வேவுகாரர்
காண்பித்த வழியாக இஸ்ரவேலர்
வருகிறார்கள் என்று தெற்கே
வாசம்பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக
யுத்தம்பண்ணி, அவர்களில் சிலரைச்
சிறைபிடித்துக்கொண்டுபோனான். (எண்ணாகமம் 21:1)
veavukaarar kaa'nbiththa vazhiyaaga isravealar
varugi’raarga'l en’ru the’rkea vaasampa'n'nugi’ra kaanaaniyanaagiya aaraath raajaa
kea'lvippattapoathu, avan isravealarukku viroathamaaga yuththampa'n'ni, avarga'lil silaraich si’raipidiththukko'ndupoanaan. (e’n’naagamam
21:1)
அப்பொழுது
இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி:
தேவரீர் இந்த ஜனங்களை
எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய
பட்டணங்களைச் சங்காரம் பண்ணுவோம்
என்று பிரதிக்கினை பண்ணினார்கள்.
(எண்ணாகமம் 21:2)
appozhuthu isravealar
karththarai noakki: theavareer
intha janangga'lai engga'l kaiyil oppukkoduththaal, avarga'ludaiya patta'nangga'laich sanggaaram pa'n'nuvoam en’ru pirathikkinai
pa'n'ninaarga'l. (e’n’naagamam
21:2)
கர்த்தர்
இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து,
அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது
அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள். (எண்ணாகமம்
21:3)
karththar isravealin saththaththukkuch
sevikoduththu, avarga'lukkuk kaanaaniyarai
oppukkoduththaar; appozhuthu avarga'laiyum avarga'l patta'nangga'laiyum sanggaarampa'n'ni, avvidaththi’rku oarmaa
en’ru
pearittaarga'l. (e’n’naagamam
21:3)
அவர்கள்
ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு,
சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப்
பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள்
மனமடிவடைந்தார்கள். (எண்ணாகமம் 21:4)
avarga'l eathoam theasaththaich sut’rippoagumpadikku, oar ennum malaiyaivittu,
sivantha samuththiraththin vazhiyaayp
pirayaa'nampa'n'ninaarga'l; vazhiyinimiththam janangga'l manamadivadainthaarga'l. (e’n’naagamam
21:4)
ஜனங்கள்
தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப்
பேசி: நாங்கள் வனாந்தரத்திலே
சாகும்படி நீங்கள் எங்களை
எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை,
தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு
வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். (எண்ணாகமம்
21:5)
janangga'l theavanukkum moaseakkum viroathamaagap peasi: naangga'l vanaantharaththilea saagumpadi neengga'l engga'lai egipthu theasaththilirunthu varappa'n'ninathenna? inggea appamum
illai, tha'n'neerum illai;
intha a’rpamaana u'navu
engga'l
manathukku ve’ruppaayirukki’rathu en’raarga'l. (e’n’naagamam 21:5)
அப்பொழுது
கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை
ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள்
ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள்.
(எண்ணாகமம் 21:6)
appozhuthu karththar
ko'l'livaaych sarppangga'lai janangga'lukku'l'lea anuppinaar;
avaiga'l
janangga'laik kadiththathinaal isravealarukku'l'lea aneaga janangga'l seththaarga'l. (e’n’naagamam 21:6)
அதினால்
ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும்
விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள்
எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை
நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும்
என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக
விண்ணப்பம்பண்ணினான். (எண்ணாகமம் 21:7)
athinaal janangga'l moaseayinidaththil poay: naangga'l karththarukkum umakkum
viroathamaayp peasinathinaal paavagnseythoam; sarppangga'l engga'laivittu neenggumpadi karththarai noakki
vi'n'nappam pa'n'navea'ndum en’raarga'l; moasea janangga'lukkaaga vi'n'nappampa'n'ninaan. (e’n’naagamam
21:7)
அப்பொழுது
கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ ஒரு கொள்ளிவாய்ச்
சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து,
அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை;
கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான்
என்றார். (எண்ணாகமம் 21:8)
appozhuthu karththar
moaseayai
noakki: nee oru ko'l'livaaych sarppaththin uruvaththaich seythu, athai oru kambaththinmeal thookkivai;
kadikkappattavan evanoa
avan athai noakkippaarththaal pizhaippaan
en’raar.
