Friday, July 01, 2016

Sanggeetham 144 | சங்கீதம் 144 | Psalms 144

என்  கைகளைப்  போருக்கும்  என்  விரல்களை  யுத்தத்திற்கும்  படிப்பிக்கிற  என்  கன்மலையாகிய  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்.  (சங்கீதம்  144:1)

en  kaiga'laip  poarukkum  en  viralga'lai  yuththaththi’rkum  padippikki’ra  en  kanmalaiyaagiya  karththarukku  sthoaththiram.  (sanggeetham  144:1)

அவர்  என்  தயாபரரும்,  என்  கோட்டையும்,  என்  உயர்ந்த  அடைக்கலமும்,  என்னை  விடுவிக்கிறவரும்,  என்  கேடகமும்,  நான்  நம்பினவரும்,  என்  ஜனங்களை  எனக்குக்  கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.  (சங்கீதம்  144:2)

avar  en  thayaapararum,  en  koattaiyum,  en  uyarntha  adaikkalamum,  ennai  viduvikki’ravarum,  en  keadagamum,  naan  nambinavarum,  en  janangga'lai  enakkuk  keezhppaduththugi’ravarumaayirukki’raar.  (sanggeetham  144:2)

கர்த்தாவே,  மனுஷனை  நீர்  கவனிக்கிறதற்கும்,  மனுபுத்திரனை  நீர்  எண்ணுகிறதற்கும்,  அவன்  எம்மாத்திரம்?  (சங்கீதம்  144:3)

karththaavea,  manushanai  neer  kavanikki’ratha’rkum,  manupuththiranai  neer  e'n'nugi’ratha’rkum,  avan  emmaaththiram?  (sanggeetham  144:3)

மனுஷன்  மாயைக்கு  ஒப்பாயிருக்கிறான்;  அவன்  நாட்கள்  கடந்துபோகிற  நிழலுக்குச்  சமானம்.  (சங்கீதம்  144:4)

manushan  maayaikku  oppaayirukki’raan;  avan  naadka'l  kadanthupoagi’ra  nizhalukkuch  samaanam.  (sanggeetham  144:4)

கர்த்தாவே,  நீர்  உமது  வானங்களைத்  தாழ்த்தி  இறங்கி,  பர்வதங்கள்  புகையும்படி  அவைகளைத்  தொடும்.  (சங்கீதம்  144:5)

karththaavea,  neer  umathu  vaanangga'laith  thaazhththi  i’ranggi,  parvathangga'l  pugaiyumpadi  avaiga'laith  thodum.  (sanggeetham  144:5)

மின்னல்களை  வரவிட்டுச்  சத்துருக்களைச்  சிதறடியும்,  உமது  அம்புகளை  எய்து  அவர்களைக்  கலங்கடியும்.  (சங்கீதம்  144:6)

minnalga'lai  varavittuch  saththurukka'laich  sitha’radiyum,  umathu  ambuga'lai  eythu  avarga'laik  kalanggadiyum.  (sanggeetham  144:6)

உயரத்திலிருந்து  உமது  கரத்தை  நீட்டி,  ஜலப்பிரவாகத்துக்கு  என்னை  விலக்கி  இரட்சியும்.  (சங்கீதம்  144:7)

uyaraththilirunthu  umathu  karaththai  neetti,  jalappiravaagaththukku  ennai  vilakki  iradchiyum.  (sanggeetham  144:7)

மாயையைப்  பேசும்  வாயும்,  கள்ளத்தனமான  வலதுகையும்  உடைய  அந்நிய  புத்திரரின்  கைக்கு  என்னை  விலக்கித்  தப்புவியும்.  (சங்கீதம்  144:8)

maayaiyaip  peasum  vaayum,  ka'l'laththanamaana  valathukaiyum  udaiya  anniya  puththirarin  kaikku  ennai  vilakkith  thappuviyum.  (sanggeetham  144:8)

