பொல்லாத மனுஷர்மேல்
பொறாமை கொள்ளாதே; அவர்களோடே
இருக்கவும் விரும்பாதே. (நீதிமொழிகள்
24:1)
pollaatha manusharmeal
po’raamai
ko'l'laathea; avarga'loadea irukkavum virumbaathea. (neethimozhiga’l 24:1)
அவர்கள் இருதயம்
கொடுமையை யோசிக்கும், அவர்கள்
உதடுகள் தீவினையைப் பேசும்.
(நீதிமொழிகள் 24:2)
avarga'l iruthayam kodumaiyai
yoasikkum, avarga'l uthaduga'l theevinaiyaip
peasum.
(neethimozhiga’l 24:2)
வீடு ஞானத்தினாலே
கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். (நீதிமொழிகள்
24:3)
veedu gnaanaththinaalea kattappattu, viveagaththinaalea nilaini’ruththappadum.
(neethimozhiga’l 24:3)
அறிவினாலே அறைகளில்
அருமையும் இனிமையுமான சகலவிதப்
பொருள்களும் நிறைந்திருக்கும். (நீதிமொழிகள்
24:4)
a’rivinaalea a’raiga'lil arumaiyum inimaiyumaana
sagalavithap poru'lga'lum ni’rainthirukkum. (neethimozhiga’l 24:4)
ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்;
அறிவுள்ளவன் தன் வல்லமையை
அதிகரிக்கப்பண்ணுகிறான். (நீதிமொழிகள் 24:5)
gnaanamu'l'lavan belamu'l'lavan; a’rivu'l'lavan than vallamaiyai athigarikkappa'n'nugi’raan. (neethimozhiga’l 24:5)
நல்யோசனை செய்து
யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால்
ஜெயங்கிடைக்கும். (நீதிமொழிகள் 24:6)
nalyoasanai seythu yuththampa'n'nu; aaloasanaikkaarar aneagaraal jeyangkidaikkum. (neethimozhiga’l 24:6)
மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான்.
(நீதிமொழிகள் 24:7)
moodanukku gnaanam
ettaatha
uyaramaayirukkum; avan niyaayasthalaththil than vaayaith thi’ravaan. (neethimozhiga’l 24:7)
தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன்
என்னப்படுவான். (நீதிமொழிகள் 24:8)
theevinaiseyya ubaayagnseygi’ravan thushdan ennappaduvaan. (neethimozhiga’l 24:8)
தீயநோக்கம் பாவமாம்;
பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன். (நீதிமொழிகள்
24:9)
theeyanoakkam paavamaam;
pariyaasakkaaran manusharukku
aruvaruppaanavan. (neethimozhiga’l 24:9)
ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால்,
உன் பெலன் குறுகினது.
(நீதிமொழிகள் 24:10)
aabaththukkaalaththil
nee soarnthu poavaayaanaal, un belan ku’ruginathu. (neethimozhiga’l 24:10)
மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி.
(நீதிமொழிகள் 24:11)
mara'naththukku oppikkappattavarga'laiyum, kolaiyu'n'nappoagi’ravarga'laiyum viduvikkakkoodumaanaal viduvi.
(neethimozhiga’l 24:11)
அதை அறியோம்
என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர்
அறியாரோ? உன் ஆத்துமாவைக்
காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன்
கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ? (நீதிமொழிகள்
24:12)
athai a’riyoam enbaayaagil, iruthayangga'laich soathikki’ravar a’riyaaroa? un aaththumaavaik kaakki’ravar kavaniyaaroa?
avar manusharukku avanavan
kiriyaikkuththakkathaagap palana'liyaaroa? (neethimozhiga’l 24:12)
என் மகனே, தேனைச் சாப்பிடு,
அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும்
தேன் உன் வாய்க்கு
இன்பமாயிருக்கும். (நீதிமொழிகள் 24:13)
en maganea, theanaich saappidu, athu nallathu; koottilirunthu ozhugum thean un vaaykku
inbamaayirukkum. (neethimozhiga’l 24:13)
அப்படியே ஞானத்தை
அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு
இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும்,
உன் நம்பிக்கை வீண்போகாது.
(நீதிமொழிகள் 24:14)
appadiyea gnaanaththai
a’rinthuko'lvathu un aaththumaavukku inbamaayirukkum; athaip
pet’rukko'ndaal, athu mudivil uthavum,
un nambikkai vee'npoagaathu. (neethimozhiga’l 24:14)
துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப்
பதிவிராதே; அவன் தங்கும்
இடத்தைப் பாழாக்கிப்போடாதே. (நீதிமொழிகள்
24:15)
thushdanea, nee neethimaanudaiya vaasasthalaththukku viroathamaayp
pathiviraathea; avan thanggum idaththaip
paazhaakkippoadaathea. (neethimozhiga’l 24:15)
நீதிமான் ஏழுதரம்
விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ
தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
(நீதிமொழிகள் 24:16)
neethimaan eazhutharam
vizhunthaalum thirumbavum ezhunthiruppaan; thunmaarkkaroa theenggilea ida’ru'ndu kidappaarga'l. (neethimozhiga’l 24:16)
உன் சத்துரு
விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக. (நீதிமொழிகள்
24:17)
un saththuru vizhumpoathu
santhoashappadaathea; avan ida’rumpoathu un iruthayam
ka'likooraathiruppathaaga. (neethimozhiga’l 24:17)
கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப்
பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை
நீக்கிவிடுவார். (நீதிமொழிகள் 24:18)
karththar athaik
kaa'nbaar, athu avar paarvaikkup
pollaappaayirukkum; appozhuthu avanidaththinin’ru avar thamathu koabaththai neekkividuvaar. (neethimozhiga’l 24:18)
பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே;
துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
(நீதிமொழிகள் 24:19)
pollaathavarga'laikku’riththu erichchalaagaathea; thunmaarkkarmeal po’raamai ko'l'laathea.
