Friday, July 01, 2016

Sanggeetham 130 | சங்கீதம் 130 | Psalms 130

கர்த்தாவே,  ஆழங்களிலிருந்து  உம்மை  நோக்கிக்  கூப்பிடுகிறேன்.  (சங்கீதம்  130:1)

karththaavea,  aazhangga'lilirunthu  ummai  noakkik  kooppidugi’rean.  (sanggeetham  130:1)

ஆண்டவரே,  என்  சத்தத்தைக்  கேளும்;  என்  விண்ணப்பங்களின்  சத்தத்திற்கு  உமது  செவிகள்  கவனித்திருப்பதாக.  (சங்கீதம்  130:2)

aa'ndavarea,  en  saththaththaik  kea'lum;  en  vi'n'nappangga'lin  saththaththi’rku  umathu  seviga'l  kavaniththiruppathaaga.  (sanggeetham  130:2)

கர்த்தாவே,  நீர்  அக்கிரமங்களைக்  கவனித்திருப்பீரானால்,  யார்  நிலைநிற்பான்,  ஆண்டவரே.  (சங்கீதம்  130:3)

karththaavea,  neer  akkiramangga'laik  kavaniththiruppeeraanaal,  yaar  nilaini’rpaan,  aa'ndavarea.  (sanggeetham  130:3)

உமக்குப்  பயப்படும்படிக்கு  உம்மிடத்தில்  மன்னிப்பு  உண்டு.  (சங்கீதம்  130:4)

umakkup  bayappadumpadikku  ummidaththil  mannippu  u'ndu.  (sanggeetham  130:4)

கர்த்தருக்குக்  காத்திருக்கிறேன்;  என்  ஆத்துமா  காத்திருக்கிறது;  அவருடைய  வார்த்தையை  நம்பியிருக்கிறேன்.  (சங்கீதம்  130:5)

karththarukkuk  kaaththirukki’rean;  en  aaththumaa  kaaththirukki’rathu;  avarudaiya  vaarththaiyai  nambiyirukki’rean.  (sanggeetham  130:5)

எப்பொழுது  விடியும்  என்று  விடியற்காலத்துக்குக்  காத்திருக்கிற  ஜாமக்காரரைப்பார்க்கிலும்  அதிகமாய்  என்  ஆத்துமா  ஆண்டவருக்குக்  காத்திருக்கிறது.  (சங்கீதம்  130:6)

eppozhuthu  vidiyum  en’ru  vidiya’rkaalaththukkuk  kaaththirukki’ra  jaamakkaararaippaarkkilum  athigamaay  en  aaththumaa  aa'ndavarukkuk  kaaththirukki’rathu.  (sanggeetham  130:6)

இஸ்ரவேல்  கர்த்தரை  நம்பியிருப்பதாக;  கர்த்தரிடத்தில்  கிருபையும்,  அவரிடத்தில்  திரளான  மீட்பும்  உண்டு.  (சங்கீதம்  130:7)

israveal  karththarai  nambiyiruppathaaga;  karththaridaththil  kirubaiyum,  avaridaththil  thira'laana  meedpum  u'ndu.  (sanggeetham  130:7)

அவர்  இஸ்ரவேலை  அதின்  சகல  அக்கிரமங்களினின்றும்  மீட்டுக்கொள்வார்.  (சங்கீதம்  130:8)

avar  isravealai  athin  sagala  akkiramangga'linin’rum  meettukko'lvaar.  (sanggeetham  130:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!