கர்த்தாவே,  நான்  உமக்குப்  புதுப்பாட்டைப்  பாடுவேன்;  தம்புரினாலும்  பத்துநரம்பு  வீணையினாலும்  உம்மைக்  கீர்த்தனம்பண்ணுவேன்.  (சங்கீதம்  144:9)

karththaavea,  naan  umakkup  puthuppaattaip  paaduvean;  thamburinaalum  paththunarambu  vee'naiyinaalum  ummaik  keerththanampa'n'nuvean.  (sanggeetham  144:9)

நீரே  ராஜாக்களுக்கு  ஜெயத்தைத்  தந்து,  உமதடியானாகிய  தாவீதைப்  பொல்லாத  பட்டயத்திற்குத்  தப்புவிக்கிறவர்.  (சங்கீதம்  144:10)

neerea  raajaakka'lukku  jeyaththaith  thanthu,  umathadiyaanaagiya  thaaveethaip  pollaatha  pattayaththi’rkuth  thappuvikki’ravar.  (sanggeetham  144:10)

மாயையைப்  பேசும்  வாயும்,  கள்ளத்தனமான  வலதுகையும்  உடைய  அந்நிய  புத்திரரின்  கைக்கு  என்னை  விலக்கித்  தப்புவியும்.  (சங்கீதம்  144:11)

maayaiyaip  peasum  vaayum,  ka'l'laththanamaana  valathukaiyum  udaiya  anniya  puththirarin  kaikku  ennai  vilakkith  thappuviyum.  (sanggeetham  144:11)

அப்பொழுது  எங்கள்  குமாரர்  இளமையில்  ஓங்கிவளருகிற  விருட்சக்கன்றுகளைப்போலவும்,  எங்கள்  குமாரத்திகள்  சித்திரந்தீர்ந்த  அரமனை  மூலைக்கற்களைப்போலவும்  இருப்பார்கள்.  (சங்கீதம்  144:12)

appozhuthu  engga'l  kumaarar  i'lamaiyil  oanggiva'larugi’ra  virudchakkan’ruga'laippoalavum,  engga'l  kumaaraththiga'l  siththirantheerntha  aramanai  moolaikka’rka'laippoalavum  iruppaarga'l.  (sanggeetham  144:12)

எங்கள்  களஞ்சியங்கள்  சகலவித  வஸ்துக்களையும்  கொடுக்கத்தக்கதாய்  நிரம்பியிருக்கும்;  எங்கள்  கிராமங்களில்  எங்கள்  ஆடுகள்  ஆயிரம்  பதினாயிரமாய்ப்  பலுகும்.  (சங்கீதம்  144:13)

engga'l  ka'lagnchiyangga'l  sagalavitha  vasthukka'laiyum  kodukkaththakkathaay  nirambiyirukkum;  engga'l  kiraamangga'lil  engga'l  aaduga'l  aayiram  pathinaayiramaayp  palugum.  (sanggeetham  144:13)

எங்கள்  எருதுகள்  பலத்தவைகளாயிருக்கும்;  சத்துரு  உட்புகுதலும்  குடியோடிப்போகுதலும்  இராது;  எங்கள்  வீதிகளில்  கூக்குரலும்  உண்டாகாது.  (சங்கீதம்  144:14)

engga'l  eruthuga'l  balaththavaiga'laayirukkum;  saththuru  udpuguthalum  kudiyoadippoaguthalum  iraathu;  engga'l  veethiga'lil  kookkuralum  u'ndaagaathu.  (sanggeetham  144:14)

இவ்விதமான  சீரைப்பெற்ற  ஜனம்  பாக்கியமுள்ளது;  கர்த்தரைத்  தெய்வமாகக்  கொண்டிருக்கிற  ஜனம்  பாக்கியமுள்ளது.  (சங்கீதம்  144:15)

ivvithamaana  seeraippet’ra  janam  baakkiyamu'l'lathu;  karththaraith  theyvamaagak  ko'ndirukki’ra  janam  baakkiyamu'l'lathu.  (sanggeetham  144:15)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!