Friday, June 10, 2016

Yaakkoabu 2 | யாக்கோபு 2 | James 2

என்  சகோதரரே,  மகிமையுள்ள  நம்முடைய  கர்த்தராகிய  இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள  விசுவாசத்தைப்  பட்சபாதத்தோடே  பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.  (யாக்கோபு  2:1)

en  sagoathararea,  magimaiyu'l'la  nammudaiya  karththaraagiya  iyeasuki’risthuvinmealu'l'la  visuvaasaththaip  padchapaathaththoadea  pat’rikko'l'laathiruppeerga'laaga.  (yaakkoabu  2:1)

ஏனெனில்,  பொன்மோதிரமும்  மினுக்குள்ள  வஸ்திரமும்  தரித்திருக்கிற  ஒரு  மனுஷனும்,  கந்தையான  வஸ்திரம்  தரித்திருக்கிற  ஒரு  தரித்திரனும்  உங்கள்  ஆலயத்தில்  வரும்போது,  (யாக்கோபு  2:2)

eanenil,  ponmoathiramum  minukku'l'la  vasthiramum  thariththirukki’ra  oru  manushanum,  kanthaiyaana  vasthiram  thariththirukki’ra  oru  thariththiranum  ungga'l  aalayaththil  varumpoathu,  (yaakkoabu  2:2)

மினுக்குள்ள  வஸ்திரந்தரித்தவனைக்  கண்ணோக்கி:  நீர்  இந்த  நல்ல  இடத்தில்  உட்காரும்  என்றும்;  தரித்திரனைப்  பார்த்து:  நீ  அங்கே  நில்லு,  அல்லது  இங்கே  என்  பாதபடியண்டையிலே  உட்காரு  என்றும்  நீங்கள்  சொன்னால்,  (யாக்கோபு  2:3)

minukku'l'la  vasthiranthariththavanaik  ka'n'noakki:  neer  intha  nalla  idaththil  udkaarum  en’rum;  thariththiranaip  paarththu:  nee  anggea  nillu,  allathu  inggea  en  paathapadiya'ndaiyilea  udkaaru  en’rum  neengga'l  sonnaal,  (yaakkoabu  2:3)

உங்களுக்குள்ளே  பேதகம்பண்ணி,  தகாத  சிந்தனைகளோடே  நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?  (யாக்கோபு  2:4)

ungga'lukku'l'lea  beathagampa'n'ni,  thagaatha  sinthanaiga'loadea  nithaanikki’ravarga'laayiruppeerga'lallavaa?  (yaakkoabu  2:4)

என்  பிரியமான  சகோதரரே,  கேளுங்கள்;  தேவன்  இவ்வுலகத்தின்  தரித்திரரை  விசுவாசத்தில்  ஐசுவரியவான்களாகவும்,  தம்மிடத்தில்  அன்புகூருகிறவர்களுக்குத்  தாம்  வாக்குத்தத்தம்பண்ணின  ராஜ்யத்தைச்  சுதந்தரிக்கிறவர்களாகவும்  தெரிந்துகொள்ளவில்லையா?  (யாக்கோபு  2:5)

en  piriyamaana  sagoathararea,  kea'lungga'l;  theavan  ivvulagaththin  thariththirarai  visuvaasaththil  aisuvariyavaanga'laagavum,  thammidaththil  anbukoorugi’ravarga'lukkuth  thaam  vaakkuththaththampa'n'nina  raajyaththaich  suthantharikki’ravarga'laagavum  therinthuko'l'lavillaiyaa?  (yaakkoabu  2:5)

நீங்களோ  தரித்திரரைக்  கனவீனம்  பண்ணுகிறீர்கள்.  ஐசுவரியவான்களல்லவோ  உங்களை  ஒடுக்குகிறார்கள்?  அவர்களல்லவோ  உங்களை  நியாயாசனங்களுக்கு  முன்பாக  இழுக்கிறார்கள்?  (யாக்கோபு  2:6)

neengga'loa  thariththiraraik  kanaveenam  pa'n'nugi’reerga'l.  aisuvariyavaanga'lallavoa  ungga'lai  odukkugi’raarga'l?  avarga'lallavoa  ungga'lai  niyaayaasanangga'lukku  munbaaga  izhukki’raarga'l?  (yaakkoabu  2:6)

