Wednesday, June 29, 2016

Sanggeetham 89 | சங்கீதம் 89 | Psalms 89

கர்த்தரின்  கிருபைகளை  என்றென்றைக்கும்  பாடுவேன்;  உமது  உண்மையைத்  தலைமுறை  தலைமுறையாக  என்  வாயினால்  அறிவிப்பேன்.  (சங்கீதம்  89:1)

karththarin  kirubaiga'lai  en’ren’raikkum  paaduvean;  umathu  u'nmaiyaith  thalaimu’rai  thalaimu’raiyaaga  en  vaayinaal  a’rivippean.  (sanggeetham  89:1)

கிருபை  என்றென்றைக்கும்  ஸ்திரப்பட்டிருக்கும்;  உமது  உண்மையை  வானங்களிலே  ஸ்தாபிப்பீர்  என்றேன்.  (சங்கீதம்  89:2)

kirubai  en’ren’raikkum  sthirappattirukkum;  umathu  u'nmaiyai  vaanangga'lilea  sthaabippeer  en’rean.  (sanggeetham  89:2)

என்னால்  தெரிந்துகொள்ளப்பட்டவனோடே  உடன்படிக்கைபண்ணி,  என்  தாசனாகிய  தாவீதை  நோக்கி:  (சங்கீதம்  89:3)

ennaal  therinthuko'l'lappattavanoadea  udanpadikkaipa'n'ni,  en  thaasanaagiya  thaaveethai  noakki:  (sanggeetham  89:3)

என்றென்றைக்கும்  உன்  சந்ததியை  நிலைப்படுத்தி,  தலைமுறை  தலைமுறையாக  உன்  சிங்காசனத்தை  ஸ்தாபிப்பேன்  என்று  ஆணையிட்டேன்  என்றீர்.  (சேலா.)  (சங்கீதம்  89:4)

en’ren’raikkum  un  santhathiyai  nilaippaduththi,  thalaimu’rai  thalaimu’raiyaaga  un  singgaasanaththai  sthaabippean  en’ru  aa'naiyittean  en’reer.  (sealaa.)  (sanggeetham  89:4)

கர்த்தாவே,  வானங்கள்  உம்முடைய  அதிசயங்களைத்  துதிக்கும்,  பரிசுத்தவான்களின்  சபையிலே  உம்முடைய  உண்மையும்  விளங்கும்.  (சங்கீதம்  89:5)

karththaavea,  vaanangga'l  ummudaiya  athisayangga'laith  thuthikkum,  parisuththavaanga'lin  sabaiyilea  ummudaiya  u'nmaiyum  vi'langgum.  (sanggeetham  89:5)

ஆகாயமண்டலத்தில்  கர்த்தருக்கு  நிகரானவர்  யார்?  பலவான்களின்  புத்திரரில்  கர்த்தருக்கு  ஒப்பானவர்  யார்?  (சங்கீதம்  89:6)

aagaayama'ndalaththil  karththarukku  nigaraanavar  yaar?  balavaanga'lin  puththiraril  karththarukku  oppaanavar  yaar?  (sanggeetham  89:6)

தேவன்  பரிசுத்தவான்களுடைய  ஆலோசனைச்  சபையில்  மிகவும்  பயப்படத்தக்கவர்,  தம்மைச்  சூழ்ந்திருக்கிற  அனைவராலும்  அஞ்சப்படத்தக்கவர்.  (சங்கீதம்  89:7)

theavan  parisuththavaanga'ludaiya  aaloasanaich  sabaiyil  migavum  bayappadaththakkavar,  thammaich  soozhnthirukki’ra  anaivaraalum  agnchappadaththakkavar.  (sanggeetham  89:7)

சேனைகளின்  தேவனாகிய  கர்த்தாவே,  உம்மைப்போல்  வல்லமையுள்ள  கர்த்தர்  யார்?  உம்முடைய  உண்மை  உம்மைச்  சூழ்ந்திருக்கிறது.  (சங்கீதம்  89:8)

seanaiga'lin  theavanaagiya  karththaavea,  ummaippoal  vallamaiyu'l'la  karththar  yaar?  ummudaiya  u'nmai  ummaich  soozhnthirukki’rathu.  (sanggeetham  89:8)