(e’n’naagamam 21:8)
அப்படியே
மோசே ஒரு வெண்கலச்
சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம்
ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச்
சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான்.
(எண்ணாகமம் 21:9)
appadiyea moasea oru ve'ngalach sarppaththai u'ndaakki,
athai oru kambaththinmeal thookkivaiththaan; sarppam
oruvanaik kadiththapoathu, avan antha ve'ngalach sarppaththai noakkippaarththup pizhaippaan.
(e’n’naagamam 21:9)
இஸ்ரவேல்
புத்திரர் பிரயாணப்பட்டுப்போய், ஓபோத்தில்
பாளயமிறங்கினார்கள். (எண்ணாகமம் 21:10)
israveal puththirar
pirayaa'nappattuppoay, oaboaththil paa'layami’rangginaarga'l. (e’n’naagamam
21:10)
ஓபோத்திலிருந்து பிரயாணம்பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய்
மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின்
மேடுகளில் பாளயமிறங்கினார்கள். (எண்ணாகமம்
21:11)
oaboaththilirunthu
pirayaa'nampa'n'ni, sooriyoathayaththi’rku nearaay moavaabukku ethiraana
vanaantharaththilu'l'la abaareemin meaduga'lil paa'layami’rangginaarga'l. (e’n’naagamam 21:11)
அங்கேயிருந்து
பிரயாணப்பட்டுப்போய், சாரேத் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள். (எண்ணாகமம்
21:12)
anggeayirunthu pirayaa'nappattuppoay, saareath pa'l'laththaakkilea paa'layami’rangginaarga'l. (e’n’naagamam
21:12)
அங்கேயிருந்து
பிரயாணப்பட்டுப்போய், எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும்
வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன்
ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும்
எமோரியருக்கும் நடுவே இருக்கிற
மோவாபின் எல்லை. (எண்ணாகமம்
21:13)
anggeayirunthu pirayaa'nappattuppoay, emoariyarin ellaiyilirunthu varugi’rathum vanaantharaththil oadugi’rathumaana arnoan
aat’rukku
ippu’ram
paa'layami’rangginaarga'l; antha arnoan
moavaabukkum emoariyarukkum naduvea
irukki’ra
moavaabin
ellai. (e’n’naagamam 21:13)
அதினால்
சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின்
ஆற்றுக்கால்களும், (எண்ணாகமம் 21:14)
athinaal
sooppaavilu'l'la vaageabum, arnoanin
aat’rukkaalga'lum, (e’n’naagamam
21:14)
ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும்
நீரோடையும் மோவாபின் எல்லையைச்
சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. (எண்ணாகமம்
21:15)
aar ennum sthalaththukkup paayum
neeroadaiyum moavaabin ellaiyaich saarnthirukki’rathu ennum vasanam karththarudaiya yuththa
pusthagaththil ezhuthiyirukki’rathu. (e’n’naagamam
21:15)
அங்கேயிருந்து
பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக்
கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர்
கொடுப்பேன் என்று கர்த்தர்
மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான். (எண்ணாகமம்
21:16)
anggeayirunthu beayearukkup poanaarga'l; janangga'laik koodivarachsey, avarga'lukkuth tha'n'neer koduppean
en’ru
karththar moaseakkuch sonna oot’ru irukki’ra idam athuthaan. (e’n’naagamam
21:16)
அப்பொழுது
இஸ்ரவேலர் பாடின பாட்டாவது:
ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா;
அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள்.