உங்களுக்குத்  தரிக்கப்பட்ட  நல்ல  நாமத்தை  அவர்களல்லவோ  தூஷிக்கிறார்கள்?  (யாக்கோபு  2:7)

ungga'lukkuth  tharikkappatta  nalla  naamaththai  avarga'lallavoa  thooshikki’raarga'l?  (yaakkoabu  2:7)

உன்னிடத்தில்  நீ  அன்புகூருகிறதுபோலப்  பிறனிடத்திலும்  அன்புகூருவாயாக  என்று  வேதவாக்கியம்  சொல்லுகிற  ராஜரிக  பிரமாணத்தை  நீங்கள்  நிறைவேற்றினால்  நன்மைசெய்வீர்கள்.  (யாக்கோபு  2:8)

unnidaththil  nee  anbukoorugi’rathupoalap  pi’ranidaththilum  anbukooruvaayaaga  en’ru  veathavaakkiyam  sollugi’ra  raajariga  piramaa'naththai  neengga'l  ni’raiveat’rinaal  nanmaiseyveerga'l.  (yaakkoabu  2:8)

பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால்,  பாவஞ்செய்து,  மீறினவர்களென்று  நியாயப்பிரமாணத்தால்  தீர்க்கப்படுவீர்கள்.  (யாக்கோபு  2:9)

padchapaathamu'l'lavarga'laayiruppeerga'laanaal,  paavagnseythu,  mee’rinavarga'len’ru  niyaayappiramaa'naththaal  theerkkappaduveerga'l.  (yaakkoabu  2:9)

எப்படியெனில்,  ஒருவன்  நியாயப்பிரமாணம்  முழுவதையும்  கைக்கொண்டிருந்தும்,  ஒன்றிலே  தவறினால்  எல்லாவற்றிலும்  குற்றவாளியாயிருப்பான்.  (யாக்கோபு  2:10)

eppadiyenil,  oruvan  niyaayappiramaa'nam  muzhuvathaiyum  kaikko'ndirunthum,  on’rilea  thava’rinaal  ellaavat’rilum  kut’ravaa'liyaayiruppaan.  (yaakkoabu  2:10)

ஏனென்றால்,  விபசாரஞ்செய்யாதிருப்பாயாக  என்று  சொன்னவர்  கொலைசெய்யாதிருப்பாயாக  என்றும்  சொன்னார்;  ஆதலால்,  நீ  விபசாரஞ்செய்யாமலிருந்தும்  கொலைசெய்தாயானால்  நியாயப்பிரமாணத்தை  மீறினவனாவாய்.  (யாக்கோபு  2:11)

eanen’raal,  vibasaaragnseyyaathiruppaayaaga  en’ru  sonnavar  kolaiseyyaathiruppaayaaga  en’rum  sonnaar;  aathalaal,  nee  vibasaaragnseyyaamalirunthum  kolaiseythaayaanaal  niyaayappiramaa'naththai  mee’rinavanaavaay.  (yaakkoabu  2:11)

சுயாதீனப்பிரமாணத்தினால்  நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய்  அதற்கேற்றபடி  பேசி,  அதற்கேற்றபடி  செய்யுங்கள்.  (யாக்கோபு  2:12)

suyaatheenappiramaa'naththinaal  niyaayaththeerppadaiyappoagi’ravarga'laay  atha’rkeat’rapadi  peasi,  atha’rkeat’rapadi  seyyungga'l.  (yaakkoabu  2:12)