தேவரீர்  சமுத்திரத்தின்  பெருமையை  ஆளுகிறவர்;  அதின்  அலைகள்  எழும்பும்போது  அவைகளை  அடங்கப்பண்ணுகிறீர்.  (சங்கீதம்  89:9)

theavareer  samuththiraththin  perumaiyai  aa'lugi’ravar;  athin  alaiga'l  ezhumbumpoathu  avaiga'lai  adanggappa'n'nugi’reer.  (sanggeetham  89:9)

நீர்  ராகாபை  வெட்டுண்ட  ஒருவனைப்போல்  நொறுக்கினீர்;  உமது  வல்லமையான  புயத்தினால்  உம்முடைய  சத்துருக்களைச்  சிதறடித்தீர்.  (சங்கீதம்  89:10)

neer  raahaabai  vettu'nda  oruvanaippoal  no’rukkineer;  umathu  vallamaiyaana  puyaththinaal  ummudaiya  saththurukka'laich  sitha’radiththeer.  (sanggeetham  89:10)

வானங்கள்  உம்முடையது,  பூமியும்  உம்முடையது,  பூலோகத்தையும்  அதிலுள்ள  யாவையும்  நீரே  அஸ்திபாரப்படுத்தினீர்.  (சங்கீதம்  89:11)

vaanangga'l  ummudaiyathu,  boomiyum  ummudaiyathu,  booloagaththaiyum  athilu'l'la  yaavaiyum  neerea  asthibaarappaduththineer.  (sanggeetham  89:11)

வடக்கையும்  தெற்கையும்  நீர்  உண்டாக்கினீர்;  தாபோரும்  எர்மோனும்  உம்முடைய  நாமம்  விளங்கக்  கெம்பீரிக்கும்.  (சங்கீதம்  89:12)

vadakkaiyum  the’rkaiyum  neer  u'ndaakkineer;  thaaboarum  ermoanum  ummudaiya  naamam  vi'langgak  kembeerikkum.  (sanggeetham  89:12)

உமக்கு  வல்லமையுள்ள  புயமிருக்கிறது;  உம்முடைய  கரம்  பராக்கிரமமுள்ளது;  உம்முடைய  வலதுகரம்  உன்னதமானது.  (சங்கீதம்  89:13)

umakku  vallamaiyu'l'la  puyamirukki’rathu;  ummudaiya  karam  baraakkiramamu'l'lathu;  ummudaiya  valathukaram  unnathamaanathu.  (sanggeetham  89:13)

நீதியும்  நியாயமும்  உம்முடைய  சிங்காசனத்தின்  ஆதாரம்;  கிருபையும்  சத்தியமும்  உமக்கு  முன்பாக  நடக்கும்.  (சங்கீதம்  89:14)

neethiyum  niyaayamum  ummudaiya  singgaasanaththin  aathaaram;  kirubaiyum  saththiyamum  umakku  munbaaga  nadakkum.  (sanggeetham  89:14)

கெம்பீரசத்தத்தை  அறியும்  ஜனங்கள்  பாக்கியமுள்ளவர்கள்;  கர்த்தாவே,  அவர்கள்  உம்முடைய  முகத்தின்  வெளிச்சத்தில்  நடப்பார்கள்.  (சங்கீதம்  89:15)

kembeerasaththaththai  a’riyum  janangga'l  baakkiyamu'l'lavarga'l;  karththaavea,  avarga'l  ummudaiya  mugaththin  ve'lichchaththil  nadappaarga'l.  (sanggeetham  89:15)

அவர்கள்  உம்முடைய  நாமத்தில்  நாடோறும்  களிகூர்ந்து,  உம்முடைய  நீதியால்  உயர்ந்திருப்பார்கள்.  (சங்கீதம்  89:16)

avarga'l  ummudaiya  naamaththil  naadoa’rum  ka'likoornthu,  ummudaiya  neethiyaal  uyarnthiruppaarga'l.  (sanggeetham  89:16)

