Friday, July 01, 2016

Sanggeetham 132 | சங்கீதம் 132 | Psalms 132

கர்த்தாவே,  தாவீதையும்  அவனுடைய  சகல  உபத்திரவத்தையும்  நினைத்தருளும்.  (சங்கீதம்  132:1)

karththaavea,  thaaveethaiyum  avanudaiya  sagala  ubaththiravaththaiyum  ninaiththaru'lum.  (sanggeetham  132:1)

அவன்:  நான்  கர்த்தருக்கு  ஒரு  இடத்தையும்,  யாக்கோபின்  வல்லவருக்கு  ஒரு  வாசஸ்தலத்தையும்  காணுமட்டும்,  (சங்கீதம்  132:2)

avan:  naan  karththarukku  oru  idaththaiyum,  yaakkoabin  vallavarukku  oru  vaasasthalaththaiyum  kaa'numattum,  (sanggeetham  132:2)

என்  வீடாகிய  கூடாரத்தில்  பிரவேசிப்பதுமில்லை,  என்  படுக்கையாகிய  கட்டிலின்மேல்  ஏறுவதுமில்லை;  (சங்கீதம்  132:3)

en  veedaagiya  koodaaraththil  piraveasippathumillai,  en  padukkaiyaagiya  kattilinmeal  ea’ruvathumillai;  (sanggeetham  132:3)

என்  கண்களுக்கு  நித்திரையையும்,  என்  இமைகளுக்கு  உறக்கத்தையும்  வரவிடுவதுமில்லை  என்று,  (சங்கீதம்  132:4)

en  ka'nga'lukku  niththiraiyaiyum,  en  imaiga'lukku  u’rakkaththaiyum  varaviduvathumillai  en’ru,  (sanggeetham  132:4)

கர்த்தருக்கு  ஆணையிட்டு,  யாக்கோபின்  வல்லவருக்குப்  பொருத்தனை  பண்ணினான்.  (சங்கீதம்  132:5)

karththarukku  aa'naiyittu,  yaakkoabin  vallavarukkup  poruththanai  pa'n'ninaan.  (sanggeetham  132:5)

இதோ,  நாம்  எப்பிராத்தாவிலே  அதின்  செய்தியைக்  கேட்டு,  வனத்தின்  வெளிகளில்  அதைக்  கண்டோம்.  (சங்கீதம்  132:6)

ithoa,  naam  eppiraaththaavilea  athin  seythiyaik  keattu,  vanaththin  ve'liga'lil  athaik  ka'ndoam.  (sanggeetham  132:6)

அவருடைய  வாசஸ்தலங்களுக்குள்  பிரவேசித்து,  அவர்  பாதபடியில்  பணிவோம்.  (சங்கீதம்  132:7)

avarudaiya  vaasasthalangga'lukku'l  piraveasiththu,  avar  paathapadiyil  pa'nivoam.  (sanggeetham  132:7)

கர்த்தாவே,  உமது  வல்லமை  விளங்கும்  பெட்டியுடன்  நீர்  உமது  தாபர  ஸ்தலத்திற்குள்  எழுந்தருளும்.  (சங்கீதம்  132:8)

karththaavea,  umathu  vallamai  vi'langgum  pettiyudan  neer  umathu  thaabara  sthalaththi’rku'l  ezhuntharu'lum.  (sanggeetham  132:8)

உம்முடைய  ஆசாரியர்கள்  நீதியைத்  தரித்து,  உம்முடைய  பரிசுத்தவான்கள்  கெம்பீரிப்பார்களாக.  (சங்கீதம்  132:9)

ummudaiya  aasaariyarga'l  neethiyaith  thariththu,  ummudaiya  parisuththavaanga'l  kembeerippaarga'laaga.  (sanggeetham  132:9)

நீர்  அபிஷேகம்பண்ணுவித்தவனின்  முகத்தை  உமது  தாசனாகிய  தாவீதினிமித்தம்  புறக்கணியாதிரும்.  (சங்கீதம்  132:10)

neer  abisheagampa'n'nuviththavanin  mugaththai  umathu  thaasanaagiya  thaaveethinimiththam  pu’rakka'niyaathirum.  (sanggeetham  132:10)