ஏனென்றால்,  இரக்கஞ்செய்யாதவனுக்கு  இரக்கமில்லாத  நியாயத்தீர்ப்புக்  கிடைக்கும்;  நியாயத்தீர்ப்புக்குமுன்பாக  இரக்கம்  மேன்மைபாராட்டும்.  (யாக்கோபு  2:13)

eanen’raal,  irakkagnseyyaathavanukku  irakkamillaatha  niyaayaththeerppuk  kidaikkum;  niyaayaththeerppukkumunbaaga  irakkam  meanmaipaaraattum.  (yaakkoabu  2:13)

என்  சகோதரரே,  ஒருவன்  தனக்கு  விசுவாசமுண்டென்று  சொல்லியும்,  கிரியைகளில்லாதவனானால்  அவனுக்குப்  பிரயோஜனமென்ன?  அந்த  விசுவாசம்  அவனை  இரட்சிக்குமா?  (யாக்கோபு  2:14)

en  sagoathararea,  oruvan  thanakku  visuvaasamu'nden’ru  solliyum,  kiriyaiga'lillaathavanaanaal  avanukkup  pirayoajanamenna?  antha  visuvaasam  avanai  iradchikkumaa?  (yaakkoabu  2:14)

ஒரு  சகோதரனாவது  சகோதரியாவது  வஸ்திரமில்லாமலும்  அநுதின  ஆகாரமில்லாமலும்  இருக்கும்போது,  (யாக்கோபு  2:15)

oru  sagoatharanaavathu  sagoathariyaavathu  vasthiramillaamalum  anuthina  aagaaramillaamalum  irukkumpoathu,  (yaakkoabu  2:15)

உங்களில்  ஒருவன்  அவர்களை  நோக்கி:  நீங்கள்  சமாதானத்தோடே  போங்கள்,  குளிர்காய்ந்து  பசியாறுங்கள்  என்று  சொல்லியும்,  சரீரத்திற்கு  வேண்டியவைகளை  அவர்களுக்குக்  கொடாவிட்டால்  பிரயோஜனமென்ன?  (யாக்கோபு  2:16)

ungga'lil  oruvan  avarga'lai  noakki:  neengga'l  samaathaanaththoadea  poangga'l,  ku'lirkaaynthu  pasiyaa’rungga'l  en’ru  solliyum,  sareeraththi’rku  vea'ndiyavaiga'lai  avarga'lukkuk  kodaavittaal  pirayoajanamenna?  (yaakkoabu  2:16)

அப்படியே  விசுவாசமும்  கிரியைகளில்லாதிருந்தால்  தன்னிலேதானே  செத்ததாயிருக்கும்.  (யாக்கோபு  2:17)

appadiyea  visuvaasamum  kiriyaiga'lillaathirunthaal  thannileathaanea  seththathaayirukkum.  (yaakkoabu  2:17)

ஒருவன்:  உனக்கு  விசுவாசமுண்டு,  எனக்குக்  கிரியைகளுண்டு;  கிரியைகளில்லாமல்  உன்  விசுவாசத்தை  எனக்குக்  காண்பி,  நான்  என்  விசுவாசத்தை  என்  கிரியைகளினாலே  உனக்குக்  காண்பிப்பேன்  என்பானே.  (யாக்கோபு  2:18)

oruvan:  unakku  visuvaasamu'ndu,  enakkuk  kiriyaiga'lu'ndu;  kiriyaiga'lillaamal  un  visuvaasaththai  enakkuk  kaa'nbi,  naan  en  visuvaasaththai  en  kiriyaiga'linaalea  unakkuk  kaa'nbippean  enbaanea.  (yaakkoabu  2:18)

தேவன்  ஒருவர்  உண்டென்று  விசுவாசிக்கிறாய்,  அப்படிச்  செய்கிறது  நல்லதுதான்;  பிசாசுகளும்  விசுவாசித்து,  நடுங்குகின்றன.  (யாக்கோபு  2:19)

theavan  oruvar  u'nden’ru  visuvaasikki’raay,  appadich  seygi’rathu  nallathuthaan;  pisaasuga'lum  visuvaasiththu,  nadunggugin’rana.  (yaakkoabu  2:19)

