  ஆனாலும்  அவனுடைய  பின்நடபடி  முன்நடபடியைப்போல்  இராது.  (தானியேல்  11:29)

ku’riththakaalaththilea  thirumbavum  thentheasaththi’rku  varuvaan;  aanaalum  avanudaiya  pinnadapadi  munnadapadiyaippoal  iraathu.  (thaaniyeal  11:29)

அவனுக்கு  விரோதமாகக்  கித்தீமின்  கப்பல்கள்  வரும்;  அதினால்  அவன்  மனநோவடைந்து,  திரும்பிப்போய்,  பரிசுத்த  உடன்படிக்கைக்கு  விரோதமாகக்  குரோதங்கொண்டு,  அதற்கானதைச்  செய்து,  பரிசுத்த  உடன்படிக்கையைத்  தள்ளினவர்களை  அநுசரிப்பான்.  (தானியேல்  11:30)

avanukku  viroathamaagak  kiththeemin  kappalga'l  varum;  athinaal  avan  mananoavadainthu,  thirumbippoay,  parisuththa  udanpadikkaikku  viroathamaagak  kuroathangko'ndu,  atha’rkaanathaich  seythu,  parisuththa  udanpadikkaiyaith  tha'l'linavarga'lai  anusarippaan.  (thaaniyeal  11:30)

ஆனாலும்  அவனிடத்திலிருந்து  புறப்பட்டசேனைகள்  எழும்பி,  அரணான  பரிசுத்த  ஸ்தலத்தைப்  பரிசுத்தக்குலைச்சலாக்கி,  அன்றாடபலியை  நீக்கி,  பாழாக்கும்  அருவருப்பை  அங்கே  வைப்பார்கள்.  (தானியேல்  11:31)

aanaalum  avanidaththilirunthu  pu’rappattaseanaiga'l  ezhumbi,  ara'naana  parisuththa  sthalaththaip  parisuththakkulaichchalaakki,  an’raadabaliyai  neekki,  paazhaakkum  aruvaruppai  anggea  vaippaarga'l.  (thaaniyeal  11:31)

உடன்படிக்கைக்குத்  துரோகிகளாயிருக்கிறவர்களை  இச்சகப்பேச்சுகளினால்  கள்ளமார்க்கத்தாராக்குவான்;  தங்கள்  தேவனை  அறிந்திருக்கிற  ஜனங்கள்  திடங்கொண்டு,  அதற்கேற்றபடி  செய்வார்கள்.  (தானியேல்  11:32)

udanpadikkaikkuth  thuroagiga'laayirukki’ravarga'lai  ichchagappeachchuga'linaal  ka'l'lamaarkkaththaaraakkuvaan;  thangga'l  theavanai  a’rinthirukki’ra  janangga'l  thidangko'ndu,  atha’rkeat’rapadi  seyvaarga'l.  (thaaniyeal  11:32)

ஜனங்களில்  அறிவாளிகள்  அநேகருக்கு  அறிவை  உணர்த்துவார்கள்;  அநேகநாள்மட்டும்  பட்டயத்தினாலும்  அக்கினியினாலும்  சிறையிருப்பினாலும்  கொள்ளையினாலும்  விழுவார்கள்.  (தானியேல்  11:33)

janangga'lil  a’rivaa'liga'l  aneagarukku  a’rivai  u'narththuvaarga'l;  aneaganaa'lmattum  pattayaththinaalum  akkiniyinaalum  si’raiyiruppinaalum  ko'l'laiyinaalum  vizhuvaarga'l.  (thaaniyeal  11:33)

இப்படி  அவர்கள்  விழுகையில்  கொஞ்சம்  ஒத்தாசையால்  சகாயமடைவார்கள்;  அப்பொழுது  அநேகர்  இச்சகவார்த்தைகளோடே  அவர்களை  ஒட்டிக்கொள்வார்கள்.  (தானியேல்  11:34)

ippadi  avarga'l  vizhugaiyil  kogncham  oththaasaiyaal  sagaayamadaivaarga'l;  appozhuthu  aneagar  ichchagavaarththaiga'loadea  avarga'lai  ottikko'lvaarga'l.  (thaaniyeal  11:34)