(எண்ணாகமம் 21:17)
appozhuthu isravealar
paadina paattaavathu: oot’ruth tha'n'neerea, ponggivaa; athaikku’riththup paaduvoam
vaarungga'l. (e’n’naagamam
21:17)
நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால்
அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தில்
மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள்
என்று பாடினார்கள். (எண்ணாகமம்
21:18)
niyaayappiramaa'nikkanin eavuthalaal
athibathiga'l ki'nat’raith thoa'ndinaarga'l; janaththil
meanmakka'l thangga'l tha'ndaayuthangga'laikko'ndu thoa'ndinaarga'l en’ru paadinaarga'l. (e’n’naagamam 21:18)
அந்த வனாந்தரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்துக்கும், (எண்ணாகமம்
21:19)
antha vanaantharaththilirunthu maaththanaavukkum, maaththanaavilirunthu nagaaliyealukkum, nagaaliyealilirunthu baamoaththukkum, (e’n’naagamam
21:19)
பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின்
வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை
நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும்
போனார்கள். (எண்ணாகமம் 21:20)
pa'l'laththaakkilu'l'la moavaabin ve'liyil
irukki’ra
baamoaththilirunthu eshimoanai
noakkum piskaavin uchchikkum poanaarga'l. (e’n’naagamam
21:20)
அப்பொழுது
இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய
சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:
(எண்ணாகமம் 21:21)
appozhuthu isravealar
emoariyarin raajaavaagiya seegoanidaththil sthaanaabathiga'lai anuppi: (e’n’naagamam
21:21)
உமது தேசத்தின் வழியாய்க்
கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; நாங்கள்
வயல்களிலும், திராட்சத்தோட்டங்களிலும் போகாமலும்,
துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும்,
உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும் ராஜபாதையில்
நடந்துபோவோம் என்று சொல்லச்சொன்னார்கள். (எண்ணாகமம்
21:22)
umathu theasaththin vazhiyaayk
kadanthupoagumpadi uththaravu
kodukkavea'ndum; naangga'l vayalga'lilum, thiraadchaththoattangga'lilum poagaamalum, thuravuga'lin tha'n'neeraik kudiyaamalum,
umathu ellaiyaik kadanthupoagumattum raajapaathaiyil nadanthupoavoam en’ru sollachsonnaarga'l. (e’n’naagamam
21:22)
சீகோன்
தன் எல்லைவழியாய்க் கடந்துபோக
இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல்,
தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு
விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு,
யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே
யுத்தம்பண்ணினான். (எண்ணாகமம் 21:23)
seegoan than ellaivazhiyaayk kadanthupoaga isravealukku
uththaravu kodaamal, than janangga'lellaaraiyum
koottikko'ndu, isravealarukku viroathamaaga vanaantharaththilea pu’rappattu, yaagaasukku vanthu, isravealaroadea yuththampa'n'ninaan. (e’n’naagamam
21:23)
இஸ்ரவேலர்
அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி,
அர்னோன் தொடங்கி அம்மோன்
புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய
தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன்
புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது. (எண்ணாகமம்
21:24)
isravealar avanaip
pattayakkarukkinaal vetti, arnoan
thodanggi
ammoan puththirarin theasaththaichsaarntha yaabboakkuvaraikkumu'l'la
avanudaiya theasaththaik kattikko'ndaarga'l; ammoan
puththirarin ellai ara'nippaanathaayirunthathu. (e’n’naagamam
21:24)
இஸ்ரவேலர்
அந்தப் பட்டணங்கள் யாவையும்
பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக்
கிராமங்களிலும் எமோரியருடைய எல்லாப்
பட்டணங்களிலும் குடியிருந்தார்கள். (எண்ணாகமம்
21:25)
isravealar anthap
patta'nangga'l yaavaiyum
pidiththu, esboanilum athaich saarntha ellaak
kiraamangga'lilum emoariyarudaiya ellaap
patta'nangga'lilum kudiyirunthaarga'l. (e’n’naagamam
21:25)
எஸ்போனானது
எமோரியரின் ராஜாவாகிய சீகோனின்
பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின்
முந்தின ராஜாவுக்கு விரோதமாக
யுத்தம்பண்ணி, அர்னோன்வரைக்கும் இருந்த
அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான். (எண்ணாகமம்
21:26)
esboanaanathu emoariyarin raajaavaagiya seegoanin patta'namaayirunthathu; avan moavaabiyarin munthina raajaavukku
viroathamaaga yuththampa'n'ni, arnoanvaraikkum iruntha
avan theasaththaiyellaam avan kaiyilirunthu pa’riththukko'ndaan. (e’n’naagamam
21:26)
அதினாலே
கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்;
சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க்
கட்டப்படுவதாக. (எண்ணாகமம் 21:27)
athinaalea kavikattugi’ravarga'l: esboanukku vaarungga'l; seegoanin patta'nam sthiramaayk
kattappaduvathaaga. (e’n’naagamam
21:27)
எஸ்போனிலிருந்து அக்கினியும்
சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜுவாலையும்
புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும்,
அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவமார்களையும் பட்சித்தது.