நீரே  அவர்கள்  பலத்தின்  மகிமையாயிருக்கிறீர்;  உம்முடைய  தயவினால்  எங்கள்  கொம்பு  உயரும்.  (சங்கீதம்  89:17)

neerea  avarga'l  balaththin  magimaiyaayirukki’reer;  ummudaiya  thayavinaal  engga'l  kombu  uyarum.  (sanggeetham  89:17)

கர்த்தரால்  எங்கள்  கேடகமும்,  இஸ்ரவேலின்  பரிசுத்தரால்  எங்களுடைய  ராஜாவும்  உண்டு.  (சங்கீதம்  89:18)

karththaraal  engga'l  keadagamum,  isravealin  parisuththaraal  engga'ludaiya  raajaavum  u'ndu.  (sanggeetham  89:18)

அப்பொழுது  நீர்  உம்முடைய  பக்தனுக்குத்  தரிசனமாகி:  சகாயஞ்செய்யத்தக்க  சக்தியை  ஒரு  சவுரியவான்மேல்  வைத்து,  ஜனத்தில்  தெரிந்துகொள்ளப்பட்டவனை  உயர்த்தினேன்.  (சங்கீதம்  89:19)

appozhuthu  neer  ummudaiya  bakthanukkuth  tharisanamaagi:  sagaayagnseyyaththakka  sakthiyai  oru  savuriyavaanmeal  vaiththu,  janaththil  therinthuko'l'lappattavanai  uyarththinean.  (sanggeetham  89:19)

என்  தாசனாகிய  தாவீதைக்  கண்டுபிடித்தேன்;  என்  பரிசுத்த  தைலத்தினால்  அவனை  அபிஷேகம்பண்ணினேன்.  (சங்கீதம்  89:20)

en  thaasanaagiya  thaaveethaik  ka'ndupidiththean;  en  parisuththa  thailaththinaal  avanai  abisheagampa'n'ninean.  (sanggeetham  89:20)

என்  கை  அவனோடே  உறுதியாயிருக்கும்;  என்  புயம்  அவனைப்  பலப்படுத்தும்.  (சங்கீதம்  89:21)

en  kai  avanoadea  u’ruthiyaayirukkum;  en  puyam  avanaip  balappaduththum.  (sanggeetham  89:21)

சத்துரு  அவனை  நெருக்குவதில்லை;  நியாயக்கேட்டின்  மகன்  அவனை  ஒடுக்குவதில்லை.  (சங்கீதம்  89:22)

saththuru  avanai  nerukkuvathillai;  niyaayakkeattin  magan  avanai  odukkuvathillai.  (sanggeetham  89:22)

அவன்  சத்துருக்களை  அவனுக்குமுன்பாக  மடங்கடித்து,  அவனைப்  பகைக்கிறவர்களை  வெட்டுவேன்.  (சங்கீதம்  89:23)

avan  saththurukka'lai  avanukkumunbaaga  madanggadiththu,  avanaip  pagaikki’ravarga'lai  vettuvean.  (sanggeetham  89:23)

என்  உண்மையும்  என்  கிருபையும்  அவனோடிருக்கும்;  என்  நாமத்தினால்  அவன்  கொம்பு  உயரும்.  (சங்கீதம்  89:24)

en  u'nmaiyum  en  kirubaiyum  avanoadirukkum;  en  naamaththinaal  avan  kombu  uyarum.  (sanggeetham  89:24)

அவன்  கையைச்  சமுத்திரத்தின்மேலும்,  அவன்  வலதுகரத்தை  ஆறுகள்மேலும்  ஆளும்படி  வைப்பேன்.  (சங்கீதம்  89:25)

avan  kaiyaich  samuththiraththinmealum,  avan  valathukaraththai  aa’ruga'lmealum  aa'lumpadi  vaippean.  (sanggeetham  89:25)