அறிவாளிகளைப்  புடமிடுகிறதற்கும்,  சுத்திகரிக்கிறதற்கும்,  வெண்மையாக்குகிறதற்கும்  அவர்களில்  சிலர்  விழுவார்கள்;  முடிவுகாலபரியந்தம்  இப்படியிருக்கும்;  குறித்தகாலம்  வர  இன்னும்  நாள்  செல்லும்.  (தானியேல்  11:35)

a’rivaa'liga'laip  pudamidugi’ratha’rkum,  suththigarikki’ratha’rkum,  ve'nmaiyaakkugi’ratha’rkum  avarga'lil  silar  vizhuvaarga'l;  mudivukaalapariyantham  ippadiyirukkum;  ku’riththakaalam  vara  innum  naa'l  sellum.  (thaaniyeal  11:35)

ராஜா  தனக்கு  இஷ்டமானபடி  செய்து,  தன்னை  உயர்த்தி,  எந்தத்  தேவனிலும்  தன்னைப்  பெரியவனாக்கி,  தேவாதிதேவனுக்கு  விரோதமாக  ஆச்சரியமான  காரியங்களைப்  பேசுவான்;  கோபம்  தீருமட்டும்  அவனுக்குக்  கைகூடிவரும்;  நிர்ணயிக்கப்பட்டது  நடந்தேறும்.  (தானியேல்  11:36)

raajaa  thanakku  ishdamaanapadi  seythu,  thannai  uyarththi,  enthath  theavanilum  thannaip  periyavanaakki,  theavaathitheavanukku  viroathamaaga  aachchariyamaana  kaariyangga'laip  peasuvaan;  koabam  theerumattum  avanukkuk  kaikoodivarum;  nir'nayikkappattathu  nadanthea’rum.  (thaaniyeal  11:36)

அவன்  தன்  பிதாக்களின்  தேவர்களை  மதியாமலும்,  ஸ்திரீகளின்  சிநேகத்தையும்,  எந்தத்  தேவனையும்  மதியாமலும்,  எல்லாவற்றிற்கும்  தன்னைப்  பெரியவனாக்கி,  (தானியேல்  11:37)

avan  than  pithaakka'lin  theavarga'lai  mathiyaamalum,  sthireega'lin  sineagaththaiyum,  enthath  theavanaiyum  mathiyaamalum,  ellaavat’ri’rkum  thannaip  periyavanaakki,  (thaaniyeal  11:37)

அரண்களின்  தேவனைத்  தன்  ஸ்தானத்திலே  கனம்பண்ணி,  தன்  பிதாக்கள்  அறியாத  ஒரு  தேவனைப்  பொன்னினாலும்,  வெள்ளியினாலும்,  இரத்தினங்களினாலும்,  உச்சிதமான  வஸ்துக்களினாலும்  கனம்பண்ணுவான்.  (தானியேல்  11:38)

ara'nga'lin  theavanaith  than  sthaanaththilea  kanampa'n'ni,  than  pithaakka'l  a’riyaatha  oru  theavanaip  ponninaalum,  ve'l'liyinaalum,  iraththinangga'linaalum,  uchchithamaana  vasthukka'linaalum  kanampa'n'nuvaan.  (thaaniyeal  11:38)

அவன்  அரணிப்பான  கோட்டைகளுக்காகவும்,  அந்நிய  தேவனுக்காகவும்  செய்வது  என்னவென்றால்,  அவைகளை  மதிக்கிறவர்களுக்கு  மகா  கனமுண்டாக்கி,  அவர்கள்  அநேகரை  ஆளும்படிச்  செய்து,  அவர்களுக்குத்  தேசத்தைக்  கிரயத்துக்காகப்  பங்கிடுவான்.  (தானியேல்  11:39)

avan  ara'nippaana  koattaiga'lukkaagavum,  anniya  theavanukkaagavum  seyvathu  ennaven’raal,  avaiga'lai  mathikki’ravarga'lukku  mahaa  kanamu'ndaakki,  avarga'l  aneagarai  aa'lumpadich  seythu,  avarga'lukkuth  theasaththaik  kirayaththukkaagap  panggiduvaan.  (thaaniyeal  11:39)

