கர்த்தர்
மோசேயை நோக்கி: (எண்ணாகமம்
15:1)
karththar moaseayai noakki:
(e’n’naagamam 15:1)
நீ இஸ்ரவேல் புத்திரரோடே
சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள்
குடியிருக்கும்படி நான் உங்களுக்குக்
கொடுக்கும் தேசத்தில் நீங்கள்
போய்ச் சேர்ந்தபின்பு, (எண்ணாகமம்
15:2)
nee israveal
puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: neengga'l kudiyirukkumpadi naan ungga'lukkuk kodukkum theasaththil neengga'l poaych searnthapinbu, (e’n’naagamam 15:2)
விசேஷித்த
பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது,
உங்கள் பண்டிகைகளில் செலுத்தும்
பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க
தகனபலியையாவது மற்ற யாதொரு
பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான தகனமாகப் பலியிடும்போது, (எண்ணாகமம் 15:3)
viseashiththa poruththanaiyaayaavathu, u’rchaaga baliyaayaavathu, ungga'l pa'ndigaiga'lil
seluththum baliyaayaavathu, karththarukku
maaduga'lilaagilum aaduga'lilaagilum sarvaangga thaganabaliyaiyaavathu
mat’ra
yaathoru baliyaiyaavathu karththarukkuch
sugantha vaasanaiyaana thaganamaagap baliyidumpoathu,
(e’n’naagamam 15:3)
தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க
தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும்
ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில்
ஒரு பங்கும் காற்படி
எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய
மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன். (எண்ணாகமம்
15:4)
than padaippaik
karththarukkuch seluththugi’ravan
sarvaangga thaganabalikkaagilum mat’rap balikkaagilum oru aattukkuttiyudanea, oru marakkaalilea paththil
oru panggum kaa’rpadi e'n'neyilea
pisainthathumaana melliya
maavin poajanabaliyaich seluththakkadavan. (e’n’naagamam
15:4)
பானபலியாக
காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும். (எண்ணாகமம்
15:5)
baanabaliyaaga kaa’rpadi thiraadcharasaththaiyum padaikkavea'ndum. (e’n’naagamam
15:5)
ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில்
இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில்
ஒரு பங்காகிய எண்ணெயிலே
பிசைந்ததுமான மெல்லிய மாவின்
போஜனபலியையும், (எண்ணாகமம் 15:6)
aattukkadaavaayirunthatheayaagil, paththil
ira'ndu panggaanathum, oru padiyil
moon’ril
oru panggaagiya e'n'neyilea
pisainthathumaana melliya
maavin poajanabaliyaiyum, (e’n’naagamam 15:6)
பானபலியாக
ஒரு படியில் மூன்றில்
ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும். (எண்ணாகமம்
15:7)
baanabaliyaaga oru padiyil
moon’ril
oru panggu thiraadcharasaththaiyum karththarukkuch sugantha vaasanaiyaana padaippaagap padaikkavea'ndum. (e’n’naagamam
15:7)
நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த
பொருத்தனை பலிக்காகிலும், சமாதான
பலிக்காகிலும், ஒரு காளையைக்
கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது, (எண்ணாகமம்
15:8)
nee
sarvaangga thaganabalikkaagilum, viseashiththa poruththanai balikkaagilum, samaathaana balikkaagilum, oru kaa'laiyaik
karththarukkuch seluththa aayaththappaduththumpoathu, (e’n’naagamam
15:8)
அதனோடே
பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி
எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய
மாவின் போஜனபலியையும், (எண்ணாகமம்
15:9)
athanoadea paththil
moon’rupanggaanathum, araippadi
e'n'neyilea pisainthathumaana
melliya maavin poajanabaliyaiyum, (e’n’naagamam
15:9)
பானபலியாக
அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான தகனபலியாகப் படைக்க
வேண்டும். (எண்ணாகமம் 15:10)
baanabaliyaaga araippadi thiraadcharasaththaiyum, karththarukkuch sugantha vaasanaiyaana thaganabaliyaagap padaikka
vea'ndum. (e’n’naagamam 15:10)
இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொரு
மாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக்
குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும். (எண்ணாகமம்
15:11)
inthappiragaaramaagavea ovvoru
maattukkaagilum, aattukkadaavukkaagilum, semma’riyaattuk kuttikkaagilum, ve'l'laattuk kuttikkaagilum seythu