அவன்  என்னை  நோக்கி:  நீர்  என்  பிதா,  என்  தேவன்,  என்  இரட்சிப்பின்  கன்மலையென்று  சொல்லுவான்.  (சங்கீதம்  89:26)

avan  ennai  noakki:  neer  en  pithaa,  en  theavan,  en  iradchippin  kanmalaiyen’ru  solluvaan.  (sanggeetham  89:26)

நான்  அவனை  எனக்கு  முதற்பேறானவனும்,  பூமியின்  ராஜாக்களைப்பார்க்கிலும்  மகா  உயர்ந்தவனுமாக்குவேன்.  (சங்கீதம்  89:27)

naan  avanai  enakku  mutha’rpea’raanavanum,  boomiyin  raajaakka'laippaarkkilum  mahaa  uyarnthavanumaakkuvean.  (sanggeetham  89:27)

என்  கிருபையை  என்றென்றைக்கும்  அவனுக்காகக்  காப்பேன்;  என்  உடன்படிக்கை  அவனுக்காக  உறுதிப்படுத்தப்படும்.  (சங்கீதம்  89:28)

en  kirubaiyai  en’ren’raikkum  avanukkaagak  kaappean;  en  udanpadikkai  avanukkaaga  u’ruthippaduththappadum.  (sanggeetham  89:28)

அவன்  சந்ததி  என்றென்றைக்கும்  நிலைத்திருக்கவும்,  அவன்  ராஜாசனம்  வானங்களுள்ளமட்டும்  நிலைநிற்கவும்  செய்வேன்.  (சங்கீதம்  89:29)

avan  santhathi  en’ren’raikkum  nilaiththirukkavum,  avan  raajaasanam  vaanangga'lu'l'lamattum  nilaini’rkavum  seyvean.  (sanggeetham  89:29)

அவன்  பிள்ளைகள்  என்  நியாயங்களின்படி  நடவாமல்,  என்  வேதத்தை  விட்டு  விலகி;  (சங்கீதம்  89:30)

avan  pi'l'laiga'l  en  niyaayangga'linpadi  nadavaamal,  en  veathaththai  vittu  vilagi;  (sanggeetham  89:30)

என்  கட்டளைகளைக்  கைக்கொள்ளாமல்,  என்  நியமங்களை  மீறிநடந்தால்;  (சங்கீதம்  89:31)

en  katta'laiga'laik  kaikko'l'laamal,  en  niyamangga'lai  mee’rinadanthaal;  (sanggeetham  89:31)

அவர்கள்  மீறுதலை  மிலாற்றினாலும்,  அவர்கள்  அக்கிரமத்தை  வாதைகளினாலும்  தண்டிப்பேன்.  (சங்கீதம்  89:32)

avarga'l  mee’ruthalai  milaat’rinaalum,  avarga'l  akkiramaththai  vaathaiga'linaalum  tha'ndippean.  (sanggeetham  89:32)

ஆனாலும்  என்  கிருபையை  அவனை  விட்டு  விலக்காமலும்,  என்  உண்மையில்  பிசகாமலும்  இருப்பேன்.  (சங்கீதம்  89:33)

aanaalum  en  kirubaiyai  avanai  vittu  vilakkaamalum,  en  u'nmaiyil  pisagaamalum  iruppean.  (sanggeetham  89:33)

என்  உடன்படிக்கையை  மீறாமலும்,  என்  உதடுகள்  விளம்பினதை  மாற்றாமலும்  இருப்பேன்.  (சங்கீதம்  89:34)

en  udanpadikkaiyai  mee’raamalum,  en  uthaduga'l  vi'lambinathai  maat’raamalum  iruppean.  (sanggeetham  89:34)

ஒருவிசை  என்  பரிசுத்தத்தின்பேரில்  ஆணையிட்டேன்,  தாவீதுக்கு  நான்  பொய்சொல்லேன்.  (சங்கீதம்  89:35)

oruvisai  en  parisuththaththinpearil  aa'naiyittean,  thaaveethukku  naan  poysollean.  (sanggeetham  89:35)