முடிவுகாலத்திலோவென்றால்,  தென்றிசை  ராஜா  அவனோடே  முட்டுக்கு  நிற்பான்;  வடதிசை  ராஜாவும்  இரதங்களோடும்  குதிரைவீரர்களோடும்  அநேகம்  கப்பல்களோடும்  சூறைக்காற்றுபோல்  அவனுக்கு  விரோதமாய்  வருவான்;  அவன்  தேசங்களுக்குள்  பிரவேசித்து,  அவைகளைப்  பிரவாகித்துக்  கடந்துபோவான்.  (தானியேல்  11:40)

mudivukaalaththiloaven’raal,  then’risai  raajaa  avanoadea  muttukku  ni’rpaan;  vadathisai  raajaavum  irathangga'loadum  kuthiraiveerarga'loadum  aneagam  kappalga'loadum  soo’raikkaat’rupoal  avanukku  viroathamaay  varuvaan;  avan  theasangga'lukku'l  piraveasiththu,  avaiga'laip  piravaagiththuk  kadanthupoavaan.  (thaaniyeal  11:40)

அவன்  சிங்காரமான  தேசத்திலும்  வருவான்;  அப்பொழுது  அநேக  தேசங்கள்  கவிழ்க்கப்படும்;  ஆனாலும்  ஏதோமும்,  மோவாபும்,  அம்மோன்  புத்திரரில்  பிரதானமானவர்களும்  அவன்  கைக்குத்  தப்பிப்போவார்கள்.  (தானியேல்  11:41)

avan  singgaaramaana  theasaththilum  varuvaan;  appozhuthu  aneaga  theasangga'l  kavizhkkappadum;  aanaalum  eathoamum,  moavaabum,  ammoan  puththiraril  pirathaanamaanavarga'lum  avan  kaikkuth  thappippoavaarga'l.  (thaaniyeal  11:41)

அவன்  தேசங்களின்மேல்  தன்  கையை  நீட்டுவான்;  எகிப்துதேசம்  தப்புவதில்லை.  (தானியேல்  11:42)

avan  theasangga'linmeal  than  kaiyai  neettuvaan;  egipthutheasam  thappuvathillai.  (thaaniyeal  11:42)

எகிப்தினுடைய  பொன்னும்  வெள்ளியுமான  ஐசுவரியங்களையும்  உச்சிதமான  எல்லா  வஸ்துக்களையும்  ஆண்டுகொள்ளுவான்;  லீபியரும்  எத்தியோப்பியரும்  அவனுக்குப்  பின்செல்லுவார்கள்.  (தானியேல்  11:43)

egipthinudaiya  ponnum  ve'l'liyumaana  aisuvariyangga'laiyum  uchchithamaana  ellaa  vasthukka'laiyum  aa'nduko'l'luvaan;  leebiyarum  eththiyoappiyarum  avanukkup  pinselluvaarga'l.  (thaaniyeal  11:43)

ஆனாலும்  கிழக்கிலும்  வடக்கிலும்  இருந்துவரும்  செய்திகள்  அவனைக்  கலங்கப்பண்ணும்;  அப்பொழுது  அவன்  அநேகரை  அழிக்கவும்  சங்காரம்பண்ணவும்  மகா  உக்கிரத்தோடே  புறப்பட்டுப்போய்,  (தானியேல்  11:44)

aanaalum  kizhakkilum  vadakkilum  irunthuvarum  seythiga'l  avanaik  kalanggappa'n'num;  appozhuthu  avan  aneagarai  azhikkavum  sanggaarampa'n'navum  mahaa  ukkiraththoadea  pu’rappattuppoay,  (thaaniyeal  11:44)

சமுத்திரங்களுக்கு  இடையிலுள்ள  சிங்காரமான  பரிசுத்த  பர்வதத்தண்டையிலே  தன்  அரமனையாகிய  கூடாரங்களைப்  போடுவான்;  ஆனாலும்  அவனுக்கு  ஒத்தாசை  பண்ணுவாரில்லாமல்,  அவன்  முடிவடைவான்.  (தானியேல்  11:45)

samuththirangga'lukku  idaiyilu'l'la  singgaaramaana  parisuththa  parvathaththa'ndaiyilea  than  aramanaiyaagiya  koodaarangga'laip  poaduvaan;  aanaalum  avanukku  oththaasai  pa'n'nuvaarillaamal,  avan  mudivadaivaan.  (thaaniyeal  11:45)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!