padaikkavea'ndum. (e’n’naagamam 15:11)
நீங்கள்
படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத்தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும். (எண்ணாகமம்
15:12)
neengga'l padaikki’ravaiga'lin ilakkaththi’rkuththakkathaay ovvon’ri’rkaagavum inthappiragaaram seyyavea'ndum. (e’n’naagamam
15:12)
சுதேசத்தில்
பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே
செய்யவேண்டும். (எண்ணாகமம் 15:13)
sutheasaththil pi’ranthavarga'l yaavarum karththarukkuch
sugantha vaasanaiyaana thaganabaliyaich seluththumpoathu ivvithamaagavea
seyyavea'ndum. (e’n’naagamam
15:13)
உங்களிடத்திலே
தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள்
நடுவிலே உங்கள் தலைமுறைதோறும்
குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த
வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள்
செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும். (எண்ணாகமம்
15:14)
ungga'lidaththilea
thanggiyirukki’ra anniyanaavathu, ungga'l naduvilea
ungga'l
thalaimu’raithoa’rum kudiyirukki’ravanaavathu, karththarukkuch
sugantha vaasanaiyaana thaganabali seluththavea'ndumaanaal, neengga'l seygi’rapadiyea avanum
seyyavea'ndum. (e’n’naagamam
15:14)
சபையாராகிய
உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற
அந்நியனுக்கும் ஒரே பிரமாணம்
இருக்கவேண்டும் என்பது உங்கள்
தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு
முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே
இருக்கவேண்டும். (எண்ணாகமம் 15:15)
sabaiyaaraagiya ungga'lukkum ungga'lidaththil thanggugi’ra anniyanukkum orea piramaa'nam irukkavea'ndum enbathu ungga'l thalaimu’raiga'lil niththiya
katta'laiyaayirukkakkadavathu; karththarukku
munbaaga
anniyanum ungga'laippoalavea
irukkavea'ndum. (e’n’naagamam 15:15)
உங்களுக்கும்
உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது
என்று சொல் என்றார்.
(எண்ணாகமம் 15:16)
ungga'lukkum ungga'lidaththil thanggugi’ra anniyanukkum orea piramaa'namum orea mu’raimaiyum irukkakkadavathu en’ru sol en’raar. (e’n’naagamam
15:16)
பின்னும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(எண்ணாகமம் 15:17)
pinnum karththar
moaseayai
noakki: (e’n’naagamam 15:17)
நீ இஸ்ரவேல் புத்திரரோடே
சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில்
நீங்கள் சேர்ந்து, (எண்ணாகமம்
15:18)
nee israveal
puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: naan ungga'lai azhaiththukko'ndupoagi’ra theasaththil neengga'l searnthu, (e’n’naagamam
15:18)
தேசத்தின்
ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு
ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச்
செலுத்தக்கடவீர்கள். (எண்ணாகமம் 15:19)
theasaththin aagaaraththaip pusikkumpoathu, karththarukku ea’reduththup padaikkum
kaa'nikkaiyaich seluththakkadaveerga'l. (e’n’naagamam 15:19)
உங்கள்
பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை
ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற
களத்தின் படைப்பை ஏறெடுத்துப்
படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப்
படைக்கவேண்டும். (எண்ணாகமம் 15:20)
ungga'l pisaintha maavinaal
seytha mutha’rpalanaagiya athirasaththai ea’reduththup padaippeerga'laaga; poaradikki’ra ka'laththin
padaippai ea’reduththup padaikki’rathupoala athaiyum ea’reduththup padaikkavea'ndum. (e’n’naagamam
15:20)
இப்படி
உங்கள் தலைமுறைதோறும் உங்கள்
பிசைந்த மாவின் முதற்பலனிலே
கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப்
படைக்கக்கடவீர்கள். (எண்ணாகமம் 15:21)
ippadi ungga'l thalaimu’raithoa’rum ungga'l pisaintha maavin mutha’rpalanilea karththarukkup padaippai
ea’reduththup padaikkakkadaveerga'l. (e’n’naagamam
15:21)
கர்த்தர்
மோசேயினிடத்தில் சொன்ன இந்தக்
கற்பனைகள் எல்லாவற்றின்படியும், (எண்ணாகமம்
15:22)
karththar moaseayinidaththil
sonna inthak
ka’rpanaiga'l ellaavat’rinpadiyum, (e’n’naagamam
15:22)
கர்த்தர்
மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள்
சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள்
செய்யாமல், (எண்ணாகமம் 15:23)
karththar moaseayaikko'ndu katta'laikoduththa naa'lmutha’rko'ndu avar ungga'lukkum ungga'l santhathiga'lukkum niyamiththa
ellaavat’rinpadiyeayum neengga'l seyyaamal, (e’n’naagamam
15:23)
அறியாமல்
தவறி நடந்தாலும், சபையாருக்குத்
தெரியாமல் யாதொரு தப்பிதம்
செய்தாலும், சபையார் எல்லாரும்
கர்த்தருக்குச் சுகந்த வாசனையான
தகனபலியாக ஒரு காளையையும்,
முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும்,
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். (எண்ணாகமம்
15:24)
a’riyaamal thava’ri nadanthaalum,
sabaiyaarukkuth theriyaamal
yaathoru thappitham seythaalum, sabaiyaar ellaarum
karththarukkuch sugantha vaasanaiyaana thaganabaliyaaga oru kaa'laiyaiyum, mu’raimaippadi atha’rkeat’ra poajanabaliyaiyum, baanabaliyaiyum, paavanivaara'nabaliyaaga oru ve'l'laattukkadaavaiyum
seluththavea'ndum. (e’n’naagamam
15:24)
அதினால்
ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின்
சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்;
அது அறியாமையினால் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம்
அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும்
பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில்
கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு
மன்னிக்கப்படும். (எண்ணாகமம் 15:25)
athinaal aasaariyan israveal
puththirarin sabaiyanaiththi’rkaagavum paavanivirththi
seyyakkadavan; athu a’riyaamaiyinaal seyyappattapadiyaalum, athinimiththam avarga'l karththarukkuth thaganabaliyaiyum paavanivaara'nabaliyaiyum karththarudaiya
sannithiyil ko'nduvanthathinaalum, athu avarga'lukku mannikkappadum. (e’n’naagamam
15:25)
அது அறியாமையினாலே ஜனங்கள்
யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின்
சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற
அந்நியனுக்கும் மன்னிக்கப்படும். (எண்ணாகமம்
15:26)
athu a’riyaamaiyinaalea janangga'l yaavarukkum
vanthapadiyaal, athu israveal
puththirarin sabaiyanaiththi’rkum avarga'lukku'l'lea thanggugi’ra anniyanukkum
mannikkappadum. (e’n’naagamam 15:26)
ஒருவன்
அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப்
பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன். (எண்ணாகமம்
15:27)
oruvan a’riyaamaiyinaal paavagnseythaanaagil, oru vayathaana
ve'l'laattaip paavanivaara'nabaliyaagach seluththakkadavan. (e’n’naagamam
15:27)
அப்பொழுது
அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன்
பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய
சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்;
அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும். (எண்ணாகமம்
15:28)
appozhuthu a’riyaamaiyinaal paavagnseythavanukkaaga aasaariyan paavanivirththi
seyyumpadi karththarudaiya sannithiyil paavanivirththi seyyakkadavan; appozhuthu
avanukku mannikkappadum. (e’n’naagamam
15:28)
இஸ்ரவேல்
புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும்
அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும். (எண்ணாகமம்
15:29)
israveal puththiraraagiya ungga'lil pi’ranthavanukkum ungga'lukku'l'lea thanggum anniyanukkum,
a’riyaamaiyinaal paavagnseythavanimiththam, orea piramaa'nam irukkavea'ndum. (e’n’naagamam
15:29)
அன்றியும்
தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது
துணிகரமாய் யாதொன்றைச் செய்தால்,
அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு
அறுப்புண்டுபோகவேண்டும். (எண்ணாகமம் 15:30)
an’riyum theasaththilea pi’ranthavarga'lilaagilum anniyarga'lilaagilum evanaavathu
thu'nigaramaay yaathon’raich seythaal, avan karththarai ninthikki’raan; antha aaththumaa than janaththaaril iraathapadikku a’ruppu'ndupoagavea'ndum. (e’n’naagamam 15:30)
அவன் கர்த்தரின் வார்த்தையை
அசட்டைபண்ணி, அவர் கற்பனையை
மீறினபடியால், அந்த ஆத்துமா
அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம்
அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.