(neethimozhiga’l 24:19)
துன்மார்க்கனுக்கு நல்முடிவு
இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு
அணைந்துபோம். (நீதிமொழிகள் 24:20)
thunmaarkkanukku nalmudivu
illai; thunmaarkkanudaiya vi'lakku
a'nainthupoam. (neethimozhiga’l 24:20)
என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும்
பயந்து நட; கலகக்காரரோடு
கலவாதே. (நீதிமொழிகள் 24:21)
en maganea, nee karththarukkum raajaavukkum
bayanthu
nada; kalagakkaararoadu kalavaathea. (neethimozhiga’l 24:21)
சடிதியில் அவர்களுடைய
ஆபத்து எழும்பும்; அவர்கள்
இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன்
யார்? (நீதிமொழிகள் 24:22)
sadithiyil avarga'ludaiya aabaththu ezhumbum; avarga'l iruvarin sanggaaraththaiyum a’rinthavan yaar? (neethimozhiga’l 24:22)
பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள்
என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல.
(நீதிமொழிகள் 24:23)
pinnum gnaanamu'l'lavarga'lin buththimathiga'l ennavenil: niyaayaththilea mugathaadchi'niyam nallathalla. (neethimozhiga’l 24:23)
துன்மார்க்கனைப் பார்த்து:
நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை
ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள்
அவனை வெறுப்பார்கள். (நீதிமொழிகள்
24:24)
thunmaarkkanaip paarththu:
neethimaanaayirukki’raay en’ru sollugi’ravanai janangga'l sabippaarga'l, pirajaiga'l avanai
ve’ruppaarga'l. (neethimozhiga’l 24:24)
அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு
உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
(நீதிமொழிகள் 24:25)
avanaik kadinthuko'l'lugi’ravarga'lmeal piriyamu'ndaagum, avarga'lukku uththama aaseervaatham kidaikkum.
(neethimozhiga’l 24:25)
செம்மையான மறுமொழி
சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம்.
(நீதிமொழிகள் 24:26)
semmaiyaana ma’rumozhi sollugi’ravan uthaduga'lai muththamidugi’ravanukkuch samaanam. (neethimozhiga’l 24:26)
வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில்
அதை ஒழுங்காக்கி, பின்பு
உன் வீட்டைக் கட்டு.
(நீதிமொழிகள் 24:27)
ve'liyil un vealaiyai eththanappaduththi, vayalil
athai ozhunggaakki, pinbu un veettaik kattu. (neethimozhiga’l 24:27)
நியாயமின்றிப் பிறனுக்கு
விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே;
உன் உதடுகளினால் வஞ்சகம்
பேசாதே. (நீதிமொழிகள் 24:28)
niyaayamin’rip pi’ranukku viroathamaaych saadchiyaaga ea’rpadaathea; un uthaduga'linaal vagnchagam peasaathea. (neethimozhiga’l 24:28)
அவன் எனக்குச்
செய்தபிரகாரம் நானும் அவனுக்குச்
செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும்
அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.
(நீதிமொழிகள் 24:29)
avan enakkuch seythapiragaaram naanum avanukkuch seyvean, avan seytha seygaikkuththakkathaaga naanum avanukkuch sarikkattuvean en’ru nee sollaathea. (neethimozhiga’l 24:29)
சோம்பேறியின் வயலையும்,
மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
(நீதிமொழிகள் 24:30)
soambea’riyin vayalaiyum,
mathiyeenanudaiya thiraadchaththoattaththaiyum kadanthupoanean. (neethimozhiga’l 24:30)
இதோ, அதெல்லாம்
முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக்
காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து
கிடந்தது. (நீதிமொழிகள் 24:31)
ithoa, athellaam
mu'l'lukkaadaayirunthathu; nilaththin mugaththaik kaagncho’ri moodinathu,
athin ka’rsuvar idinthu
kidanthathu. (neethimozhiga’l 24:31)
அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன். (நீதிமொழிகள்
24:32)
athaik ka'ndu
sinthanaipa'n'ninean; athai noakkip buththiyadainthean. (neethimozhiga’l 24:32)
இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும்,
இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை
செய்யட்டும் என்பாயோ? (நீதிமொழிகள்
24:33)
innungkogncham u’ranggattum, innungkogncham kaimudakkikko'ndu niththirai
seyyattum enbaayoa? (neethimozhiga’l 24:33)
உன் தரித்திரம்
வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.
(நீதிமொழிகள் 24:34)
un thariththiram
vazhippoakkanaippoalum un va’rumai aayuthama'ninthavanaippoalum varum.
(neethimozhiga’l 24:34)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!