வீணான  மனுஷனே,  கிரியைகளில்லாத  விசுவாசம்  செத்ததென்று  நீ  அறியவேண்டுமோ?  (யாக்கோபு  2:20)

vee'naana  manushanea,  kiriyaiga'lillaatha  visuvaasam  seththathen’ru  nee  a’riyavea'ndumoa?  (yaakkoabu  2:20)

நம்முடைய  பிதாவாகிய  ஆபிரகாம்  தன்  குமாரன்  ஈசாக்கைப்  பலிபீடத்தின்மேல்  செலுத்தினபோது,  கிரியைகளினாலே  அல்லவோ  நீதிமானாக்கப்பட்டான்?  (யாக்கோபு  2:21)

nammudaiya  pithaavaagiya  aabirahaam  than  kumaaran  eesaakkaip  balipeedaththinmeal  seluththinapoathu,  kiriyaiga'linaalea  allavoa  neethimaanaakkappattaan?  (yaakkoabu  2:21)

விசுவாசம்  அவனுடைய  கிரியைகளோடேகூட  முயற்சிசெய்து,  கிரியைகளினாலே  விசுவாசம்  பூரணப்பட்டதென்று  காண்கிறாயே.  (யாக்கோபு  2:22)

visuvaasam  avanudaiya  kiriyaiga'loadeakooda  muya’rchiseythu,  kiriyaiga'linaalea  visuvaasam  poora'nappattathen’ru  kaa'ngi’raayea.  (yaakkoabu  2:22)

அப்படியே  ஆபிரகாம்  தேவனை  விசுவாசித்தான்,  அது  அவனுக்கு  நீதியாக  எண்ணப்பட்டது  என்கிற  வேதவாக்கியம்  நிறைவேறிற்று;  அவன்  தேவனுடைய  சிநேகிதனென்னப்பட்டான்.  (யாக்கோபு  2:23)

appadiyea  aabirahaam  theavanai  visuvaasiththaan,  athu  avanukku  neethiyaaga  e'n'nappattathu  engi’ra  veathavaakkiyam  ni’raivea’rit’ru;  avan  theavanudaiya  sineagithanennappattaan.  (yaakkoabu  2:23)

ஆதலால்,  மனுஷன்  விசுவாசத்தினாலேமாத்திரமல்ல,  கிரியைகளினாலேயும்  நீதிமானாக்கப்படுகிறானென்று  நீங்கள்  காண்கிறீர்களே.  (யாக்கோபு  2:24)

aathalaal,  manushan  visuvaasaththinaaleamaaththiramalla,  kiriyaiga'linaaleayum  neethimaanaakkappadugi’raanen’ru  neengga'l  kaa'ngi’reerga'lea.  (yaakkoabu  2:24)

அந்தப்படி  ராகாப்  என்னும்  வேசியும்  தூதர்களை  ஏற்றுக்கொண்டு  வேறுவழியாய்  அனுப்பிவிட்டபோது,  கிரியைகளினாலே  அல்லவோ  நீதியுள்ளவளாக்கப்பட்டாள்?  (யாக்கோபு  2:25)

anthappadi  raahaab  ennum  veasiyum  thootharga'lai  eat’rukko'ndu  vea’ruvazhiyaay  anuppivittapoathu,  kiriyaiga'linaalea  allavoa  neethiyu'l'lava'laakkappattaa'l?  (yaakkoabu  2:25)

அப்படியே,  ஆவியில்லாத  சரீரம்  செத்ததாயிருக்கிறதுபோல,  கிரியைகளில்லாத  விசுவாசமும்  செத்ததாயிருக்கிறது.  (யாக்கோபு  2:26)

appadiyea,  aaviyillaatha  sareeram  seththathaayirukki’rathupoala,  kiriyaiga'lillaatha  visuvaasamum  seththathaayirukki’rathu.  (yaakkoabu  2:26)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!