அவன்  சந்ததி  என்றென்றைக்கும்  இருக்கும்;  அவன்  சிங்காசனம்  சூரியனைப்போல  எனக்கு  முன்பாக  நிலைநிற்கும்.  (சங்கீதம்  89:36)

avan  santhathi  en’ren’raikkum  irukkum;  avan  singgaasanam  sooriyanaippoala  enakku  munbaaga  nilaini’rkum.  (sanggeetham  89:36)

சந்திரனைப்போல  அது  என்றென்றைக்கும்  உறுதியாயும்,  ஆகாயமண்டலத்துச்  சாட்சியைப்போல்  உண்மையாயும்  இருக்கும்  என்று  விளம்பினீர்.  (சேலா.)  (சங்கீதம்  89:37)

santhiranaippoala  athu  en’ren’raikkum  u’ruthiyaayum,  aagaayama'ndalaththuch  saadchiyaippoal  u'nmaiyaayum  irukkum  en’ru  vi'lambineer.  (sealaa.)  (sanggeetham  89:37)

ஆனாலும்  நீர்  எங்களை  வெறுத்துத்  தள்ளிவிட்டீர்,  நீர்  அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல்  உக்கிரமானீர்.  (சங்கீதம்  89:38)

aanaalum  neer  engga'lai  ve’ruththuth  tha'l'livitteer,  neer  abisheagampa'n'nuviththavanmeal  ukkiramaaneer.  (sanggeetham  89:38)

உமது  அடியானுடன்  நீர்  பண்ணின  உடன்படிக்கையை  ஒழித்துவிட்டு,  அவன்  கிரீடத்தைத்  தரையிலே  தள்ளி  அவமானப்படுத்தினீர்.  (சங்கீதம்  89:39)

umathu  adiyaanudan  neer  pa'n'nina  udanpadikkaiyai  ozhiththuvittu,  avan  kireedaththaith  tharaiyilea  tha'l'li  avamaanappaduththineer.  (sanggeetham  89:39)

அவன்  மதில்களையெல்லாம்  தகர்த்துப்போட்டு,  அவன்  அரணான  ஸ்தலங்களைப்  பாழாக்கினீர்.  (சங்கீதம்  89:40)

avan  mathilga'laiyellaam  thagarththuppoattu,  avan  ara'naana  sthalangga'laip  paazhaakkineer.  (sanggeetham  89:40)

வழிநடக்கிற  யாவரும்  அவனைக்  கொள்ளையிடுகிறார்கள்;  தன்  அயலாருக்கு  நிந்தையானான்.  (சங்கீதம்  89:41)

vazhinadakki’ra  yaavarum  avanaik  ko'l'laiyidugi’raarga'l;  than  ayalaarukku  ninthaiyaanaan.  (sanggeetham  89:41)

அவன்  சத்துருக்களின்  வலதுகையை  நீர்  உயர்த்தி,  அவன்  விரோதிகள்  யாவரும்  சந்தோஷிக்கும்படி  செய்தீர்.  (சங்கீதம்  89:42)

avan  saththurukka'lin  valathukaiyai  neer  uyarththi,  avan  viroathiga'l  yaavarum  santhoashikkumpadi  seytheer.  (sanggeetham  89:42)

அவன்  பட்டயத்தின்  கருக்கை  மழுக்கிப்போட்டு,  அவனை  யுத்தத்தில்  நிற்காதபடி  செய்தீர்.  (சங்கீதம்  89:43)

avan  pattayaththin  karukkai  mazhukkippoattu,  avanai  yuththaththil  ni’rkaathapadi  seytheer.  (sanggeetham  89:43)

அவன்  மகிமையை  அற்றுப்போகப்பண்ணி,  அவன்  சிங்காசனத்தைத்  தரையிலே  தள்ளினீர்.  (சங்கீதம்  89:44)

avan  magimaiyai  at’ruppoagappa'n'ni,  avan  singgaasanaththaith  tharaiyilea  tha'l'lineer.  (sanggeetham  89:44)