(எண்ணாகமம் 15:31)
avan karththarin
vaarththaiyai asattaipa'n'ni, avar ka’rpanaiyai mee’rinapadiyaal, antha aaththumaa a’ruppu'ndupoagavea'ndum; avan akkiramam
avanmeal irukkum en’ru sol en’raar. (e’n’naagamam
15:31)
இஸ்ரவேல்
புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில்,
ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். (எண்ணாகமம்
15:32)
israveal puththirar
vanaantharaththil irukkaiyil, oayvunaa'lil
vi’raguga'laip po’rukkikko'ndiruntha oru manithanaik ka'ndupidiththaarga'l. (e’n’naagamam
15:32)
விறகுகளைப்
பொறுக்கின அந்த மனிதனைக்
கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார்
அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். (எண்ணாகமம்
15:33)
vi’raguga'laip po’rukkina antha manithanaik
ka'ndupidiththavarga'l, avanai
moasea
aaroan enbavarga'lidaththukkum sabaiyaar anaivaridaththukkum ko'nduvanthaarga'l. (e’n’naagamam
15:33)
அவனுக்குச்
செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான
உத்தரவு இல்லாதபடியினால், அவனைக்
காவலில் வைத்தார்கள். (எண்ணாகமம்
15:34)
avanukkuch seyyavea'ndiyathu innathen’ru theerkkamaana
uththaravu illaathapadiyinaal, avanaik
kaavalil vaiththaarga'l. (e’n’naagamam 15:34)
கர்த்தர்
மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க்
கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும்
அவனைப் பாளயத்திற்குப் புறம்பே
கல்லெறியக்கடவர்கள் என்றார். (எண்ணாகமம்
15:35)
karththar moaseayai noakki:
antha manithan nichchayamaayk kolaiseyyappadavea'ndum;
sabaiyaar ellaarum
avanaip paa'layaththi’rkup pu’rambea kalle’riyakkadavarga'l en’raar. (e’n’naagamam 15:35)
அப்பொழுது
சபையார் எல்லாரும் கர்த்தர்
மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப்
பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க்
கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
(எண்ணாகமம் 15:36)
appozhuthu
sabaiyaar ellaarum
karththar moaseakkuk katta'laiyittapadiyea, avanaip
paa'layaththi’rkup pu’rambea ko'ndupoayk kalle’rinthaarga'l; avan seththaan. (e’n’naagamam
15:36)
பின்னும்
கர்த்தர் மோசேயை நோக்கி:
(எண்ணாகமம் 15:37)
pinnum karththar
moaseayai
noakki: (e’n’naagamam 15:37)
நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள்
தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின்
ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி,
ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும்
என்று அவர்களுக்குச் சொல். (எண்ணாகமம் 15:38)
nee israveal
puththiraridaththil peasi, avarga'l thangga'l thalaimu’raithoa’rum thangga'l vasthirangga'lin oarangga'lilea thonggalga'lai u'ndaakki, oaraththin
thonggalilea i'laneela
naadaavaik kattavea'ndum en’ru avarga'lukkuch sol. (e’n’naagamam
15:38)
நீங்கள்
பின்பற்றிச் சோரம்போகிற உங்கள்
இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும்
ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின்
கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே
செய்யும்படிக்கு, அது உங்களுக்குத்
தொங்கலாய் இருக்கவேண்டும். (எண்ணாகமம்
15:39)
neengga'l pinpat’rich soarampoagi’ra ungga'l iruthayaththukkum ungga'l ka'nga'lukkum ea’rka nadavaamal,
athaip paarththu, karththarin
ka’rpanaiga'laiyellaam ninaiththu
avaiga'linpadiyea seyyumpadikku, athu ungga'lukkuth thonggalaay irukkavea'ndum. (e’n’naagamam
15:39)
நீங்கள்
என் கற்பனைகளையெல்லாம் நினைத்து,
அவைகளின்படியே செய்து, உங்கள்
தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக. (எண்ணாகமம்
15:40)
neengga'l en ka’rpanaiga'laiyellaam ninaiththu, avaiga'linpadiyea
seythu, ungga'l theavanukkup
parisuththaraayirukkumpadi athaip
paarppeerga'laaga. (e’n’naagamam
15:40)
நான் உங்களுக்குத் தேவனாயிருக்கும்படி, உங்களை
எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள்
தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய
கர்த்தர் என்று சொல் என்றார். (எண்ணாகமம்
15:41)
naan ungga'lukkuth theavanaayirukkumpadi, ungga'lai egipthutheasaththilirunthu
pu’rappadappa'n'nina ungga'l theavanaagiya karththar;
naanea ungga'l theavanaagiya karththar en’ru sol en’raar. (e’n’naagamam
15:41)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!