(எண்ணாகமம் 21:28)
esboanilirunthu akkiniyum
seegoanudaiya patta'naththilirunthu juvaalaiyum
pu’rappattu, moavaabudaiya aar ennum ooraiyum,
arnoanudaiya meaduga'lilu'l'la aa'ndavamaarga'laiyum padchiththathu. (e’n’naagamam 21:28)
ஐயோ, மோவாபே, கேமோஷ்
தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் எமோரியரின்
ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக
ஒப்புக்கொடுத்தான். (எண்ணாகமம் 21:29)
aiyoa, moavaabea, keamoash
theavanin janamea, nee naasamaanaay; thappi oadina
than kumaararaiyum than kumaaraththiga'laiyum emoariyarin raajaavaagiya seegoanukkuch si’raiga'laaga oppukkoduththaan. (e’n’naagamam
21:29)
அவர்களை
எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம்
தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று;
மேதேபாவுக்குச் சமீபமான நோப்பா
பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம்
என்று பாடினார்கள். (எண்ணாகமம்
21:30)
avarga'lai eythupoattoam; esboan patta'nam theeboan oorvaraikkum naasamaayit’ru; meatheabaavukkuch sameebamaana noappaa patta'napariyantham avarga'laip paazhaakkinoam en’ru paadinaarga'l. (e’n’naagamam
21:30)
இஸ்ரவேலர்
இப்படியே எமோரியரின் தேசத்திலே
குடியிருந்தார்கள். (எண்ணாகமம் 21:31)
isravealar ippadiyea
emoariyarin theasaththilea kudiyirunthaarga'l. (e’n’naagamam 21:31)
பின்பு,
மோசே யாசேர் பட்டணத்துக்கு
வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான்;
அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக்
கட்டிக்கொண்டு, அங்கே இருந்த
எமோரியரைத் துரத்திவிட்டார்கள். (எண்ணாகமம்
21:32)
pinbu, moasea yaasear patta'naththukku veavu paarkki’ravarga'lai anuppinaan; avarga'l athaichsearntha kiraamangga'laik kattikko'ndu, anggea iruntha
emoariyaraith thuraththivittaarga'l. (e’n’naagamam
21:32)
பின்பு
பாசானுக்குப் போகிற வழியாய்த்
திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான்
ராஜாவாகிய ஓக் என்பவன்
தன் சமஸ்த ஜனங்களோடும்
அவர்களை எதிர்த்து யுத்தம்பண்ணும்படிக்கு, எத்ரேயுக்குப்
புறப்பட்டு வந்தான். (எண்ணாகமம்
21:33)
pinbu baasaanukkup poagi’ra vazhiyaayth thirumbivittaarga'l; appozhuthu
baasaan
raajaavaagiya oak enbavan than samastha janangga'loadum avarga'lai ethirththu
yuththampa'n'numpadikku, ethreayukkup pu’rappattu vanthaan. (e’n’naagamam
21:33)
கர்த்தர்
மோசேயை நோக்கி: அவனுக்குப்
பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும்,
அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே
வாசமாயிருந்த எமோரியரின் ராஜாவாகிய
சீகோனுக்கு நீ செய்தபடியே
இவனுக்கும் செய்வாய் என்றார்.
(எண்ணாகமம் 21:34)
karththar moaseayai noakki:
avanukkup bayappadavea'ndaam; avanaiyum avan janangga'l ellaaraiyum, avan theasaththaiyum un kaiyil
oppukkoduththean; esboanilea vaasamaayiruntha emoariyarin raajaavaagiya seegoanukku nee seythapadiyea ivanukkum seyvaay
en’raar.
(e’n’naagamam 21:34)
அப்படியே
ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும்,
அவன் குமாரரையும், அவனுடைய
சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள். (எண்ணாகமம்
21:35)
appadiyea oruvarum
uyirudan meethiyaayiraathapadikku avanaiyum,
avan kumaararaiyum, avanudaiya sagala
janangga'laiyum vettippoattu, avan theasaththaik kattikko'ndaarga'l. (e’n’naagamam 21:35)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!