கர்த்தராகிய ஆண்டவர்
எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம்
கந்தாயத்துப் புல் முளைக்கத்
தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார். (ஆமோஸ்
7:1)
karththaraagiya aa'ndavar enakkuk
kaa'nbiththathaavathu: ithoa,
raajaavinudaiya pulla’ruppukkuppinbu ira'ndaam
kanthaayaththup pul mu'laikkath
thodanggugaiyil avar vettukki'liga'lai u'ndaakkinaar. (aamoas
7:1)
அவைகள் தேசத்தின்
புல்லைத்தின்று தீர்ந்தபோது, நான்: கர்த்தராகிய ஆண்டவரே,
மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப
யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
(ஆமோஸ் 7:2)
avaiga'l theasaththin pullaiththin’ru theernthapoathu, naan: karththaraagiya aa'ndavarea, manniththaru'lum; yaakkoabu thirumba yaaraalea
ezhunthiruppaan? avan si’ruththuppoanaan en’rean. (aamoas
7:2)
கர்த்தர் அதற்கு
மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை
என்றார். (ஆமோஸ் 7:3)
karththar atha’rku manasthaabappattu, appadi aavathillai
en’raar.
(aamoas 7:3)
கர்த்தராகிய ஆண்டவர்
எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம்
விசாரிப்பேன் என்று கர்த்தராகிய
ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப்
பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத்
தீர்ந்தது. (ஆமோஸ் 7:4)
karththaraagiya aa'ndavar enakkuk
kaa'nbiththathaavathu: ithoa,
akkiniyaalea niyaayam visaarippean en’ru karththaraagiya aa'ndavar
ea’rpattaar; athu mahaa aazhiyaip padchiththathu, athil oru panggaip padchiththuth theernthathu.
(aamoas 7:4)
அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே,
நிறுத்துமே; யாக்கோபு திரும்ப
யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.
(ஆமோஸ் 7:5)
appozhuthu naan: karththaraagiya aa'ndavarea, ni’ruththumea; yaakkoabu thirumba yaaraalea
ezhunthiruppaan? avan si’ruththuppoanaan en’rean. (aamoas
7:5)
கர்த்தர் அதற்கு
மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை
என்றார். (ஆமோஸ் 7:6)
karththar atha’rku manasthaabappattu, appadi aavathillai
en’raar.
(aamoas 7:6)
பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட
ஒரு மதிலின்மேல் நின்றார்;
அவர் கையில் தூக்குநூல்
இருந்தது. (ஆமோஸ் 7:7)
pinbu avar enakkuk
kaa'nbiththathaavathu: ithoa,
thookkunool piramaa'naththinaal kattappatta oru mathilinmeal
nin’raar;
avar kaiyil thookkunool
irunthathu. (aamoas 7:7)
கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே,
நீ என்னத்தைக் காண்கிறாய்
என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன்
என்றேன்; அப்பொழுது ஆண்டவர்:
இதோ, இஸ்ரவேலென்னும் என் ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்;
இனி அவர்களை மன்னிக்கமாட்டேன். (ஆமோஸ்
7:8)
karththar ennai noakki: aamoasea, nee ennaththaik kaa'ngi’raay en’raar; thookkunoolaik kaa'ngi’rean en’rean; appozhuthu
aa'ndavar: ithoa, isravealennum
en janaththin naduvea
thookkunoolai viduvean; ini avarga'lai mannikkamaattean. (aamoas 7:8)
ஈசாக்கின் மேடைகள்
பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த
ஸ்தலங்கள் அவாந்தரமுமாக்கப்படும்; நான் எரொபெயாம் வீட்டாருக்கு
விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பிவருவேன் என்றார்.
(ஆமோஸ் 7:9)
eesaakkin meadaiga'l paazhum, isravealin
parisuththa sthalangga'l avaantharamumaakkappadum; naan erobeyaam veettaarukku viroathamaayp pattayaththoadea ezhumbivaruvean en’raar. (aamoas
7:9)
அப்பொழுது பெத்தேலில்
ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின்
ராஜாவாகிய எரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின்
நடுவே உமக்கு விரோதமாகக்
கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது. (ஆமோஸ்
7:10)
appozhuthu beththealil aasaariyanaana amathsiyaa isravealin
raajaavaagiya erobeyaamukku aa'l anuppi: aamoas
israveal vamsaththaarin naduvea umakku
viroathamaagak kattuppaadu pa'n'nugi’raan; theasam avan vaarththaiga'laiyellaam sagikkamaattaathu. (aamoas
7:10)
எரொபெயாம் பட்டயத்தினால்
சாவான் என்றும், இஸ்ரவேல்
தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும்
ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான். (ஆமோஸ்
7:11)
erobeyaam pattayaththinaal saavaan
en’rum,
israveal than theasaththilirunthu
si’raipidiththuk ko'ndupoagappaduvaan en’rum aamoas sollugi’raan en’ru sollachsonnaan. (aamoas 7:11)
அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம்
பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ,
அங்கே அப்பம் தின்று,
அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு.
(ஆமோஸ் 7:12)
amathsiyaa aamoasai noakki: tharisanam paarkki’ravanea, poa; nee yoothaatheasaththukku oadippoa,
anggea
appam thin’ru, anggea theerkkatharisanam sollu.
(aamoas 7:12)
பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே;
அது ராஜாவின் பரிசுத்த
ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான்.
(ஆமோஸ் 7:13)
beththealilea inith theerkkatharisanam
sollaathea; athu raajaavin parisuththa sthalamum
raajyaththin aramanaiyumaayirukki’rathu en’raan. (aamoas 7:13)
ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன். (ஆமோஸ்
7:14)
aamoas amathsiyaavukkup pirathiyuththaramaaga: naan theerkkatharisiyumalla, theerkkatharisiyin puththiranumalla; naan manthai meaykki’ravanum, kaattaththippazhangga'laip po’rukkugi’ravanumaayirunthean. (aamoas
7:14)
ஆனால் மந்தையின்
பின்னாலே போகிறபோது என்னைக்
கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு
விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு
என்று கர்த்தர் உரைத்தார்.
(ஆமோஸ் 7:15)
aanaal manthaiyin
pinnaalea poagi’rapoathu ennaik karththar
azhaiththu, nee poay en janamaagiya isravealukku
viroathamaagath theerkkatharisanam
sollu en’ru karththar
uraiththaar. (aamoas 7:15)
இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக்
கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த்
தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின்
வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும்
சொல்லாதே என்று சொல்லுகிறாயே.
(ஆமோஸ் 7:16)
ippoathum nee karththarudaiya vaarththaiyaik kea'l;
isravealukku viroathamaayth theerkkatharisanam
sollaathea, eesaakkin vamsaththaarukku viroathamaaga on’raiyum sollaathea en’ru sollugi’raayea. (aamoas 7:16)
இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில்
வேசியாவாள்; உன் குமாரரும்
உன் குமாரத்திகளும் பட்டயத்தால்
விழுவார்கள்; உன் வயல் அளவுநூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவெனில்
அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும்
தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்
என்றான். (ஆமோஸ் 7:17)
ithinimiththam: un pe'njaathi nagaraththil veasiyaavaa'l; un kumaararum un kumaaraththiga'lum pattayaththaal vizhuvaarga'l; un vayal a'lavunoolaal panggittukko'l'lappadum; neeyoavenil
asuththamaana theasaththilea
seththuppoavaay; isravealum
than theasaththilirunthu
si’raipidikkappattuk ko'ndupoagappaduvaan en’ru karththar sollugi’raar en’raan. (aamoas 7:17)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!