அவன்  வாலிபநாட்களைக்  குறுக்கி,  அவனை  வெட்கத்தால்  மூடினீர்.  (சேலா.)  (சங்கீதம்  89:45)

avan  vaalibanaadka'laik  ku’rukki,  avanai  vedkaththaal  moodineer.  (sealaa.)  (sanggeetham  89:45)

எதுவரைக்கும்,  கர்த்தாவே!  நீர்  என்றைக்கும்  மறைந்திருப்பீரோ?  உமது  கோபம்  அக்கினியைப்போல  எரியுமோ?  (சங்கீதம்  89:46)

ethuvaraikkum,  karththaavea!  neer  en’raikkum  ma’rainthiruppeeroa?  umathu  koabam  akkiniyaippoala  eriyumoa?  (sanggeetham  89:46)

என்  ஜீவன்  எவ்வளவு  நிலையற்றது  என்பதை  நினைத்தருளும்;  மனுபுத்திரர்  யாவரையும்  வீணாகச்  சிருஷ்டிக்க  வேண்டியதென்ன?  (சங்கீதம்  89:47)

en  jeevan  evva'lavu  nilaiyat’rathu  enbathai  ninaiththaru'lum;  manupuththirar  yaavaraiyum  vee'naagach  sirushdikka  vea'ndiyathenna?  (sanggeetham  89:47)

மரணத்தைக்  காணாமல்  உயிரோடிருப்பவன்  யார்?  தன்  ஆத்துமாவைப்  பாதாள  வல்லடிக்கு  விலக்கிவிடுகிறவன்  யார்?  (சேலா.)  (சங்கீதம்  89:48)

mara'naththaik  kaa'naamal  uyiroadiruppavan  yaar?  than  aaththumaavaip  paathaa'la  valladikku  vilakkividugi’ravan  yaar?  (sealaa.)  (sanggeetham  89:48)

ஆண்டவரே,  நீர்  தாவீதுக்கு  உம்முடைய  உண்மையைக்கொண்டு  சத்தியம்பண்ணின  உமது  பூர்வ  கிருபைகள்  எங்கே?  (சங்கீதம்  89:49)

aa'ndavarea,  neer  thaaveethukku  ummudaiya  u'nmaiyaikko'ndu  saththiyampa'n'nina  umathu  poorva  kirubaiga'l  enggea?  (sanggeetham  89:49)

ஆண்டவரே,  உம்முடைய  சத்துருக்கள்  உம்முடைய  ஊழியக்காரரையும்,  நீர்  அபிஷேகம்பண்ணினவனின்  காலடிகளையும்  நிந்திக்கிறபடியினால்,  (சங்கீதம்  89:50)

aa'ndavarea,  ummudaiya  saththurukka'l  ummudaiya  oozhiyakkaararaiyum,  neer  abisheagampa'n'ninavanin  kaaladiga'laiyum  ninthikki’rapadiyinaal,  (sanggeetham  89:50)

கர்த்தாவே,  உமது  அடியார்  சுமக்கும்  நிந்தையையும்,  வலுமையான  ஜனங்களெல்லாராலும்  நான்  என்  மடியில்  சுமக்கும்  என்  நிந்தையையும்  நினைத்தருளும்.  (சங்கீதம்  89:51)

karththaavea,  umathu  adiyaar  sumakkum  ninthaiyaiyum,  valumaiyaana  janangga'lellaaraalum  naan  en  madiyil  sumakkum  en  ninthaiyaiyum  ninaiththaru'lum.  (sanggeetham  89:51)

கர்த்தருக்கு  என்றென்றைக்கும்  ஸ்தோத்திரமுண்டாவதாக.  ஆமென்,  ஆமென்.  (சங்கீதம்  89:52)

karththarukku  en’ren’raikkum  sthoaththiramu'ndaavathaaga.  aamen,  aamen.  (sanggeetham  89:52)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!