உன்  கர்ப்பத்தின்  கனியை  உன்  சிங்காசனத்தின்மேல்  வைப்பேன்  என்றும்,  (சங்கீதம்  132:11)

un  karppaththin  kaniyai  un  singgaasanaththinmeal  vaippean  en’rum,  (sanggeetham  132:11)

உன்  குமாரர்  என்  உடன்படிக்கையையும்,  நான்  போதிக்கும்  என்  சாட்சிகளையும்  காத்து  நடந்தால்,  அவர்கள்  குமாரரும்  என்றென்றைக்கும்  உன்  சிங்காசனத்தில்  வீற்றிருப்பார்கள்  என்றும்,  கர்த்தர்  தாவீதுக்கு  உண்மையாய்  ஆணையிட்டார்;  அவர்  தவறமாட்டார்.  (சங்கீதம்  132:12)

un  kumaarar  en  udanpadikkaiyaiyum,  naan  poathikkum  en  saadchiga'laiyum  kaaththu  nadanthaal,  avarga'l  kumaararum  en’ren’raikkum  un  singgaasanaththil  veet’riruppaarga'l  en’rum,  karththar  thaaveethukku  u'nmaiyaay  aa'naiyittaar;  avar  thava’ramaattaar.  (sanggeetham  132:12)

கர்த்தர்  சீயோனைத்  தெரிந்துகொண்டு,  அது  தமக்கு  வாசஸ்தலமாகும்படி  விரும்பினார்.  (சங்கீதம்  132:13)

karththar  seeyoanaith  therinthuko'ndu,  athu  thamakku  vaasasthalamaagumpadi  virumbinaar.  (sanggeetham  132:13)

இது  என்றென்றைக்கும்  நான்  தங்கும்  இடம்;  இதை  நான்  விரும்பினபடியால்,  இங்கே  வாசம்பண்ணுவேன்.  (சங்கீதம்  132:14)

ithu  en’ren’raikkum  naan  thanggum  idam;  ithai  naan  virumbinapadiyaal,  inggea  vaasampa'n'nuvean.  (sanggeetham  132:14)

அதின்  ஆகாரத்தை  நான்  ஆசீர்வதித்து  வருவேன்;  அதின்  ஏழைகளை  நான்  அப்பத்தினால்  திருப்தியாக்குவேன்.  (சங்கீதம்  132:15)

athin  aagaaraththai  naan  aaseervathiththu  varuvean;  athin  eazhaiga'lai  naan  appaththinaal  thirupthiyaakkuvean.  (sanggeetham  132:15)

அதின்  ஆசாரியர்களுக்கு  இரட்சிப்பை  உடுத்துவேன்;  அதிலுள்ள  பரிசுத்தவான்கள்  மிகவும்  கெம்பீரிப்பார்கள்.  (சங்கீதம்  132:16)

athin  aasaariyarga'lukku  iradchippai  uduththuvean;  athilu'l'la  parisuththavaanga'l  migavum  kembeerippaarga'l.  (sanggeetham  132:16)

அங்கே  தாவீதுக்காக  ஒரு  கொம்பை  முளைக்கப்பண்ணுவேன்;  நான்  அபிஷேகம்பண்ணுவித்தவனுக்காக  ஒரு  விளக்கை  ஆயத்தம்பண்ணினேன்.  (சங்கீதம்  132:17)

anggea  thaaveethukkaaga  oru  kombai  mu'laikkappa'n'nuvean;  naan  abisheagampa'n'nuviththavanukkaaga  oru  vi'lakkai  aayaththampa'n'ninean.  (sanggeetham  132:17)

அவன்  சத்துருக்களுக்கு  வெட்கத்தை  உடுத்துவேன்;  அவன்மீதிலோ  அவன்  கிரீடம்  பூக்கும்  என்றார்.  (சங்கீதம்  132:18)

avan  saththurukka'lukku  vedkaththai  uduththuvean;  avanmeethiloa  avan  kireedam  pookkum  en’raar.  (sanggeetham  132:18)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!